உள்ளடக்கத்துக்குச் செல்

ந. தளவாய் சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(என். தாளவாய் சுந்தரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ந. தளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டப்பேரவை
பதவியில்
2001–2006
முன்னையவர்என். சுரேஷ்ராஜன்
பின்னவர்என். சுரேஷ்ராஜன்
தொகுதிகன்னியாகுமரி
பதவியில்
2021–2026
முன்னையவர்சா. ஆசுடின்
பதவியில் உள்ளார்
பதவியில்
2026
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1958-10-17)17 அக்டோபர் 1958
நாகர்கோவில்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்கன்னியாகுமரி, தமிழ்நாடு,  இந்தியா
பணிவழக்குரைஞர்
சமயம்இந்து

ந. தளவாய் சுந்தரம் (N. Thalavai Sundaram) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும் ஆவார். இவர் 2001ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு மீண்டும் சட்டமன்ற உறுப்பினரானார்.[2]

கல்வி விவரங்கள்

[தொகு]

பள்ளிப் படிப்பு

[தொகு]

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரியின் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

இளங்கலை படிப்பு (B.A.)

[தொகு]

நாகர்கோவிலில் உள்ள பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

சட்டப் படிப்பு (B.L.)

[தொகு]

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை (Bachelor of Laws) முடித்தார்.

வகித்த பதவிகள்

[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்ற தொகுதி கட்சிவாக்கு விழுக்காடு (%)
2001 கன்னியாகுமரி அஇஅதிமுக 51.32
2021 கன்னியாகுமரி அஇஅதிமுக 48.80
2026 கன்னியாகுமரி அஇஅதிமுக 31.38

மாநிலங்களவை உறுப்பினர் (MP)

[தொகு]

1996 முதல் 2001 வரை அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக (Rajya Sabha MP) நாடாளுமன்றத்தில் பணியாற்றினார். தளவாய் சுந்தரம் 19 மே 2001 முதல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், 02 மார்ச்சு 2002 முதல் வருவாய்த்துறை அமைச்சராகவும் ஜெ. ஜெயலலிதா அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார்.

அமைச்சர்

[தொகு]
  • 2001-2006 ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை (PWD), நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்

டெல்லி சிறப்புப் பிரதிநிதி

[தொகு]

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி: 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், டெல்லியில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சிறப்புப் பிரதிநிதியாக (Special Representative) நியமிக்கப்பட்டு கேபினெட் அமைச்சர் அந்தஸ்துடன் செயல்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-05-10.
  2. "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._தளவாய்_சுந்தரம்&oldid=4602280" இலிருந்து மீள்விக்கப்பட்டது