அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி)
அணைக்கட்டு | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | வேலூர் |
மக்களவைத் தொகுதி | வேலூர் |
மொத்த வாக்காளர்கள் | 2,53,376[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் அ.பெ.நந்தகுமார் | |
கட்சி | திமுக |
கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 44. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது வேலூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. காட்பாடி, ஆம்பூர், வேலூர்,வாணியம்பாடி, திருப்பத்தூர், போளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. தமிழில் ஆனையை கட்டி என்பது ஆங்கிலேயர் காலத்தில் அணைக்கட்டு என மருவியது.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 53,376 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,22,955,பெண்கள் 1,30,344, மூன்றாம் பாலினம் 37 பேர் உள்ளனர். இந்த தொகுதியில் வன்னியர் (40%), யாதவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் முதலியார் சமூகத்தினரும் பரவலாக உள்ளனர். அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட குருமலை, பீஞ்சமந்தை, பலாம்பட்டு ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். [2]
இத்தொகுதியில் பள்ளிகொண்டா பேரூராட்சி, கருகம்பத்தூர் வேலூர் மாநகராட்சியில் உள்ள பலவன்சாத்து அரியூர், விருப்பாச்சிபுரம் பாகாயம் பகுதிகள் மற்றும் பென்னாத்தூர் ஒடுக்கத்தூர் (பேரூராட்சிகள்) இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]வேலூர் வட்டம் (பகுதி) கந்தனேரி, கழனிப்பாக்கம், இறையன்காடு, ஒக்கனாபுரம், விரிஞ்சிபுரம், செதுவாலை, சத்தியமங்கலம், பொய்கை, அன்பூணி, மேல்மொணவூர், கீழ்மொணவூர், சதுப்பேரி, சிருகாஞ்சி, செம்பேடு, அப்துல்லாபுரம், தெள்ளூர், புதூர், இலவம்பாடி, வல்லண்டராமன், வசந்தநடை, அணைக்கட்டு, ஊனை, கொம்மலான்குட்ட, பிராமணமங்கலம், கீழ்கிருஷ்ணாபுரம், திப்பசமுத்திரம், ஒதியதூர், வாணியம்பாடி, கெங்கநல்லூர், புலுமேடு, புதூர், செக்கனூர், குப்பம், முருக்கேரி, அரியூர், காட்டுப்புத்தூர், ஊசூர், அத்தியூர், அப்புக்கல், கரடிகுடி, தேவிசெட்டிகுப்பம், கருங்காலி, மகமதாபுரம், ஒங்கப்பாடி, வரதலம்பட்டு, அல்லேரி, சோழவரம், சாத்துபாளையம், பாலம்பாக்கம், துத்திக்காடு, தெள்ளை, எழுபறை, கீழ்கொத்தூர், பின்னந்துரை, நேமந்தபுரம், அத்திகுப்பம், மடையாபட்டு, சேர்பாடி, புதுக்குப்பம், பீஞ்சமந்தை, கத்தாரிகுப்பம், கெங்கசாணிகுப்பம், வண்ணான் தாங்கல், மேல அரசம்பட்டு, உமையாம்பட்டு, முள்ளவாடி, பெரியபணப்பாறை, பாலாம்பட்டு, ஜர்தான்கொல்லை மற்றும் கீழ் அரசம்பட்டு கிராமங்கள்.
பள்ளிகொண்டா (பேரூராட்சி), கருகம்பத்தூர் (சென்சஸ் டவுன்), பலவன்சாத்து (சென்சஸ் டவுன்), அரியூர் (சென்சஸ் டவுன்), பென்னாத்தூர் (பேரூராட்சி), ஒடுக்கத்தூர் (பேரூராட்சி), மற்றும் விருபாட்சிபுரம் (சென்சஸ் டவுன்)[3].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | ஆர். மார்க்கபந்து | அதிமுக | 32,731 | 48.78 | பி. எம். வாசுதேவ ரெட்டியார் | ஜனதா கட்சி | 14,146 | 2.2 |
1980 | கோ. விசுவநாதன் | அதிமுக | 35,242 | 53.37 | ஆர். ஜீவரத்தினம் | காங்கிரசு | 29,287 | 44.35 |
1984 | வி. ஆர். கிருசுணசாமி | அதிமுக | 45,312 | 58.42 | பி. என். இராசகோபால் | சுயேச்சை | 26,692 | 34.42 |
1989 | எசு. பி. கண்ணன் | திமுக | 25,709 | 35.64 | விசுவநாதன் | அதிமுக (ஜெ) | 22,886 | 31.73 |
1991 | கே. தர்மலிங்கம் | அதிமுக | 54,413 | 57.59 | எசு. பி. கண்ணன் | திமுக | 18,880 | 19.98 |
1996 | சி. கோபு | திமுக | 58,982 | 55.79 | சி. எம். சூர்யகலா | அதிமுக | 27,366 | 25.89 |
2001 | கே. பாண்டுரங்கன் | அதிமுக | 61,333 | 56.24 | ஜி. மலர்விழி | திமுக | 40,282 | 36.93 |
2006 | கே. பாண்டுரங்கன் | அதிமுக | 59,220 | --- | எம். வரலட்சுமி | பாமக | 59,167 | --- |
2011 | ம. கலையரசு | பாமக | 80,233 | 54.51 | வி.பி.வேலு | தேமுதிக | 52,230 | 35.55 |
2016 | அ. பெ. நந்தகுமார் | திமுக | 77,058 | 42.72 | கலையரசு. ம | அதிமுக | 68,290 | 37.86 |
2021 | அ. பெ. நந்தகுமார் | திமுக[4] | 31,342 | 48.11 | வேலழகன். த | அதிமுக | 29,305 | 44.89 |
- 1977ல் திமுகவின் எ. எம். இராமலிங்கம் 13,985 (20.84%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் காங்கிரசின் எல். பலராமன் 12,190 (16.90%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் பாமகவின் ஆர். மோகன் 17,163 (18.16%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் திவாரி தலைமையிலான இந்திரா காங்கிரசின் பலூர் ஈ சம்பத் 15,976 (15.11%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் எம். வெங்கடேசன் 7,470 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]வாக்காளர் எண்ணிக்கை
[தொகு], 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
[தொகு]2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
1237 | % |
முடிவுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 24 Jan 2022.
- ↑ அணைக்கட்டு தொகுதி, 2021 சட்டமன்றத் தேர்தல் கண்ணோட்டம்
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2016.
- ↑ அணைக்கட்டு சட்டமன்றத் தேர்தல் 2021 ஒன் இந்தியா