கே. பி. அன்பழகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. பி. அன்பழகன் (K. P. Anbazagan, பிறப்பு: 30 ஏப்ரல் 1958)[1]) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1996 இல் ஊராட்சிக் குழு உறுப்பினராக அ.தி.மு.க.வில் தன் அரசியல் வாழ்வைத் துவக்கியவர். பாலக்கோடு சட்டமன்ற தொகுதியிலிருந்து 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] அ.தி.மு,க. அரசில் செய்தி விளப்பரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். தருமபுரி மாவட்ட செயலாளராக கட்சியில் பதவி வகிக்கிறார்.[3] 2016 ஆண்டு அமைக்கப்பட்ட அமைச்சரவையில் தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி , மின்னணுவியல், அறிவியல் & தொழில் நுட்பவியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இவா் தமிழக அரசின் முன்னாள் உயா்கல்வித்துறை தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தாா்.

2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாலக்கோடு தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._அன்பழகன்&oldid=3682601" இருந்து மீள்விக்கப்பட்டது