கே. சி. வீரமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே. சி. வீரமணி

கே. சி. வீரமணி (K.C. Veeramani, பிறப்பு: 1964) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் ஒரு பி.ஏ.பட்டதாரி. இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் உள்ள காந்தி நகர் ஆகும். 1993 ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.கவில் சேர்ந்த இவர் தற்போது வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். 2001 ஆம் ஆண்டு ஜோலார்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியிருக்கும் இவர், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஜோலார் பேட்டை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2013, பிப்ரவரி 28 அன்று தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.[1],[2] 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வென்று வணிகவரித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3]

குடும்பம்[தொகு]

இவருக்கு மணிமேகலை என்கிற மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகனும் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக புதிய அமைச்சர்கள் பதவியேற்பு". தினமலர். மார்ச்சு 01, 2013 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  2. "புதிய அமைச்சர்கள் பதவியேற்பு : கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்". தினகரன். மார்ச்சு 01, 2013 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  3. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி. 2016 மே 29. 29 மே 2016 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சி._வீரமணி&oldid=3143484" இருந்து மீள்விக்கப்பட்டது