உள்ளடக்கத்துக்குச் செல்

டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மக்களவைத் தொகுதிவடசென்னை
மொத்த வாக்காளர்கள்262,980[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி, (Dr. Radhakrishnan Nagar State Assembly Constituency, சுருக்கமாக ஆர். கே. நகர்) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 11. இது வட சென்னை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. இராயபுரம், துறைமுகம், பூங்கா நகர், பெரம்பூர், திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

சென்னை மாநகராட்சி வார்டு எண் 3 முதல் 8 வரை, 10, 11 மற்றும் 14[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 ஐசரி வேலன் அதிமுக 28,416 35 ஆர்.டி. சீதாபதி திமுக 26,928 38.33
1980 வி. ராஜசேகரன் காங்கிரசு 44,076 48 ஐசரி வேலன் அதிமுக 36,888 40
1984 எஸ். வேணுகோபால் காங்கிரஸ் 54,334 50 எஸ். பி. சற்குண பாண்டியன் திமுக 50,483 46
1989 எஸ். பி. சற்குண பாண்டியன் திமுக 54,216 45 இ. மதுசூதனன் அதிமுக(ஜெ) 29,960 25
1991 இ. மதுசூதனன் அதிமுக 66,710 59 ராஜசேகரன் ஜனதாதளம் 41,758 37
1996 எஸ். பி. சற்குண பாண்டியன் திமுக 75,125 60 ரவீந்திரன் அதிமுக 32,044 26
2001 பி. கே. சேகர் பாபு அதிமுக 74,888 58 எஸ். பி. சற்குண பாண்டியன் திமுக 47,556 37
2006 பி. கே. சேகர் பாபு அதிமுக 84,462 50 மனோகர் காங்கிரஸ் 66,399 40
2011 பி. வெற்றிவேல் அதிமுக 83,777 59.02 பி. கே. சேகர் பாபு திமுக 52,522 37
இடைத்தேர்தல் 2015 ஜெ. ஜெயலலிதா அதிமுக 160432 - சி. மகேந்திரன் இந்தியக் கம்யூனிஸ்ட் 9710
2016 ஜெ. ஜெயலலிதா அதிமுக 97,218 56.81 சிம்லா முத்துச்சோழன் திமுக 57,673 33.70
இடைத்தேர்தல் 2017 டி. டி. வி. தினகரன் சுயேட்சை 89,013 - மதுசூதனன் அதிமுக 48,306 -
2021[3] ஜே. ஜே. எபினேசர் திமுக 95,763 51.20 ஆர்.எஸ். ராஜேஷ் அதிமுக 53,284 28.49

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
72.4% 68.38% [4] 4.02%
தேர்தல் ஆண்டு நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2016 %

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[5],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,24,506 1,29,889 103 2,54,498

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்[4]
வேட்புமனு தாக்கல் செய்தோர் 42 10 2
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் 36 8 1
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் 0 0 0
களத்தில் இருந்த வேட்பாளர்கள் 36 8 1

முக்கிய வேட்பாளர்கள்

[தொகு]
வேட்பாளர் கட்சி
ஜெ. ஜெயலலிதா அதிமுக
சி. தேவி நாம் தமிழர் கட்சி

வாக்குப்பதிவு

[தொகு]
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %

முடிவுகள்

[தொகு]

முந்தைய தேர்தல்கள்

[தொகு]
  • 1977 ஆம் ஆண்டில் இச்சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் அதிமுக ஏழு முறையும், திமுக இரண்டு தடவைகளும், இந்தியக் காங்கிரசு கட்சி இரண்டு தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன.
  • 2011 தேர்தலில் திருவரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 2014ல் சொத்துக்குவிப்பு வழக்கால் பதவியிழந்தார். அந்த வழக்கிலிருந்து உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதும், ஆர். கே. நகரில் போட்டியிட்டு 88 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பின்னர் 2016 இல் நடந்த தேர்தலில் 56 வீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.[6]
  • 2016 திசம்பரில் செயலலிதா இறந்ததை அடுத்து, இத்தொகுதியில் 2017 ஏப்ரல் 12 இல் இடைத் தேர்தல் நடக்கவிருந்த்து.[7] அதிமுக (அம்மா) அணி சார்பில் டிடிவி தினகரனும், அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணியின் சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேசும் போட்டியிட்டனர். இந்நிலையில் வாக்கு அளிக்க பணவிநியோகம் நடந்தது என்று வாக்குப் பதிவுக்கு இரண்டு நாளுக்குமுன் தேர்தலை தேர்தல் ஆணையும் நிறுத்தியது. இதன் பிறகு இடைத்தேர்தல் 2017 டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரது வாக்கு சதவிகிதம் 50.32%. அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றார். இவரது வாக்கு சதவீதம் 27.31%. திமுக பெற்ற வாக்கு 24,581 அதன் சதவீதம் 13.94% ஆகும்.[8]

இடைத் தேர்தல், 2017

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 27 Dec 2021.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2015.
  3. ஆர்.கே நகர் சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா
  4. 4.0 4.1 "CONSTITUENCY DATA - SUMMARY (Election Commission of India, state Election,2016 to the legislative assembly of Tamil Nadu)" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 2016. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. அங்கீகாரத்துக்காக அலைபாயும் அதிமுக அணிகள்: ஆர்.கே. நகரில் மக்கள் யார் பக்கம்?, பிபிசி தமிழ், அணுக்கம்: 9-04-2017
  7. "By-election to RK Nagar constituency scheduled for April 12". நியூ இந்தியன் எக்சுபிரசு. 9 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  8. "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிடிவி தினகரன் வெற்றி; திமுக டெபாசிட் இழந்தது". செய்தி. தி இந்து தமிழ். 24 திசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 26 திசம்பர் 2017.

வெளியிணைப்புகள்

[தொகு]