சி. விஜயதரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சி. விசயதரணி
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
27 மே 2011
முன்னவர் ஜி. ஜான் ஜோசப்
தனிநபர் தகவல்
பிறப்பு 13 அக்டோபர் 1969 (1969-10-13) (அகவை 51)
தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) சிவகுமார் கென்னடி
(இறப்பு. மார்ச்சு 05, 2016)
உறவினர் தேசிக விநாயகம் பிள்ளை
பிள்ளைகள் அபிராமி கென்னடி
சமயம் இந்து

சி. விசயதரணி (S Vijayadharani), 2011, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1][2]

குடும்பம்[தொகு]

விசயதரணியின் பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். அவரது தாயார் பகவதி, 1977-ஆம் ஆண்டில், தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர். விஜயதரணி ஒன்பது வயதாக இருக்கும் போது தந்தை இறந்து விட்டார். சென்னை சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே மாணவர் காங்கிரசில் இணைந்த விஜயதாரணி, 25 வயது வரை இளைஞர் காங்கிரசில் தீவிரமாக செயல்பட்டார். அதன் பிறகு காங்கிரசு கட்சியில் இணைந்து செயல்படத் துவங்கினார். கணிப்பொறியாளாரான இவரது கணவர் சிவகுமார் கென்னடி என்பவர் மார்ச் 2016-இல் இறந்து விட்டார்.[3] விசயதரணிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

கட்சிப் பதவிகள்[தொகு]

  • தலைவர், தமிழ்நாடு மகளிர் அணி, இந்திய தேசிய காங்கிரசு கட்சி, (6 ஆகஸ்டு – 22 சனவரி 2016)
  • பொதுச் செயலாளர், அகில இந்திய மகளிர் காங்கிரசு (4 மார்ச் 2016 முதல்)
  • தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் சட்டமன்ற கொறடா.[4].

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._விஜயதரணி&oldid=3057127" இருந்து மீள்விக்கப்பட்டது