புரட்சி பாரதம் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரட்சி பாரதம் கட்சி
தலைவர்பூவை ஜெகன்மூர்த்தி என்றறியப்படும் ஜெகன்மூர்த்தி
இந்தியா அரசியல்
புரட்சி பாரதம் கட்சியின் கொடி[1]

புரட்சி பாரதம் என்ற அரசியல் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் செயல்படுகிறது. பூவை ஜெகன்மூர்த்தி MLA KV குப்பம் என்றறியப்படும் ஜெகன்மூர்த்தி இக்கட்சியின் தலைவராவார். இக்கட்சியின் நிறுவனர் டாக்டர் பூவை. M. மூர்த்தி, M.A., M.L., Ph.D., ஆவார். இக்கட்சி பட்டியல் மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டது. இக்கட்சிக் கொடியின் நடுவில் அசோகச் சக்கரம் உள்ளதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது.[2] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக கீழ்வைத்தியானன்குப்பம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் ஜெகன்மூர்த்தி அதிமுக சின்னத்தில், புரட்சி பாரதம் கட்சி சார்பில் போட்டியிட்டு 83989 (48.57%) வாக்குகள் பெற்று தமக்கு அடுத்தபடியாக வந்த திமுக வேட்பாளரை வென்றார். [3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரட்சி_பாரதம்_கட்சி&oldid=3342898" இருந்து மீள்விக்கப்பட்டது