வானதி சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வானதி சீனிவாசன்
பாசக மகளிரணி தேசியத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
28 அக்டோபர் 2020
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 1970
தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சீனிவாசன்[1]
பிள்ளைகள் ஆதர்ஷ் , கைலாஷ்.[1]
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு
தொழில் வழக்குரைஞர், அரசியல்வாதி
இணையம் அதிகாரப்பூர்வ இணையதளம்

வானதி சீனிவாசன் (Vanathi Srinivasan) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.இவர் பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவர் ஆவார்.[2]

பணிகள்[தொகு]

வானதி சீனிவாசன் வழக்குரைஞர் ஆவார்.[3] இவர் மத்திய திரைப்படச் சான்றிதழ் சபையின் உறுப்பினராக இருந்தார்.[4][5]

அரசியல்[தொகு]

பா.ஜனதா மாணவர் அமைப்பான ஏ.பி. வி.பி.யில் 1989–ல் சேர்ந்த இவர் பா.ஜனதா மாநில மகளிர் அணி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் கட்சியின் மாநிலச் செயலாளர், மாநிலப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தார். தற்போது மாநிலத் துணைத் தலைவராக உள்ளார். 2011 சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியிலும், 2016 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியிலும் பாசக சார்பில் போட்டியிட்டுத் தோற்றார்.[1]2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் (தெற்கு) தொகுதியில் இருந்து பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 வானதி சீனிவாசன் வரலாறு மாலை மலர் தேர்தல் முடிவுகள்.
  2. "பாஜக மகளிரணி தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்". தினமணி நாளிதழ் (28th October 2020). பார்த்த நாள் Sep 20, 2016.
  3. "Vanathi Srinivasan(Bharatiya Janata Party(BJP)):Constituency- COIMBATORE (SOUTH)(COIMBATORE)". பார்த்த நாள் September 20, 2016.
  4. "Censor Board, News Today". News Today (Jan 19, 2015). பார்த்த நாள் Sep 27, 2016.
  5. "Actor Surya held, out on bail". Deccan Herald (Aug 24, 2005). பார்த்த நாள் Sep 27, 2016.
  6. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானதி_சீனிவாசன்&oldid=3144961" இருந்து மீள்விக்கப்பட்டது