சீரங்கப்பட்டிண முற்றுகை (1799)
Appearance
சீரங்கப்பட்டிண முற்றுகை | |||||||
---|---|---|---|---|---|---|---|
நான்காவது ஆங்கில-மைசூர் போர் பகுதி | |||||||
திப்புசுல்தானின் வீழ்ச்சி ஓவியம் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
மைசூர் இராச்சியம் | |||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
|
|
||||||
பலம் | |||||||
50,000 | 30,000 | ||||||
இழப்புகள் | |||||||
1,400 | 6,000 |
சீரங்கப்பட்டிண முற்றுகை (5 ஏப்ரல்– 4 மே 1799) என்பது ஆங்கிலேயர்களுக்கும் மைசூர் அரசுக்கும் இடையில் நடந்த நான்காவது ஆங்கில மைசூர்ப் போரின் கடைசிச் சண்டையாகும். ஐதராபாத் நிசாம் துணையுடன் போர் புரிந்த பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், சீரங்கப்பட்டிணக் கோட்டையினைத் தகர்ந்துச் சென்று திப்பு சுல்த்தானின் படைகளை வென்றது. இப்போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார்.[1] பிரித்தானியர் மீண்டும் மைசூரில் உடையார் அரச குலத்தைப் பதவியில் அமர்த்தினாலும், அரசு மறைமுகமாக ஆங்கிலேயர் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.