பெக்கால் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெக்கால் கோட்டையின் ஒரு பகுதி

பெக்கால் கோட்டை இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ளது. இதுதான் கேரளத்திலேயே மிகப்பெரிய கோட்டையாகும். இது 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. படிகளைக் கொண்டு உயரமாக அமைக்கப்பட்ட நீர்த்தொட்டியும் உயர்ந்த இடத்தில் அகன்ற படிகளைக் கொண்ட கண்காணிப்புக் கோபுரமும் இக்கோட்டையின் சிறப்பம்சங்களாகும். இக்கோட்டை அரபிக்கடலை ஒட்டி அமைந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள மற்ற கோட்டைகளைப் போல் அரசின் மையக் கட்டிடமாக இல்லாமல் தனியே பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை காசர்கோட்டில் இருந்த 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பெக்கால் கோட்டையும் கடலும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெக்கால்_கோட்டை&oldid=2455890" இருந்து மீள்விக்கப்பட்டது