மதுரா மாவட்டம்
| மதுரா மாவட்டம் मथुरा ज़िला متھرا ضلع |
|
|---|---|
|
மதுராமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம் |
|
| மாநிலம் | உத்தரப்பிரதேசம், இந்தியா |
| நிர்வாக பிரிவுகள் | ஆக்ரா |
| தலைமையகம் | மதுரா |
| பரப்பு | 3,329.4 கிமீ2 (1.5 ச மைல்) |
| மக்கட்தொகை | 1,647,840 (1991) |
| நகர்ப்புற மக்கட்தொகை | 425,760 |
| படிப்பறிவு | 62.21 per cent[1] |
| வட்டங்கள் | 3 |
| மக்களவைத்தொகுதிகள் | மதுரா |
| அதிகாரப்பூர்வ இணையத்தளம் | |
மதுரா மாவட்டம் (இந்தி: मथुरा ज़िला, உருது: متھرا ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஒரு மாவட்டம். வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரா இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டத்தின் எல்லையாக வடகிழக்கில் அலிகார்ஹ் மாவட்டமும், தென்கிழக்கில் ஹத்ராஸ் மாவட்டமும், தெற்கில் ஆக்ரா மாவட்டமும், மேற்கில் ராஜஸ்தான் மாநிலமும், வடமேற்கில் ஹரியானா மாநிலமும் அமைந்துள்ளன. இம்மாவட்டம் ஆக்ரா பிரிவின் ஒரு பகுதியாகும்.
மக்கள் வகைப்பாடு [தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி மதுரா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,541,894.[2] இது தோராயமாக குவைத் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 167வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 761 /சதுர கிலோமீட்டர் (1 /sq mi).[2] மேலும் மதுரா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 22.53%.[2]மதுரா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 858 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் மதுரா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 72.65%.[2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "District-specific Literates and Literacy Rates, 2001". Registrar General, India, Ministry of Home Affairs. பார்த்த நாள் 2010-10-10.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||