பூங்கோதை ஆலடி அருணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

'

பூங்கோதை ஆலடி அருணா
தமிழகத் தகவல் தொழிநுட்பத் துறை அமைச்சர்
தொகுதி ஆலங்குளம்
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 28, 1964 (1964-10-28) (அகவை 53)
ஆலடிப்பட்டி, ஆலங்குளம், திருநெல்வேலி மாவட்டம்
அரசியல் கட்சி திமுக
வாழ்க்கை துணைவர்(கள்) மருத்துவர் பாலாஜி
பிள்ளைகள் சமந்தா, காவ்யா
இருப்பிடம் சென்னை

பூங்கோதை ஆலடி அருணா முன்னாள் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் இருந்து 2006 -ல் நடந்த தேர்தலில் திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திமுகவின் கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். பூங்கோதை, ஒரு தொழில்முறை பெண்கள் சிறப்பு பட்டம் பெற்ற மருத்துவர். இவர் தந்தை ஆலடி அருணா முன்னாள் தமிழக அமைச்சராவார்.

குடும்பம்[தொகு]

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி கிராமத்தில் 28-10-1964ல் பிறந்த இவர் மருத்துவ படிப்புக்கு பிறகு லண்டனில் 10 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்தார். இவரது கணவர் மருத்துவர் பாலாஜி நரம்பியல் மருத்துவ நிபுணர். அவர் அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றுகிறார். இவர்களுக்கு சமந்தா (வயது 21), காவ்யா (11) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.[1]. டாக்டர் பூங்கோதைக்கு மதிவாணன், தமிழ்வாணன், அமுதவாணன், அன்புவாணன், எழில்வாணன் ஆகிய 5 சகோதரர்கள் உள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

அரசின் வலைத்தளத்தில் அமைச்சர் பூங்கோதையின் பக்கம்

ஆதாரம்[தொகு]

  1. http://www.viparam.com/2/3/25262.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூங்கோதை_ஆலடி_அருணா&oldid=2306195" இருந்து மீள்விக்கப்பட்டது