தொம்மன்குத்து
Appearance
தொம்மன்குத்து
തൊമ്മന്കുത്ത് | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 9°54′0″N 76°47′0″E / 9.90000°N 76.78333°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | இடுக்கி மாவட்டம் |
ஏற்றம் | 40 m (130 ft) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சல் குறியீட்டு எண் | 685581 |
தொலைபேசி குறியீட்டு எண் | 04862 |
அருகில் உள்ள நகரம் | தொடுபுழா |
மக்களவை தொகுதி | இடுக்கி |
தட்பவெப்ப நிலை | கேரளம் முழுவதும் ஏறக்குறைய ஒரே வெப்பநிலை (கோப்பென்) |
தொம்மன்குத்து (மலையாளம்: തൊമ്മന്കുത്ത്) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா வட்டத்தில் அமைந்துள்ள ஓர் அருவி ஆகும்.[1] இது மாநிலத்தின் பிரபலமான சுற்றுலாத் தலமாகவும், கேரளத்தின் சுற்றுச்சூழல் சுற்றுலாவின் முக்கிய மையமாகவும் உள்ளது.[2] இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. தொம்மன்குத்து அருவி ஒற்றை அருவி அல்ல, ஆனால் 5 கி.மீ தொலைவில் 12 அருவிகளின் தொடர் ஆகும்.[3]
அமைவிடம்
[தொகு]தொம்மன்குத்து தொடுபுழாவிலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள நகரங்களான கரிமண்ணூர், வன்னப்புரம், உடும்பன்னூர் ஆகியவை கிட்டத்தட்ட 10 கி.மீ தொலைவில் உள்ளன.
மலையேற்றம்
[தொகு]தொம்மன்குத்து அருவி காடுகளில் அமைந்துள்ள ஏழு படிகள் கொண்ட அருவியாகும். காடுகள் வழியாக 12 கி.மீ தொலைவுக்கு மலையேற்றம் சாத்தியமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thommankuthu Waterfalls, Idukki - An Eco Tourism Centre of Kerala". SreesTours Official Blog About Kerala Tourism (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-09. பார்க்கப்பட்ட நாள் 2024-02-03.
- ↑ "Thommankuthu: Heavens fall here". The New Indian Express. 5 June 2017. பார்க்கப்பட்ட நாள் 2023-09-02.
- ↑ "THOMMANKUTHU- ECO TOURISM". Kerala Forest Department.
வெளி இணைப்புகள்
[தொகு]- தொம்மக்குத்து அருவி, keralatourism.org
- தொம்மங்குத்து அருவி பரணிடப்பட்டது 2017-07-02 at the வந்தவழி இயந்திரம்
- தொம்மங்குத்துக்கு மலையேற்றம் பரணிடப்பட்டது 2012-03-21 at the வந்தவழி இயந்திரம்