ஆலடி அருணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆலடி அருணா (என்கிற) வை. அருணாசலம்
Aladi Aruna.jpg
பிறப்புசூலை 9, 1933(1933-07-09)
ஆலடிப்பட்டி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு31 திசம்பர் 2004(2004-12-31) (அகவை 71)
ஆலங்குளம், திருநெல்வேலி, இந்தியா
பணிஅரசியல்வாதி
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
பெற்றோர்வைத்தியலிங்கம் நாடார்,
பத்திரக்காளியம்மாள்
வாழ்க்கைத்
துணை
கமலா
பிள்ளைகள்மதிவாணன்
அமுதவாணன்
அன்புவாணன்
தமிழ்வாணன்
எழில்வாணன்
பூங்கோதை

வை. அருணாசலம் என்ற ஆலடி அருணா (சூலை 09, 1933 - திசம்பர் 31, 2004)[சான்று தேவை] இவர் மூன்று முறை 1967 , 1971 மற்றும் 1996 ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சட்ட அமைச்சராகவும் பதவி வகித்தார்.

இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு 1977இல், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலிருந்து, அதிமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குடும்ப வாழ்க்கை[தொகு]

ஆலடிப்பட்டி அருணாசலம் என்ற ஆலடி அருணா திருநெல்வேலி மாவட்டம், ஆலடிப்பட்டி என்னும் ஊரில் வைத்தியலிங்க நாடார் - பத்திரகாளி அம்மாள் ஆகியோருக்கு முதல் மகனாகப் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள். இவருடைய தகப்பனார் ஒரு விவசாயி. இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை ஆலடிப்பட்டி தொடக்கப்பள்ளியிலும், மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளியிலும் முடித்தார். பின்னர், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள புனித யோவான் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்பிரிவில் இளங்கலைப் பட்டத்தையும் பெற்றார். ஆலடி அருணா இளம் வயதிலிருந்தே தமிழ் சிந்தனைவாதியாகவும் பேச்சாளராகவும் இருந்தார். தன் கல்லூரி நாட்களில் சென்னை பச்சையப்பா கல்லூரியில் நடைபெற்ற மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியில் வெற்றிக் கண்டார்.

கமலா என்பவரை மணந்து ஐந்து மகன்களையும், ஒரு மகளையும் பெற்றெடுத்தார். இவருடைய மகன்கள் மதிவாணன், அமுதவாணன், அன்புவாணன், தமிழ்வாணன், எழில்வாணன் ஆகியோர். இவருடைய மகள் பூங்கோதை ஆவார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

தந்தை பெரியாரின் பகுத்தறிவாத கொள்கைகளால் கவரப்பட்டு, பகுத்தறிவாதம் குறித்த அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பேச்சுக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். இந்த தாக்கமே அவரை இளம் மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபடச் செய்து, வரலாற்று நிகழ்ச்சியான "இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில்" தீவிர பங்காற்ற வைத்தது.

1962ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) கட்சி சார்பில், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அதில் அவர் தோல்வியடைந்த போதிலும், பின்னர் 1967 மற்றும் 1971ஆம் ஆண்டு தேர்தல்களில், தி.மு.க சார்பில் போட்டியிட்டு இரண்டு முறையும் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்டம் முழுதும் உள்ள பீடி சுற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கை ஏற்றமடைய முயற்சிகள் செய்தார்.[எவ்வாறு?]

ஆலடி அருணா 1977ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதன் மூலம் மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தில் பங்காற்றிய அரசியல்வாதியென புகழ்பெற்றார்.

1984இல் கட்சியின் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவரை தமிழ்நாடு சார்பில் மாநிலங்கவையில் இடம்பெறச் செய்தார். இந்த காலத்தில், ஆலடி அருணா "போபர்ஸ் ஊழல்" ஆய்வு குறித்த கூட்டு நாடாளுமன்ற குழு உறுப்பினராக பணியாற்றினார்.[சான்று தேவை]

எம். ஜி. இராமச்சந்திரன் இறந்த பிறகு, அவர் மீண்டும் திமுகவில் இணைந்து, அதன் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தி.மு.க. செய்தி தொடர்பாளருக்கென்று தனி அலுவலகம் கிடைக்கப்பெற்ற முதல் நபராவார். அவர் 1996 சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று பிறகு தமிழ்நாட்டின் சட்ட அமைச்சர் ஆனார்.[1] அவர் சென்னையில் சட்டப் பல்கலைக்கழகம் நிறுவப்படவும், திருநெல்வேலியில் சட்டக் கல்லூரி கொண்டு வரவும், மற்றும் மதுரை உயர் நீதிமன்றக் கிளை அமைக்கவும் முக்கிய காரணமாக இருந்தார்.

மறைவு[தொகு]

  • நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில், கடந்த 2004ம் ஆண்டு திசம்பர் 31ஆம் தேதி, ஆலடி அருணா படுகொலை செய்யப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஆலடி அருணா கொலை". 2013-02-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி) தி இந்து (சனவரி 01, 2015)
  2. "ஆலடி அருணா கொடூரமாக கொலை". ஒன்இந்தியா தமிழ் (திசம்பர் 31, 2004)
  3. "ஆலடி அருணா கொலை வழக்கில் எஸ்.ஏ.ராஜாவுக்கு இரட்டை ஆயுள் !".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலடி_அருணா&oldid=3480645" இருந்து மீள்விக்கப்பட்டது