மாவட்டம் (இந்தியா)
மாவட்டம் என்பது இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் பகுதியை நிர்வகிக்கும் மண்டலமாகும்.இந்தியா இருபத்தியெட்டு மாநிலங்கள் மற்றும் ஏழு ஆட்சிப்பகுதிகள் (ஆ.ப)ஆக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலம் அல்லது ஆட்சிப் பகுதியும் எளிதான நிர்வாகத்திற்காக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 2008இல் இந்தியாவில் 585 மாவட்டங்கள் இருந்தன.[1] ஒரு மாவட்டத்தின் எல்லைகளை மாற்றவோ, புதிய மாவட்டங்களை உருவாக்கவோ அல்லது இருக்கும் மாவட்டங்களை இணைக்கவோ அந்தந்த மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது.முதன்முதலாக இத்தகைய மண்டல நிர்வாகப் பகுதியை மாவட்டம் எனக் குறிப்பிடப்பட்டது பட்டியலிட்ட மாவட்ட சட்டம்,1874யில் ஆகும்.[2]
மாவட்ட ஆட்சியர் (சில மாநிலங்களில் துணை ஆணையர் அல்லது மாவட்ட நீதிபதி என அழைக்கப்படுகின்றனர்) மாவட்டத்தின் பொதுநிர்வாகத்தையும் வருவாய் வசூலையும் நிர்வகிக்கிறார். இவர் இந்திய ஆட்சி பணிசேவை(இ.ஆ.ப) அதிகாரியாவார். இவரே மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பிற்கும் பொறுப்பேற்கிறார்.காவல்துறைக் கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை துணை ஆணையர் (இந்திய காவல் பணிசேவை (இ.கா.ப) அதிகாரி)இப்பணியில் மாவட்ட ஆட்சியருக்கு உதவுகிறார்.
மாவட்டங்கள் மேலும் வருமான மண்டலங்கள்,தாலுகாக்கள் (தெகிசில்கள்),வட்டாரங்கள் (பஞ்சாயத்து யூனியன்),பஞ்சாயத்துக்கள் மற்றும் கிராமங்களாக பிரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன.
சில மாநிலங்களில், நிலப்பரப்பு கூடுதலாக இருப்பின்,(மாவட்டங்களின் எண்ணிக்கை நிர்வகிக்க இயலாமற்போவதால்) சில மாவட்டங்களை இணைத்து மண்டலங்கள் (டிவிசன்கள்) உருவாக்கப்படுகின்றன.அதன் நிர்வாக அதிகாரி மண்டல நீதிபதி என அழைக்கப்படுகிறார்.தமிழ்நாடு மாநிலத்தில் இம்முறை இல்லை.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Gateway to Districts of India on the web". பார்த்த நாள் 2009-06-18.
- ↑ "General Clauses Act, 1897". பார்த்த நாள் 2008-08-08.