உள்ளடக்கத்துக்குச் செல்

செய்யார் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செய்யார்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மக்களவைத் தொகுதிஆரணி
நிறுவப்பட்டது1951-நடப்பு
மொத்த வாக்காளர்கள்2,55.821[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
ஓ.ஜோதி
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

செய்யாறு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 68. உத்திரமேரூர், காஞ்சீபுரம், ஆற்காடு, சோளிங்கர், ஆரணி, வந்தவாசி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

செய்யாறு தொகுதியில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவிகிதமும், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவிகிதமும், முஸ்லீம்கள் 15 சதவிகிதமும், இதர பிரிவினர் 35 சதவிகிதமும் உள்ளனர்.

செய்யாறு தொகுதியில் அதிக விவசாய நிலங்களை கொண்டுள்ள தொகுதி. இங்கு சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டு பல முன்னணி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.விவசாயிகளும், கூலி தொழிலாளர்களும் அதிகளவில் உள்ளனர். இத்தொகுதியில் செய்யாறு, வெம்பாக்கம், ஆகிய 2 தாலுகாவில் செய்யாறு, வெம்பாக்கம், அனக்காவூர் ஆகிய 3 ஒன்றியங்களும், திருவத்திபுரம் நகராட்சியும் அடங்கியுள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

ஆக்கூர்,செய்யனூர், உமையான்புரம், ஒழுக்கவாக்கம், சட்டுவந்தாங்கல், ஹரிஹரபாக்கம்,தளரப்பாடி, புளிந்தை, ஆராதிரிவேளுர், குன்னத்தூர், சித்தாத்தூர், பகவந்தபுரம், எழாக்சேரி, தர்மச்சேரி, மகாஜனப்பாக்கம், நாவல், கழனிப்பாக்கம், வாழ்குடை, அனக்காவூர்

திருவத்திபுரம் நகராட்சி[2]

அரியூர், பணமுகை, பிரம்மதேசம், சீவரம், சிறுநாவல்பட்டு, வடஇலுப்பை,வெங்களத்தூர், அரசங்குப்பம், செட்டித்தாங்கல்,தாளிக்கல், வெள்ளக்குளம, திருப்பனங்காடு, வெம்பாக்கம், கூத்தனூர், நாட்டேரி, சோணைப்பட்டு, புலிவளம், பூந்தண்டலம்,தென்னம்பட்டு, தண்டப்பந்தாங்கல் (ஆர், எப்), அழிவிடைதாங்கி, சேலேரி, திருப்பனமூர், பில்லாந்தாங்கல், நமண்டி, வடமாவந்தல், அப்துல்லாபுரம், சூரங்கனில்முட்டம், பல்லாவரம, கனிக்கிலுப்பை, சேனியநல்லூர், குண்டியாந்தண்டலம்,கருட்டல், பூனைத்தாங்கல், மேனல்லூர், கிரிஜாபுரம், கீழ்நாய்க்கன்பாளையம், வடகல்பாக்கம், வாழவந்தல், மாமண்டூர்,திருவடிராயபுரம், கீழ்நெல்லி, கரந்தை, சுமங்கலி, ஆலந்தாங்கல், கொடையம்பாக்கம், பெருங்கட்டூர், பெருமாந்தாங்கல், தண்டப்பந்தாங்கல், வடமணப்பாக்கம், மேல்பூதேரி, மோரணம்,புள்ளவாக்கம், கம்மந்தாங்கல், பூதேரி, அசனம்பேட்டை,தென்கழனி,காகனம்,கனகம்பாக்கம், பெரும்புலிமேடு, செல்லப்பெரும்புலிமேடு, அழிஞ்சல்பட்டு, நரசம்ங்கலம், மாத்தூர், சோதியம்பாக்கம்,சித்தாலபாக்கம், வயலாத்தூர், அரசாணிப்பாலை, புன்னை,பாவூர், உக்கம்பெரும்பாக்கம், மாங்கால்,[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 தர்மலிங்க நாயக்கர் பொது நல கட்சி 25586 56.49 பி. இராமச்சந்திரன் காங்கிரசு 19709 43.51
1957 பா. ராமச்சந்திரன் காங்கிரசு 26018 51.24 வி. தர்மலிங்க நாயகர் சுயேச்சை 24761 48.76
1962 கா. கோவிந்தன் திமுக 23250 41.99 வி. தர்மலிங்க நாயக்கர் காங்கிரசு 22892 41.35
1967 கா. கோவிந்தன் திமுக 37068 54.86 கே. எம். கனகன் காங்கிரசு 17395 25.74
1971 கா. கோவிந்தன் திமுக 39978 55.79 பெருமாள்சாமி நாயக்கர் ஸ்தாபன காங்கிரசு 31677 44.21
1977 கா. கோவிந்தன் திமுக 33338 43.34 கே. சண்முகசுந்தரம் அதிமுக 21419 27.84
1980 பாபு ஜனார்த்தனம் திமுக 43341 55.26 கே. எ. விழி வேந்தன் அதிமுக 35091 44.74
1984 கே. முருகன் அதிமுக 53945 58.46 பாபு ஜனார்த்தனம் திமுக 37405 40.53
1989 வி. அன்பழகன் திமுக 46376 46.75 எம். கிருசுணசாமி காங்கிரசு 22993 23.18
1991 எ. தேவராசு அதிமுக 66061 60.59 வி. அன்பழகன் திமுக 30106 27.61
1996 வி. அன்பழகன் திமுக 71416 61.24 பி. சந்திரன் அதிமுக 33930 29.09
2001 பி. எசு. உலகரசன் பாமக 62615 50.90 ஆர். கே. பி. இராசராசன் திமுக 50530 41.07
2006 எம். கே. விஷ்ணு பிரசாத் காங்கிரசு 60109 44 ஆர். பாவை அதிமுக 55319 41
2011 முக்கூர் என். சுப்பிரமணியன் அதிமுக 96180 53.67 எம். கே. விசுணுபிரசாத் காங்கிரசு 70717 39.46
2016 தூசி கே. மோகன் அதிமுக 77766 38.20 எம். கே. விசுணுபிரசாத் காங்கிரசு 69239 34.01
2021 ஓ. ஜோதி திமுக[3] 102,460 47.78 தூசி மோகன் அதிமுக 90,189 42.05
  • 1962ல் சுதந்திரா கட்சியின் பெருமாள்சாமி நாயக்கர் 9225 (16.66%) வாக்குகள் பெற்றார்.
  • 1967ல் சுயேச்சை பி. நாயக்கர் 11095 (16.42%) வாக்குகள் பெற்றார்.
  • 1977ல் ஜனதாவின் எம். பூபாலன் 14271 (18.55%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் பி. சந்திரன் 21998 (22.18%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் ஜி. உலகநாதன் 12149 (11.14%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் டி. சுபமங்கலம் 13655 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2248 %

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 24 Jan 2022.
  2. 2.0 2.1 "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.
  3. செய்யாறு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்

[தொகு]