விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 8

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு[தொகு]

சம்மு காசுமீர் மாநிலத்தில் சிரிநகர் இடம் தவறாக உள்ளது. அது போல் ஆளுனர் பெயரையும் சேர்க்கலாம். சம்மு காசுமீர் வரைபடத்தை மாற்றினாலும் அது இங்கு மாறவில்லை. இந்த வார்ப்புரு வேறு இடத்திலிருந்து அத்தகவல்களை பெறுகின்றன. அது எங்கு உள்ளது? --குறும்பன் (பேச்சு) 21:07, 4 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வாரியாக எதிர் வாரியாகத்/க்/ச்[தொகு]

நாடுகள்/நோக்கங்கள்/துறைகள் வாரியாக எதிர் வாரியாகத்/க்/ச், எது சரி? --Natkeeran (பேச்சு) 23:04, 6 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

சிறிது தெளிவாகக் கூற முடியுமா? --மதனாகரன் (பேச்சு) 04:01, 7 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
எ+கா: நாடுகள் வாரியாக எழுத்தாளர்கள், நாடுகள் வாரியாகத் தமிழர், நாடுகள் வாரியாகக் கோவில்கள்.--Kanags \உரையாடுக 04:16, 7 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

க், ச், த், ப் ஆகியவற்றையும் சேர்த்து எழுதுவதே சரி! --மதனாகரன் (பேச்சு) 06:07, 7 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

Applet - Application[தொகு]

அப்லட், அப்பிளிக்கேசன் ஆகிய இரண்டிற்கும் பொருத்தமான தமிழ்ச் சொற்களை வழங்குமாறு வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:01, 8 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

Applicationஐச் செயலி என்றும் Appletஐக் குறுஞ்செயலி என்றும் அழைக்கலாம். --மதனாகரன் (பேச்சு) 10:43, 9 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

படிமத்தின் புதிய பதிப்பு[தொகு]

படிமத்தின் புதிய பதிப்பு பதிவேற்றினாலும் கட்டுரையில் பழைய படிமத்தையே காட்டுகின்றது. எப்படி புதிய பதிப்பினை பயன்படுத்துவது? இங்கே தெரியும் படிமம் கட்டுரைகளில் தெரியாது, பழைய படிமமே தெரிகின்றது.

--Anton (பேச்சு) 17:03, 14 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

எனக்கு புதிய பதிப்புதான் தெரிகிறது அன்டன், பக்கத்தை purge செய்து பாருங்கள், உதவிப்பக்கம் en:Wikipedia:Purge--சண்முகம்ப7 (பேச்சு) 17:22, 14 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
purge ஏற்கெனவே செய்தும் பயன்தரவில்லை. வேறு உலவியில் புதிய பதிப்பு தெரிக்கின்றது. நன்றி சண்முகம். --Anton (பேச்சு) 17:54, 14 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

calque[தொகு]

Calque என்னும் சொல்லைத் தமிழில் என்ன பெயரிட்டு அழைக்கலாம்? இதைப் பாருங்கள். to adopt a word by translation of its parts என்று பொருள். என்ன பெயர் என்று கூறுங்கள்! நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:22, 28 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

ISSN needed[தொகு]

வார்ப்புரு:Infobox journal ஐ எங்கு இணைத்தாலும் அந்த கட்டுரையுடன் ISSN needed என்ற பகுப்பும் இணைந்து வருகிறது. இந்த பகுப்பின் தேவை என்ன என்பதை கூற முடியுமா?.நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:06, 28 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

இந்த வார்ப்புருவில் இதழின் ISSN (International Standard Serial Number பன்னாட்டு சீர்தரத் தொடர் எண் கட்டாயம் தரப்பட வேண்டும் என நினைக்கிறேன். இவ்வார்ப்புருவுக்குப் பதிலாக வார்ப்புரு:Infobox Magazine ஐப் பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 09:30, 28 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி நண்பரே --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:43, 28 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

இதழ்களின் பகுப்புகள் பற்றி[தொகு]

  • [[பகுப்பு:துறைகள் வாரியாகத் தமிழ் இதழ்கள்]] [[பகுப்பு:துறைசார் இதழ்கள்]] என இரு பகுப்புகள் உள்ளன இதில் துறைகள் வாரியாகத் தமிழ் இதழ்கள் பகுப்பில் பல்வேறு துறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் துறைசார் இதழ்கள் பகுதியிலுள்ள பகுப்புகளையும் இணைக்க வேண்டுமா?.
  • தமிழ் இதழொன்றிக்கு எந்தெந்த பகுப்புகளை இணைக்க வேண்டும்?. உதாரணமாக பல்சுவை இதழான ஆனந்த விகடனுக்கு [[பகுப்பு:தமிழ் இதழ்கள்]] [[பகுப்பு:தமிழ்நாட்டுத் தமிழ் இதழ்கள்]] [[பகுப்பு:பல்சுவைத் தமிழ் இதழ்கள்]] என்பவனவற்றோடு இன்னும் இணைக்கப்பட வேண்டிய பகுப்புகள் இருக்கின்றனவா?.

வழிகாட்டுதல்களை எதிர்நோக்கிபடி.. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:53, 29 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

இதழ்கள் பகுப்பின் துணைப் பகுப்புகளைப் பாருங்கள். துணைப் பகுப்புகளின் துணைப்பகுப்புகளையும் பாருங்கள். உங்களுக்குத் தேவையானவை அவற்றில் சிக்கக் கூடும். இருக்கவே இருக்கிறது விரைவுப் பகுப்பி!! சில எழுத்துகளை உள்ளிட்டுப் பார்த்தால் நீங்கள் தேடும் பகுப்பு கிடைத்துவிடும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:07, 2 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

சோழ மன்னர்களின் கால பங்கிட்டில் சில குழப்பங்கள்[தொகு]

சோழமன்னர்களை முற்காலச் சோழர்கள், இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள் என மூன்றாக மட்டுமே பகுத்திருப்பதாக நினைத்திருந்தேன். ஆனால் விக்கிப்பீடியாவில் சாளுக்கிய சோழர்கள், சங்ககாலச் சோழர்கள் என்று மேலும் இரு பிரிவுகள் உள்ளமையால் சிறிய குழப்பம் எழுகிறது.

  1. சங்ககாலச் சோழர்கள் முற்காலச் சோழர்கள் - இந்த இரண்டு கட்டுரைகளிலும் சில மன்னர்களின் பெயர்கள் பொதுவாக இடம்பெற்றுள்ளன. இரண்டு கட்டுரையையும் ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்த சோழர்களை குறிப்பதனால் ஒன்றாக்கி விடலாமே?.
  2. அதே போல பிற்கால சோழர்கள் கட்டுரையும் சாளுக்கிய சோழர் கட்டுரையும் சற்று ஒப்பிட்டு பார்க்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
  3. பிற்கால சோழர்கள் கட்டுரையில் விசயாலய சோழனிலிருந்து 3 ம் இராசேந்திரன் வரை பிற்கால சோழர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வார்ப்புரு:சோழர் வரலாறு வில் விசயாலய சோழனிலிருந்து அதிராஜேந்திர சோழன் வரை இடைக்கால சோழர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. விசயாலய சோழன் இடைக்காலத்தினை சேர்ந்தவனா?. பிற்காலத்தினை சேர்ந்தவனா என்கிற குழப்பம் விக்கிப்பீடியா வாசிப்பாளர்களுக்கு ஏற்படாமல் தவிர்க்க வேண்டுகிறன். நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:47, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

//காலப் பங்கீடு! நகைச்சுவையான தலைப்பு, 1. சங்ககாலச் சோழர்கள் கட்டுரை, பாடல்களில் அறியப்படும் சோழர்களின் பட்டியலைத் தருகிறது. முற்காலச் சோழர்கள் கட்டுரையிலும் உரை அவ்வளவாக இல்லை. வார்ப்புரு மட்டுமே உள்ளது. முதலாவது தலைப்பை மாற்றக் கோரலாம். சங்கப் பாடல்களில் சோழர் என வைக்கலாம். இரண்டாவது கட்டுரை விரிவாக்கப் பட வேண்டும்/ தலைப்பில் வேறுபாடு இருப்பதாகவே தோன்றுகிறது. 2. பிற்கால சோழர்கள் கட்டுரையில் உள்ளடக்கமே இல்லை. நீக்கிவிடலாம். வார்ப்புருவில் உள்ளது இதிலும் உள்ளது. சாளுக்கிய சோழர்கள் கட்டுரையில் உள்ளடக்கம் உள்ளது. எப்படியாயினும், இவற்றிற்கு உரை திருத்தம் தேவை என்பதை உணர்த்திவிட்டீர்கள். ஒன்றிணைத்தல் குறித்து கருத்து இல்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:31, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

ஒன்றிணைத்தல் அவசியமென்று வற்புறுத்தவில்லை. தேவையில்லையென்றால் அப்படியே இருக்கட்டும். இந்தக் கட்டுரைகளைப் படிக்கையில் எனக்கு சற்று குழப்பம் ஏற்பட்டது. அதை தெரிவித்திருக்கிறேன். வரலாற்றில் ஆர்வமுள்ளோர் சற்று மேம்படுத்த வேண்டும். வலைப்பூக்களில் இது குறி்த்து தேடிப்பார்த்தேன், சாளுக்கிய சோழர்களை பிற்காலச்சோழர்களோடு ஒருதளம் சேர்த்துள்ளது. சங்ககாலச் சோழர்கள், முற்காலச் சோழர்கள்,இடைக்காலச் சோழர்கள்,சாளுக்கிய சோழர்கள் என்று பிரித்து வார்ப்புரு:சோழ மன்னர்கள் வார்ப்புருவை உருவாக்கியுள்ளேன். அருள்கூர்ந்து மேம்படுத்தி தர வேண்டுகிறேன். மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:02, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

பழைய கட்டுரைகளுக்கு உதவி தேவை[தொகு]

இற்றைப்படுத்தல் பற்றி அல்ல, தொடர்ந்து படியுங்கள். பழைய கட்டுரைகள் பல, எண்ணிக்கையை பெருக்கும் நோக்கில் அப்படியே சில வரிகளில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. அப்போதைய தேவை அப்படி இருந்திருக்கலாம். இவற்றில் பெரும்பான்மை பல்கலைக்கழகம், மொழிகள், நாடுகள் பற்றியன. இந்த கட்டுரைகள் தொடர்பான பொது ஆங்கிலச் சொற்களை கீழே ஒருவர் பட்டியலிட்டு, மற்றொருவர் தமிழாக்கம் தந்தால் விரைந்து உரை திருத்த வேலைகளை முடிப்பேன். சில சொற்கள்: "variant", provost போன்றன. பல கட்டுரைகள் இவ்வாறு உள்ளதால், தேவை!! விரைந்து உதவுங்கள் நன்றி! :-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:21, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

தமிழாக்கம்[தொகு]

isotomic conjugate-என்பதன் சரியான தமிழ்ச் சொல்லைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp (பேச்சு) 14:15, 6 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:Navbox[தொகு]

உரையாடல் விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்) இற்கு மாற்றப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 22:06, 10 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

otrs வேண்டுக்கோள் கேட்பது எப்படி[தொகு]

அக்ஷ்ய பாத்ரம் யசோதா தனது படங்களை பொதுமத்தில் சேர்ப்பதற்கு அனுமதி தந்துள்ளார். அதனை உறுதி செய்ய otrs ticket ஒன்றை எவ்வாறு உருவாக்க வேண்டும். அவரது படங்கள் மிகவும் தரமானவை, ஆனால் மிகச் சிறியதாக அவரது வலைத்தளமுகவரி உள்ளது. இது ஏற்றுக் கொள்ளக் கூடியதா ? --Natkeeran (பேச்சு) 02:56, 13 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

சரியான தமிழ்ச்சொல் தேவை[தொகு]

Liberty, Freedom இவற்றுக்கான சரியான தமிழ்ச்சொற்கள் எவை?.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:54, 17 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

Liberty - விடுதலை, Freedom - சுதந்திரம் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். பொருள் துல்லியம் தேவைப்படும் பொழுது சமசுகிருதச் சொற்களையோ பிற மொழிச் சொற்களையோ கையாழுதல் தவறன்று என்பது என் கருத்து. --Natkeeran (பேச்சு) 00:52, 18 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

இவை இரண்டுமே விடுதலையையே குறிக்கிறது. இவ்விரண்டு சொற்களின் மூலம் வேறு, அதனால் இருவேறு சொற்கள். Statue of Libertyயினை தமிழில் சுதந்திரச் சிலை என்று கூறுகிறோம். சுதந்திரம் தமிழல்ல, விடுதலைச் சிலை சிறப்பாகவே இருக்கும். Freedomமுடைய ஒரு பிரிவாகவே liberty கருதப்படுகிறது. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:33, 18 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

பஞ்சபூத தலங்கள்[தொகு]

திருவாரூர் பஞ்சபூத தலங்களுள் ஒன்றா? (நிலம்). விவரம் தெரிந்தவர்கள் உதவவும்.--Booradleyp (பேச்சு) 08:33, 20 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம். திருவாரூர் பஞ்ச பூத தலங்களுள் ஒன்றல்ல. முக்தி தரும் தலங்களுள் ஒன்று திருவாரூர்.
  1. நிலம் - காஞ்சிபுரம்
  2. நெருப்பு - திருவண்ணாமலை
  3. நீர் - திருவானைக்கா
  4. ஆகாயம்- சிதம்பரம்
  5. வாயு- காளத்தி

இவையே பஞ்ச பூத தலங்கள் நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:28, 20 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

திருவாரூர் பஞ்சபூத தலங்களில் ஒன்றுதான். அது நிலத்திற்காகன தலமாகும். சைவம் பெரு சமயம் என்பதால் இவ்வாறான பட்டியல்களில் சிறு மாறுபாடுகள் காணப்படுகின்றன. காஞ்சிபுரம், திருவாரூர் இரண்டையும் பிருதிவித்தலம் என்பர். ஆதாரம் http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_arur_araneri.htm நன்றி--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:52, 2 மே 2013 (UTC)[பதிலளி]

string theory pattri vilakkungalen.--−முன்நிற்கும் கருத்து 117.213.69.92 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

சரக்கோட்பாடு கட்டுரையைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 07:46, 12 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

தாமிரபரணி[தொகு]

பேச்சு:தம்பபண்ணி பக்கத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

படங்கள்[தொகு]

கட்டுரைக்கான படங்களை எப்படி விக்கிபீடியாவுக்கு அனுப்புவது... அதற்கான விளக்கம் தேவை.−முன்நிற்கும் கருத்து 115.112.103.26 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம் என்ற உதவிப்பக்கத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 09:59, 4 சனவரி 2013 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:புதுச்சேரி ஒன்றியம்[தொகு]

வார்ப்புரு:புதுச்சேரி ஒன்றியம் :(பா • உ • தொ) இவ்வார்ப்புருவைப்பார்க்க சுட்டு போது
வார்ப்புரு:புதுச்சேரி உருவாக்கம் என புதிய பக்கம் தோன்றுகிறதே!--ஸ்ரீதர் (பேச்சு) 14:31, 12 சனவரி 2013 (UTC)[பதிலளி]
இப்போது சரியாகி விட்டது.--Kanags \உரையாடுக 14:38, 12 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தலைப்பிடல் உதவி[தொகு]

நான் en:Hole punch பற்றி எழுத துளை பொறி எனத் தலைப்பிட்டபோது இத்தலைப்பில் வேறு கட்டுரை ஒன்று தட்டுப்பட்டது. அது en: Drilling rig பற்றியது. இதற்குத் துளைத்தல் பொறி அல்லது துளைத்தல் முனை என இத்தலைப்பை மாற்றுவது பொருந்தாதா? தயவு செய்து கருத்துக்கூறவும். அல்லது Hole punch க்கு பொருந்தும் வேறொரு பதத்தைக் கண்டறிய வேண்டும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:45, 17 சனவரி 2013 (UTC)[பதிலளி]

en:Hole punch இதற்கான தமிழ் கட்டுரைத்தலைப்பு காகித துளை கருவி என்பது பொருந்தும்
துளை பொறிஆழ்துளை பொறி என நகர்த்தலாம் --ஸ்ரீதர் (பேச்சு) 04:21, 17 சனவரி 2013 (UTC)[பதிலளி]
ஆம். காகித துளை கருவி பொருந்துவதாய்தான் உள்ளது. வேறு கருத்துகளுக்காக சிறிது பொறுத்திருப்போம். மிக்க நன்றி ஸ்ரீதர்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:47, 17 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பயணம்[தொகு]

தமிழ் விக்கிபயணம் தொடங்கப் பட்டுவிட்டதா?−முன்நிற்கும் கருத்து 203.129.195.114 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இன்னுந் தொடங்கப்படவில்லை. சோதனை நிலையிலுள்ள தமிழ் விக்கிப்பயணத்தை இங்கே காணலாம். --மதனாகரன் (பேச்சு) 05:28, 20 சனவரி 2013 (UTC)[பதிலளி]
சோதனை நிலையில் தொகுத்து பங்களிக்க முடியுமா?பாலாஜி (பேச்சு) 08:26, 14 பெப்ரவரி 2013 (UTC)
பங்களிக்கலாம் பாலாஜி, அடைக்காப்பக்கத்தில் Wy/ta/கட்டுரைத்தலைப்பு என எவ்வளவு கட்டுரைகள் வேண்டுமானலும் உருவாக்கலாம், குறிப்பிடத்தக்க அளவிலான பங்களிப்புகள் வரும்போது தனி தளம் உருவாக்கப்பட்டு இவை அனைத்தும் அத்தளத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும். இதில் தொடர்ந்து மூன்று பயனர்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் பங்களித்தால் புதிய தளம் உருவாக்கப்படும் என நினைக்கிறேன் (மேல் விக்கியில் உரையாடல் தனி)--சண்முகம்ப7 (பேச்சு) 13:07, 14 பெப்ரவரி 2013 (UTC)
நன்றி. விக்கிப்பயணத்தில் தொகுத்துக்கொண்டிருக்கிறேன். மேலும் பலர் இணைந்தால் நலம்.பாலாஜி (பேச்சு) 18:51, 8 மார்ச் 2013 (UTC)

அடைப்புக்குறியில் ஆங்கிலத்தில் எழுத முடியவில்லை.[தொகு]

கட்டுரையில் கலைச் சொல்லினை அடுத்து அடைப்புக்குறியில் ஆங்கிலத்தில் அச்சிட தெரியவில்லை.உதவுங்கள்-அருண்தாணுமாலயன்.

ஆங்கிலத்தில் தட்டச்ச, தமிழ் தட்டச்சுக் கருவியை செயலிக்கச் செய்து விட்டு பின் தட்டச்சுங்கள். விக்கியின் தட்டச்சுக் கருவியை செயலிழக்க பக்கத்தின் மேலுள்ள "தமிழில் எழுத" இணைப்பை சொடுக்கி "செயலாக்குக" என்ற பெட்டியை சொடுக்குங்கள். பின் ஆங்கிலத்தில் தட்டச்சலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 17:04, 22 சனவரி 2013 (UTC)[பதிலளி]

மிக்கநன்றி.தெரிந்து கொண்டேன். அருண்தாணுமாலயன்.

கணிதச் சூத்திரத்தில் மேலொட்டு,கீழொட்டு சரியாக இடமுடியவில்லை.உதவி தேவை.அருண்தாணுமாலயன்

தாங்கள் தொகுக்கும் பக்கத்தில் உதவி பட்டைகளில் மேலொட்டு, கீழொட்டுக்கான (உள்ளீடு என்பதற்கு முன்) குறியீடுகள் உள்ளன நீங்கள் செலக்ட் செய்து இக்குறியீட்டினை சொடுக்கினால் கிடைக்கும்.

முழுமையாகச் செயலாக்க முடியவில்லை X5 திரையில் மாற்றமில்லை. என்னைபற்றிய தகவலையும் கொடுக்க முடிய வில்லை.பொத்தானை சொடிக்கியதும் திரை வெறுமையாகிறது.உதவி. r

ulagamaiyam[தொகு]

i cannot find out the essay of ulagamaiyam.....please help me to find out this title....

நீங்கள் கருதியது இதுவா ?
காண்க :உலகமயமாதல்
பொது நிறை மையம்
அங்கில மொழி கட்டுரைகளான Geocentric orbit மற்றும் Orbit இவற்றுக்கு தமிழில் கட்டுரை இல்லை
--ஸ்ரீதர் (பேச்சு) 03:22, 25 சனவரி 2013 (UTC)[பதிலளி]

i want full history of tamil nadu fisher men problem file and good books for youth

eudicot தமிழ்[தொகு]

Eudicot யின் தமிழ் சொல் என்ன? உதவவும். பாலாஜி (பேச்சு) 04:43, 11 பெப்ரவரி 2013 (UTC)

eudicots என்பதற்கு விக்சனரியில் இது ஒருமை இல்லாத அல்லது அமையாத பன்மைச் சொல்லாகும் என்று சொல்லியுள்ளார்கள். இந்த பெயரில் பூ வகை உள்ளது. நீங்கள் பூ வகைக்கான தமிழ் பெயர் கேட்கறிங்களா? --குறும்பன் (பேச்சு) 02:15, 21 பெப்ரவரி 2013 (UTC)

ஆம். பூவைப்பற்றிதான். taxoboxயில் |unranked_classis = Eudicots என்று வருகிறது. monocot என்றால் ஒருவித்திலையி என்று எழுதியிருப்பதைப்பார்த்தேன். அதனால் Eudicot என்பதற்கு தமிழில் என்ன என்று அறிய விரும்புகிறேன்.பாலாஜி (பேச்சு) 03:19, 23 பெப்ரவரி 2013 (UTC)
சற்று குழப்பமுண்டு. eudicot / dicots இரண்டையும் தாவரவியல் வகையீட்டில் மறுசீரமைத்தார்கள் என நினைவு. இருவித்திலையி என்னும் பெயர் dicots குறிக்கப் போய்விட்டது. --சோடாபாட்டில்உரையாடுக 17:35, 25 பெப்ரவரி 2013 (UTC)

கர்நாடகம் மாநிலத்திலுள்ள ஊர்கள், நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் தகவல் பெட்டி[தொகு]

கர்நாடகம் மாநிலத்திலுள்ள ஊர்கள், நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் தகவல் பெட்டியில் தற்போதைய முதலமைச்சர் செகதீசு செட்டர் பெயர் மாற்றம் இல்லை --ஸ்ரீதர் (பேச்சு) 23:06, 16 பெப்ரவரி 2013 (UTC)

வார்ப்புருவுக்கான இணைப்பையும் தந்தால் தேடுவதற்கு வசதியாக இருக்கும்.--Kanags \உரையாடுக 23:35, 16 பெப்ரவரி 2013 (UTC)
வார்ப்புரு:Infobox Indian jurisdiction (எ-கா) பெங்களூரு--ஸ்ரீதர் (பேச்சு) 06:49, 17 பெப்ரவரி 2013 (UTC)
Y ஆயிற்று--Kanags \உரையாடுக 06:57, 17 பெப்ரவரி 2013 (UTC)

வரைபடம் சரியான இடத்தை காட்டவில்லை[தொகு]

சரியான இடத்தை வரைபடம் காட்டுவதில்லை. பல கட்டுரைகளில் இச்சிக்கல் உள்ளது. எகா காக்கிநாடா, பெங்களூரு, கொல்கத்தா, வாரங்கல், பெல்காம், ஹூப்ளி, கோலார், அலகாபாத், சிலிகுரி...

வார்ப்புருவில் முதலமைச்சர் ஆளுனர் பெயர்களை எவ்வாறு இடுவது. தனித்தனியாக இடாமல் ஓர் இடத்தில் இட்டுள்ளோம் அது அவ்வார்ப்புருவை பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் தெரிகிறது. (எகா தமிழக ஊர்கள்) அது எப்படி என்று தெரியவில்லை. --குறும்பன் (பேச்சு) 02:00, 19 பெப்ரவரி 2013 (UTC)

(எ-கா) வாரங்கல் வார்ப்புருவில் --இங்கு -> (state_name = Andhra Pradesh |) மாநிலம் =ஆந்திரப் பிரதேசம் என மாற்றம் செய்ய வேண்டும்--ஸ்ரீதர் (பேச்சு) 05:29, 19 பெப்ரவரி 2013 (UTC)

மாற்றம் செய்யப்பட்ட கோப்பு[தொகு]

தமிழ் இணையக் கல்விக்கழகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட அதிகார்வப்பூர்வ புதிய கோப்பை பதிவேற்றியுள்ளேன் தமிழ் இணையக் கல்விக்கழகம் கட்டுரையில் மாற்றம் இல்லை --ஸ்ரீதர் (பேச்சு) 07:10, 20 பெப்ரவரி 2013 (UTC)
பழைய திருத்தத்தை நீக்கியுள்ளேன், இப்போது பக்கத்தை en:Wikipedia:purge செய்து பாருங்கள் --சண்முகம்ப7 (பேச்சு) 07:47, 20 பெப்ரவரி 2013 (UTC)

silence[தொகு]

Sir, I started an article about "Silence" the title was already there. but while I go through search by typing search I couldn't get the article. Please advise me what to do? Thanks. --Hr.balasundaram (பேச்சு) 11:18, 23 பெப்ரவரி 2013 (UTC)

கட்டுரை வெளியில் இல்லாமல் வேறொரு இடத்தில் இருந்ததாலும் கலைக்களஞ்சிய நடையின்றி இருந்ததாலும், நீக்கப்பட்டிருந்தது. வரிகளை மீட்டெடுத்து கீழே தந்துள்ளேன். மௌனம் என்ற தலைப்பில் மீண்டும் உருவாக்குங்கள். உள்ளடக்கங்களை தகவல் மட்டும் (facts only) நடையில் இருக்குமாற்றி அமைத்து உருவாக்குங்கள்.
பேச்சற்றிருப்பதா? அல்லது சைகை மட்டும் காண்பித்துக்கொண்டு வாய்மூடியிருப்பதா? ஓசை இல்லாமலிருன்தால் மட்டும் அது மௌனமாகிவிடுமா? என்றால் மௌனத்தின் உட்பொருள் தான்என்ன? சின்தனையில்லாமலிருப்பது தான் மௌனம் என்று பல சின்தனையாளர்கள் சொல்கிறார்கள். ஆக மனமற்றிருப்பது தான் மௌனம் என்பது தெளிவாகிறது. மனம் இறக்கும் கலை என்னும் ஒரு புத்தகம் ஓஷோவின் சொற்பொழிவுகளைத்தாங்கி வெளிவன்திருப்பதை தமிழுலகம் அறியும்.

சொடுக்க இயலாத படிமங்கள் தேவை[தொகு]

படிமங்களைக் காட்டும் போது அவற்றைச் சொடுக்கி படிமப் பக்கத்துக்குச் செல்லாதவாறு தடுக்க முடியுமா?--இரவி (பேச்சு) 16:31, 25 பெப்ரவரி 2013 (UTC)

பார்க்க m:Help:Images_and_other_uploaded_files#Link & en:Wikipedia:Picture_tutorial#Links--சண்முகம்ப7 (பேச்சு) 19:17, 25 பெப்ரவரி 2013 (UTC)
file டேகில் link= என்று போட்டு வெற்றாக விட்டால் செய்யலாம் --சோடாபாட்டில்உரையாடுக 00:08, 26 பெப்ரவரி 2013 (UTC)

நன்றி, பாலா, சண்முகம். விக்கிப்பீடியா:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள்#வயது, பாலினம் அடிப்படையில் பகுதியில் காணும் நிரலில் இதனை எவ்வாறு செயற்படுத்துவது?--இரவி (பேச்சு) 10:08, 26 பெப்ரவரி 2013 (UTC)

தொடர்புடைய வார்ப்புருவைத் திருத்தியதன் மூலம் படிமங்களைச் சொடுக்கவியலாமல் செய்தாகிவிட்டது. உதவிக்கு நன்றி. --இரவி (பேச்சு) 18:38, 27 பெப்ரவரி 2013 (UTC)

படங்களை கட்டுரைகளில் சேர்ப்பது எப்படி?பயனர்:Arunnirml

அருண்நிர்மல், நீங்கள் ஏற்கெனவே விக்கிப்பீடியாவில் உள்ள படிமத்தை கட்டுரையில் இணைக்க விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி என்பதைக் காணவும். புதிய அல்லது உங்கள் படிமத்தை முதலில் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்ய விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம் பார்க்கவும்.--மணியன் (பேச்சு) 13:34, 20 மார்ச் 2013 (UTC)