ஆசம்கர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆசம்கர் மாவட்டம்
आज़मगढ़ ज़िला
اعظم گڑھ ضلع
Uttar Pradesh district location map Azamgarh.svg

ஆசம்கர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம்
மாநிலம் உத்தரப்பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள் ஆசம்கர்
தலைமையகம் ஆசம்கர்
பரப்பு 4,054 கிமீ2 (1 ச மைல்)
மக்கட்தொகை 4,616,509 (2011)
வட்டங்கள் 7
மக்களவைத்தொகுதிகள் ஆசம்கர், லால்கஞ்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஆசம்கர் மாவட்டம் (இந்தி: आज़मगढ़ ज़िला, உருது: اعظم گڑھ ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரான ஆசம்கர் நகரின் பெயரால் இம்மாவட்டம் ஆசம்கர் மாவட்டம் எனப் பெயர்பெற்றது.

பொருளடக்கம்

பொருளாதாரம் [தொகு]

2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆசம்கர் மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]

மொழிகள் [தொகு]

பீகாரி மொழிக்குடும்பத்தில் 40 000 000 பேர்கள் பேசக்கூடிய போஜ்புரி மொழியானது ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள மக்களால் அதிகமாக பேசப்படுகிறது.[2]

மக்கள் வகைப்பாடு [தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ஆசம்கர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 4,616,509.[3] இது தோராயமாக பொசுனியா எர்செகோவினா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[4] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 30வது இடத்தில் உள்ளது.[3] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,139 /சதுர கிலோமீட்டர் (2 /sq mi).[3] மேலும் ஆசம்கர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.17%.[3]ஆசம்கர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 1017 பெண்கள் உள்ளனர்.[3] மேலும் ஆசம்கர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 72.69%.[3]


மேற்கோள்கள் [தொகு]

  1. 1.0 1.1 Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
  2. "Bhojpuri: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. Retrieved on 2011-09-30. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
  4. US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01.
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆசம்கர்_மாவட்டம்&oldid=1376033" இருந்து மீள்விக்கப்பட்டது