கே. டி. ராஜேந்திர பாலாஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. டி. ராஜேந்திர பாலாஜி ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவரது பூர்வீகம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குறுந்தமடம் கிராமம் ஆகும். இவர் பத்தாம் வகுப்பு வரை படித்தவர். திருமணம் செய்துகொள்ளவில்லை. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பின் அ.தி.மு.க. பிளவுபட்டபோது இவர் ஜெயலலிதா அணியில் திருத்தங்கல் நகர செயலாளராக இருந்தார்.[1] இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு,[2] தமிழக அரசின் செய்தி மற்றும் சிறப்புப் பணிகள் செயலாக்கத் துறை அமைச்சராக பணியாற்றினார்.[3] அதன்பின் மாவட்ட செயலாளர் ஆனார். மீண்டும் 2016 ஆண்டு சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மீண்டும் தமிழக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.[4] இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]