பயனர் பேச்சு:Kanags
|
|
[தொகு] வேண்டுகோள்கள்
08:06, 31 மார்ச் 2012 பக்கம் பல்லவராயர் ஐ Kanags (பேச்சு | பங்களிப்புகள்) நீக்கினார் (பதிப்புரிமை மீறல்: http://kallarperavai.weebly.com இருந்த உள்ளடக்கம்: '== பல்லவராயர் == === பல்லவர், பல்லவராய...' (தவிர, 'Pallava...)
பல்லவராயர் மற்றும் வில்லவராயர் என்ற இரு பதிவுகளை நீக்கியுள்ளீர்கள். அதற்கான காரணம் பதிப்புரிமை மீறல் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உண்மையில் சொல்லப் போனால் தாங்கள் குறிப்பிட்டுள்ள இணையதளம்தான் பதிப்புரிமை மீறல் செய்துள்ளது. ஏனென்றால் ”கள்ளர் சரித்திரம்” என்ற ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் புத்தகத்திலிருந்துதான் அவர்கள் அந்தக் குறிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இது ஒரு வரலாற்று உண்மை. ஒரு இனத்தின் அடையாளக் குறிப்பு. காலங்காலமாக பட்டி தொட்டிகளில் வழக்கில் இருந்து வரும் செய்தி. இதற்கெல்லாம் யாரும் பதிப்புரிமை கோர முடியாது. ஆகவே விளக்கம் கேட்டு வாய்ப்பளித்து பின்னர் பதிவுகளை நீக்குங்கள். சும்மா கூகிளில் தேடிப்பார்த்து விட்டு செயல்படுவது எல்லா நேரங்களிலும் பயன் தராது. Pallavarayar (பேச்சு) 04:18, 4 ஏப்ரல் 2012 (UTC)
- விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கக் கட்டுரைகள் பரிந்துரைப்பு#ஏன் எப்போதும் நபர்கள் இப்பக்கத்தை கவனிக்கவும்.
- உங்கள் பேச்சுப்பக்கம் பெரிதாக உள்ளதால் உரையாடுவதற்கு கடினமாயுள்ளது. சற்று நகற்றி எளிமையாக உரையாடுவதற்கு வழிவகை செய்ய முடியுமா?--தென்காசி சுப்பிரமணியன் 17:18, 26 சனவரி 2012 (UTC)
[தொகு] Rangeblock
சிறீதரன், டைனமிக் ஐபிகளைத் தடுக்க ஒரு ஐபி கொத்தைத் தடுக்கலாம். அதே நேரம் காலம் அதிகமாகத் தடுக்க வேண்டாம். ஏனெனில் அவை ஒவ்வொரு முறை மாடம் இணையத்துடன் இணையும் போதும் மாறும் என்பதால், அடுத்த முறை பிறருக்குப் போய் விடும். 49.200.112.183 என்பதை 49.200.112.183/20 என்று மாற்றித் தடை செய்தால், இக்கொத்தில் உள்ள சுமார் 4000 ஐபிகள் தடையாகும். இதைக் குறைந்த காலத்திற்கு தடை செய்யலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 11:50, 28 சனவரி 2012 (UTC)
- அறியத்தந்தமைக்கு நன்றி சோடாபாட்டில்.--Kanags \உரையாடுக 13:16, 28 சனவரி 2012 (UTC)
[தொகு] வாழ்த்துகள்
தங்கள் பங்களிப்பு பலருக்கும் எடுத்துக்காட்டா உள்ள ஒன்று. தொடர் துரத்தலுக்குப் பிறகு நீங்கள் முதற்பக்க அறிமுகத்தில் இடம் பெற முன்வந்தமைக்கு வாழ்த்துகள் :) --இரவி 09:03, 29 சனவரி 2012 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியா முதற்பக்க அறிமுகம் கண்டேன் மகிழ்ச்சி! வாழ்த்துகள்!! தங்கள் ஒளிப்படத்தையும் சேர்த்திருந்தால் மிக நன்றாக இருக்கும். ஒளிப்படமில்லாத அறிமுகங்கள் தொடர்ந்து அறியாமுகங்களாகத்தானிருக்கும். அறிமுகத்தில் அறியாமுகம் வேண்டாமே...! தங்கள் படத்தை இணைக்க வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:28, 29 சனவரி 2012 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியா முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். உங்கள் படத்தை இணைக்க வெண்டுகிறேன். --சஞ்சீவி சிவகுமார் 16:12, 29 சனவரி 2012 (UTC)
அப்பாடா, கடைசியாக உங்கள் அறிமுகத்தை முதற்பக்கத்தில் பார்க்க முடிந்தது!! ஒப்பரிய, உண்மையிலேயே ஒப்பரிய தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் நீங்கள்! நினைந்து நினைந்து வியக்க வைக்கும் சீரான இடைவிடாத பேருழைப்பு! வாழ்க உங்கள் நற்பெரும் அருந்தொண்டு! உடல் நலத்தோடும் உள நலத்தோடும் வாழ்வாங்கு வாழ நல்வாழ்த்துகள்! தமிழ் விக்கிப்பீடியாவில் ஆற்றும் அளப்பரிய பங்களிப்பையும் தாண்டி விக்கிச் செய்திகளில் முத்திரை பதித்த அரும் பணி! வாழ்க! --செல்வா 19:53, 31 சனவரி 2012 (UTC)
உங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி!!! வாழ்த்துகள்!!!--Nan 20:02, 31 சனவரி 2012 (UTC)
- தமிழ் விக்கியின் எல்லாத் திட்டங்களிலும் முத்திரை பதித்த உங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். பணி தொடர வாழ்த்துகின்றேன்!--பவுல்-Paul 20:08, 31 சனவரி 2012 (UTC)
-
- அனைவருக்கும் எனது நன்றிகள். உங்கள் ஊக்கமே எனது பலம்:).--Kanags \உரையாடுக 20:20, 31 சனவரி 2012 (UTC)
- முதற்பக்கத்தில் தங்கள் அறிமுகம் கண்டு மிக்க மிக்க மிக்க ...மிக்க மகிழ்ச்சி...! தங்கள் சேவை வாழ்க! சண்டிலிப்பாய்க்கு அந்தக்காலத்தில் "சீரணி நாகம்மா" கோவிலுக்கு திருவிழாக்காலங்களில் வட்டுக்கோட்டையில் இருந்து வருவதுண்டு..--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 11:32, 4 பெப்ரவரி 2012 (UTC)
[தொகு] விக்கிமூலத்தில் மிக நீண்ட பக்கங்கள் சிலவற்றை அகற்ற வேண்டுகோள்
கனக்சு, பல மாதங்களுக்கு முன்னால் விக்கிமூலத்தில் தமிழி விவிலியத்தைப் பதிவேற்ற எனக்கு உதவியது நினைவிருக்கலாம். அப்போது, மிக நீண்ட பகுதிகளாக பதிவேற்றுவதைத் தவிர்க்கும்படி கூறினீர்கள். எனவே, இரண்டு இரண்டு அதிகாரமாகப் பிரித்து விவிலிய நூற்களை ஒவ்வொன்றாகப் பதிவேற்றிக்கொண்டு வருகிறேன். முதற்கட்டமாகப் பதிவேற்றிய நீண்ட பகுதிகள் அனைத்தையும் சிறு சிறு பகுதிகளாக ஏற்கெனவே பதிவேற்றிவிட்டேன். எனவே, முந்தைய நீண்ட பகுதிகளை அகற்றுமாறு வேண்டுகோள் விடுத்து சம்பந்தப்பட்ட பதிவுப் பக்கங்களின் உரையாடலில் இட்டுவருகிறேன். அந்த நீண்ட பக்கங்களை அருள்கூர்ந்து அகற்றிவிடுங்கள். நன்றி!--பவுல்-Paul 22:15, 31 சனவரி 2012 (UTC)
- பவுல் ஐயா, உங்கள் விக்கிமூலப் பயனர் உரையாடல் பகுதியில் எனது கருத்தைத் தெரிவித்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:19, 2 பெப்ரவரி 2012 (UTC)
[தொகு] கொங்கு வேளாளர் தொகுத்தல் போர்
கொங்கு வேளாளர் உரையடலில் அனைத்து அதாரதை சரி பார்த்து .குறிப்பிட்டு உள்ள கருத்தை கட்டுரையில் இனைக்கவும் Venmann 07:32, 5 பெப்ரவரி 2012 (UTC)
[தொகு] தொகுப்பு கூட்டாட்சி குடியரசு
I would like to know the reason behind the deletion of the page. Is there any other alternate page linking the same? --~~பயனர்:Dineshkumar_Ponnusamy~~
- அந்தக் கட்டுரையில் siva என்ற சொல்லைத் தவிர வேறு எதுவுமே இருக்கவில்லையே. எப்படி நீக்காமல் இருக்க முடியும்:)--Kanags \உரையாடுக 08:58, 7 பெப்ரவரி 2012 (UTC)
- மேலும் வார்ப்புரு:இந்தியா தகவல் சட்டத்தில் கூட்டாட்சிக் குடியரசு என்பதை விட நடுவண் நாடாளுமன்ற அரசமைப்புக்குட்பட்ட குடியரசு எனலாம்.--Kanags \உரையாடுக 09:05, 7 பெப்ரவரி 2012 (UTC)
- I would like to continue the article, When i tried to create the page, i got the information that the page has been already deleted.Thanks for the information. --~~பயனர்:Dineshkumar_Ponnusamy~~
- மேலும் வார்ப்புரு:இந்தியா தகவல் சட்டத்தில் கூட்டாட்சிக் குடியரசு என்பதை விட நடுவண் நாடாளுமன்ற அரசமைப்புக்குட்பட்ட குடியரசு எனலாம்.--Kanags \உரையாடுக 09:05, 7 பெப்ரவரி 2012 (UTC)
[தொகு] முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்
[தொகு] உங்களுக்குத் தெரியுமா அறிவிப்புத் திட்டம்
[தொகு] Need Help on அனுபவம்
In case i need to start an article and i don't have stuffs with me what to do ? yesterday i have created the page அனுபவம், but i don't have any materials to create, now i have but during this time, page has been deleted. How to prevent this in future?
- Is there any default templates for showing the page is still in development/progress ? --~~பயனர்:Dineshkumar_Ponnusamy~~
[தொகு] மகிழ்ச்சி, நல்வாழ்த்துகள்!
சிறீதரன் கனகு, தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடிகள் ஒருவராகவும், இடையறாது பல விக்கித்திட்டங்களில் தொடர்ந்து ஒப்பரிய பங்களிப்புகள் செய்துவருபவருமான உங்கள் அறிமுகத்தை இன்று கண்டு மிகவும் மகிழ்ந்தேன். நல்வாழ்த்துகள்! --செல்வா 16:50, 11 பெப்ரவரி 2012 (UTC)
- செல்வா, தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.--Kanags \உரையாடுக 03:23, 12 பெப்ரவரி 2012 (UTC)
[தொகு] பணகுடி
Hello Kanags, could you please take a look at these edits and the article பணகுடி? Kind regards, Mathonius 06:29, 18 பெப்ரவரி 2012 (UTC)
- Thanks Mathonius. I have semi protected the article for a day. If the IP continues his disruption, will block him.--சோடாபாட்டில்உரையாடுக 06:36, 18 பெப்ரவரி 2012 (UTC)
- Thank you! :) Mathonius 06:37, 18 பெப்ரவரி 2012 (UTC)
- ஐயா, நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ்றிஞர்களின் நூல்கள் பட்டியலில் தாங்கள் கொடுத்துள்ள இணைப்புகள் நான் விரிவாக்கம் வேண்டி மாற்றும் போது இணைப்புகளில் சில விடுபட்டுவிட்டன. அதனை மீளமைக்க முடியுமா? நன்றிகள்.--Parvathisri 13:49, 19 பெப்ரவரி 2012 (UTC)
[தொகு] செய்திகள் பகுதி
சிறீதரன், அண்மையில் சிக்கிலிடே எனும் 'குருட்டுப்புழு' நிலநீர்வாழிக் குடும்பத்தை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கண்டுபிடித்துள்ளனர். அதைப் பற்றி மற்ற அனைத்து மொழி விக்கிக்களையும் விட தமிழில் கூடுதல் தகவல்கள் இருப்பதாக உணர்கிறேன். இன்னும் சிறிது விரிவாக்கலாம். இது முதல் பக்கத்தில் செய்திகளில் இடும் அளவுக்குப் பெரிய செய்தி இல்லை என்றாலும் ஒரு பல்வகைமை பொருட்டு இதைச் சேர்க்கலாமா? உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 05:43, 24 பெப்ரவரி 2012 (UTC)
- சுந்தர், இது ஒரு நல்ல செய்தியே. கட்டாயம் தாருங்கள். அது பற்றிய கட்டுரையும் உள்ளதால் உள்ளிணைப்புடன் முதற்பக்கத்தில் இடம்பெறக்கூடிய செய்தியே. இச்செய்தியை பிபிசியில் இரு நாட்களுக்கு முன்னர் படித்த போது தமிழில் எழுதலாம் எனப் பார்த்தேன். ஆனாலும், மொழிபெயர்க்கும் அளவுக்குத் தமிழ்ச் சொற்கள் என்னிடம் இல்லாததால் எழுத முடியவில்லை.--Kanags \உரையாடுக 06:01, 24 பெப்ரவரி 2012 (UTC)
[தொகு] நன்றி
வணக்கம், பகுப்பு:மட்டக்களப்பு மாவட்டப் பாடசாலைகள் இதில் இடப்பட்ட விவரங்கள் சரியாக (புரியாததால்) தெரியாததால்தான் நீக்கினேன்.. ஆனால் தாங்கள் முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயம் என்றொரு புதிய கட்டுரையையே உருவாக்கிவிட்டீர்கள்... மிக்க நன்றி--shanmugam 08:37, 27 பெப்ரவரி 2012 (UTC)
- அதனால் ஒன்றுமில்லை. விக்கிக்குப் புதிய பயனர்கள் பலர் இவ்வாறு எங்கு கட்டுரையை எழுதுவது என்று தெரியாமல் பகுப்புகளினுள் கட்டுரைகளை எழுதுவார்கள்.--Kanags \உரையாடுக 08:40, 27 பெப்ரவரி 2012 (UTC)
- சரி Kanags. இனி நானும் அப்படி ஏதாவது கட்டுரையை பார்த்தால் புதியதாக உருவாக்க முயல்கிறேன்.--shanmugam 08:48, 27 பெப்ரவரி 2012 (UTC)
[தொகு] தள அறிவிப்புகள்
சிறீதரன், தமிழ் விக்கி ஊடகப் போட்டி முடிவடைந்து விட்டது. தொடர்புடைய தள அறிவிப்புகளை விக்கி செய்திகளிலும், விக்கி மூலத்திலும் நீக்கிவிட வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 00:11, 1 மார்ச் 2012 (UTC)
[தொகு] xml import
கனகு, 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் கட்டுரையில் பங்குபெறும் நாடுகள் பகுதியில் உள்ள 200+ வார்ப்புருக்களை en:Special:Export கருவியில் en:Category:International Olympic Committee country alias templates கொடுத்து ஏற்றுமதி செய்து, தவியில் தரவிறக்கம் செய்யவேண்டும். இந்த வார்ப்புருவிலிருந்து வரும் நாடுகளின் பெயர்களை தமிழாக்கம் செய்ய [இந்தக் கருவியை] பயன்படுத்தலாம். (start string: ">, end string: &). அப்படியே xml கோப்பை இட்டால் நாடுகள் மட்டும் தமிழாக்கம் செய்து தருகிறது. தமிழாக்கம் செயததை அப்படியே தவியில் ஏற்றுவதன் மூலம் 200+ வார்ப்புருக்கள் கிடைக்கும். அல்லது வேறு எளிய வழி இருந்தால் அறியத்தரவும். நன்றி. (எனக்கு அணுக்கம் இல்லை, bureaucrat மட்டுமே அணுக முடியும் என்று நினைக்கிறேன்? ) -- மாகிர் (பேச்சு) 09:19, 4 மார்ச் 2012 (UTC)
[தொகு] நன்றி
சிறீதரன், உங்கள் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன். நீங்கள், சோடாபாட்டில் போன்றோர் மிக முனைப்பாகத் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைக் கண்ட மகிழ்ச்சியில் சிறிது காலம் ஓய்வெடுத்து விட்டேன் :) இனி நானும் உங்களுடன் இணைந்து இயன்ற அளவு உழைக்க வேண்டும் என்று உறுதி கொண்டுள்ளேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:23, 14 மார்ச் 2012 (UTC)
[தொகு] நன்றி
வணக்கம் சிறீதரன், முதலில் செய்திகளில் இணைப்பை சரிசெய்தமைக்கு நன்றி.. நான் n:ஒரு நாள் போட்டிகளில் நூறாவது சதமடித்தார் சச்சின் இணைப்பை சேர்த்து விட்டு சொடுக்கினால் ஒரு நாள் போட்டிகளில் நூறாவது சதமடித்தார் சச்சின் 4 இதற்கு சென்றது.. எதனால் இது என தெரியுமா?? அதனால்தான் குழம்பி மறுபடி மறுபடி திருத்தி கொண்டிருந்தேன்:)--shanmugam (பேச்சு) 12:12, 16 மார்ச் 2012 (UTC)
- செய்தியிலும் தவறு உள்ளது. ஒருநாள் போட்டியில் இவர் 49 சதங்களே எடுத்திருக்கிறார். திருத்தியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 12:21, 16 மார்ச் 2012 (UTC)
- international match என்பதை ஒரு ஆர்வத்தில் ஒருநாள் போட்டி என மொழிபெயர்த்து விட்டேன்..மன்னிக்கவும்.. திருத்தியமைக்கு நன்றி..:)...unreviewed செய்திகள் review செய்யப்படும் வரை publish ஆகாது என நினைக்கிறேன்... சரிதானே...அதானால் தான் இல்லாத வேறு பக்கத்திற்கு சென்றது என நினைக்கிறேன்..--shanmugam (பேச்சு) 12:37, 16 மார்ச் 2012 (UTC)
- இணைப்பு நீங்கள் சரியாகக் கொடுக்கவில்லை. அதனாலேயே இல்லாத பக்கத்திற்குச் சென்றது.--Kanags \உரையாடுக 13:15, 16 மார்ச் 2012 (UTC)
- ஆம்.. இப்போது வரலாற்றை ஒப்பிட்டு பார்த்த போது chrome ல் இணைப்பின் பின் (4 என்ற எழுத்து இருப்பதாக காட்டவில்லை..ஆனால் இணைப்பை திறந்தால் முகவரியில் வருகிறது... அதே வேறுபாட்டை பயர்பாக்சில் பார்த்தால் (4 எழுத்து தெரிகிறது :).. தங்கள் விளக்கத்திற்கு நன்றி Kanags --shanmugam (பேச்சு) 14:39, 16 மார்ச் 2012 (UTC)
[தொகு] மீளமைக்க முடியவில்லை
கனகு, 2012 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் கட்டுரையை மீளமைக்க முடியவில்லை. அக்கட்டுரையை மீளமைத்து தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள் பக்கத்திற்கு நகர்த்தி உதவவும். நன்றி -- மாகிர் (பேச்சு) 04:28, 22 மார்ச் 2012 (UTC)
- மீளமைத்து நகர்த்தியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 07:29, 22 மார்ச் 2012 (UTC)
-
- வணக்கம்! இக்கட்டுரையின் தலைப்பு, 'தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள்' என்று மட்டும் இருந்தால் போதாது என்பது என் கருத்து. எவ்வளவோ இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன, நடக்கும்; தலைப்பில் வருடமும் இருத்தலே நல்லது. வருடத்தை தலைப்பின் பின்னால் குறிப்பிடலாம். கட்டுரை குறித்து எனது கருத்து: இது ஒரு முழுமையான கட்டுரை இல்லை. என்னால் முடிந்தால் விரிவுபடுத்துகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:29, 22 மார்ச் 2012 (UTC)
- கட்டுரை உரையாடல் பக்கத்தில் உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.--Kanags \உரையாடுக 08:50, 22 மார்ச் 2012 (UTC)
-
- நல்லது, கட்டுரையை மீண்டும் நோக்கியபோது... அக்கட்டுரை வேறுவிதமாக விரிவாக்கம் செய்யப்படுவதாக உணர்கிறேன். கொஞ்சம் பொறுத்துப் பார்க்கிறேன். தலைப்பு அப்படியே இருக்கட்டும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:52, 22 மார்ச் 2012 (UTC)
[தொகு] 1729
1729 (எண்) என்ற கட்டுரையில் (ஆங்கிலம்: One Thousand Seven Hundred and Twenty-Nine அல்லது Ramanujan Number) என்று இருந்ததில் ஆங்கிலம் என்பதை நீக்கியுள்ளீர்கள். அவ்வாறு விக்கிப்பீடியாவில் எழுதுவதில்லையா? --மதனாஹரன் (பேச்சு) 09:37, 23 மார்ச் 2012 (UTC)
- தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தவிர வேற்று மொழிகளைக் குறிப்பிடலாம். பொதுவாக ஆங்கிலத்தை அவ்வாறு எழுதத் தேவையில்லை.--Kanags \உரையாடுக 12:20, 23 மார்ச் 2012 (UTC)
ஏற்கனவே நான் எழுதிய கட்டுரைகளில் அவற்றை நீக்குவது கடினம். ஏதேனும் தானியங்கியைப் பயன்படுத்தலாம். இனி வரும் கட்டுரைகளில் அவ்வாறு குறிப்பிடவில்லை. நன்றிகள்! --மதனாஹரன் (பேச்சு) 12:38, 23 மார்ச் 2012 (UTC)
[தொகு] பக்க வழி நெறிப்படுத்தல்
வணக்கம் kanags... இரண்டு ஒரே பெயர் கொண்ட கட்டுரைகளுக்கு பக்க வழி நெறிப்படுத்தல் உபயோகப்படுத்துவதில்லையா?...dablink மட்டும் சேர்த்தால் போதுமா?... ஏனெனில் இனி உருவாக்கும்போது அவ்வாறு உருவாக்காமல் இருப்பேன்...--shanmugam (பேச்சு) 02:35, 26 மார்ச் 2012 (UTC)
- இரண்டுக்கு மேல் வரக்கூடிவைக்கு மட்டும் பக்கவழிநெறிபடுத்தல் பக்கம் உருவாக்கினால் போதும் சண்முகம். குறைந்தபட்சம் 3 என்பதை வழிமுறையாகக் கொண்டுள்ளோம்.--சோடாபாட்டில்உரையாடுக 04:12, 26 மார்ச் 2012 (UTC)
- நன்றி சோடாபாட்டில்.. அப்படியே விக்கிப்பீடியா:பக்கவழி நெறிப்படுத்தல் பக்கத்தில் ஒரு குறிப்பு இட்டுவிடுங்களேன்... புதிதாக வருபவர்களுக்கு உபயோகமாக இருக்கும்...:) --shanmugam (பேச்சு) 06:55, 26 மார்ச் 2012 (UTC)
[தொகு] மிக்க நன்றி!
| நன்றி | ||
| தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் தொடர் பங்களிப்பாளராக வெற்றி பெற்றதற்கான உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி! |
என் பங்களிப்பு தொடரும்! --Anton (பேச்சு) 05:59, 31 மார்ச் 2012 (UTC)
-
- சிறீதரன், வணக்கம்!
- எனது 'உரையாடல்' பகுதியில் நீங்கள் தெரிவித்த பாராட்டுகளுக்கு எனது நன்றிகள்! நான் கட்டுரை எழுதத் தொடங்கிய காலகட்டத்தில்... நீங்களும் சோடாபாட்டிலும் எனது கட்டுரைகளில் தேவைப்படும் திருத்தங்களை செய்து உதவினீர்கள். உங்களின் திருத்தங்களை நன்கு ஆராய்ந்து, நுணுக்கங்களை விரைவில் கற்றேன். இங்கு கிடைக்கும் ஊக்கமும், உதவியும் வேறு எந்த படைப்புத்தளத்திலும் கிடைக்காது என்பது எனது கருத்து. - நட்புடன்...
- சிறீதரன், வணக்கம்!
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:53, 31 மார்ச் 2012 (UTC)
வணக்கம் சிறீதரன். எனது படைப்புக்கு பரிசு கிடைத்ததற்கு நான் மகிழ்கிறேன். ஆனால் தாங்களின் வாழ்த்துக்கள் கிடைத்தற்கு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து பங்களிப்பேன். நன்றி . . ! --எஸ்ஸார் (பேச்சு) 17:43, 31 மார்ச் 2012 (UTC)
[தொகு] மேற்கோள்
மேற்கோள் சுட்டும்போது தமிழ் மொழியில் அமைந்த ஆக்கங்களுக்கு {{த}} என்ற வார்ப்புருவை இணைக்கத் தேவையில்லையா? அதனை நீக்கியுள்ளீர்கள். --மதனாஹரன் (பேச்சு) 08:33, 1 ஏப்ரல் 2012 (UTC)
- ஆமாம், அந்த வார்ப்புருவே தேவையில்லாதது. அதனை முற்றாக நீக்கியிருக்க வேண்டும். வேற்று மொழிகளுக்கு மட்டும் அந்தந்த மொழி வார்ப்புருக்களைப் பயன்படுத்தலாம். தமிழ் விக்கியில் இதனைக் குறிப்பிடத் தேவையில்லை. இது பற்றி ஏற்கனவே உரையாடியுள்ளோம்.--Kanags \உரையாடுக 08:37, 1 ஏப்ரல் 2012 (UTC)
தானியங்கி மூலம் {{த}} என்று அனைத்தையும் அழிக்கும்படி செய்யலாமா? --மதனாஹரன் (பேச்சு) 08:38, 1 ஏப்ரல் 2012 (UTC)
[தொகு] திண்டுக்கல் ஐ. லியோனி கட்டுரை தொடர்பாக.
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் என்பதையும், ஆசிரியர் என்ற தகவலையும் நீக்கியுள்ளீர்கள். காரணம் அறிந்து கொள்ளலாமா? -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 13, ஏப்ரல், 2012.
- ஆசிரியர் என்பது தவறுதலாக நீக்கப்பட்டு விட்டது. திமுகவைச் சேர்ந்தவர் என்பது வெறும் தகவலாக உள்ளது. இவ்வாறான தகவல் தேவையற்றதும் சர்ச்சைக்குரியதும் ஆகும். வெறுமனே திமுக ஆதரவாளர் என்றால் அது கட்டுரையில் இடம்பெறத்தக்கது என நீங்கள் கருதினால் அதற்கான தகுந்த ஆதாரமும் தாருங்கள். திமுகவில் ஏதேனும் பதவியில் இருந்தால் அதைப் பற்றிக் குறிப்பிடுங்கள்.--Kanags \உரையாடுக 08:06, 13 ஏப்ரல் 2012 (UTC)
- தகுந்த ஆதாரத்துடன் இவற்றை முறையே மாற்றுகிறேன். விளக்கத்திற்கு நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 14, ஏப்ரல், 2012.
[தொகு] கட்டுரைப் பகுப்பு
எனது பயனர் பக்கத்தி்லிட்ட பகுப்புகளை எவ்வாறு நீக்குவது எனத் தெரியாது இருந்தேன். தாங்களே நீக்கி விட்டீர்கள். ஹாட்கேட் மூலம் நீக்க முடியவில்லை... தாங்கள் எப்படி நீக்கினீர்கள்? உதவ முடியுமா? --மதனாஹரன் (பேச்சு) 10:49, 15 ஏப்ரல் 2012 (UTC)
- குறிப்பிட்ட பகுப்பு birth date வார்ப்புருவினுள் இடப்பட்டிருந்தது. இதனாலேயே ஹொட்கேட் மூலம் நீக்க முடியவில்லை. குறிப்பிட்ட வார்ப்புருவை உங்கள் பயனர் பக்கத்தில் இருந்து அகற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:30, 15 ஏப்ரல் 2012 (UTC)
உதவியதற்கு நன்றி. --மதனாஹரன் (பேச்சு) 12:18, 15 ஏப்ரல் 2012 (UTC)
[தொகு] ஆதவன் கட்டுரை தொடர்பாக
நான் ஆதவன் கட்டுரை தொகுத்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய இணைய இணைப்பு முறிந்து விட்டது, அதற்குள்ளாக, தாங்கள் அப்பக்கத்தினை நீக்கி, பிறகு தொகுத்தும் விட்டீர்கள். இவ்வாறு நான் ஆரம்பித்த கட்டுரைகளில் அன்றைய தினத்திற்குள் அழிக்க வேண்டாம். ஓரிரு நாள் அவகாசம் தரலாம் என எண்ணுகிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:02, 20 ஏப்ரல் 2012 (UTC)
[தொகு] கட்டுரை நீக்கம்
ராம் மனோகர் லோகியா கட்டுரையை நீக்கியமைக்கு மிக்க நன்றி கனக்ஸ்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:20, 27 ஏப்ரல் 2012 (UTC)
- விரைவில் புதிய கட்டுரையைத் தொடங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்:).--Kanags \உரையாடுக
ஆச்சு படியெடுத்திருந்ததை ஒட்டி விட்டேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:44, 27 ஏப்ரல் 2012 (UTC)
[தொகு] கட்டுரை எழுத ஆங்கில வார்த்தைக்கு தமிழாக்கம் தேவை
tool, equipment, instrument இம்மூன்று வார்த்தைகளுக்கும் தமிழாக்கம் கருவியாகும். ஆனால் மூன்றின் பயன்பாடும் வேறு. இவ்வார்த்தைகளுக்கு வேறு எதாவது தமிழாக்கம் இருந்தால் கூறவும்.
[தொகு] தலைப்பு
கனகு, ரொறன்ரோ கட்டுரையை ஒரு பயனர் முறையற்ற விதமாக நகர்த்தியுள்ளார். அதனை மீண்டும் இருந்தவாறே ஆக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 10:27, 7 மே 2012 (UTC)
[தொகு] யோசனை
நீக்கல் பதிவு செய்யும் பொழுது (முக்கியமாக வழிமாற்று பக்கங்களை), அப்பக்கத்தினை ஏதேனும் பக்கம் சுட்டுகிறதா? அவ்வாறு சுட்டியிருப்பின் அதுவும் சரியான பக்கத்திற்கு வழிமாற்றப்பட்டுள்ளனவா என்பதினையும் கவனிக்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:42, 10 மே 2012 (UTC)
[தொகு] கட்டுரை நீக்கல் வேண்டுகோள்
படிமங்கள் காப்பகமும் பறிமாற்றகமும் பக்கத்தினை அழிக்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:16, 14 மே 2012 (UTC)
[தொகு] பகுப்புகள்
தினேஷ்குமார், படிமங்களுக்கு அண்மையில் கட்டுகளுக்கான பகுப்புகளை இணைத்து வருகிறீர்கள். தயவு கூர்ந்து இதனை உடனடியாக நிறுத்துங்கள். படிமங்களுக்கு கட்டுரைப் பகுப்புகள் சேர்ப்பதில்லை. மேலும், வாழும் நபர்கள் பகுப்பும் தேவையற்றது. நன்றி.--Kanags \உரையாடுக 08:21, 15 மே 2012 (UTC)
- வாழும் நபர்கள் பகுப்பு தேவையற்றதா ? ஆங்கிலத்தில் Living People என்ற தனி பகுப்பு வைத்துள்ளனர், இதில் தகவல்களை இணைக்கும் பொழுது கூடுதல் கவனம் கொள்ளவே, இந்த பகுப்பு பயன்படுத்தப்படுகிறது என்பது நீங்கள் அறிந்ததே! எனவே தான் வாழும் நபர்களுக்கு அவற்றை இட்டு வருகிறேன். விக்கிப்பீடியா:படிமங்களை அடையாளப்படுத்தலும் வகைப்படுத்தலும் பக்கத்தில், வகைப்படுத்தப்படாத படிமங்கள் என்ற தொகுப்பில் உள்ள படிமங்களுக்கு தேவையான பகுப்பு சேர்த்து வருகிறேன். வேண்டுமானால் துணைப்பகுப்பு ஒன்று இணைத்து (எ.கா. தமிழ் எழுத்தாளர்கள் -> தமிழ் எழுத்தாளர்களின் படிமங்கள்) அதற்கு மாற்றிவிடலாம். அப்போது, படிமங்களை காமன்சில் இணைப்பது, பிற கட்டுரைகளுக்கு தேவைப்படும் படிமங்களினை பகுப்பு வாரியாக தேர்வு செய்யவும், எளிமையாக இருக்கும். ---- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:53, 15 மே 2012 (UTC)
[தொகு] ஒரே கருத்து
சிப்பாய்க் கிளர்ச்சி, 1857, முதல் இந்திய விடுதலைப் போர், சிப்பாய்க்கலகம் ஆகிய மூன்று கட்டுரைகளும் ஒரே கருத்துகளைக் கொண்டுள்ளன என நினைக்கிறேன். சற்று சரிபார்க்கவும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:15, 18 மே 2012 (UTC)
[தொகு] Sinhala Loanwords in Tamil
Hi. Could you please review http://en.wikipedia.org/wiki/Tamil_loanwords_in_Sinhala and add the missing Tamil equivalents to the list if possible? Thank you very much.
[தொகு] பெய்ஜிங் அரண்மனை
வணக்கம் கனக்ஸ், பெய்ஜிங் அரண்மனை கட்டுரை தொகுத்த பின்னர் பேரரண் நகரம் கட்டுரை இருப்பதை அறிந்தேன். இரண்டும் ஒன்றா, வேறுவேறா என்ற குழப்பம். ஒன்றெனில் இணைத்துவிடுகிறேன். தெளிவு படுத்துங்கள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:21, 20 மே 2012 (UTC)
- இரண்டும் ஒன்றே. பெய்ஜிங் அரண்மனை நல்ல கட்டுரை. பேரரண் நகரம் என்ற கட்டுரையுடன் இணைத்து விடுங்கள். --மதனாகரன் (பேச்சு) 08:24, 20 மே 2012 (UTC)
- இரண்டும் ஒன்று தான். நீங்களே இணைத்து விடுகிறீர்களா. (நன்றி மதனாகரன்).--Kanags \உரையாடுக 09:46, 20 மே 2012 (UTC)
ஆச்சு-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:27, 20 மே 2012 (UTC)
- சிப்பாய்க் கிளர்ச்சி, 1857, சிப்பாய்க்கலகம் ஒன்றிணைத்தல்
ஆச்சு-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:47, 20 மே 2012 (UTC)
[தொகு] சாந்தலர்கள் கிளர்ச்சி
இக்கட்டுரையின் பேச்சுப்பக்கத் தலைப்பு, கட்டுரைத் தலைப்புக்கேற்ப மாற்றவேண்டும். காண்க பேச்சு:சாந்தாலர்கள் கிளர்ச்சி (1855)
- மாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:47, 23 மே 2012 (UTC)
[தொகு] ஓர் வேண்டுகோள்
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், சுந்தர பாண்டியன் என இரு கட்டுரைகள் ஒரே பாண்டிய மன்னனைப் பற்றி உள்ளன. அவற்றை ஒரே கட்டுரையாக இணைக்க வேண்டும். நன்றி.--Booradleyp (பேச்சு) 16:53, 25 மே 2012 (UTC)
- இணைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 06:08, 26 மே 2012 (UTC)
நன்றி.--Booradleyp (பேச்சு) 16:27, 26 மே 2012 (UTC)
[தொகு] நன்றி
|
|
||
| நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி. -பார்வதிஸ்ரீ |
-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:05, 26 மே 2012 (UTC)
--சண்முகம் (பேச்சு) 11:20, 26 மே 2012 (UTC)
ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:07, 30 மே 2012 (UTC)
[தொகு] இரட்டைப்புலவர்கள்
உரையாடல் பேச்சு:இரட்டைப்புலவர் இற்கு மாற்றப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 09:18, 28 மே 2012 (UTC)
[தொகு] பகுப்பு:இந்தியாவைப் பற்றிய நூல்கள்
பகுப்பு:இந்தியாவைப் பற்றிய நூல்கள் நீக்கியதற்கான காரணத்தை அறியலாமா ? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:47, 28 மே 2012 (UTC)
- அறிந்து கொண்டேன், நன்றி! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:49, 28 மே 2012 (UTC)
[தொகு] நீக்கல் வேண்டுகோள்
இந்தியாவைப் பற்றிய நூல்கள் பக்கத்தினை அழித்திடலாம். தேவையற்ற வழிமாற்று. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:21, 28 மே 2012 (UTC)
- இருப்பதில் தவறில்லையே:)--Kanags \உரையாடுக 09:29, 28 மே 2012 (UTC)
-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:29, 28 மே 2012 (UTC)
[தொகு] *மறுமொழி*
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.
-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:27, 28 மே 2012 (UTC)
[தொகு] தமிழ் பதங்கள்
இவற்றுக்கு சரியான தமிழ்ப் பதங்களை தரமுடியுமா?
- Council of Europe
- European Union Customs Union
- International status and usage of the euro
- Schengen Area
- European Economic Area
- European Free Trade Association
வீவா உலகக்கோப்பை கட்டுரையிலுள்ள நாடுகளின் சரியான தமிழ்ப் பெயர்களையும் தந்து உதவுங்கள். நன்றி --Anton (பேச்சு) 02:56, 3 சூன் 2012 (UTC)