பிரிட்டிஷ் ரெசிடென்சி
பிரிட்டிஷ் ரெசிடென்சி அரசாங்க விருந்தினர் மாளிகை | |
---|---|
![]() ஆசிரமம் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் ரெசிடென்சி | |
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Kollam" does not exist. | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலைப் பாணி | ஐரோப்பிய, இந்திய, தசுகன் |
நகர் | கொல்லம் நகரம், ஆசிரமம் |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 8°53′52″N 76°35′10″E / 8.897906°N 76.586191°E |
கட்டுமான ஆரம்பம் | 1811 |
நிறைவுற்றது | 1819 |
கட்டுவித்தவர் | கர்னல் ஜான் மன்ரோ |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
பொறியாளர் | கேப்டன் ஆர்தர் |
பிரிட்டிஷ் ரெசிடென்சி ( மலையாளம்: ആശ്രാമം ബ്രിട്ടീഷ് റെസിഡന്സി ), அரசாங்க விருந்தினர் மாளிகை அல்லது ரெசிடென்சி பங்களா என்றும் அழைக்கப்படுவது, தென்னிந்திய மாநிலமான கேரளத்தின் , கொல்லம் நகரின், ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடி அரண்மனை ஆகும். இது நகரத்தின் அஸ்ராமத்தில் அமைந்துள்ள பழைய கொல்லம் வானூர்தி நிலையத்தின் இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. [1] இது 1811-19 க்கு இடையில் கர்னல் ஜான் மன்ரோவால் கட்டப்பட்டது. இது சின்னக்கடா மணிக்கூண்டு போன்ற புகழ்பெற்ற கொல்லம் நகரின் அடையாளமாகும்.
கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பு[தொகு]
பிரிட்டிஷ் ரெசிடென்சி கட்டடமானது தனித்துவமான மாறுபட்ட கலை அம்சங்களின் இணக்கமான கலவையாகும். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இந்த கட்டிடம் பிரிட்டிஷ் ரெசிடென்சியாக செயல்பட்டது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் கௌரி பார்வதி பாயி ஆட்சியாளராக இருந்த காலத்தில் கர்னல் ஜான் மன்ரோ பிரிட்டிஷ் பிரதிநிதியாக இருந்தபோது கட்டப்பட்டது. [2] இது ஐரோப்பிய, இந்திய, தசுகன் கட்டிடக் கலைகளின் கலவையாகும். கட்டிடத்தின் மேலே ஒரு சிங்கம் அமர்ந்திருக்கும் ஒரு கிரீடம் உள்ளது. அதன் மேலே டியு எட் மோன் ட்ராய்ட் (கடவுளும் என் உரிமையும்) என்ற குறிக்கோளுரை பொரிக்கபட்டுள்ளது. 10 அடிகள் (3.0 m) கொண்ட முகப்புக் கதவுகள் கண்ணாடி அடைசுகளால் ஆனவை. அரண்மனையில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் மாற்றியமைக்கத்தக்க தடுப்புக் கதவு கொண்ட ஒரு முன் கூடம் உள்ளது, அதே நேரத்தில் ஒரு பெரிய விசிறிப்பலகணி வளைவு இரண்டு அறைகளையும் பிரிக்கிறது. இந்த கட்டிடத்தில் மேல் மாடியானது மரத்தாலான தரையைக் கொண்டுள்ளது. மாநாட்டு மண்டபத்தின் சுவர்களின் நான்கு பக்கங்களிலும் அழகுத் தொங்கல்கள், சாடிகள், மலர் வடிவங்கள் போன்றவை உள்ளன. வளைவுகளின் மையத்தில் அலங்கார பூட்டும் கல் கொண்டதாக உள்ளன. எட்வர்ட் ரோஸ் தோட்டம் இந்த மாளிகையின் மற்றொரு ஈர்க்கும் அம்சமாகும். [3]
மெருகூட்டப்பட்ட மரச்சட்டங்களில் உள்ள பழங்கால வேலைப்பாடுகள் சீரிங்கப்பட்டிணப் போரை சித்தரித்து சுவர்களை அலங்கரிக்கின்றன. பேராசிரியர். பண்டலா "இந்தியாவின் மிக நேர்த்தியான கட்டிடங்களில் ஒன்று" என்று ரெசிடென்சியை வர்ணித்துள்ளார். [4]