விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குறுக்கு வழி:
WP:HD
WP:HELP

உதவிப் பக்கங்கள் · ஒத்தாசை · உசாத்துணை · கலைச்சொல் · வரவேற்பு · பயிற்சிகள் · நினைவுக்குறித்தாள் · விக்கி சொற்கள் · கேட்க வேண்டுமா?

தொகுப்பு

தொகுப்புகள்


1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11
எப்படி தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமாகக் கட்டுரை எழுதுவது என்று ஐயமா? பக்கங்களைத் தொகுப்பதில் சிக்கலா? உங்களுடைய கேள்விகளை இங்கே கேளுங்கள்.

கேள்விகளை எழுத, இப் பக்கத்தின் மேற்பக்கத்தில் உள்ள "தலைப்பைச் சேர்" என்பதை அழுத்துங்கள். கேள்வியை எழுதுவதற்கான கட்டம் திறக்கும். அக் கட்டத்தில் உங்கள் கேள்விகளை எழுதுங்கள். தமிழில் எழுதுவது நல்லது. தமிழில் எழுத இயலாவிட்டால் ஆங்கிலத்திலும் எழுதலாம். எழுதிய பிறகு கீழே காணும் "பக்கத்தைச் சேமிக்கவும்" என்ற பொத்தானை அழுத்தவும்.

பொருளடக்கம்

தமிழ்ப் பெயர் என்ன?[தொகு]

Community development block (C.D.Block) என்பதற்கு இணையான சொல் என்ன? சில மாநிலங்களில், சில ஊராட்சிகளை ஒன்றிணைத்தது (பஞ்சாயத்துகளை ஒன்றிணைத்தது) என ஆங்கில விக்கியில் குறிப்பு உள்ளது. வேறு சில மாநிலங்களில் வட்டங்களுக்கு இணையானது என்ற குறிப்பும் உள்ளது. முதல் குறிப்பின் படி, தமிழில் ஊராட்சி ஒன்றியம் என்ற சொல் உள்ளது. இதை அப்படி பயன்படுத்தலாமா? அல்லது, சமூக வளர்ச்சி மண்டலம் என்றவாறான பெயரில் எழுதவா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:14, 13 அக்டோபர் 2014 (UTC)

பகுப்பு உதவி - இந்திய வார்ப்புருக்கள்[தொகு]

பகுப்பு:இந்தியா வார்ப்புருக்கள் என்றும் பகுப்பு:இந்தியா தொடர்பான வார்ப்புருக்கள் என்றும் இருவேறு பகுப்புகளில் இந்தியா தொடர்பான வார்ப்புருக்கள் பகுக்கப்பட்டுள்ளன. எதனைத் தொடரலாம், எதனை நீக்கலாம் என்று பரிந்துரைக்க வேண்டுகிறேன். சத்தியராஜ் (பேச்சு) 07:24, 14 அக்டோபர் 2014 (UTC)

பகுப்பு:இந்தியா தொடர்பான வார்ப்புருக்கள் ஐ வைத்திருந்து மற்றதை நீக்கலாம்.--Kanags \உரையாடுக 07:42, 14 அக்டோபர் 2014 (UTC)
மிக்க நன்றி! சத்தியராஜ் (பேச்சு)

அருணாசலப் பிரதேசம் - உதவி[தொகு]

Arunachal Pradesh என்பதை தமிழில் அருணாசலப் பிரதேசம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. Arunachal East என்பதை எவ்வாறு மொழிபெயர்ப்பது? "கிழக்கு அருணாசலம்" என்றா அல்லது "கிழக்கு அருணாச்சல்" என்றா? எது சரியானது என பரிந்துரைக்க வேண்டுகிறேன். சத்தியராஜ் (பேச்சு) 07:33, 14 அக்டோபர் 2014 (UTC)

கிழக்கு அருணாச்சல், கிழக்கு அருணாச்சலம் ஆகிய இரண்டுமே சரி. தமிழ் வழக்கிற்கு ஏற்ப, அருணாச்சலம் என்று எழுதுவது கூடுதல் பொருத்தமாகும். அதிகப் பயன்பாட்டில் உள்ள பிற வழக்குகளை வழிமாற்றாகத் தரலாம். மற்றவற்றை கட்டுரையில் குறிப்பிடலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:47, 14 அக்டோபர் 2014 (UTC)
மிக்க நன்றி! சத்தியராஜ் (பேச்சு)

புகைப்படங்கள் நீக்கம் என்ற கடிதங்கள்.[தொகு]

"விக்கிப்பீடியா page படிமம்:Vellaivinayakarkudamulukku14.jpg has been deleted by Jayarathina" என்றவாறு பல புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளதாக எனக்கு மின்னஞ்சல்கள் வந்துள்ளன. நான் துவங்கிய தஞ்சாவூர் வெள்ளை பிள்ளையார் கோயில் பக்கத்தில் சென்று பார்த்தபோது நான் இட்ட அனைத்துப் படங்களும் இருப்பதை அறிந்தேன். அப்படங்கள் அனைத்தும் அத்தலைப்பு தொடர்பானவையே. இத்தலைப்பு தொடர்பாக புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன எனக்குத் தகவல்கள் வருவதற்கான காரணத்தை அறியவேண்டுகிறேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:23, 6 நவம்பர் 2014 (UTC)

நண்பரே, நீங்கள் குறிப்பிட்டுள்ள படிமம் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படவில்லை. நீக்கப்பட்டதாக வந்த செய்தியை எங்குப் படித்தீர்கள். தங்களுடைய பயனர் பேச்சுப் பக்கத்திலும் அதற்கான குறிப்புகள் காணப்படவில்லை. தெளிவுபடுத்தவும். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:23, 21 சனவரி 2015 (UTC)
வணக்கம். நவம்பர் மாதத்தில் எனக்கு இரு புகைப்படங்கள் நீக்கப்பட்டதாக இரு கடிதங்கள் மின்னஞ்சலில் வந்தன. அப்போதுதான் நான் இந்த ஐயத்தைக் கேட்டு, விக்கிக்கு எழுதினேன். எனக்கு தொடர்ந்து மறுமொழி வராத நிலையில் டிசம்பர் இறுதியில் எனக்கு வந்த மின்னஞ்சல்களை நீக்கிவிட்டேன். தங்கள் மூலமாகக் குறிப்பிட்டுள்ள படிமம் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படவில்லை என்பதை தற்போது அறிந்தேன். நன்றி. தொல்லைக்குப் பொறுத்துக்கொள்க. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:21, 23 சனவரி 2015 (UTC)

Invitation to Bengali Wikipedia 10th Anniversary Celebration Conference 2015[தொகு]

BN10 Conference Logo-Kolkata.png

Hi Community members,

Bengali Wikipedia community is organizing its 10th Anniversary Celebration Conference at Kolkata on 9 & 10 January 2015.
You can see our Official event page and the Facebook event page.

We are planning to invite our friends and well-wishers from different language wiki communities in India to this most auspicious occasion hosted by Bengali Wikimedia community! We are also planning to arrange few 30 scholarships for non-Bengali Indic Wikimedians who are interested in participating in this event. Please select your Five (5) scholarship [1] delegates from your community member for this conference and announce it here before 10th December 2014.


We look forward to see you at Kolkata on 9 & 10 January 2015

1) Scholarship included with Travel reimbursement upto 2000/- + dormitory or shared accommodation + meals during the conference hours

On behalf of Bengali Wikipedia Community (Sorry for writing in English)

நாயன்மார் என்ற கட்டுரை பற்றி[தொகு]

நாயன்மார்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள குலம் எனும் வரிசைக்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? எதை வைத்து 63 நாயன்மார்களின் குலங்களை அங்கீகரித்து இருக்கின்றீர்?

பெரிய புராணத்தில் ஒவ்வொரு நாயன்மார்களின் குலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பெரிய புராணம் எழுதிய காலத்தில் இருந்த குல வேறுபாடுகளை சுட்டி அவ்வேறுபாடுகள் இறைவனை அடைய ஒரு தடையில்லை என்று சுட்ட இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன. இன்றும் எண்ணற்ற பெரிய புராணம், நாயன்மார்கள் குறித்தான நூல்களில் இக்குலச் சுட்டல்களை காண இயலும். மேலும் ஆதாரங்கள் தேவை என்றால் {{ஆதாரம் தேவை}} என்ற வார்ப்புருவினை கட்டுரையில் இடுங்கள். தக்க ஆதாரங்களை தேடிச் சேர்க்க முயலுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:29, 21 சனவரி 2015 (UTC)

சொற்களுக்கு இடையே சீரில்லாத இடைவெளி[தொகு]

புளூஸ் கட்டுரையில் சொற்களுக்கு இடையிலான இடைவெளி சரியாக இல்லை. இதை எப்படி சீர் செய்வது? தொகுத்தல் பெட்டியில் சரியாக தான் உள்ளது. என் உலாவியின் இடைமாற்றை (Cache) அகற்றியும் வேறு உலாவியிலும் சோதித்து பார்த்து விட்டேன். - ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 18:43, 27 நவம்பர் 2014 (UTC)

Yes check.svgY ஆயிற்று--AntonTalk 19:02, 27 நவம்பர் 2014 (UTC)

please show me the publishers of pandiyan mahal by viswaksenar

GitHub[தொகு]

GitHub என்பதை தமிழில் என்ன பெயரில் அழைப்பது?−முன்நிற்கும் கருத்து Suthir (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

கிட்ஹப் எனலாமா?--சண்முகம்ப7 (பேச்சு) 06:58, 1 சனவரி 2015 (UTC)

காப்புரிமை[தொகு]

நாஞ்சில் ஏடு இப்புத்தகம் என் கைவசம் உள்ளது. இதைப் பதிப்பிதவரோ ஆசிரியரோ வெளியிட்ட பதிப்பக நிறுவனமோ எதுவும் இப்போது இல்லை. இதன் காப்புரிமையைத் தெரிந்து கொள்வது எப்படி? நன்றி.--இரா.பாலா (பேச்சு) 10:25, 4 சனவரி 2015 (UTC)

காப்புரிமைப் பற்றி அந்நூலில் எந்தக் குறிப்புகளும் இல்லையென்றால், விக்கியில் காப்புரிமை குறித்தான இடத்தினை காலியாக விட்டுவிடலாம். மற்றபடி காப்புரிமையை பதிப்பகங்கள் வாங்காமல் இருப்பின், அது ஆசிரியருக்கு உரியதாகும். மேலும் ஆசிரியர் தற்போது இல்லையென்றாலும், அவருடைய வாரிசுகளுக்கு அக்காப்புரிமை உண்டு. பதிப்பகம் தற்போது இல்லையென்றாலும் பதிப்பகத்தினை நடத்தியவரின் வாரிசுகளுக்கும் உரிமை இருந்தால் சட்டப்படி செல்லும். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:34, 21 சனவரி 2015 (UTC)
இது காப்புரிமை கொண்டுள்ளது. காண்க: Indian Copyright Law --AntonTalk 06:24, 21 சனவரி 2015 (UTC)

முதல்வர் ஆளுநர் ஆட்சிதலைவர்[தொகு]

முதல்வர் ஆளுநர், மாவட்ட ஆட்சிதலைவர் , ஆணையர் போன்ற தகவல்களை மாற்றனும். ஏதோ ஓரிடத்தில் (வார்ப்புருவில்) மாற்றினால் அம்மாநிலத்தின் எல்லா இடங்களிலும் தெரியும் படி நாம் மாற்றியுள்ளோம் என நினைக்கிறேன். அது எந்த வார்ப்புரு? சார்க்கண்டு முதல்வரை மாற்றனும் தமிழகத்தை சார்ந்த நிறைய இடங்களிலும் மாற்றனும் (மாவட்ட ஆட்சித்தலைவர் போன்றவை) --குறும்பன் (பேச்சு) 19:08, 4 சனவரி 2015 (UTC)

Yes check.svgY ஆயிற்று, வார்ப்புரு:முதலமைச்சர், வார்ப்புரு:ஆளுநர். மாவட்ட ஆட்சித்தலைவர் போன்றவற்றை அந்தந்த கட்டுரைகளில் மாற்றுகிறோம் என நினைக்கிறேன். ஒரு எ.கா. கட்டுரையை குறிப்பிட்டால் அதற்கான வார்ப்புருவை எளிதாக கண்டறியலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 07:05, 5 சனவரி 2015 (UTC)
நாமக்கல், கரூர், மதுரை, சங்ககிரி, கரூர், திருவையாறு வட்டம். Infobox Indian jurisdiction & இந்திய ஆட்சி எல்லை என்ற வார்ப்புருக்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. --குறும்பன் (பேச்சு) 21:17, 7 சனவரி 2015 (UTC)
வார்ப்புரு:தமிழக உயர் அதிகாரிகள்--சண்முகம்ப7 (பேச்சு) 07:21, 8 சனவரி 2015 (UTC)

அச்சு எடுப்பது எப்படி[தொகு]

அச்சு எடுப்பது எப்படி−முன்நிற்கும் கருத்து 59.92.103.143 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

Print பற்றி கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். உலாவியின் (browser) print option (Ctrl+P) கட்டுரையை மட்டும் அச்சு எடுக்கும்.--சண்முகம்ப7 (பேச்சு) 07:21, 8 சனவரி 2015 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பயனர் தொகுப்புகளின் எண்ணிக்கை எப்படி பார்ப்பது[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா பயனர் தொகுப்புகளின் எண்ணிக்கை எப்படி பார்ப்பது. மாத தொகுப்பு எண்ணிக்கை ,நாள் தொகுப்பு எண்ணிக்கை எப்படி பார்ப்பது என்று கூறவும் . புதுவைபிரபு 06:50, 7 சனவரி 2015 (UTC)

உங்கள் தொகுப்பு விவரங்களைக் காண உங்கள் பயனர் பக்கத்தின் மேலேயுள்ள பங்களிப்புகள் என்ற இணைப்பைச் சொடுக்குங்கள்...அதில் footerஇல் காணும் இணைப்புகளில் தொகுப்பு எண்ணிக்கையை தேர்ந்தெடுங்கள்..உங்கள் தொகுப்புக்களைக் காணலாம்...மாதத் தொகுப்புகளுக்கு இந்த கருவியில் நீங்கள் User:Prabhupuducherry/EditCounterOptIn.js அல்லது User:Prabhupuducherry/EditCounterGlobalOptIn.js பக்கங்களில் விருப்பத்தேர்வு தரவேண்டும். --மணியன் (பேச்சு) 03:51, 8 சனவரி 2015 (UTC)

how to write a tamil letters?

நான் என் விருப்பத்தேர்வில் தோற்றம் தத்தலில் Vector (பொதுவானது | முன்தோற்றம் | தனிப்பட்ட சி.எசு.எசு (CSS) | தனிபயன் ஜாவாஸ்கிரிப்ட்) - என்பதில் தனிபயன் ஜாவாஸ்கிரிப்டில் ser:Kurumban/EditCounterOptIn.js என்று கொடுத்தேன், என்னால் மாத தொகுப்பு எண்ணிக்கையை பார்க்க முடியவில்லை. Shared CSS/JavaScript for all wikis: Custom CSS | Custom JavaScript என்பதில் Custom JavaScript திறந்து User:Kurumban/EditCounterOptIn.js & User:Kurumban/EditCounterGlobalOptIn.js என்று இரண்டையும் கொடுத்தேன் Ctrl+F5 அழுத்தினேன் (நான் பயன்படுத்துவது நெருப்புநரி)
Not Opted In
This useris not opted in. As a result, monthly counts are not available, top pages edited are not available. Please add content to User:Kurumban/EditCounterOptIn.js to opt in locally or add content to User:Kurumban/EditCounterGlobalOptIn.js to optin globally. என்று வருகிறது. வேறு உலாவியில் புகுபதிகை செய்தாலும் அதே சேதி தான் வருகிறது. எங்கு User:Kurumban/EditCounterOptIn.js என்பதை தர வேண்டும்?--குறும்பன் (பேச்சு) 21:04, 20 சனவரி 2015 (UTC)
இப்போது பாருங்கள். பயனர்:Kurumban/EditCounterOptIn.js --AntonTalk 21:51, 20 சனவரி 2015 (UTC)

நன்றி ஆன்டன் இப்போது வேலை செய்கிறது--குறும்பன் (பேச்சு) 22:11, 20 சனவரி 2015 (UTC)

தலைப்பில் சந்தேகம்[தொகு]

நான் எங்கள் கல்லூரியில் நாங்கள் துவக்கிய 'குனு / லினக்ஸ் பயனர் குழு' என்னும் தலைப்பில் எங்கள் குழுவைப்பற்றி ஒரு கட்டுரை தொகுக்கலாமா? −முன்நிற்கும் கருத்து Sathishsathi500 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இயலாது. விக்கிப்பீடியா கட்டுரைகள் சிறப்புத் தன்மை மிக்க, செய்தி மதிப்பு மிக்க விடயங்களுக்கே எழுதப்படுகின்றன. காண்க: விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை--மணியன் (பேச்சு) 09:00, 15 சனவரி 2015 (UTC)

ஏற்கனவே உள்ள ஒரு தலைப்பின் கீழ் புதியதாக பதிவேற்றப்பட்ட ஒரு கட்டுரையை இணைப்பு செய்வது எப்படி என்று கூறுங்களேன்.

புதிய கட்டுரையை இணைப்பு செய்வது எப்படி?[தொகு]

ஏற்கனவே உள்ள ஒரு தலைப்பின் கீழ் புதியதாக பதிவேற்றப்பட்ட ஒரு கட்டுரையை இணைப்பு செய்வது எப்படி என்று கூறுங்களேன்.

தமிழில் பெயர் வைப்பதில் சந்தேகம்[தொகு]

"Yanis Varoufakis" என்னும் பெயரை தமிழில் எவ்வாறு குறிப்பிடுவது? "யனிஷ் வரோபகிஸ்" என்பது சரியாக இருக்குமா? --Suthir

Suthir, யானிசு வரூபாக்கிசு என எழுதலாம்.--Kanags \உரையாடுக 21:13, 6 பெப்ரவரி 2015 (UTC)

ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) மேலே கூறியுள்ள கோவிலின் முகவரி கொடுத்து உதவவும். நன்றி.--−முன்நிற்கும் கருத்து Chantrasekaran (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஏற்கனவே எழுதப்பட்ட கட்டுரையின் தலைப்பை மாற்றுவது எப்படி?[தொகு]

ஏற்கனவே எழுதப்பட்ட கட்டுரையின் தலைப்பில் பிழை உள்ளது. அதை மாற்றுவது எப்படி?--Arunnirml (பேச்சு) 17:07, 8 பெப்ரவரி 2015 (UTC)

வரலாற்றை காட்டவும் என்பதற்கு அருகில் இருக்கும் More என்பதை சொடுக்கினால் நகர்த்தவும் என்று வரும் அதில் புதிய தலைப்பை இடலாம். ஏன் நகர்த்துகிறோம் என்ற காரணத்தையும் அதில் தெரிவிக்கவும். --குறும்பன் (பேச்சு) 03:38, 9 பெப்ரவரி 2015 (UTC)


படிமம் நகர்த்தல்[தொகு]

https://en.wikipedia.org/wiki/File:SpiekerCenter.svg -இந்தப் படிமத்தைப் பொதுவகத்திற்கு நகர்த்த வேண்டும். உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி--Booradleyp1 (பேச்சு) 04:36, 20 பெப்ரவரி 2015 (UTC)

தகவல் பெட்டி தொடர்பான உதவி[தொகு]

தமிழ் விக்கிபீடியாவில் தகவல் பெட்டிகளை எப்படிப் பயன்படுத்துவது? Mohammed Ammar (பேச்சு) 07:34, 21 பெப்ரவரி 2015 (UTC)