விக்கிப்பீடியா:ஆலமரத்தடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆலமரத்தடிக்கு வருக! ஆலமரத்தடிப் பக்கங்கள் விக்கிப்பீடியாவின் செயற்பாடுகள், நுட்ப விடயங்கள், கொள்கைகள், புதிய சிந்தனைகள், கலைச்சொற்கள், உதவிக் குறிப்புகள் போன்றவை உரையாடப் பயன்படுகின்றன. நீங்களும் பொருத்தமான கீழ்கண்ட ஒரு கிளையைத் தேர்தெடுத்து உங்கள் கருத்துகளைப் பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பக்கங்களில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
குறுக்கு வழி:
WP:VP
WP:AM
ஆலமரத்தடியின் கிளைகள்
Gaim send-im.svgDialog-information on.svg
ஆலமரத்தடி
புதிய தலைப்பு | கவனிக்க | தேடுக
பொது உரையாடல்கள். புதிய எண்ணங்கள், செயற்றிட்ட முன்மொழிவுகள்.
Vista-file-manager.png
காப்பகம்

Preferences-system.svg
தொழினுட்பம்
புதிய தலைப்பு | கவனிக்க | தேடுக
இது விக்கிப்பீடியாத் தொழினுட்பம் சார்ந்த செய்திகளுக்கும் சிக்கல்களுக்குமான ஆலமரத்தடி ஆகும்.

Edit-find-replace.svg
கொள்கை
புதிய தலைப்பு | கவனிக்க | தேடுக
கொள்கைககளும் வழிகாட்டல்களும் தொடர்பான உரையாடல்கள், முன்மொழிவுகளுக்கான களம்.

Crystal Project Agt announcements.png
அறிவிப்புகள்
புதிய தலைப்பு | கவனிக்க | தேடுக
விக்கிப்பீடியா தொடர்பான தகவல்களை, அறிவித்தல்களை இங்கே பகிருங்கள்.

ஒத்தாசை
ஒத்தாசை
புதிய தலைப்பு | கவனிக்க | தேடுக
விக்கியைத் தொகுப்பதில், பயன்படுத்துவதில், பொருத்தமான கட்டுரைகளை எழுதுவதில் சிக்கல்கள் இருந்தால் இங்கே கேளுங்கள்.
உசாத்துணைப் பக்கம் | பயிற்சி | சமுதாய வலைவாசல் | நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் | தரக் கண்காணிப்பு | தானியங்கி வேண்டுகோள்கள் | நீக்கலுக்கான வாக்கெடுப்பு

பொருளடக்கம்

சந்தேகம்[தொகு]

அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் விரைந்து நீக்கப்படும் வார்ப்புரு இடப்பட்ட கட்டுரைகளை தற்போது காணமுடியவில்லை, அனைத்து கட்டுரைகளும் விரிவாக்கம் செய்தாயிற்றா ?? --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:48, 8 சூன் 2014 (UTC)

ஐப்ரல் 15 - மே 15, 2014 காலத்தில், மேம்படுத்தும் நோக்குடன் குறித்த கால வார்ப்புரு இடப்பட்ட பெரும்பாலான கட்டுரைகள் மேம்படுத்தப்பட்டு விட்டதால், அண்மைய மாற்ற அறிவிப்புகளை நிறுத்தி வைத்திருக்கிறேன். --இரவி (பேச்சு) 13:56, 14 சூன் 2014 (UTC)

வேண்டுகோள்[தொகு]

எனது பேச்சுப் பக்கத்திலும் இன்னும் சில பயனர்களின் பேச்சுப் பக்கத்திலும் Muthuppandy pandian பதித்த கருத்தினை இங்கு பதிவு செய்கிறேன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:31, 18 சூன் 2014 (UTC)

2014 ஜனவரி 11ஆம் தேதி தி இந்து தமிழ் நாளிதழின் துணை பதிப்பில் 4ஆம் பக்கத்தில் ஆச்சரியமும் அதிர்ச்சியும் என்ற தலைப்பில் தமிழ் விக்கிபீடியா இந்திய மொழிகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தலைப்புகள் கொடுக்கப்படும் பட்சத்தில் குறைந்த அளவாவது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்று செய்யப்படுவதில்லை என்பது ஒரு வருத்தம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் (Disease) என்ற நோய் இதில் ஆங்கிலத்தில் எவ்வளவோ கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் தமிழில் சொர்ப்ப அளவே தமிழ் படுத்தப்பட்டுள்ளது. இந்த விசயம் பற்றி எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்--Muthuppandy pandian (பேச்சு) 06:25, 18 சூன் 2014 (UTC)

இணையத்தில் தேடியபோது இந்தப் பக்கம் கிடைத்தது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:36, 18 சூன் 2014 (UTC)
Muthuppandy pandian உங்களின் பதிவைப் படித்ததும், அந்தப் பத்திரிகைதான் வருந்தியிருந்தது என நினைத்தேன். அது உங்களின் வருத்தம் என்பதனை இப்போது அறிந்தேன். வருந்தாதீர்கள், உங்களின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. ஆனால், இந்த விசயத்தில் ஆங்கில விக்கியுடன் ஒப்பிடுதல் பொருத்தமற்றது என நான் கருதுகிறேன். அங்குள்ள பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையை நாம் பார்க்கவேண்டும். மேலும் ஆங்கிலத்தில் இல்லாத எவ்வளவோ நல்ல கட்டுரைகள் தமிழில்மட்டுமே உள்ளன என்பதும் உண்மை! உங்களைப் போன்ற தன்னார்வலர்களின் பங்களிப்பினால் தமிழ் மேலும் வளரும்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:46, 18 சூன் 2014 (UTC)

நீங்கள் சொல்லுவது சரிதான். ஆனாலும் இதில் ஒன்றை நாம் அனைவரும் கவனிக்க வேண்டும். ஆங்கில விக்கிக்கு இருப்பதுபோல் தமிழ் விக்கிக்கு பயனர் குறைவுதான் என்றாலும், முக்கியம் என்று மனதில் படும் விசயத்தையாவது தமிழ் படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும். இதுதான் என் ஆதங்கம்.--Muthuppandy pandian (பேச்சு) 07:52, 18 சூன் 2014 (UTC)

== # தலைப்பு

 1. தலைப்பு எழுத்துக்கள் ==

Media Viewer is now live on this wiki[தொகு]


Media Viewer lets you see images in larger size

Greetings— and sorry for writing in English, please translate if it will help your community,

The Wikimedia Foundation's Multimedia team is happy to announce that Media Viewer was just released on this site today.

Media Viewer displays images in larger size when you click on their thumbnails, to provide a better viewing experience. Users can now view images faster and more clearly, without having to jump to separate pages — and its user interface is more intuitive, offering easy access to full-resolution images and information, with links to the file repository for editing. The tool has been tested extensively across all Wikimedia wikis over the past six months as a Beta Feature and has been released to the largest Wikipedias, all language Wikisources, and the English Wikivoyage already.

If you do not like this feature, you can easily turn it off by clicking on "Disable Media Viewer" at the bottom of the screen, pulling up the information panel (or in your your preferences) whether you have an account or not. Learn more in this Media Viewer Help page.

Please let us know if you have any questions or comments about Media Viewer. You are invited to share your feedback in this discussion on MediaWiki.org in any language, to help improve this feature. You are also welcome to take this quick survey in English, en français, o español.

We hope you enjoy Media Viewer. Many thanks to all the community members who helped make it possible. - Fabrice Florin (WMF) (talk) 21:54, 19 சூன் 2014 (UTC)

--This message was sent using MassMessage. Was there an error? Report it!

கருத்துக்கள் தேவை[தொகு]

துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய கட்டுரைகளை பற்றிய கட்டுரைகளை விரிவாக்கம் செய்யும் நோக்குடன் வலைவாசல்:துடுப்பாட்டம் பக்கத்தை தொடங்கி உள்ளேன் இதன் நோக்கம் தற்போதுள்ள துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய கட்டுரைகளை விரிவாக்கி ஒன்றிணைக்க வேண்டும் எமது தமிழ் விக்கிபிடியாவில் துடுப்பாட்டக்காரர்கள் பற்றி பல அருமையான கட்டுரைகளைக் கொண்டுள்ளது அதன் அடிப்படையில் வலைவாசல்:துடுப்பாட்டம் பக்கத்தையும் சிறப்பாக செய்ய முடியும் என நினைக்கிறேன் அதற்காக வலைவாசல்:துடுப்பாட்ட பக்கத்தை வடிவமைத்து வருகிறேன் அதன் வலைவாசல் துடுப்பாட்டம் பக்க வடிவமைப்பு திட்டம் இங்கு உள்ளது இப்பக்கத்தை மேலும் சிறப்பாக அமைக்க என்ன செய்ய வேண்டும் அனுபவமுள்ள விக்கிப்பீடியர்கலின் ஆலோசனை வழிகாட்டல் ,கருத்துக்களும் தேவை நன்றி --✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 08:40, 21 சூன் 2014 (UTC)

வலைவாசல் உருவாக்கத்தில் எவ்வித உதவி வேண்டும் என்றாலும் என்னறிவிற்கெட்டிய அளவிற்கு என்னால் உதவ முடியும். கட்டுரைகள் விரிவாக்கம் எனில் விக்கித்திட்டம்:துடுப்பாட்டம் என்பதை உருவாக்கலாம். அதில் இணைந்து பலர் பங்களிப்பர். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:28, 21 சூன் 2014 (UTC)
என்னாலான தொழிநுட்ப உதவிகளையும் உங்களுக்கு வழங்கி உதவலாம் என நினைக்கின்றேன். முடியும்போதெல்லாம் உதவக் காத்திருக்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:54, 21 சூன் 2014 (UTC)

நானும் கூட வலவாசலில் expert தங்கள் வலைவாசலின் நிறத்திலும் கூட வலைவாசல்:விளையாட்டில் யான் அறிமுகப்படுத்திய நிறத்தையும் வலைவாசல் வானியலில் யான் அறிமுகப்படுத்திய box headerஐயும் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். தேவையான உதவிகளை என்னிடமும் நாடலாம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 05:47, 22 சூன் 2014 (UTC)

பிறகென்ன? வென்று விடுங்கள்.--Kanags \உரையாடுக 06:15, 22 சூன் 2014 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 00:14, 23 சூன் 2014 (UTC)
துடுப்பாட்டத்தில் ஆர்வமுடைய எனக்கும் இதில் பங்களிக்க விருப்பமே. விக்கியின் அண்மைக்கால துடிப்பான பங்களிப்பாளர்கள் ஒன்றிணைந்திருப்பது இத்திட்டம் வெற்றியளிக்க வித்திடும். எனினும், ஒரு சிறு தயக்கம். ஆங்கில விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 50,000க்கு மேற்பட்ட கட்டுரைகள் கொண்ட மொழிகள் பட்டியலில் தமிழ் சேர்க்கப்படாமைக்கான காரணங்களில் ஒன்றாக, தமிழ் விக்கிப்பீடியாவில் அதிக அளவில் துடுப்பாட்டக்காரர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, இந்த இளைஞரணி துடுப்பாட்டக் கட்டுரைகளில் அதிக நேரம் செலவிடாமல் ஏனைய துறைகள் சார்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்த வேண்டுகிறேன். எவ்வாறாயினும் துடுப்பாட்ட வலைவாசலை உற்சாகமாக உருவாக்குங்கள். முடிந்தவரை உதவுகிறேன்! --சிவகோசரன் (பேச்சு) 09:50, 23 சூன் 2014 (UTC)
நன்றி திரு சிவகோசரன் நிச்சயமாக இந்த திட்டத்தின் மூலம் துடுப்பாட்டக் கட்டுரைகளை மேம்படுத்தி தரத்தையும் உயர்த்த வேண்டும் என்பதே பிரதான நோக்கம் எதிர் நீச்சல் அடித்து கிடைக்கும் வெற்றிக்கு தனி சுகம் உண்டு --✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 10:10, 23 சூன் 2014 (UTC)

நான் ஒரு வருடம் முன்பு ஏன் தமிழ் விக்கிப்பீடியா 50,000 பட்டியலில் இடம்பெறவில்லை என வினவிய போது, தமிழ் விக்கிப்பீடியாவில் மிகக்குறைந்தளவானவையே கட்டுரை என சொல்லக்கூடியதாக உள்ளன எனக் குறிப்பிட்டனர். அதற்காக அவர்கள் ஓர் ஆய்வையும் வெளியிட்டனர். நான் ஏதாவது ஒரு கட்டுரையைப் பயன்படுத்தி ஆராய்ந்த 73 கட்டுரைகளில் 7 கட்டுரைகள் மாத்திரமே கட்டுரை எனச் சொல்லக்கூடியவாறு இருந்தன. எனவே இந்நிலைமை பற்றி விரைவில் நாம் ஆராய்ந்து விரிவான அறிக்கை ஒன்றை உருவாக்க வேண்டும். நான் ஆராய்ந்ததில் 3 சிறிய துடுப்பாட்டக்காரர் பற்றிய கட்டுரைகளும் இருந்தன. எனவே இவ்விடயம் பற்றிய விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொள்ளல் அவசியமாகும்.--G.Kiruthikan (பேச்சு) 12:10, 24 சூன் 2014 (UTC)

சிவகோசரன், https://en.wikipedia.org/wiki/Template_talk:Wikipedia_languages/Archive_6#Some_statistics பக்கத்தில் உள்ள ஆய்வு நம்மைப் போன்ற ஒரு பயனர் செய்தது. கூடுதலாக துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய குறுங்கட்டுரைகள் இருக்கின்றன என்ற சுட்டிக் காட்டுகிறார். ஆனால், முதற்பக்க பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் https://en.wikipedia.org/wiki/Template_talk:Wikipedia_languages/Archive_6#Further_discussion பகுதியில் வருகிறது. அங்கு தான் ஆங்கில விக்கிப்பீடியாவைச் சேர்ந்த நிருவாகி ஒருவர் தமிழைப் பட்டியலில் இருந்து நீக்கி விட்டு விளக்கம் அளிக்கிறார். எத்துறையைச் சேர்ந்த கட்டுரைகளும் இருப்பது சிக்கல் இல்லை. ஆனால், அவை குறுங்கட்டுரைகளாக (குறிப்பாக, ஒரே மாதிரியான ஓரிரு வரிக் கட்டுரைகள்) இருப்பது தான் சிக்கல். இவை தானியக்கமாகவோ இல்லை இலகுவாகவோ எழுதப்படுவன என்று கருதுகிறார்கள். https://en.wikipedia.org/wiki/Template_talk:Wikipedia_languages/Archive_6#Some_statistics பகுதியில் உள்ள ஆய்வின் படி தமிழ் விக்கிப்பீடியாவின் 50,000 கட்டுரைகளில் ஓரளவாவது கட்டுரை என்று கருதப்படக்கூடியன 7,500 மட்டுமே என்று குறிப்பிடுகிறார்கள். இதனால் தான் பல்வேறு வகையிலும் பல துறை சார்ந்த குறுங்கட்டுரைகளையும் மேம்படுத்த முனைந்து வருகிறோம். நன்றி. --இரவி (பேச்சு) 11:30, 25 சூன் 2014 (UTC)

ஆங்கில விக்கிப்பீடியாவின் முதற் பக்கத்துப் பட்டியலில் இருந்து தமிழை நீக்கியமைக்கான காரணம் துடுப்பாட்ட வீரர்கள் குறித்த கட்டுரைகள் அதிகம் இருந்தது அல்ல. குறிப்பிடப்பட்ட காரணம் “decent” ஆன கட்டுரைகளின் அளவு குறைவு என்பதும், பொதுவாகவே குறுங்கட்டுரைகள் பெருமளவில் இருக்கின்றன என்பதும்தான். எது எப்படியிருப்பினும், என்னைப் பொறுத்தவரை ஆங்கில விக்கிப் பட்டியலில் இடம்பெறுவதையோ, இடம்பெறாமல் விடுவதையோ நாம் ஒரு பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை. ஒரு தரமானதும் பயனுள்ளதுமான தமிழ் விக்கிப்பீடியாவை உருவாக்குவதை மனதில் கொண்டு செயற்பட்டால் மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும்.
புள்ளிவிபரங்கள் ஒவ்வொரு பிரிவினரதும் விருப்பங்களுக்கும் ஏற்றபடி விதம் விதமாக உள்ளன. வேண்டியபடி விளக்கம் கொடுத்துக்கொள்ளலாம். 0.5கிபைக்கு மேற்பட்ட கட்டுரைகள் தமிழ் விக்கியில் மொத்த எண்ணிக்கையில் 80%க்கும் மேல் (இந்தியில் இது 66% தான்). 2.0 கிபைக்கு மேற்பட்ட கட்டுரைகள் தவியில் 29% (இந்தியில் 13%). அதே வேளை ஒரு காலத்தில் தமிழைவிடக் குறைவாக இருந்த வங்காள, கன்னட விக்கிப்பீடியாக்களின் 2.0 கிபைக்கு மேற்பட்ட கட்டுரைகளின் அளவு 35%க்கும் மேல் வளர்ந்திருப்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். தமிழைப் பொறுத்தவரை துடுப்பாட்டக்காரர்களைப் பற்றி ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்ட காலத்திலும் இந்தப் புள்ளிவிபரம் பாதிக்கப்படவில்லை. துடுப்பாட்டக்காரர் கட்டுரைகளிற் பல ஓரிரு வரிகள் கொண்ட கட்டுரைகளாக இருந்தாலும், பொதுவாக மேற்படி கட்டுரைகளில் தகவல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்ததால் பெரும்பாலான கட்டுரைகள் 2.0கிபைக்கு மேற்பட இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.
இன்றைய நிலையில் தமிழில் துடுப்பாடக்காரர்கள் தொடர்பான கட்டுரைகள் 10%க்கும் மேல் உள்ளன. இதனால் "ஏதாவது கட்டுரையை" அழுத்தித் தேடும்போது 50க்கு 5 இக்கட்டுரைகள் வரும் என்பது தெளிவு. மொத்தக் கட்டுரைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்போது இது குறையும். ஆனாலும் மேற்படி கட்டுரைகளில் விரிவாக்கக்கூடிய கட்டுரைகளை விரிவாக்குவது நல்ல முயற்சி என்றே நானும் கருதுகிறேன். பயனுள்ளவையாக இருக்கக்கூடிய கட்டுரைகளைத் தெரிவு செய்து விரிவாக்குவது நல்லது. இதனால், பயனர்களின் நேரம் தேவையில்லாமல் விரயமாவதைத் தடுக்கலாம். விரிவாக்குவதில் அதிகம் பயன் இல்லை எனத் தோன்றும் கட்டுரைகளை இப்போதைக்கு அப்படியே விட்டுவிடலாம். விக்கிப்பீடியாவில் குறுங்கட்டுரைகள் இருப்பது குற்றம் அல்ல. அவற்றை எல்லாம் நீக்கியே ஆகவேண்டும் என்ற கருத்து மிகவும் தவறானது.
விக்கிப்பீடியாவில் புள்ளிவிபரங்களை ஒப்பிட்டு முடிவு எடுப்பதில் சில பிரச்சினைகளும் ஒவ்வாத் தன்மைகளும் உள்ளன என்பதையும் கருத்தில் கொள்வது அவசியம். ஆங்கில விக்கிப் பட்டியலில் தமிழ் இடம் பெற்றது தொடர்பில் தரச் சோதனை செய்த ஒருவர் சோதனையின் போது தமிழ் விக்கியில் எதிர்ப்பட்ட ஒரே நீளமான கட்டுரையும் கூகிள் மூலம் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டதாகக் குறிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி அதைத் தமிழ் விக்கிக்கு எதிராகப் பயன்படுத்தியுள்ளார். உண்மையில், இந்தியிலும் வேறு சில மொழிகளிலும் தமிழை விடக் கூடுதலான கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உள்ளன. தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒருபடி மேலே சென்று குறிப்பு இட்டதால் தவியின் தரம் குறைவானதாகவும், தரம் பற்றிக் கவலைப்படாமல் குறிப்பு இடாமல் விட்டதால் மற்ற மொழிகளின் தரம் அதைவிடக் கூடியதாகவும் காட்டப்படுகிறது. எனவே இது போன்ற பகுப்பாய்வுகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை.
இதனால், புள்ளி விபரங்கள் பயனற்றவை என்றோ, தமிழ் விக்கிப்பீடியா போதிய அளவுக்குத் தரம் கொண்டதாக உள்ளது என்றோ நான் கூறவரவில்லை. தமிழ் விக்கியின் தரத்தை மேம்படுத்துவதில் ஒருங்கிணைந்த, திட்டமிட்ட செயற்பாடுகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். குறிப்பாக குறைந்த பட்சக் கட்டுரை நிலைக்கான தகுதி, நல்ல கட்டுரைகளுக்கான தகுதிகள், குறுங்கட்டுரை வார்ப்புரு இடுவதற்கான நிபந்தனைகள், நீக்கல் வார்ப்புரு இடுவதற்கான நிபந்தனைகள், கட்டுரைகளை நீக்குவதற்கான நிபந்தனைகள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து முறையாகக் கலந்துரையாடி ஒருமித்த கருத்து எட்டப்படுவது அவசியம்.

---மயூரநாதன் (பேச்சு) 08:57, 27 சூன் 2014 (UTC)

 1. 👍 விருப்பம்--≈ உழவன் ( கூறுக ) 10:58, 27 சூன் 2014 (UTC)
 2. 👍 விருப்பம்--✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 11:26, 27 சூன் 2014 (UTC)
குறுங்கட்டுரைகளை விரிவாக்கும் திட்டத்தின் ஒரு படியாக அண்மைய மாற்றங்கள் பகுதியில் காட்சிப்படுத்திய திட்டம் ஓரளவு நல்ல பயனைத் தந்தததாகவே கருதுகிறேன். இதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 11:53, 27 சூன் 2014 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 00:43, 28 சூன் 2014 (UTC)
இரவி மற்றும் மயூரநாதனின் கருத்துக்களுக்கு நன்றி! தேவை, முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் குறுங்கட்டுரைகளை இயன்றளவு விரிவாக்குவோம். --சிவகோசரன் (பேச்சு) 09:13, 29 சூன் 2014 (UTC)

விக்கி மின்மினிகள் பயிற்சி[தொகு]

விக்கிப்பீடியாவுக்குப் புதிதாக வருபவர்களுக்கு எளிய பயிற்சிகள் தந்து வழிகாட்டிட விக்கி மின்மினிகள் என்ற முயற்சியைத் தொடங்கியுள்ளோம். ஒவ்வொரு நாளும் முகநூல் குழுவில் இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுப் புதிய பங்களிப்பாளர்களைப் பெற முடிகிறதா என்று பார்க்கிறோம். இதற்கான பயிற்சிகளைப் பற்றி கருத்து தேவை. பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:விக்கி மின்மினிகள்/பயிற்சி/நாள் 1#சில கருத்துகள். பயிற்சி உரை, படங்கள் எல்லாம் உடனடியாக உருவாக்க வேண்டியுள்ளதால் விரைந்து கருத்துகளைத் தருமாறு வேண்டுகிறேன். இப்பயிற்சியை மெருகூட்டி திரும்பத் திரும்ப பல்வேறு களங்களில் பயன்படுத்தலாம். --இரவி (பேச்சு) 17:56, 3 சூலை 2014 (UTC)

உதவித் தொகை திட்டம்[தொகு]

பார்க்க: விக்கிப்பீடியா:உதவித்தொகை. முதல் முறை ஒருவருக்கு முறையாக பங்களிப்பு உதவித் தொகை வழங்க முற்படுகிறோம் என்பதால் அனைவரின் கவனத்தையும் பெற வேண்டி இங்கு இடுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 22:43, 6 சூலை 2014 (UTC)

AWB CheckPage[தொகு]

I just made a mistake. I intended to create a CheckPage on Tamil Wiktionary, but created a page here. Please delete விக்கிப்பீடியா:AutoWikiBrowser/CheckPage. Sorry, Ganeshk (பேச்சு) 04:09, 14 சூலை 2014 (UTC)

Yes check.svgY ஆயிற்று --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:40, 14 சூலை 2014 (UTC)
 • நீங்கள் வந்தமைக்கு நன்றி. இங்கும் அது இருப்பதால் நன்மையே. இருக்கப் பரிந்துரைக்கிறேன். வேண்டிய மாற்றங்கள், தேவைப்படின் செய்யவும். --≈ உழவன் ( கூறுக ) 05:42, 14 சூலை 2014 (UTC)

10 ஆண்டு விழா அறிக்கையின் இறுதித் திகதி கடந்த சூலை 30, 2014 இல் முடிவடைகிறது[தொகு]

"This is just a reminder that your report is due 30 July 2014. If you will not be able to submit your report on time, it is important that you let us know now so we can work with you to make sure the report is submitted as close to the deadline as possible." என்று awang@wikimedia.org இருந்து கடிந்தம் ரவிக்கும் எனக்கும் வந்துள்ளது. இது ஒரு நினைவு மின்னஞ்சல் ஆகும். --Natkeeran (பேச்சு) 13:49, 17 சூலை 2014 (UTC)

இங்கு சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, நற்கீரன். இறுதித் திகதி நினைவில் இருந்தது. அதற்கான பின்னணி வேலைகளையும் செய்து வந்தேன். ஆனால், இந்த மடல் என் கண்ணில் சிக்காமல் போயிருந்தது. விக்கிமீடியா குழுவினருக்குப் பதில் அனுப்பியுள்ளேன்.--இரவி (பேச்சு) 13:58, 17 சூலை 2014 (UTC)

தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் ஒப்புதல் மடல்[தொகு]

தமிழ்வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பெற்ற தமிழ்க் கலைக்களஞ்சியத் தொகுதிகள் பத்தினையும், குழந்தைகள் கலைக்களஞ்சியங்கள் பத்தினையும் கிரியேட்டிவ் காமன்சு பகிர்வுரிமத்தின் கீழ் தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் விக்கிமீடியாவின் உறவுத்திட்டங்களுக்கும் தமிழ் வளர்ச்சிக்கழகம் வழங்க முடிவுசெய்த மடலைப் பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் பேராசிரியர் மு. பொன்னவைக்கோ அவர்களின் வழியாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நல்கியிருக்கின்றார்கள். தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பில் பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி அவர்களுக்கும், பேராசிரியர் பொன்னவைக்கோ அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கழகத்தாருக்கும் நம் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அவர்கள் வழங்கிய மடலைப் பகிர்கின்றேன்.

தமிழ்வளர்ச்சிக்கழகத்தின் ஒப்புதல் மடல்

விரைவில் இதனை முன்னெடுத்துச்செல்வோமாக.--செல்வா (பேச்சு) 04:17, 22 சூலை 2014 (UTC)

மிகவும் இனிப்பான செய்தி !! இதற்காக முனைந்து செயற்பட்ட அனைவருக்கும் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் முற்போக்கான முடிவுகளுக்கும் துணைநின்ற பேரா. செல்வா, பேரா.வா.செ.குழந்தைசாமி, பேரா.பொன்னவைக்கோ ஆகியோருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் !! இவற்றை நன்முறையில் முன்னெடுத்து தமிழ் விக்கியை வளப்படுத்துவது ஒவ்வொரு விக்கிப்பீடியரின் பொறுப்பாகும். --மணியன் (பேச்சு) 04:46, 22 சூலை 2014 (UTC)
👍 விருப்பம் முன்னெடுத்துள்ள அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி! வாழ்த்துகளும். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:58, 22 சூலை 2014 (UTC)
மிக்க மகிழ்ச்சி, செல்வா. நீங்கள் சென்னையில் இருக்கும் காலத்திலேயே இது தொடர்பான அறிவிப்புக்கு என ஒரு சிறு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க முடியும் என்றால் ஊடகங்களிலும் மற்ற கல்வி, அரசு நிறுவனங்களிலும் கிரியேட்டிவ் காமன்சு, விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வுக்கு உதவும். த. இ. க. அல்லது த. வ. க. வளாகத்திலேயே ஓரிரு மணி நேரத்தில் இந்நிகழ்வைச் செய்யலாம். பேரா. பொன்னவைக்கோ, பேரா. வா. செ. கு, பேரா. நற்கீரன் முதலியோரே இந்த அறிவிப்பை முன்னின்று செய்வது சாலப்பொருந்தும்.--இரவி (பேச்சு) 05:41, 22 சூலை 2014 (UTC)
👍 விருப்பம்--≈ உழவன் ( கூறுக ) 07:23, 22 சூலை 2014 (UTC)
நல்ல செய்தி. தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என நம்புகிறேன். இதற்காக உழைத்த செல்வா, மற்றும் அனைவருக்கும் அனைவருக்கும் எனது நன்றி. இதனைத் தகுந்த முறையில் விக்கிப்பீடியர்கள் பயன்படுத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 07:52, 22 சூலை 2014 (UTC)
👍 விருப்பம் மிகவும் மகிழ்வான செய்தி. தொடரும் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.--கலை (பேச்சு) 09:25, 22 சூலை 2014 (UTC)
👍 விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 06:16, 23 சூலை 2014 (UTC)
👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:46, 23 சூலை 2014 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 14:01, 23 சூலை 2014 (UTC)
👍 விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 16:43, 23 சூலை 2014 (UTC)
👍 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 01:43, 25 சூலை 2014 (UTC)
👍 விருப்பம்
உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் இணையத்தில் பயனுள்ள தமிழ் உள்ளடக்கங்களை வளர்த்தெடுக்கும் முயற்சியிலும், குறிப்பாகத் தமிழ் விக்கித் திட்டங்களை மேலும் பயனுள்ளதாக்கும் முயற்சியிலும் இது ஒரு முக்கியமான மைல் கல் எனலாம். இதற்காகத் தமிழ் விக்கிமீடியாத் திட்டங்கள் சார்பாக முன் முயற்சிகளை எடுத்த பேரா. செல்வாவுக்கு நன்றிகள். இதைச் சாத்தியமாக்குவதில் பெரும் பங்கு வகித்தவர் பேரா. நக்கீரன். அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் விக்கிக் குழுமத்தின் கோரிக்கை மீது அக்கறை எடுத்துக்கொண்டு கலைக் களஞ்சியங்களைக் கிரியேட்டிவ் காமென்சு பகிர்வுரிமத்தின் கீழ் வழங்கிய தமிழ் வளர்ச்சிக் கழகத்தினரும், குறிப்பாக, பேரா. வா. செ. குழந்தைசாமி ஐயா அவர்களும், பேரா. பொன்னவைக்கோ அவர்களும் நமது நன்றிக்கு உரியவர்கள். அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவோம். ---மயூரநாதன் (பேச்சு) 15:51, 25 சூலை 2014 (UTC)
👍 விருப்பம்---ரத்தின சபாபதி (பேச்சு) 18:31, 27 சூலை 2014 (UTC)
👍 விருப்பம்--Commons sibi (பேச்சு) 06:55, 30 சூலை 2014 (UTC)
👍 விருப்பம் இந்த சந்தோசம் தரும் தகவல் குறித்து, தி இந்து நாளிதழில் ஒரு செய்திக் கட்டுரை வெளியானது. அதனை இங்கு படியுங்கள்:
Tamil Wikipedia to publish two seminal works --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:31, 3 செப்டம்பர் 2014 (UTC)

கட்டுரைகளில் தனியார் நிறுவனங்கள்[தொகு]

முன்பைக் காட்டிலும் தமிழ் விக்கியில் கட்டுரைகளின் ஆழம் அதிகரித்திருக்கிறது. உள்ளூர் வரையிலான தகவல்களை பலர் சேர்த்து வருகின்றனர். ஒரு சிற்றூரிலோ, நகரத்திலோ உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள், கடைகள் போன்றவற்றை சேர்க்கின்றனர். தனியார் பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், அடிப்படை வசதி.ஆடம்பரம் தொடர்புடைய ஏனைய நிறுவனங்கள், அமைப்புகளின் பெயர்களையும் சேர்க்கின்றனர். இவற்றை விளம்பரம் எனக் கருதலாமா? இருக்கட்டுமா, நீக்க வேண்டுமா? பின்குறிப்பு: கட்டுரையில் தனியார் நிறுவனப் பெயர்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன. விரிவான விளக்கம் இல்லை. தெளிவாக விளக்குங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:38, 25 சூலை 2014 (UTC)

எடுத்துக்காட்டுக்கு, சில தொகுப்புகளைக் குறிப்பிட முடியுமா?--இரவி (பேச்சு) 19:54, 25 சூலை 2014 (UTC)
தமிழ்க்குரிசில் ,இரவி பார்க்க. இவ்வாறு நிறுவனங்கள் பயனர் பக்கம் உள்ளன .--Commons sibi (பேச்சு) 06:51, 20 செப்டம்பர் 2014 (UTC) .

குறுங்கட்டுரைகள் தொடர்பில் புதிய நடைமுறை உள்ளதா?[தொகு]

குறுங்கட்டுரைகள் தொடர்பில் புதிய நடைமுறை ஏதும் உள்ளதா? கானேசன் கட்டுரை உருவாக்கப்பட்டதும் குறித்தகால நீக்கல் வார்ப்புரு சிறிதரனால் இடப்பட்டுள்ளது. இவர் இட்டது சரிதான் என்றால், வள்ளிக்குன்னு சட்டமன்றத் தொகுதி, அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் ஆகிய கட்டுரைகளுக்கும் இடத்தானே வேண்டும் என்ற நோக்கில் இட்டுள்ளேன். மேலும், தவனூர் சட்டமன்றத் தொகுதி போன்ற கட்டுரைகள் கானேசன் கட்டுரைக்கு முன்னமே உருவாக்கப்பட்டு கு.கா.நீ. வார்ப்புரு இன்றி காணப்படுகின்றன. சமீப காலங்களில் 3 வரிக்குக் குறைவாக அதாவது 2 வரிக் கட்டுரைகளுக்கே கு.கா.நீ. வார்ப்புரு இடாமல் தவிர்க்கப்பட்டும் அல்லது வார்ப்புரு நீக்கப்பட்டும் வந்தது. எ.கா: பனிமனிதன். இவ்வாறான செயற்பாடுகள், கொள்கையாற்று சில நிருவாகிகள் செயற்படுவதாகவும், அல்லது சார்ப்புப் போக்குடன் செயற்படுவதாகவும் கருத இடமளிக்கிறது. எனவே கருத்துகளுக்கு அப்பால் இது தொடர்பில் த.வி.யின் கொள்கையினை தெரிவிக்குமாறு கேட்கிறேன். 2 அல்லது 3 வரிக்கட்டுரைகள் நீக்கப்பட வேண்டுமா? ஆம் எனின் பாரபட்சமின்றி நீக்குவோம். நான் தொடங்கிய கட்டுரையினையும் முதலில் என்னால் நீக்கவும், த.வி.யின் கொள்கைக்கு கட்டுப்பட்டு மதிப்பளிக்கவும் என்னால் முடியும். இல்லையெனின் நான் உட்பட பலர் உருவாக்கப்போகும் 2 அல்லது 3 வரிக்கட்டுரைகளுக்கு கு.கா.நீ. வார்ப்புரு இடுவதை மற்றவர்கள் தவிக்க வேண்டும். --AntonTalk 02:26, 27 சூலை 2014 (UTC)

ஆமாம், மற்றவர்களை விடுத்து உங்களுக்கு விதிவிலக்கு அளிக்கலாம். நான் உங்கள் கட்டுரைக்கு நீக்கல் வார்ப்புரு இட்டதும், ஏட்டிக்குப்போட்டியாக நீங்கள் சில கட்டுரைகளுக்கு நீக்கல் வார்ப்புரு இட்டது குறித்து உங்கள் ஒப்புதல் வாக்குமூலத்தைத் தந்தமைக்கு நன்றி. நிருவாகியாக இருந்து கொண்டு இவ்வாறு உங்கள் மேலாண்மையைக் காட்டுவது அழகல்ல. உங்கள் புதிய கட்டுரையில் இரண்டு வரிகளே உள்ளன. அதனால் நீக்கல் வார்ப்புருவை சேர்த்தேன். இதில் என்ன தவறு? மற்றைய இரண்டு கட்டுரைகளுக்கும் நீங்கள் எதற்காக நீக்கல் வார்ப்புரு சேர்த்தீர்கள் என்பதைத் தெளிவு படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 02:40, 27 சூலை 2014 (UTC)
அவ்விரு கட்டுரைகளுக்கும் கு.கா.நீ. வர்ர்ப்புருவை நீங்கள் இடாதது ஏன்? நீங்கள் வார்ப்புருவை எக்காரணத்தில் இட்டீர்களோ அக்காரணமே எனக்கும் உள்ளது. நிற்க, இவ்வுரையாடலின் நோக்கம் தீர்க்கமான கொள்கை நோக்கியே. எனவே அது தொடர்பில் உரையாடுங்கள்.--AntonTalk 02:49, 27 சூலை 2014 (UTC)
தவனூர் சட்டமன்றத் தொகுதி அல்லது ஏனைய இரண்டு கட்டுரைக்கும் எதற்காக நீக்கல் வார்ப்புரு இடப்பட வேண்டும் என நினைக்கிறீர்கள், அன்ரன். குறைந்தது 3 வரிகள் உள்ளன தானே? அது தானே குறுங்கட்டுரைக்கான குறைந்தபட்ச அளவுகோள். நீங்கள் வேறு எதற்காக வார்ப்புரு இட்டீர்கள் என்பதைத் தெளிவு படுத்துங்கள். மேலும், கட்டுரைகள் அனைத்தையும் நூற்றுக்கு நூறு நிருவாகி ஒருவர் கண்காணிக்க வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் போலும். இது நிருவாக அறிவுறுத்தல்களில் எங்காவது எழுதப்பட்டிருந்தால் அறியத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 02:51, 27 சூலை 2014 (UTC)

கானேசன் கட்டுரையும் 3 வரிகளைக் கொண்டும், வார்ப்புரு, பகுப்பு, உசாத்துணை என்பவற்றைக் கொண்டும் உள்ளனவே. பனிமனிதன் கட்டுரையினயும் கவனியுங்கள். --AntonTalk 02:56, 27 சூலை 2014 (UTC)

அப்படியா? பனிமனிதனுக்கென்ன, நன்றாகத்தானே இருக்கிறான்:)--Kanags \உரையாடுக 03:00, 27 சூலை 2014 (UTC)
சிறிதரன், உங்களுடன் அரட்டையடிக்க விரும்பவில்லை. மற்ற நிருவாகிகள் கவனிக்க. --AntonTalk 03:03, 27 சூலை 2014 (UTC)
குறுங்கட்டுரைக்கு குறைந்தது மூன்று வசனங்கள் இருக்க வேண்டும். (வரி எனக் குறிப்பிடுவது வசனங்களையே).--Kanags \உரையாடுக 03:25, 27 சூலை 2014 (UTC)
நீங்கள் இருவரும் சண்டையிடுவதால் என்னை ஏன் பழிவாங்குகிறீர்?? :( :( தவனூர் சட்டமன்றத் தொகுதி என்னும் கட்டுரை பார்ப்பதற்கு மூன்று வரி போல காட்சியளித்தாலும், அது ஒரு கட்டுரைக்கான தகுதிகளைப் பெறுகிறது.
 • மலையாளக் கட்டுரைக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
 • கட்டுரை 1,500 பைட்டுகளை தாண்டியுள்ளது. தகவற்பெட்டி வார்ப்புரு இல்லாமல்!
 • போதிய சான்றும் வழங்கப்பட்டிருக்கிறது.
 • தேவையான உள்ளிணைப்புகளையும் வழங்கியிருக்கிறேன். (குறைந்தது எட்டு உள்ளிணைப்புகள்)
 • தொடர்புடைய வார்ப்புருவும் இணைக்கப்பட்டிருக்கிறது. தொடர்புடைய கட்டுரை ஒன்றையாவது உடனே

உருவாக்கியிருக்கிறேன்.

 • கட்டுரைக்கு கலைக்களஞ்சியத்தில் சேர்க்கப்படுவதற்கான தகுதி இருக்கிறது. பகுப்பும் சேர்த்திருக்கிறேன்.
மேற்கண்ட தகவல்களின் மூலம், இனி வளர்வதற்குப் போதுமான தகுதிகளையும் பெற்றிருக்கிறது என அறியலாம். மூன்று வரி என்பது வெறும் ’மூன்று வரி’ அல்ல. தகவல் அளவில் போதிய தகுதியைப் பெறுகிறதா என்பதே! பதினைந்து இருபது வரிகளைக் கொண்டிருந்தும் தகவல் இல்லாமல் இருந்தாலும் அது கட்டுரை அல்ல. மூன்று வரியில் இருந்தாலும் போதிய தகவல் இருந்தால் அது கட்டுரையே! மூன்று வரியாக இருந்து, பகுப்பு, படம், வார்ப்புரு, உள்ளிணைப்புகள், தொடர்புடைய தலைப்புகள், சான்றுகள் என இவற்றில் பெரும்பான்மை இல்லாமல் இருந்தால் தான் அதற்கு நீக்கல் வார்ப்புரு இட வேண்டும் என நான் கருதுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:41, 27 சூலை 2014 (UTC)

தமிழ்க்குரிசில், உங்களை பழிவாங்க உங்களுடன் விரோதம் இல்லையே. அண்மைய உருவாக்க கட்டுரைகளில் அக்கட்டுரை சிறியதாக இருந்ததால் எ.கா.க்காக பயன்படுத்தினேன். நீங்கள் குறிப்பிட்டவற்றுடன் உடன்படுகிறேன். ஆனால், பாரபட்சமாக செயற்படுதலே தடுக்க கொள்கை இருப்பதை வலியுறுத்துகிறேன். கானேசன் என்னும் கட்டுரை பார்ப்பதற்கு மூன்று வரி கொண்டு காட்சியளித்தாலும், அது ஒரு கட்டுரைக்கான தகுதிகளைப் பெறுகிறது.

 • 3 வரிகள் அல்லது வசனங்கள் உள்ளன.
 • பல மொழி கட்டுரைக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
 • கட்டுரை 2,000 பைட்டுகளை தாண்டியுள்ளது.
 • போதிய சான்றும் வழங்கப்பட்டிருக்கிறது.
 • தேவையான உள்ளிணைப்புகளையும் வழங்கப்பட்டிக்கின்றன.
 • தொடர்புடைய வார்ப்புருவும் இணைக்கப்பட்டிருக்கிறது.

எனவே, கு.கா.நீ. வார்ப்பு இடப்படுவதன் அடிப்படை என்ன? கொள்கை இல்லாததால் அல்லவா? அல்லது வேறு காரணம் உள்ளதா? 735 பைட்டுகள் கொண்ட, உசாத்துணையற்ற (ஆதாரமற்ற) பனிமனிதன் போன்ற கட்டுரைகள் பல உள்ளன. இவற்றின் மட்டில் விக்கி கொள்கை என்ன? கொள்கை அல்லது வழிகாட்டி இன்றி பொதுப்பரப்பில் செயற்படுவது கடினம். --AntonTalk 05:07, 27 சூலை 2014 (UTC)

நீங்கள் எப்படிக் கணக்கிடுகிறீர்களோ தெரியவில்லை. கானேசனில் மூன்று வரிகளை நான் காணவில்லை. வெறும் இரண்டு வரிகளையும் ஒரு தகவல்சட்டத்தையும் கொண்டு இரண்டாயிரம் கட்டுரைகளை ஒரு நாளைக்குள் (தானியங்கியில்லாமல்) என்னால் உருவாக்கிட முடியும்.--Kanags \உரையாடுக 05:46, 27 சூலை 2014 (UTC)

என்னாலும் முடியும். கணிணித் திரையின் பொதுவான அளவிற்கு மாற்றிவிட்டுப் பாருங்கள். பனிமனிதன் போன்ற கட்டுரைகளில் எத்தனை வரி தெரிகிறது?--AntonTalk 07:56, 27 சூலை 2014 (UTC)

நீங்கள் இன்னும் தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள் போல் தெரிகிறது. வசனம் என்றால் ஒரு முழுமையான சொற்றொடர். அப்படிப் பார்க்கும் போது பனிமனிதனில் எத்தனை வசனங்கள் உள்ளன? சிறுபிள்ளைகளுக்கு விளங்கப்படுத்துவது போல் இருந்தால் மன்னிக்க வேண்டும். ஆனாலும், பனிமனிதன் கட்டுரையை மேம்படுத்த வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக அழிக்க வேண்டுமென நீங்கள் நினைப்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். கணினித் திரைக்கேற்ப வரிகளின் எண்ணிக்கை மாறுபடும். யானையும் குருடர்களும் கதை போல் கட்டுரைகள் ஆகி விடக்கூடாது.--Kanags \உரையாடுக 08:09, 27 சூலை 2014 (UTC)
உங்களுக்கு விளக்கக் குறைவு உள்ளது என நினைக்கிறேன். வரி (line), வசனம் (sentence) ஆகிய இரண்டும் ஒன்றல்ல. ஆரம்பத்தில் 3 வரி என்ற பதமே பயன்படுத்தப்பட்டது. தற்போது வரி வசனமாக திரிபுபடுத்தப்பட்டுள்ளது. வரியும் வசனமும் ஒன்றா? சிறுபிள்ளைக்கு சொல்வது போல் கேட்கிறேன். கொள்கைளை உருவாக்குங்கள். இல்லாவிட்டால் வரிக்கும் வசனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்புவீர்கள். //அழிக்க வேண்டுமென நீங்கள் நினைப்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்// கானேசன் கட்டுரை அழிப்பதில் ஆர்வமாக உள்ளீர்கள் போலும். //யானையும் குருடர்களும் கதை போல் கட்டுரைகள்// உங்களுக்குப் புரிந்தால் சரி--AntonTalk 08:54, 27 சூலை 2014 (UTC)
விக்கிப்பீடியா பேச்சு:அடிப்படை தகவல் பக்கத்தில் உரையாடலைத் தொடர வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 10:21, 27 சூலை 2014 (UTC)
எனக்கு விளக்கம் குறைவாக இருப்பதால் நிருவாகியாக இருப்பதற்கு எனக்குத் தகுதி உள்ளதா என்று சந்தேகமாக உள்ளது. எனவே நிருவாகப் பொறுப்புகளில் இருந்து விலகுவது அல்லது நிருவாக அணுக்கத்தை இனி மேல் பயன்படுத்தப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.--Kanags \உரையாடுக 11:08, 29 சூலை 2014 (UTC)
ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒரு நாட்டின் அரசியல் சாசனம் அளவுக்கு ஏராளமான விதிமுறைகளை எழுதி வைத்திருகிறார்கள். அவையே சில இடங்களில் ஒன்றுக்கு ஒன்று முரணாகவும் படித்துப் புரிந்து கொள்ளவும் சிரமமாக உள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவில் இருப்பன மிகச் சில விதிகள் தாம். அவற்றிலும் குழப்பம் வரும் இடங்களில் பங்களிப்பாளர்கள், நிருவாகிகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்படுவதை நல்லெண்ண நோக்கில் வரவேற்கிறோம். மாற்றுக் கருத்து உள்ள போது சுட்டிக் காட்டி உரையாடுகிறோம். இந்த உரையாடல்கள் தனிப்பட இல்லாமலும் தனிப்பட எடுத்துக்கொள்ளப்படாமலும் இருந்தால் போதுமானது. அதே போல, பொதுக் கருத்துக்கு ஏற்ப நமது செயற்பாடுகளை மீளப் பெற்றுக் கொள்ளவும் தயங்க வேண்டாம். நிருவாக அணுக்க நீக்கல் நடைமுறைகளை எவரேனும் முன்னெடுக்காத வரை, கருத்துகளைத் தத்தம் நிருவாக அணுக்கத் திறத்தின் மீதான விமரிசனமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. குறிப்பாக, இத்தகைய பராமரிப்பு வார்ப்புருக்களை அனைத்துப் பயனர்களும் இடலாம் என்பதால் இது நிருவாகிகளுக்கே உரித்தான சிக்கலும் இல்லை. இந்த உரையாடலின் நோக்கம் ஒரு தரமான குறுங்கட்டுரையின் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவு என்ன என்பதை வரையறுப்பதே. 3 வரிகள் ஆனாலும் சரி, 3 சொற்றொடர்கள் என்றாலும் சரி ஒரு கட்டுரையின் அடிப்படை தகவல் என்ன என்பதை வரையறுக்க போதுமானதாக இல்லை. இது குறித்து ஏற்கனவே நடந்த உரையாடலின் தொடர்ச்சியாக விக்கிப்பீடியா பேச்சு:அடிப்படை தகவல் பக்கத்தில் உரையாட வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 11:50, 30 சூலை 2014 (UTC)
இந்த உரையாடலும், இதற்கு முன்னர் பல தடவைகளில் இடம்பெற்ற கலந்துரையாடல்களும், நீக்கல் வார்ப்புருவுக்குத் தகுதியுள்ள கட்டுரைகள் எவை என்ற பிரச்சினையைவிட தீர்வு காண வேண்டிய வேறு பிரச்சினைகளும் உள்ளன என்பதை உணர்த்துகின்றன. பிற பயனர்களுக்கு உரிய மதிப்பளிப்பது மிகவும் முக்கியமானது. விக்கிப்பீடியாவில் எல்லோரும் சமம் என்பதை யாரையும் எந்தமாதிரியும் நடத்தலாம் என்று பொருள் கொள்வது தவறானது. தயவு செய்து இந்தமாதிரியான கலாச்சாரத்தைத் தமிழ் விக்கிப்பீடியாவில் வளர விடவேண்டாம் என்று எல்லாப் பயனர்களையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். -- மயூரநாதன் (பேச்சு) 20:06, 30 சூலை 2014 (UTC)

👍 விருப்பம்--≈ உழவன் ( கூறுக ) 01:36, 31 சூலை 2014 (UTC)

எனது கருத்துகள்: (1) வயதிலும் கல்வியிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள், இளையோரிடம் நயம்பட உரைத்து அவர்களை மெருகேற்ற வேண்டும். (2) இளையோரும் ego பாராது, சுட்டிக்காட்டலை நன்மையாகக் கருதி, தம்மைத் திருத்திக்கொள்ளல் வேண்டும். (3) தேவையற்ற குத்தல்களையும், கேலிப் பேச்சுக்களையும் விடுத்து தமிழ் விக்கியின் வளர்ச்சிக்காக ஒருமித்தக் கருத்துகளை எட்டவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. (4) 2011ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் தமிழ் விக்கியில் நான் சிறுகச் சிறுக இணைந்தபோது, கிடைத்த இனிமையான ஆதரவும்., நல்ல புரிந்துணர்வுகளும் மீண்டும் இங்கு நிலவாதா என்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:17, 31 சூலை 2014 (UTC)

வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்[தொகு]

வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதுவது தமிழ் விக்கிப்பீடியாவில் தடை செய்யப்பட வேண்டும் என முன்மொழிகிறேன். விக்கிப்பீடியா ஒரு விளம்பர மேடை அல்ல. அதுமட்டுமல்ல இவ்வாறு எழுதப்பட்ட கட்டுரைகள் இற்றைப்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாகத் தேங்கியுள்ளன.--Kanags \உரையாடுக

எந்த ஒரு குறிப்பிட்ட துறைக்கும் என்று தனிப்பட தடை தேவையில்லை. வெளிவருவதற்கு முன்பே முக்கியத்துவம், எதிர்பார்ப்பு பெறும் திரைப்படங்கள், நூல்கள் உள்ளிட்ட கலைப்படைப்புகள் உள்ளன. வழக்கமான விக்கி நெறிமுறைகளின் படி போதிய உள்ளடக்கம், தரம் இல்லையென்றால் குறித்த கால நீக்கல் வேண்டுகோள் இடலாம். பல ஆண்டுகளாக இவ்வாறு தேங்கியிருக்கும் கட்டுரைகளுக்கு பொருத்தமான மேம்பாட்டு வார்ப்புருவோ குறித்த கால நீக்கல் வார்ப்புருவோ இடலாம். --இரவி (பேச்சு) 10:23, 27 சூலை 2014 (UTC)

ஓய்வில் உள்ள நிருவாகிகளின் நிருவாக அணுக்கம் குறித்த கொள்கை[தொகு]

ஓய்வில் உள்ள நிருவாகிகளின் நிருவாக அணுக்கம் குறித்த கொள்கை அறிவிப்பு தொழினுட்ப ஆலமரத்தடியில் வந்துள்ளது. ஆனால், நிறைய பேர் கவனிக்கவில்லை என்று எண்ணுகிறேன். சுருக்கமாக, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஓய்வில் உள்ள நிருவாகிகளிடம் விளக்கம் கேட்டு நிருவாக அணுக்கத்தை விலக்கிக் கொள்ள உலக அளவில் முடிவெடுத்துள்ளார்கள். ஒவ்வொரு மொழி விக்கித் திட்டத்திலும் இதற்கென தனிக் கொள்கை இல்லையெனில், அவர்களின் நடைமுறை கடைபிடிக்கப்படும். ஒன்று, நாம் இதனை ஏற்றுக் கொள்ளலாம். அல்லது, நமக்கான நடைமுறையை உருவாக்கி விட்டு அவர்களுக்குத் தெரியப்படுத்தலாம்.--இரவி (பேச்சு) 10:37, 27 சூலை 2014 (UTC)

நாமே ஒரு கொள்கையை வகுத்துக்கொள்ளலாம். உலக அளவிலான கொள்கையில் இருந்து அதிகம் வேறுபடத் தேவையில்லை. ஆனால், நமது கையில் கட்டுப்பாட்டை வைத்திருப்பது நல்லது. --- மயூரநாதன் (பேச்சு) 18:25, 27 சூலை 2014 (UTC)
சரி, விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்/பல ஆண்டுகளாக பங்களிக்காத நிர்வாகிகள் பக்கத்தில் உரையாடலைத் தொடர்வோம்.--இரவி (பேச்சு) 16:33, 29 சூலை 2014 (UTC)

தெலுங்கு விக்கிப்பீடியா குறித்த ஒரு பத்திரிகை செய்தி[தொகு]

படிக்க: Telugu Wikipedia struggles to stay afloat--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:19, 28 சூலை 2014 (UTC)

சிவகுரு, முக்கியமான ஒரு விசயத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி. அண்மைய சில மாதங்களாக பல்வேறு இந்திய விக்கிப்பீடிக்களின் பங்களிப்புகளும் வீழ்ந்து வருகின்றன. இதைப் பற்றிய என் கருத்துகளை இங்கு பகிர்ந்துள்ளேன். ஓரளவு தாக்குபிடித்து நிற்பது தமிழும் வங்காள மொழியும் தான். என்ன சிக்கல்?
விக்கிப்பீடியா தவிர்த்த திட்டங்களில் கவனத்தைப் பகிர்கிறார்கள். மலையாள விக்கிப்பீடியாவின் தேக்கத்துக்கு ஈடாக அவர்களின் விக்கி மூலத்தின் வளர்ச்சி இருக்கிறது. நமக்கு ஏற்கவே மதுரைத் திட்டம் போன்ற திட்டங்கள் இருந்ததால் இத்தகைய உழைப்புச் சிதறல்கள் குறைவாக இருந்தன.
சில சிறிய விக்கிப்பீடியாக்கள் அடிக்கடி நிகழ்ச்சிகள், பரப்புரைகள் நடத்துவது அவர்கள் உழைப்பைக் கோரக்கூடும். நாம் எப்போதாவது தான் இது போல் செய்கிறோம். பரப்புரைகளையும் பலரும் பொறுப்பெடுத்துச் செய்கிறோம் என்பதால் இதுவும் நமக்குப் பொருந்தாது.
பல மொழிகளிலும் முதல் தலைமுறைப் பங்களிப்பாளர்களே தொடர்ந்து பங்களித்து களைத்து ஓய்ந்து விட்டார்கள். தமிழில் 2010 வரை ஒரு தலைமுறை. அதற்குப் பிறகு இரண்டாம் தலைமுறை. தற்போது தமிழிலும் ஒரு தேக்க நிலை இருக்கிறது (ஒவ்வொரு மாதமும் பங்களிப்போம் எண்ணிக்கை 250 என்ற அளவிலேயே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தமிழ்விக்கி10 சமயத்தில் 370 வரை சென்றோம்). புதிதாக பல பங்களிப்பாளர்களை ஈர்க்கவும் அவர்களை பண்பட்ட பங்களிப்பாளர்களாக மாற்றுவதற்கும் என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்பதை இனங்கண்டு செயற்பட வேண்டும். 2010க்குப் பிறகு சோடாபாட்டில் பல பங்களிப்பாளர்களுக்கு உதவி மெருகேற்றினார். தற்போது அது போல் இன்னும் ஒரு சிலராவது இருந்தால் அடுத்த நிலைக்கு முன்னகர முடியும். --இரவி (பேச்சு) 16:57, 29 சூலை 2014 (UTC)
👍 விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:18, 31 சூலை 2014 (UTC)
அண்மைக் காலங்களில் தமிழ் விக்கியின் பல்வேறு தர அளவீடுகள் வீழ்ச்சி கண்டிருப்பது உண்மையே. 2013 நவம்பர் மாதத்துக்குப் பின்னர் ஒரு தேக்க நிலை உள்ளது. கடந்த ஏப்ரலில் ஒரு தற்காலிக ஏற்றம் ஏற்பட்டுப் பின்னர் மீண்டும் இறங்கிவிட்டது. இந்த நிலை பற்றி ஆராய்ந்து நிலைமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல பயனர்கள் முனைப்பாக இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பழைய விக்கித் தலைமுறையினரும் முற்றாகக் களைத்து ஒதுங்கிவிட்டார்கள் என்று சொல்வதற்கு இல்லை. சிறீ, இரவி போன்றோர் இன்னும் முழு வீச்சுடன் இயங்குகின்றனர். வேகம் சற்றுக் குறைந்திருந்தாலும் நானும் இன்னும் ஓயவில்லை. சுந்தர், நற்கீரன், செல்வா, போன்றோரும் பக்கத்திலே இருக்கின்றனர். இரண்டாம் விக்கித் தலைமுறைப் பயனர்கள் பலர் முதல் தலைமுறையினர் பலரைவிட முனைப்பாகவே இயங்குகின்றனர். மூன்றாம் தலைமுறையை வலுவானதாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தேவை. விக்கிக்குப் பங்களிப்பதில் பயனர்களுக்குக் கிடைக்கும் முதன்மையான பயன்கள் மற்றப் பயனர்களுடைய அங்கீகாரமும், இச்செயற்பாடுகளினூடே கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியுமே. இதை வலுப்படுத்துவதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். இதற்கு, அடிக்கடி நிகழும் வாக்குவாதங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும், பராமரிப்பு வேலைகளின்போது பிற பயனர்களுக்குக் குறிப்பாகப் புதியவர்களுக்குச் சலிப்பை உண்டாக்கும் வகையில் கடுமையாக நடப்பதையும், இறுக்கமான போக்குகளைக் கடைப்பிடிப்பதையும் குறைத்துக்கொண்டு எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் போக்கை வளர்க்க வேண்டும். அத்துடன், எல்லாத் தலைமுறைகளைச் சேர்ந்தோரிடையேயும், புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கும், நட்பு ரீதியான ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் முயற்சி மேற்கொள்ள வேண்டியதும் அவசியம். இது குறித்து விரிவான கலந்துரையாடல் ஒன்று தேவை. வேண்டுமானால் பயனர்களிடையே ஒரு கருத்தறியும் survey ஒன்றை நடத்திக் கருத்துக்களை அறிந்து அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்கலாம். --- மயூரநாதன் (பேச்சு) 21:13, 1 ஆகத்து 2014 (UTC)
மிக்க👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:32, 2 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 05:01, 2 ஆகத்து 2014 (UTC)
முதல் தலைமுறையினர் களைத்து விட்டார்கள் என்பது மற்ற பல விக்கிப்பீடியாக்களைக் குறித்தே சொன்னேன். தமிழ் விக்கிப்பீடியாவில் அப்படி நிகழவில்லை என்பது நமது பலங்களில் ஒன்று. இதற்கு எல்லா வேலையையும் ஒருவரே அல்லது ஒரு சிலரே இழுத்துப் போட்டுச் செய்யாமல், தேவைப்படும் போது ஓய்வுகள் எடுத்துத் திரும்புவதும் உதவி இருக்கிறது. தொடர் பங்களிப்புகளைக் கூட்டுதல், புதிய பங்களிப்பாளர்களை மெருகேற்றுதல், இணக்கச் சூழலைப் பேணுதல் முதலியவற்றுக்கான முயற்சிகளை வரவேற்கிறேன். தரம் பேணும் உரையாடல்களைத் தனிப்பட இட்டுச் செல்லாமல் இருந்தால் போதுமானது. இதற்குத் தேவையான இடங்களில் விக்கிச் சமூகம் தலையிட வேண்டும். அது நெடுநாள் பயனராக இருந்தாலும் சரி, புதியவராக இருந்தாலும் சரி :) பட்டும் படாமல் பொத்தாம் பொதுவாக அறிவுரை கூறுவதும் ஒதுங்கி இருப்பதுமே பல வேளைகளில் உரையாடல்களைச் சிக்கலாக்கி விடுகிறது. --இரவி (பேச்சு) 05:26, 2 ஆகத்து 2014 (UTC)

திகதியும் எண்களும்[தொகு]

தமிழில் திகதிகளை எழுதுகையில் 8 செப்டம்பர் 1943 என்றோ செப்டம்பர் 8, 1943 என்றோ எழுதுவது தமிழ் முறைக்கு ஒவ்வாதது. தமிழ் முறையில் எழுதுகையில் 1943 செப்தெம்பர் 8 என்றவாறு எழுதுவதே சரியானது. ஆண்டு, மாதம், திகதி என்ற ஒழுங்கில் இடம் பெற வேண்டும். அத்துடன் 8 ல் என்றோ 8 ம் என்றோ 8 ன் என்றோ எழுதுவதும் தவறு. ஏனெனில் பகுபதங்களின் பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் போன்ற எவ்வுறுப்பும் மெய்யெழுத்தில் தொடங்காத அதே வேளை (ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன போன்ற) வேற்றுமை உருபு எதுவும் மெய்யெழுத்தில் தொடங்குவதுமில்லை. எனவே, அவ்வாறான இடங்களில் 8 இல், 8 ஆம், 8 இன் என்றவாறு எழுதுவதே முறை. எனவே, இதற்கு மாறான வடிவங்களில் எழுதுவோர் தமது எழுத்து நடையைத் திருத்திக் கொள்ள வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 05:17, 2 ஆகத்து 2014 (UTC)

தொடர்ந்து இங்கு உரையாட வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 05:21, 2 ஆகத்து 2014 (UTC)

வருங்கால நிருவாகிகள்[தொகு]

வருங்காலத்தில் நிருவாகப் பொறுப்பு ஏற்கக் கூடியவர்களை இனங்கண்டு ஊக்கம் அளிக்க, வழிகாட்ட விக்கிப்பீடியா:நிருவாகிகள் பட்டியல்/பரிந்துரைகள் பக்கத்தைப் பயன்படுத்த வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 09:56, 2 ஆகத்து 2014 (UTC)

பத்தாண்டுகளைக் கடந்த பங்களிப்புகள்[தொகு]

மயூரநாதனும் சுந்தரும் பத்தாண்டுகளைக் கடந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார்கள். இது தொடர்பாக சுந்தர் முகநூலில் எழுதிய குறிப்பு முக்கியமானது. அனைவரும் தங்கள் வாழ்த்துகளை இருவரின் பேச்சுப் பக்கங்களில் தெரிவிக்க வேண்டுகிறேன். இது போல் 1, 2, 5, 8 என்று ஒவ்வொரு ஆண்டும் பங்களிப்புகளை நிறைவு செய்தவர்களுக்கான பதக்கங்களை வரும் நாட்களில் பகிர்ந்து கொள்வோம் :) --இரவி (பேச்சு) 09:56, 2 ஆகத்து 2014 (UTC)

மகிழ்ச்சி!! இருவருக்கும் என் வாழ்த்துகள்! :) முன்னோடிகளாக இருந்து வழிகாட்டியமைக்கு நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:32, 2 ஆகத்து 2014 (UTC)
நன்றி இரவி. அந்த முகநூல் குறிப்புகூட பொதுவான தமிழ்ப்பணிகளைப்பற்றி அமைந்துவிட்டது. அத்தனைக்கும் தமிழ் விக்கிப்பீடியாதான் அடிப்படை. இங்கு நான் பெற்ற அனுபவங்களையும் உடன்பழகிய அனைத்து விக்கிநண்பர்களையும் பற்றி எழுதி முடியாது. நான் பெயரையோ, நிகழ்வையோ குறிப்பிடாவிட்டாலும் உங்கள் ஒவ்வொருவரையும் நினைத்துக்கொள்கிறேன் என்றுமட்டும் கூறிக்கொள்கிறேன். இனி சற்றேனும் பங்களிக்கத்தொடங்குகிறேன். :) -- சுந்தர் \பேச்சு 10:45, 2 ஆகத்து 2014 (UTC)

கலைக்களஞ்சியத் தலைப்புகள்[தொகு]

ஏற்கனவே, முக்கியமான 10,000 தலைப்புகளை இனங்கண்டு கட்டுரைகளை உருவாக்கியது போல் தமிழ்ச் சூழலில் வெளியாகியுள்ள முக்கிய கலைக்களஞ்சியங்களில் உள்ள தலைப்புகளையும் இனங்கண்டு கட்டுரைகளை உருவாக்கினால் நன்றாக இருக்கும். இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா ஒரு இலட்சம் கட்டுரைகள் மைல்கல்லை அடையும் போது, பல அடிப்படையான தலைப்புகளிலும் கட்டுரைகளைக் கொண்டிருக்கும். அண்மையில் தமிழ் வளர்ச்சிக் கழகம் கொடையளித்த வாழ்வியல் களஞ்சியம், குழந்தைகள் களஞ்சியம் முதலியன தமிழ் இணையக் கல்விக்கழக இணையத்தளத்தில் உள்ளன. அங்கிருந்து தலைப்புகளை எடுத்து இடலாம். நான் விகடன் வெளியிட்ட பிரிட்டானிகளா தகவல் களஞ்சியத்தில் இருந்து தலைப்புகளைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளேன். இந்நூல் உள்ளோர் இப்பணியில் இணைந்து உதவிடுமாறு வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 05:04, 8 ஆகத்து 2014 (UTC)


பிற்காலப் பாண்டியர்கள்[தொகு]

விக்கிபிடியாவில் உள்ள பிற்காலப் பாண்டி மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சர்ச்சை உள்ளது.

 1. சர்ச்சை-முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கட்டுரையில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் 1216 முதல் 1239 வரை ஆட்சி புரிந்தாக உள்ளது.கட்டுரையின் தகவல் சட்டதில் கி.பி. 1216-1238 வரை ஆட்சி புரிந்தாக உள்ளது.கட்டுரைக்கான கட்டுரைக்கான மேற்கோள்களை ஆராயும் போது தமிழக அரசால் நிறுவப் பெற்ற தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பின்படி முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216-1238)வரை ஆட்சி புரிந்தாக உள்ளது. இந்த பல்கலைக்கழகம் வெளியிட்ட இன்னொரு அறிவிப்பின்படி (கி.பி. 1216 - 1244) வரை ஆட்சி புரிந்தாக உள்ளது.
 2. சர்ச்சை-இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் இந்த கட்டுரையில் இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238 முதல் 1250 வரை ஆட்சி புரிந்தாக உள்ளது.தமிழக அரசால் நிறுவப் பெற்ற தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பின்படி பாண்டி மன்னனான இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் (கி்.பி. 1237 - 1266)[1] வரை ஆட்சி புரிந்தாக உள்ளது.இந்த பல்கலைக்கழகம் வெளியிட்ட இன்னொரு அறிவிப்பின்படி கி.பி. 1238[2] ஆட்சிக்கு வந்தான் என்று உள்ளது .
 3. சர்ச்சை-இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இந்த கட்டுரையில் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239 முதல் 1251 வரை ஆட்சி புரிந்தாக உள்ளது..தமிழக அரசால் நிறுவப் பெற்ற தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஒரு அறிவிப்பின்படி (கி.பி. 1238 - 1255)வரை ஆட்சி புரிந்தாக உள்ளது.
 4. சர்ச்சை-இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் இந்த கட்டுரையில் இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1281 வரை தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஒரு அறிவிப்பின்படி (கி.பி. 1254 - 1265) ஆட்சி புரிந்தாக உள்ளது.

இது போன்ற இன்னும் பல வரலாறு கட்டுரைகளில் தமிழ் விக்கிபிடியாவில் உள்ளன.-- mohamed ijazz(பேச்சு) 08:07, 8 ஆகத்து 2014 (UTC)

சான்றுகள்[தொகு]

தகவல்[தொகு]

ஏறத்தாழ 200 திரைப்படங்கள் குறித்து ராண்டார் கை எழுதியுள்ள கட்டுரைகளுக்குரிய இணைய இணைப்புகளை, Blast from the Past (column) எனும் ஆங்கில விக்கி கட்டுரையில், தொகுத்துள்ளார்கள். பழைய திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளில் இற்றை செய்ய விரும்பும் பயனர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தலாம்! (சில இணைப்புகள் வேலை செய்யவில்லை - குறிப்பிட்ட இணையத்தளத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம்)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:52, 9 ஆகத்து 2014 (UTC)

👍 விருப்பம் ஒரு வரம்புக்குள் உட்படும் கட்டுரைகளைப் பற்றிய தகவலை அதன் பேச்சுப் பக்கத்தில் குறிப்பாக பதிந்து வைத்தால் எளிதாக இருக்கும். எ.கா: தமிழகக் கோயில்களைப் பற்றிய குறிப்பாக இருந்தால் தமிழகக் கோயில்கள் என்ற கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுங்கள். ஆங்கிலத் திரைப்படங்களைப் பற்றியதாக இருந்தால் ஆங்கிலத் திரைத்துறை என்ற கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுங்கள். ஆலமரத்தடியின் தொகுப்புகளை அடிக்கடி பரணேற்றிவிடுகிறோம். (புதியவர்கள்) பரணேற்றிய தொகுப்புகளில் பெரும்பாலும் தேடுவது இல்லை என நினைக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 18:02, 9 ஆகத்து 2014 (UTC)

Yes check.svgY ஆயிற்று! காண்க: பேச்சு:ராண்டார் கை, பேச்சு:தமிழகத் திரைப்படத்துறையில் தகவல் உதவி எனும் துணைத் தலைப்பு --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:16, 9 ஆகத்து 2014 (UTC)

புதுப்பயனர் அரவணைப்பு[தொகு]

"தமிழ் விக்கிப்பீடியாவில் மக்கள் இவ்வளவு வரவேற்பா இருப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கல. ஊருக்கு வந்தாப்ல இருக்கு :) உங்களை போல நிறைய எழுதறவங்களோட முதல்லயே அறிமுகம் கிடைக்கறது ரொம்ப மகிழ்ச்சி. கண்டிப்பா சேர்ந்து செயல்பட விருப்பம்" - இதற்கு விளக்கவுரை தேவையில்லை தானே? :)--இரவி (பேச்சு) 19:28, 11 ஆகத்து 2014 (UTC)

👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:01, 12 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 06:42, 12 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 04:52, 13 ஆகத்து 2014 (UTC)

Help for translate[தொகு]

Hello and sorry for writing in English. Can anyone help me translate a small article (2 paragraphs) from English to your language and create the article in your wiki? Please, fell free to answer in my talk page in your wiki anytime. Thanks! Xaris333 (பேச்சு) 00:42, 13 ஆகத்து 2014 (UTC)

தமிழ்த்தட்டெழுத்து குறித்து ஒரு வேண்டுகோள்[தொகு]

மக்களே,

 • தமிழ்99 கற்க மிக எளிதான ஒரு தட்டெழுத்து முறையோடு மட்டுமல்லாமல், தட்டுப்பிழையின்றியும் விரைவாகவும் தமிழில் எழுத மிகவும் துணை செய்கின்றது.
 • தமிழ்99-இல் தட்டெழுதுவதால் தங்கள் வரிகள் பிழையின்றி வருவதோடு தாங்கள் தமிழ் எழுதுவதையும் முன்னேற்ற உதவுகிறது.
 • நான் அண்மையில் செய்த பல தொகுப்புகளில் பிழைகளின் அறிகுறிகள் "எழுத்துப்பெயர்ப்பு" முறையில் தட்டெழுதுவதின் பக்கவிளைவுகளாகத் தோன்றுகின்றன.
  • குறிப்பாக "எழுத்துப்பெயர்ப்பு" முறையில் தட்டெழுதுவோர், ஒன்றுக்கு இரண்டு முறை முன்தோற்றத்தைச் சரிபார்த்து, நீங்கள் எழுத நினைத்தது சரியாக தட்டுப்பிழையின்றி வந்துள்ளதா என்று உறுதி செய்தபின் சேமிக்கவும்.
  • இதனால் உங்கள் மெய்ப்பு பார்த்தல் திறன் பெருகுவதோடு, கட்டுரைத் தரம் கூடும், பிறர் திருத்தம் செய்யவேண்டிய தேவையும் குறையும்.
 • முடிந்தவரை தமிழ்99 கற்றுக்கொண்டீர்கள் என்றால், இவ்வனைத்து பலன்களோடு, வேற்று மொழியின் மூலம் தமிழை எழுதவேண்டிய இழுக்கும் ஏற்படாது.

-இது "எழுத்துப்பெயர்ப்பில்" இருந்து "தமிழ்99" முறைக்கு மாறி, இப்பொழுது தவறின்றி விரைவாகத் தமிழ் எழுதும் ஒருவனின் அன்பு வேண்டுகோள். நன்றி! தமிழ்த்தம்பி (பேச்சு) 07:49, 14 ஆகத்து 2014 (UTC)

எழுத்துப்பெயர்ப்பு முறையில் எழுதுவது ஒன்றும் இழுக்கானது அல்ல. எழுத்துப்பெயர்ப்பு முறையில் தட்டெழுத்து செய்து பழக இங்கு செல்லவும். உதவிக்கு வேண்டுமானால் Show Keymap ஐ தெரிவு செய்து தேவையான எழுத்துருக்களை டைப் செய்து பழகலாம், அதே எழுத்துருதான் நம் தமிழ் விக்கியிலும் பயன்படுத்தப்படுகின்றது. வேண்டுமானால் Tamil Unicode என கூகிளில் டைப் செய்து வேறு வலைத்தளங்களிலும் சென்று பழகலாம், பார்க்கலாம்!.... --யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:06, 14 ஆகத்து 2014 (UTC)

நன்றி யாழ்ஸ்ரீ, தமிழர்களாகிய நாம் தமிழ் மொழியில் எழுத வேற்றுமொழியான ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது இழுக்கு என்பது என் கருத்து. தமிழ்99 முறையில் தட்டெழுதப் பழகக்கூட பல இணையப்பக்கங்கள் உள்ளன! - தமிழ்த்தம்பி (பேச்சு) 08:23, 14 ஆகத்து 2014 (UTC)

நீங்கள் குறிப்பிட்ட தளத்தைவிட இந்தப்படம் உள்ள தளம் மிக நன்றாக உள்ளது.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:28, 14 ஆகத்து 2014 (UTC)

இணைப்புக்கு நன்றி யாழ்ஸ்ரீ, நான் குறிப்பிட்டது போல பல இணையப்பக்கங்கள் உள்ளன. நான் தனிப்பட்ட முறையில் கணிணியில் விக்கிப்பீடியாவின் உள்ளமைந்த தமிழ்99 முறையும், பிற இடங்களில் எ-கலப்பை நிரலும், செல்பேசியில் செல்லினம் நிரலும் பயன்படுத்துகிறேன். - தமிழ்த்தம்பி (பேச்சு) 09:47, 14 ஆகத்து 2014 (UTC)
தமிழ்த்தம்பி, இங்குள்ள மூத்த பயனர்கள் தமிழ்99 முறையைப் பின்பற்றுகிறார்கள். அது எளிமையானதும், பயன்தரவல்லதும் ஆகும். என்னைப் போன்ற சிலர் எழுத்துப்பெயர்ப்பு முறையைப் பின்பற்றுகிறோம். எழுத்துப்பெயர்ப்பை ஆங்கிலத்துடன் ஒப்பிட்டு வருந்த வேண்டியதில்லை. :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:00, 14 ஆகத்து 2014 (UTC)
தலைவரே, இதில் மூத்தவர் இளையவர் என்ற பாகுபாடு என்ன இருக்கு. என்னுடைய கருத்தை நான் சொல்கிறேன், அவரவர் கருத்தை அவரவர் சொல்கின்றனர், ஏற்பவர் ஏற்கலாம், எதிர்ப்பவர் எதிர்க்கலாம். ஆனால் கலந்துரையாடல் நடக்க வேண்டும், கருத்துக்கள் பரிமாறப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும். இனிவரும் பயனர் அனைத்து கோணங்களையும் படித்து, தமக்குகந்த தெரிவைச் செய்ய வேண்டும். இது விக்கிப்பீடியா, வடகொரியா அல்ல :) (ஆனா அவங்க தமிழ்99 -இல் தான் தட்டெழுதணும் :P //கிண்டல்) -
தமிழ்த்தம்பி (பேச்சு) 18:39, 14 ஆகத்து 2014 (UTC)
யப்பா சாமி, உமக்கு ஆதரவாகவே நான் கருத்து தெரிவித்திருந்தேன். :) என்னையே குழப்புறீரே! :( மூத்த பயனர்கள் என குறிப்பிட்டதன் காரணம்: தொடக்க காலத்தில் இருந்தே அவர்கள் பயன்படுத்துகின்றார்கள் என்பதை குறிப்பிட விரும்பினேன். மூத்தவர் என்ற சொல் வயதில் மூத்தவரை குறித்தது அல்ல, தொடக்க காலத்தில் இருந்தே இணையத்தில் தமிழை பழகிவந்தோரைக் குறித்தேன். பின்னர் இணைந்த என்னைப் போன்ற பயனர்கள் எழுத்துப்பெயர்ப்பில் பழகி அப்படியே எழுதுகின்றோம். யாரையும் நான் குறை சொல்லவில்லையே. விளக்கம் கொடுக்க வந்த என்னை வில்லனாக்கிவிட்டீரே. :( -தமிழ்க்குரிசில் (பேச்சு) 18:46, 14 ஆகத்து 2014 (UTC)
அடடா, எப்படியோ சொன்னது எப்படியோ ஒலித்துவிட்டது, நான் உங்கள் கருத்துக்களை எதிர்த்து எதுவும் சொல்லவில்லை, என்னுடைய கருத்துக்களை தெரிவிக்க உங்கள் மறுமொழியைப் பயன்படுத்திக்கொண்டேன். மன்னிக்கவும். மேலும் மூத்த பயனர் குறித்து நானும் உங்கள் பொருளிலேயே சொன்னேன் - உண்மையில் நானே விக்கிப்பீடியாவில் எழுதுவதன் மூலம் தான் என் தமிழ்99 திறனை மேம்படுத்திக்கொள்கிறேன். புதியவர்களுக்கு தமிழ்99 எழுத்துப்பெயர்ப்பைவிட அரியதென்ற தவறான ஒரு எண்ணம் உருவாவதை நாம் தடுக்க வேண்டும். இன்று ஆங்கிலத்தட்டச்சு பயிலாது, பணிக்காக விரல் தடவி தடவி கணிணியில் தட்டிப்பழகிய என்னைப் போன்றவர்தான் பலர். இது போன்றவர்க்கு அதே தடவல் சிலநாள் தடவி தமிழ்99 கற்றுக்கொண்டால் ஆங்கிலத்தில் தட்டுவதை விட சிறப்பாக தமிழ்99-இல் நேராகத் தமிழில் எழுதலாமே. இதில் எழுதுவது மட்டும் அல்ல, எண்ண செயல்முறை (thought process) முதற்கொண்டு பயன்கள் உள்ளன. தமிழராகிய நமக்கு எண்ணங்கள் தமிழிலேயே தோன்றும், அவற்றை எழுத்துப்பெயர்ப்பு செய்யவேண்டுமானால் நம் மூளை தமிழை ஆங்கில வடிவமாக்கி அதைத் திரும்ப, கணிணி தமிழுக்கு மாற்றுகிறது. இது ஒரு தேவையில்லாத சுற்றுவழிமுறை (தலையைச்சுற்றி மூக்கைத் தொடுவது என்பார்கள்). அடப் போங்க, பேசிப் பேசி வாய் வலிக்குது எழுதி எழுதி கை வலிக்குது, போய் ஏதாவது உருப்படியான கட்டுரையைத் தொகுப்போம். -
தமிழ்த்தம்பி (பேச்சு) 19:32, 14 ஆகத்து 2014 (UTC)

விக்கிப்பீடியாவின் பயன்பாடுகள்...[தொகு]

என் குழந்தைகளின் (பள்ளிக்கூட) வீட்டுப் பாடங்களுக்கு (assignments), விக்கிப்பீடியா மூலமாக உதவும்போது... ஒரு இறுதிப் பயனர் (end user) என்ற நிலையில் விக்கியின் முக்கியத்துவத்தை நன்கு உணர முடிகிறது. ஒவ்வொருவரும் எழுதும் தகவல்கள், மற்றவர்க்கு எப்படி உதவுகிறது என்பதனை என் குழந்தைகளுக்கு நான் இந்தத் தருணங்களில் சொல்லிக் காட்டுகிறேன். எதிர்காலத்தில் அவர்களும் விக்கியில் எழுத வேண்டும் என்பது என் ஆசை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:32, 18 ஆகத்து 2014 (UTC)

👍 விருப்பம் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கட்டுரைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவை தொடர்பான கோரிக்கைகளையும் முன்வையுங்கள். மேம்படுத்தி உதவுங்கள். :) குட்டி செல்வசிவகுருக்களுக்கு வரவேற்பு! ;) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 18:42, 18 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம் நல்லதொரு கவனிப்பு. குழந்தைகள் எழுதும் அளவுக்கு வளர்ந்தபின் நம் பாராட்டுக்குரிய தோழர்கள் பள்ளிமாணவ விக்கிப்பீடியர்கள் போல அவர்களையும் பங்களிக்க ஊக்குவியுங்கள். (இன்று முகநூலில் நிகழ்நிலையை இற்றைப்படுத்தும் ஆயிரத்தில் ஒரு தமிழ்ப்பிள்ளை விக்கியில் கட்டுரைகளை இற்றைப்படுத்தினால் நாம் எங்கோ போய்க்கொண்டிருப்போம் ;) ) - தமிழ்த்தம்பி (பேச்சு) 19:15, 18 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம்//இன்று முகநூலில் நிகழ்நிலையை இற்றைப்படுத்தும் ஆயிரத்தில் ஒரு தமிழ்ப்பிள்ளை விக்கியில் கட்டுரைகளை இற்றைப்படுத்தினால் நாம் எங்கோ போய்க்கொண்டிருப்போம்//--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:40, 19 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம் உங்கள் குழந்தைகள் மட்டுமா நானும் கூட assignments செய்ய விக்கிப்பீடியாவை நன்றாக பயன்படுத்துகின்றேன், இப்படி எத்தனை பேர் உள்ளார்களோ!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:56, 19 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம் நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் விரைவில் பயன்தரும் கீரையைப்போலவும், சிலநாள்கழித்துத்தரும் வாழையைப்போலவும், சில ஆண்டுகள்கழித்துக்குலைதரும் தென்னை போலவும் தலைமுறைகள் தாண்டியும் பயன்தரும் பனையையும் ஆலையும் போலவும் பலவகைகளில் பயன்தரும். -- சுந்தர் \பேச்சு 13:39, 19 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம் மாணவர்களும், மற்றவர்களும் பயன்படுத்துகிறார்கள் என்று அறிவது விக்கிப்பீடியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஒரு விடயம். அதேவேளை, இது பயனுள்ளனவும், சரியானவையுமான தகவல்களை வழங்குவதில் நமக்குள்ள பொறுப்பையும் ஞாபகப்படுத்துவதாக உள்ளது. --- மயூரநாதன் (பேச்சு) 17:23, 19 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம் //நானும் கூட assignments செய்ய விக்கிப்பீடியாவை நன்றாக பயன்படுத்துகின்றேன்// எங்கட பள்ளிக்கூடத்தில விடமாட்டினம் :( --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:39, 20 ஆகத்து 2014 (UTC)

Letter petitioning WMF to reverse recent decisions[தொகு]

The Wikimedia Foundation recently created a new feature, "superprotect" status. The purpose is to prevent pages from being edited by elected administrators -- but permitting WMF staff to edit them. It has been put to use in only one case: to protect the deployment of the Media Viewer software on German Wikipedia, in defiance of a clear decision of that community to disable the feature by default, unless users decide to enable it.

If you oppose these actions, please add your name to this letter. If you know non-Wikimedians who support our vision for the free sharing of knowledge, and would like to add their names to the list, please ask them to sign an identical version of the letter on change.org.

-- JurgenNL (talk) 17:35, 21 ஆகத்து 2014 (UTC)

I'm yet to read the original proposal, JurgenNL. But, in principle, this sounds like a bad move. Unless there's some compelling reason that I haven't thought about exists. -- சுந்தர் \பேச்சு 04:00, 23 ஆகத்து 2014 (UTC)

Process ideas for software development[தொகு]

’’My apologies for writing in English.’’

Hello,

I am notifying you that a brainstorming session has been started on Meta to help the Wikimedia Foundation increase and better affect community participation in software development across all wiki projects. Basically, how can you be more involved in helping to create features on Wikimedia projects? We are inviting all interested users to voice their ideas on how communities can be more involved and informed in the product development process at the Wikimedia Foundation. It would be very appreciated if you could translate this message to help inform your local communities as well.

I and the rest of my team welcome you to participate. We hope to see you on Meta.

Kind regards, -- Rdicerb (WMF) talk 22:15, 21 ஆகத்து 2014 (UTC)

--This message was sent using MassMessage. Was there an error? Report it!

Thank you for the intimation, Rdicerb. We'll take note and respond. -- சுந்தர் \பேச்சு 03:57, 23 ஆகத்து 2014 (UTC)

இந்தியாவில் விக்கிமீடியா திட்டங்களை வளர்ப்பதற்கான அணுகுமுறை குறித்த கலந்துரையாடல் கூட்டம்[தொகு]

இந்தியாவில் விக்கிமீடியா திட்டங்களை வளர்ப்பதற்கான அணுகுமுறை குறித்த கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை விக்கிமீடியா அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு மொழி சார் விக்கிமீடியா சமூகமும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்குத் தங்கள் சார்பாளர்களை அனுப்பி வைக்கலாம். இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் விக்கிமீடியா இயக்கத்தினைக் கவனித்து தொடர்ந்து செயற்பட்டு வருபவர்களாக இருப்பது நல்லது. தமிழ் விக்கிப்பீடியா சார்பாக சுந்தர், சிரீக்காந்த், சோடாபாட்டில் ஆகியோரைப் பரிந்துரைப்பதுடன் நானும் கலந்து கொள்ள விரும்புகிறேன். சுந்தர், இந்திய விக்கிமீடியா கிளையின் நிறுவன உறுப்பினரும் முன்னாள் செயற்குழு உறுப்பினரும் ஆவார். சோடாபாட்டில் முன்னாள் செயற்குழு உறுப்பினர். சிரீக்காந்த் இந்திய விக்கிமீடியா கிளையின் (முன்னாள்?) உறுப்பினர். மற்ற பல இந்திய விக்கிமீடியா சமூகங்களில் நல்ல அறிமுகம் உடையவர். நான் கடந்த ஓராண்டாக இந்திய விக்கிமீடியா கிளை, CIS-A2K தொடர்பான உரையாடல்களில் முனைப்பான பங்கெடுத்து வருகிறேன். ஒரு மொழி சார் சமூகத்தில் இருந்து குறைந்தது ஒருவர் என்று கூறி உள்ளார்கள். மேற்கொண்டு எத்தனை பேர் என்பது அவர்கள் தெரிவாக இருக்கலாம். எனவே, ஒன்றுக்கு நான்கு பெயர்களாக நாம் பரிந்துரைப்பது நன்று. இது தொடர்பாக எவருக்கேனும் மாற்றுக் கருத்து இருக்கும் பட்சத்தில் இன்னும் 3 நாட்களுக்குள் தெரிவிக்கவும். அதன் பிறகு, இதனைத் தமிழ் விக்கிப்பீடியாவின் அலுவல் முறை பரிந்துரையாக இங்கு தெரிவிக்க வேண்டும்.--இரவி (பேச்சு) 07:03, 25 ஆகத்து 2014 (UTC)

👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 08:05, 25 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:08, 25 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம். சோடாபாட்டில் பெயர் ஏற்கனவே இங்கு சேர்க்கப்பட்டுள்ளது இரவி.--ஆர்.பாலா (பேச்சு) 08:17, 25 ஆகத்து 2014 (UTC)
ஆம், சோடாபாட்டில் பெயர் ஏற்கனவே அங்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழ் விக்கிமீடியா சமூகம் சார்பாகவும் பரிந்துரைக்கும் போது, அப்பரிந்துரைக்கு இன்னும் வலு கூடும்.--இரவி (பேச்சு) 08:19, 25 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 08:19, 25 ஆகத்து 2014 (UTC)

இக்கூட்டத்துக்கான நாள், கலந்து கொள்வோர் முடிவான பிறகு, தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவரும் இங்கு கலந்துரையாடி அதன் இணக்க முடிவை நமது சார்பாளர்கள் மூலம் முன்வைக்குமாறும் கேட்டுக் கொள்ளலாம். இதன் மூலம் யார் கலந்து கொண்டாலும், நமது சமூகத்தின் முறையான கருத்தைப் பதிவு செய்யவும் முடியும்.--இரவி (பேச்சு) 08:22, 25 ஆகத்து 2014 (UTC)

👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:08, 25 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம்-- மயூரநாதன் (பேச்சு) 15:11, 25 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம்--Commons sibi (பேச்சு) 15:30, 25 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:22, 28 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 09:20, 30 ஆகத்து 2014 (UTC)

இற்றை: நாம் பரிந்துரைத்த சார்பாளர்கள் அனைவரையும் அழைத்துள்ளார்கள். தமிழ் விக்கிமீடியர்களின் அலுவல்முறை பரிந்துரைகளைத் தருவது தொடர்பான உரையாடலுக்கு இங்கு வாருங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 21:40, 18 செப்டம்பர் 2014 (UTC)

நாம் சார்பாளர் பரிந்துரைகளை முன்வைத்த பிறகு சிரீக்காந்த் தனிப்பட்ட காரணங்களுக்காக வர முடியாது என்று தெரிவித்துள்ளார். சுந்தரும் வேறு பயணங்கள் குறுக்கிடலாம் என்பதால் கலந்து கொள்வது உறுதி இல்லை என்று தெரிவித்திருக்கிறார். எனவே, இருவருக்கும் மாற்றாக மேலும் இரு பயனர்களைப் பரிந்துரைக்கிறேன்.

 • பயனர்:செல்வா - ஒரு பேராசிரியராக, பல்வேறு நிறுவனங்களில் பங்கு கொண்டு அனுபவம் மூலம் திறம்பட கருத்துகளை முன் வைக்க முடியும்.
 • பயனர்:Commons sibi - தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறகட்டளையின் செயலர் என்ற முறையில் இந்தியாவில், தமிழகத்தில் அமைப்பு அடிப்படையிலான செயற்படுகள், வேர்மட்டச் செயற்பாடுகள் பற்றிய புரிதல் உள்ளவர். விக்கிமீடியாவில் பெண்கள் பங்களிப்புக்காக தொடர் கல்லூரி பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார். விக்கிமீடியா இந்தியக் கிளையின் உறுப்பினர்.

இன்னும் 12 மணி நேரங்களுக்குள் புதிய சார்பாளர்களின் விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்பதால் இப்பரிந்துரைகளுக்கு விருப்பம் தெரிவித்து உங்கள் ஆதரவைத் தர வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 14:05, 19 செப்டம்பர் 2014 (UTC)

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 14:24, 19 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--சோடாபாட்டில்உரையாடுக 14:26, 19 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:39, 19 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 14:41, 19 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 15:40, 19 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 17:21, 19 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--சுந்தர் \பேச்சு 05:36, 20 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:41, 20 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--இரா.பாலா (பேச்சு) 08:55, 20 செப்டம்பர் 2014 (UTC)

ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. செல்வாவையும் சிபியையும் முறைப்படி பரிந்துரைத்துள்ளோம். --இரவி (பேச்சு) 09:24, 20 செப்டம்பர் 2014 (UTC)

கிறித்துப்பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புத்திட்டம்[தொகு]

சென்ற ஆண்டு கிறித்துப்பல்கலைக்கழகத்தில் தமிழைப்பாடமாகக் கொண்ட மாணவ மாணவியருக்கு விக்கிப்பீடியாவில் தொகுக்கும் பணியைப் பாடத்திட்டத்தில் சேர்த்திருந்தனர். இதற்காக ஒருநாள் நான் பயிற்சியளித்தேன். வில்லுப்பாட்டில் சிவனியம் என்ற நல்ல கட்டுரையொன்றும் வேறு சில கட்டுரைகளும் மாணவர்கள் வழியாகக் கிடைத்தன. ஆனால் அதிலிருந்து தொடர்ச்சியான பங்களிப்பாளர்கள் யாரும் வந்ததாகத் தெரியவில்லை. இம்முறை மீண்டும் பயிற்சிக்கு அழைத்தார்கள். இருந்தாலும் காலம் குறைவாக இருந்ததாலும் எனக்கு விடுப்பு கிடைக்காததாலும் அவர்களது காலக்கெடு முடியவிருந்ததாலும் தொலைபேசி வழியாக அவர்களது ஆசிரியைக்கும் போன ஆண்டு சிறப்பாகப் பங்களித்த மாணவிக்கும் பயிற்சியளித்தேன். சென்ற ஆண்டின் பயிற்சி வகுப்பின் ஒலிக்கோப்பும் அவர்களிடம் இருந்ததாகச் சொன்னார்கள். மேலும் உதவிக்கு அந்தப்பல்கலையில் முகாமிட்டிருக்கும் பிறவிக்கி ஆர்வலர்களையும் CIS-A2K அலுவலர்களையும் அணுகுமாறு கேட்டிருந்தேன். அவர்களில் இரகீம் என்னை அழைத்துப்பேசினார். மாணவர்கள் குறுகியகாலத்தில் விக்கி கட்டுரை எழுதும் அளவுக்கு தேர்ச்சிபெறுவது சிரமம். எனவே அவர்களுக்கு விக்கிமூலத்தில் ஒரு பக்க அளவுக்குப் பதிவேற்றும் பணியைத்தரலாம் என்றிருக்கிறோம் என்றார். இதுதொடர்பாக நாளை என்னைச் சந்திக்க விரும்புகிறார். அண்மையில் தமிழ்வளர்ச்சிக்கழகத்திடம் கொடையாகப்பெற்ற கலைக்களஞ்சியத்தொகுதிகளில் ஒரு சிறு பகுதியைப் பதிவேற்றும்படி கூறலாமா? -- சுந்தர் \பேச்சு 12:56, 25 ஆகத்து 2014 (UTC)

👍 விருப்பம்--Commons sibi (பேச்சு) 14:25, 25 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:30, 25 ஆகத்து 2014 (UTC)
சுந்தர், CIS-A2Kன் பல்வேறு விக்கிமீடியா செயற்பாடுகள் குறித்து எனக்குக் கடுமையான விமரிசனம் உள்ளது. இந்தச் செயற்பாட்டைப் பொருத்தவரை, கல்லூரி மாணவர்களைத் தட்டச்சுப் பணியில் ஈடுபடுத்துவது ஆற்றல் விரயம். ஏதாவது ஒன்றைச் செய்து கணக்கு காட்டுவதற்கு மட்டும் தான் இது உதவும். தவிர, நேரடியாக விக்கியில் முறையாக உரையாடி, சமூகத்தின் ஒப்புதல் பெற்று திட்டங்களை வகுக்காமல் ஒரு சிலர் வழியாக இது போன்ற கருத்து, உதவிகளைப் பெற்றுச் செயல்பட்டுப் பிறகு சமூகத்தின் ஒப்புதல் பெற்று தான் செய்தோம் என்கிறார்கள். எனவே, என்ன செய்வது என்றாலும் நேரடியாக அந்தந்த திட்டங்களில் அவர்களே வந்து நேரடியாக உரையாடிச் செய்யுமாறு கேட்டுக்கொள்ள வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 17:10, 25 ஆகத்து 2014 (UTC)
எனக்கும் இதுகுறித்துச்சில மாற்றுக்கருத்துகள் உண்டு, இரவி. நான் இங்கு பதிவிடுமுன்னர் இரகீம் பேசியபோது என்னிடம் தகவலைமட்டும் பெற்றுக்கொண்டு விக்கிமூலத்தில் ஆலமரத்தடியில் செய்தி போடுகிறேன் என்றுதான் சொன்னார். போட்டாரா என நான் இன்னும் பார்க்கவில்லை. மற்றபடி தொடர்ந்து தட்டச்சுப்பணியில் ஈடுபடுத்துவது ஆற்றல்விரயமே என்றாலும் இதை அவர்களுக்கு முதற்கட்ட பயிற்சியாகத்தான் காண்கின்றனர். அதாவது தமிழ் தட்டச்சையும் மீடியாவிக்கி இடைமுகத்தையும் பழகிக்கொள்ள வாய்ப்பாகப் பார்க்கிறார்கள். ஒரு மாணவர் ஒரு பக்கம் மட்டுமே பதிவேற்றுவார். அடுத்த அரையாண்டில் விக்கிப்பீடியா நடைமுறையைப் பழக்கத் திட்டம் போலிருக்கிறது. சென்ற ஆண்டு அறிமுக வகுப்புக்குப்பின்னரும் பல மாணவர்களுக்கு விக்கிப்பீடியாவில் எத்தகைய கட்டுரைகளை எழுதவேண்டும், எப்படி உள்ளிட வேண்டும் என்பது புலப்படவே இல்லை என்பது எனது வருத்தம், ஆர்வமின்மைதான் காரணமா தெரியவில்லை. ஒருவேளை தமிழக கல்லூரியில் இதுபோல நடத்தினால் சரியாக இருக்குமோ? -- சுந்தர் \பேச்சு 03:40, 26 ஆகத்து 2014 (UTC)
சுந்தர், மலையாள விக்கிமூலம் வியத்தகு அளவில் வளர்ந்து வருகிறது. அவர்கள் IT@School திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களை இதில் ஈடுபடுத்தி வருகிறார்கள். அண்மையில், அவர்கள் நடத்திய போட்டிக்கும் மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இதே போன்று பல்வேறு சமூகங்களும் போட்டிகளை நடத்துகின்றன. போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு அணுகுமுறைகள் மூலம் தமிழ் விக்கிமூலத்தை எப்படி வளர்ப்பது என்று நாமும் சிந்திக்கத் தொடங்க வேண்டும். நிற்க ! CIS-A2K இடம் விக்கி நெறிமுறைகளைப் பின்பற்றி விக்கியில் உரையாடுங்கள் என்று பல இடங்களில் கோரிக்கை விடுத்தாலும், விக்கியில் யாரும் உடனடியாக பேசி முடிவெடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று ஒரு குறையாகச் சொல்கிறார்கள். ஒரு வேளை, வேறு சில மொழிச் சமூகங்களுக்கு இது பொருந்தலாம். ஆனால், தமிழில் அந்த நிலை இல்லை. அதுவும், இரகீம் போன்ற விக்கிப்பீடியா முறைகள் அறிந்தவர்கள் இதனைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். உங்களிடம் இது குறித்து கேட்டது போலவே இன்னும் ஒரு விக்கிப்பீடியரிடமும் கேட்டதாக அறிகிறேன். அப்புறம், உங்களைப் போன்றவர்களை Point of contacts என்று அழைக்கிறார்கள் :) விக்கிக்கான point of contact என்பது ஆலமரத்தடியாக அல்லவா இருக்க வேண்டும்? :) இன்னும் தமிழ் விக்கிமூலம் தளத்தில் அவர்கள் உரையாடத் தொடங்க வில்லை. அவர்கள் அவ்வாறு உரையாட முன்வந்தால், அவர்களின் அணுகுமுறை பற்றி உரையாடலாம். மற்றபடி, மாணவர்களுக்கு ஏன் ஆர்வமில்லை என்பது தனியொரு பெரும் உரையாடலாக போகும் :)--இரவி (பேச்சு) 04:29, 26 ஆகத்து 2014 (UTC)
ஏற்கனவே சந்திக்க ஒப்புக்கொண்டதால் இன்று சந்திக்கிறேன். சந்திக்கும்போது இந்த point of contact பற்றிய கருத்தை இன்று வலியுறுத்துகிறேன், இரவி. மற்றபடி ஆலமரத்தடியில் பதியும்போது தொடர்பாடல்குறித்து மேலும் வலியுறுத்துவோம். விக்கிமூலத்தின் வளர்ச்சித்திட்டங்களைப்பற்றி பிறிதோர் இழையில் உரையாடுவோம். தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் கொடையும் அதில் முக்கிய பங்குவகிக்க முடியும். -- சுந்தர் \பேச்சு 05:22, 26 ஆகத்து 2014 (UTC)
சரி, சுந்தர். நன்றி.--இரவி (பேச்சு) 09:54, 26 ஆகத்து 2014 (UTC)
உங்கள் விமர்சனத்தை இப்போதுதான் பார்த்தேன் இரவி. மிகவும் முக்கிய கேள்விகளை எழுப்பியிருக்கிறீர்கள். விக்கிமீடியா அறக்கட்டளையின் மொத்த அணுகுமுறையிலேயும்கூட எனக்குப்பல விமர்சனங்கள் உண்டு. நடுவில் என்னால் இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அளவுக்கு நேரம் வாய்க்காததால் ஒதுங்கிவிட்டேன். நிற்க.
சற்றுமுன் இரகீமிடம் பேசினேன். நேற்றிரவு Christ University UG students typing at Tamil Wikisource, A CIS-A2K project என்ற இழையைத்தொடங்கியிருப்பதாகவும் கட்டாயம் சமூகத்தின் ஒத்துழைப்புடனேதான் இதை அணுகுவேன் என்றும் உறுதியளித்தார். விக்கிக்கு வெளியே இப்போது உரையாடப்போவதையும் அங்கே பதிவதாகவும் தெரிவித்தார். அந்த அடிப்படையில் இம்முறை உரையாடலைத் தொடர்வோம். -- சுந்தர் \பேச்சு 11:45, 26 ஆகத்து 2014 (UTC)
நேற்று மாலை இரகீமைச் சந்தித்தேன். பின்வரும் தகவல்கள் தெரியவந்தன. கன்னடத்துக்கும், சமக்கிருதத்துக்கும் அங்கு முகாமிட்டிருந்த அலுவலர்கள் வழியாக அந்தந்த மொழித்துறைகள் இத்திட்டத்தைச் செயல்படுத்துகிறார்கள். தமிழ்த்துறைக்கு சரியான ஆள் கிடைக்காததாலும் அவர்களுக்கு இதை பாடத்திட்டத்தில் எப்படி வடிவமைப்பது என்பது தெரியாமலும் தள்ளிப்போட்டிருக்கிறார்கள். கடைசி நேரத்தில் என்னை அணுகி, என்னால் நேரில் செல்லமுடியாத நிலையில் அப்போதுதான் விசயவாடாவில் இதைப்போன்றதொரு திட்டத்தைச் செயல்படுத்தியிருந்த இரகீமைக்கேட்டிருக்கிறார்கள். அவருக்குத் தமிழ் சிறிதுதெரியும் என்பதால் அதைக்கொண்டு நமது சில உதவிப்பக்கங்களை பி.டி.எஃப். வடிவில் அவர்களுக்குத் தந்து பாடத்துக்கென ஒரு உள்வலைதளத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். முதற்கட்டமாக வெறும் தட்டச்சுப்பயிற்சியும் சிறு தேர்வும் வைக்கவிருக்கிறார்கள். தட்டச்சுப்பயிற்சிக்கு முல்லைப்பாட்டைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஒரு முப்பது சொற்களை எழுதித்தருமாறு கேட்டார். அதை வைத்து சில தட்டச்சு கேள்விகள் இருக்கும் போலிருக்கிறது. அடுத்தடுத்த அரையாண்டுகளில் படிப்படியாக அவர்களை விக்கியில் பயனர்வெளியில் முதலிலும், பின்னர் கட்டுரைவெளியிலும் பங்கேற்கும் வகையிலும் பயிற்சிளிக்கவுள்ளனர். அவருடன் பேசியதில் தனிப்பட்ட அளவில் அவருக்கு அக்கறை இருப்பதாகத்தெரிகிறது. அடுத்து ஓசூரிலும் இதுபோலத்தொடங்க எண்ணுகிறார். நிற்க.
இரவி, மேலே விமர்சனத்தில் கேட்டுள்ள கேள்விகள் முக்கியமானவை. தொடர்ந்தும் சரியான களங்களில் எழுப்பவேண்டும். ஆனால், ஓர் ஒப்பந்தப்புள்ளியில் குளறுபடியிருந்து சாலை அமைத்தால் அதைப்பற்றி கேள்வி எழுப்பினாலும் அந்தச்சாலையைப் பயன்படுத்தாமல் விட மாட்டோமே, அதுபோல இதுபோன்ற திட்டங்களைப் பயன்படுத்தவும் செய்யவேண்டும் என நான் கருதுகிறேன். திட்டத்தின் நோக்கமும் பயனும் சரியா எனப் பார்ப்போம். இவ்வளவு வளம் செலவழித்து இவ்வளவு குறைவான பயனா என்ற கேள்வியை வேறிடத்தில் முன்வைக்கலாம். அதைத்தவிர, நமது இயல்பான வளர்ச்சியையும் அலுவல் கணக்கில் காட்டிவிடாமல் இருக்க தகுந்த அளவைகளை ஏற்படுத்துவோம். இது என் தனிக்கருத்து மட்டுமே. மற்றபடி ஏற்கனவே இரவி விக்கிமூல ஆலமரத்தடியில் உரையாடலைத் தொடர்ந்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாடலாம். -- சுந்தர் \பேச்சு 10:22, 27 ஆகத்து 2014 (UTC)
சுந்தர், இது தனியொரு பாடத்திட்டமா அல்லது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியா என்று தெளிவில்லை. இது போன்ற இன்னும் பல விவரங்களை விக்கிமூலத்தில் கேட்க வேண்டும். கிறித்துப் பல்கலைக்கழகத்திடம் இப்படி ஒரு பாடத்திட்டத்தை முன்வைத்ததே CIS தான். இரகீம் ஒரு CIS ஊழியர் தான். நீங்கள் சொன்னதில் இரகீம் கிறித்துப் பல்கலைக்கு இயன்ற அளவு உதவுவது போல் ஒரு தோற்றம் வருவதால் இதனைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. CIS திட்டங்களின் மீதான ஒட்டு மொத்த விமரிசனங்களைத் தனியாகப் பார்க்கலாம். ஆனால், பூனாவில் விக்கிமீடியா கல்வித் திட்டத்தில் ஏற்பட்ட தவறுகளை ஆய்ந்து ஒரு பரிந்துரையை அளித்துள்ளார்கள். அதன் முக்கிய பரிந்துரைகளைக் கூட இப்போதும் இவர்கள் பின்பற்றவில்லை. முக்கிய இரு பரிந்துரைகள்: 1. மாணவர்கள் தன்னார்வமாகவே இத்திட்டத்தில் ஈடுபட வேண்டும். 2. கல்வித் திட்டம் சமூகத்தின் துணையுடன் உருவாக்கப்பட வேண்டும். இந்த இரண்டு விசயங்களையும் ஒழுங்காகச் செய்தால், மாணவர்களுக்குத் தட்டச்சு பழகவில்லை, தொடர் ஆர்வம் இல்லை என்பன ஒரு பிரச்சினையாகவே இருக்காது. மற்ற இந்திய விக்கிச் சமூகங்கள் தங்களுடன் முனைப்பாக ஒருங்கிணைந்து செயல்படவில்லை அல்லது விக்கிக்கு வெளியே கருத்து சொன்னதாகச் சொல்லி திட்டங்களை முன்னெடுக்கிறார்கள். எனவே, குறைந்த பட்சம் தமிழ் விக்கிச்சமூகத்துடனாவது முறையாக உரையாடி முன்னகர்வது சரியாக இருக்கும். கூகுள் திட்டத்துடன் நாம் ஒருங்கிணைந்து செயற்பட்டு மற்ற விக்கிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது போலவே இதனையும் அணுகுகிறேன். ஒட்டு மொத்தமாக CIS திட்டங்களே வேண்டாம் என்று மறுப்பது என் நோக்கம் இல்லை. தொடர்ந்து விக்கிமூலத்தில் உரையாடுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 11:14, 27 ஆகத்து 2014 (UTC)
முக்கிய கேள்விகள்தாம் இரவி . அந்த இழையில் நான் மேலும் எதுவும் கூறுவதற்கிருந்தால் பதிகிறேன். -- சுந்தர் \பேச்சு 11:37, 27 ஆகத்து 2014 (UTC)
நன்றி, சுந்தர். விக்கிமூலத்தில் தட்டச்சுப் பயிற்சி முடித்த பிறகு தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளும் இடுவார்கள் என்பதால் இது இங்கும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விசயம் தான். தகுந்த இடத்தில், நேரத்தில் உரையாடுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 11:42, 27 ஆகத்து 2014 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பற்றி விக்கிமீடியா அறக்கட்டளை அலுவலரின் குறிப்பு[தொகு]

I very much want the communities to "decide for themselves"! I look forward to the fruits of such community decisions in the form of, for example grant proposals that we could directly support, or in the form of direct communication with WMF for non-financial support as well (evaluation, communication/media, technical tools, etc.). (Indeed, I'm hope we can see some such expressions of community will in the relatively-simple question of nominating delegates for this meeting, right on this page...) Some communities (one notable example is the Tamil community) are remarkably organized and self-sufficient, and have found (I think) a comfortable modus vivendi with the rest of the movement, where they run their own programs and activities, reject "interventions", and occasionally seek and receive WMF grants to support those activities. I think that's fantastic, and any community that is interested in this model and able to adopt it would be absolutely welcome to do so - https://meta.wikimedia.org/wiki/Talk:India_Community_Consultation_2014#Suggestions பக்கத்தில் இருந்து...--இரவி (பேச்சு) 17:57, 28 ஆகத்து 2014 (UTC)

👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:51, 29 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 02:23, 30 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம்--இரா.பாலா (பேச்சு) 02:56, 30 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 09:22, 30 ஆகத்து 2014 (UTC)
நல்லது. -- சுந்தர் \பேச்சு 12:21, 30 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம்--Commons sibi (பேச்சு) 09:22, 3 செப்டம்பர் 2014 (UTC)

Grants to improve your project[தொகு]

Apologies for English. Please help translate this message.

Greetings! The Individual Engagement Grants program is accepting proposals for funding new experiments from September 1st to 30th. Your idea could improve Wikimedia projects with a new tool or gadget, a better process to support community-building on your wiki, research on an important issue, or something else we haven't thought of yet. Whether you need $200 or $30,000 USD, Individual Engagement Grants can cover your own project development time in addition to hiring others to help you.

Today's articles for improvement project[தொகு]

On the English Wikipedia, we started a project called TAFI. Each week we identify underdeveloped articles that require improvement. Our goal is to use widespread collaborative editing to improve articles to Good article, Featured article or Featured list quality over a short time frame.

This is all about improving important articles in a collaborative manner, and also inspiring readers of Wikipedia to also try editing. We think it is a very important and interesting idea that will make Wikipedia a better place to work. It has been very successful so far, and the concept has spread to the Hindi Wikipedia where it has been well received.

We wanted to know if your Wikipedia was interested in setting up its own version of TAFI. Please contact us on our talk page or here if you are interested.--Coin945 (talk) 17:48, 2 September 2014 (UTC)

மேலுள்ளது பேச்சு முதற்பக்கத்தில் இருந்து வெட்டி ஒட்டியது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:16, 2 செப்டம்பர் 2014 (UTC)

நன்றி தென்காசியாரே! இத்திட்டம் நமக்கும் பயனுள்ளதாகவே இருக்கும். பிற பயனர்களின் கருத்துகளை அறிந்தபிறகு அவர்களுடைய உதவி தேவைப்பட்டால் தொடர்புகொள்ளலாம். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:27, 3 செப்டம்பர் 2014 (UTC)
நமக்கு இருக்கும் பங்களிப்பாளர் வளத்துக்கு இவ்வார கூட்டு முயற்சி தான் ஒத்து வரும். அதுவும் கடந்தமுறை, போதிய பங்களிப்புகள் இல்லை என்ற காரணத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால் மீண்டும் முயன்று பார்க்கலாம்.--இரவி (பேச்சு) 19:07, 8 செப்டம்பர் 2014 (UTC)

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள், தமிழ் விக்கிப்பீடியா மூலமாக உலகப் பயன்பாட்டுக்கு வரவிருப்பது குறித்து தி இந்து நாளிதழில் வெளியான செய்திக் கட்டுரை[தொகு]

படிக்க: Tamil Wikipedia to publish two seminal works --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:22, 3 செப்டம்பர் 2014 (UTC)

👍 விருப்பம் -- சுந்தர் \பேச்சு 06:05, 3 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம் --இரா.பாலா (பேச்சு) 11:11, 3 செப்டம்பர் 2014 (UTC)

தமிழ்நாட்டில் வந்த முதல் கலைகளஞ்சியம் அபிதான சிந்தாமணி. 1910ல் இது வந்தாலும் இலக்கியத்துக்கு மட்டுமே இது கலைக்களஞ்சியம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:49, 3 செப்டம்பர் 2014 (UTC)

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்கழகத்தின் கலைக்கழஞ்சியம் போலவே இலங்கையில் இந்து சமய கலாசார அமைச்சு வெளியிட்ட இந்துக் கலைக்கழகத்தையும் தமிழ் விக்கிப்பீடியா இத்திட்டத்தில் உள்ளடக்க வேண்டும் என்று திரு. பத்மநாப ஐயர் அவர்கள்'தி இந்து நாளிதழில் வெளியான செய்திக் கட்டுரை குறித்த தனது விமரிசனத்தில் கருத்திட்டார். இது குறித்து ஏதேனும் முயற்சி செய்து பார்க்கலாமா?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:20, 11 செப்டம்பர் 2014 (UTC)

விக்கி யோசனை[தொகு]

[இப்பக்கத்தினை] பார்க்கவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:58, 4 செப்டம்பர் 2014 (UTC)

👍 விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:36, 8 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:24, 8 செப்டம்பர் 2014 (UTC)

60 ways to help new editors[தொகு]

https://blog.wikimedia.org/2014/09/04/sixty-ways-to-help-new-editors/ - இவற்றில் நிறைய விசயங்களை ஏற்கனவே செய்து வருகிறோம் :) எஞ்சியவற்றைக் கவனிக்க வேண்டும்.--இரவி (பேச்சு) 20:12, 6 செப்டம்பர் 2014 (UTC)

👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:31, 8 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:35, 8 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:24, 8 செப்டம்பர் 2014 (UTC)
கடந்த ஒரு மாதத்தில் பதிவு செய்த புதுப்பயனர்கள் பட்டியளை எங்கே பெறலாம் ? --Commons sibi (பேச்சு) 16:06, 8 செப்டம்பர் 2014 (UTC)
புதிதாக பங்களிக்கும் பயனர்கள் பட்டியல். இதற்கான இணைப்பு அண்மைய மாற்றங்கள் பக்கத்திலும் இருக்கிறது.--இரவி (பேச்சு) 18:59, 8 செப்டம்பர் 2014 (UTC)
மிக்க நன்றி இரவி --Commons sibi (பேச்சு) 16:23, 9 செப்டம்பர் 2014 (UTC)

தன்னியக்க முதற்பக்க இற்றைப்படுத்தல்[தொகு]

தற்போது ஒரு மாதத்திற்கு மேல் முதற்பக்கக் கட்டுரை இற்றைப்படுத்தப்படாமல் உள்ளது. இவ்வாரம் தான் கனக்ஸ் இற்றைப்படுத்தினார். என்னுடைய விக்கிநுட்ப அறிவை அடிப்படையாகக் கொண்டு முதற்பக்கக் கட்டுரையை தன்னியக்கமாக இற்றைப்படுத்தும் வார்ப்புருவை உருவாக்கியுள்ளேன். (இது வேறு விக்கிப்பீடியாக்களிலோ அல்லது ஏனைய விக்கித்திட்டங்களிலோ இருந்து திருடப்பட்டதல்ல பிரதியெடுக்கப்பட்டதல்ல (not copied) எனது சொந்த ஆக்கமே) இதனால் முதற்பக்கத்தில் இடப்படுவதற்கான கட்டுரை உருவாக்கப்பட்ட பின்னரும் நிர்வாக்கிகள் இற்றைப்படுத்தாததால் கட்டுரை இற்றைப்படுத்தப்படாத சந்தர்ப்பம் ஏற்படாது. இத்தேவைக்க்காக முன்னரே Module:Main page உருவாக்கப்பட்டதை நான் அறிவேன். ஆனால் அந்த Module இல் சில அறியப்படாத குறைபாடுகள் உள்ளன.

Module:Main page இன் சில குறைபாடுகள்[தொகு]

 1. இந்த Module இன்றைய தினத்திலிருந்து ஒவ்வொரு நாளாகக் கழித்து எந்த நாளுக்குரிய முதற்பக்கக் கட்டுரை உள்ளதோ அதனை முதற்பக்கத்தில் இட்டுவிடும். இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் உதாரணத்திற்கு 7.9.2014 ஒரு ஞாயிற்றுக் கிழமை. அதற்குப் பதிலாக விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 9, 2014 என்று உருவக்கினாலும் முதற்பக்கத்தில் அதை எடுத்து இட்டுவிடும். இது Vandalism இற்கும் ஏதுவாகலாம்!

தீர்வு[தொகு]

இவற்றைத் தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட இவ்வார்ப்புருவானது Module:Main page ஐப் போல் ஒவ்வொரு நாளாகத் தேடாமல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாகத் தேடி உள்ள கட்டுரையை எடுத்து திங்கட்கிழமை முதற்பக்கத்தில் இடும். இவ்வார்ப்புரு தற்போதைய வாரத்தைத் தவிர்த்து 35 வாரங்கள் முன்சென்று உரியபக்கத்தை இடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதுதான் Lua பற்றி தேடியறிந்து கற்றுவருகின்றேன். விரைவில் முடிந்தால் Module:Main page இல் உள்ள வழுவைச் சரிசெய்யலாம்.

வார்ப்புரு:Mainpage v2 இல் இவ் வார்ப்புருவை {{இவ்வார முதற்பக்கக் கட்டுரை}} என இணைக்குமாறு நிர்வாகிகளைக் கேட்டுக்கொள்கின்றேன். இது மீடியாவிக்கியின் மாதங்களை உபயோகிக்கின்றது. தன்னிச்சையாக தோன்றாதவிடத்து (மாதப்பெயர் செப்டம்பர் இற்குப் பதிலாக செப்தெம்பர் என்றிருந்தால்) {{இவ்வார முதற்பக்கக் கட்டுரை|செப்தெம்பர் 7, 2014}} என மாற்றுவதன் மூலம் அத்திகதிக்குரிய விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்தெம்பர் 7, 2014 ஐ முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாம்.

தற்போது மு.ப.கட்டுரை இற்றைப்படுத்தல் பொறுப்பில் நான் உள்ளதால் தவறுதலாக பிழையான உள்ளடக்கம் முதற்பக்கத்திற்குச் செல்லாமல் பார்த்துக்கொள்வேன். இதனைப் போல உ.தெ போன்ற பிற முதற்பக்க இற்றைப்படுத்தல்களுக்கும் இதைப் போன்ற வார்ப்புரு தேவையெனில் உருவாக்க முடியும்.

விரைவில் பல சிக்கலான வார்ப்புருக்களில் காணப்படும் பிழைகளைக் களைய எண்ணியுள்ளேன். ஏதேனும் அப்படிப்பட்ட சரி செய்யப்படவேண்டிய உயர் நுட்ப வார்ப்புருக்கள் இருந்தால் கூறுங்கள். இதனைப் பற்றிய பிற பயனர்களின் கருத்தையும் எதிர்பார்க்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:46, 8 செப்டம்பர் 2014 (UTC)

👍 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 20:59, 9 செப்டம்பர் 2014 (UTC)
ஸ்ரீகர்சன், உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். இப்பணியில் ஏற்கனவே ஈடுபட்டிருக்கும் சூரியா, மற்ற பயனர்களின் கருத்துகளைப் பொருத்து தொடர்ந்து செயற்படுங்கள். விக்கிப்பீடியா திட்டங்களின் உரை, நுட்பம் அனைத்தும் அனைவரும் பயன்படுத்தத்தக்க காப்புரிமையில் கிடைக்கிறது. இவற்றைப் பயன்படுத்தும் போது, எங்கிருந்து எடுத்தோம் என்று உரிய குறிப்பைத் தந்தால் போதுமானது. இது திருட்டோ இழிவாக காண வேண்டிய படியெடுத்தலோ அன்று. எனவே, தயங்காமல் ஏற்கனவே உள்ள நுட்பங்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.--இரவி (பேச்சு) 19:05, 8 செப்டம்பர் 2014 (UTC)
மன்னிக்கவும் இரவி தட்டச்சிடும்போது தவறுதலாகத் திருடப்பட்டதல்ல என இட்டுவிட்டேன். தற்போது மாற்றியுள்ளேன். //விக்கிப்பீடியா திட்டங்களின் உரை, நுட்பம் அனைத்தும் அனைவரும் பயன்படுத்தத்தக்க காப்புரிமையில் கிடைக்கிறது. இவற்றைப் பயன்படுத்தும் போது, எங்கிருந்து எடுத்தோம் என்று உரிய குறிப்பைத் தந்தால் போதுமானது. இது திருட்டோ இழிவாக காண வேண்டிய படியெடுத்தலோ அன்று. எனவே, தயங்காமல் ஏற்கனவே உள்ள நுட்பங்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.//👍 விருப்பம்
இவ்வார்ப்புருவை தற்போது முதற்பக்கத்தில் இணைத்து உதவ முடியுமா?!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:47, 9 செப்டம்பர் 2014 (UTC)
இரவி அவர்களே இவ்வார்ப்புருவை பிழைகள் இன்றி சரியாகவே வடிவமைத்திருந்தேன். இதனை பரிசோதிக்கும் விதமாக நேற்றைய நாளுக்குரிய முதற்பக்கக் கட்டுரையை தற்போது சிறிது நேரத்திற்கு முன்னரே உருவாக்கினேன்.(அதற்கு என் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கின்றேன்) இவ்வார மு.ப. கட்டுரை உருவாக்கப்படாததால் அது கடந்த வாரக் கட்டுரையை மாற்றாமல் அப்படியே வைத்திருந்தது. இது வார்ப்புரு சரியாக வேலை செய்கின்றது என்பதை உறுதிப்படுத்தியது. இவ்வார்ப்புருவை தற்போது வார்ப்புரு:Mainpage v2 இல் இணைக்கலாமா?
இணைக்காவிடில் நிர்வாகியொருவர் வார்ப்புரு:Mainpage v2 இல் விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 14, 2014விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 14, 2014 இற்குப் பதிலாக மாற்றி உதவுக.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:38, 15 செப்டம்பர் 2014 (UTC)

வேறு எவரும் மாற்றுக் கருத்து தெரிவிக்காததால் நீங்கள் கேட்டுக் கொண்ட வார்ப்புருவை முதற்பக்கத்தில் சேர்த்துள்ளேன். ஏதேனும் மாற்றம் தேவையெனில் தெரிவியுங்கள். மன்னிப்பெல்லாம் எதற்கு? துணிந்து செயற்படுங்கள் என்பதையே விக்கிப்பீடியா வலியுறுத்துகிறது.--இரவி (பேச்சு) 16:46, 15 செப்டம்பர் 2014 (UTC)

இரவி அவர்களே வார்ப்புரு:Mainpage v2 இல் இவ்வார்ப்புருவை இணைத்து தவியமைக்கு நன்றி. {{இவ்வார முதற்பக்கக் கட்டுரை}} என்பதை {{இவ்வார முதற்பக்கக் கட்டுரை}} <!-- தவறுதலாக இற்றைப்படுத்தப்படாதவிடத்து {{இவ்வார முதற்பக்கக் கட்டுரை}} என்பதை {{இவ்வார முதற்பக்கக் கட்டுரை|மாதம் திகதி, வருடம்}} (உதாரணம் - {{இவ்வார முதற்பக்கக் கட்டுரை|செப்டெம்பர் 14, 2014}} ) என மாற்றி குறித்த திகதிக்குரிய கட்டுரையை (உதாரணம் - விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 14, 2014 ) உள்ளிடுக --> என மாற்றி உதவுங்கள். தற்செயலாக 100 இல் 1 வீதம் எங்காவது பிழை இருந்தால் மு.ப. கட்டுரையை மாற்ற நிர்வாகிகளுக்கு இந்தப் பிற்குறிப்பு (Comment) உதவியாக இருக்கும் என நினைக்கின்றேன்.
//மன்னிப்பெல்லாம் எதற்கு? துணிந்து செயற்படுங்கள் என்பதையே விக்கிப்பீடியா வலியுறுத்துகிறது//👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:41, 15 செப்டம்பர் 2014 (UTC)
நீங்கள் சொன்னபடி குறிப்புதவியைச் சேர்த்துள்ளேன். --இரவி (பேச்சு) 18:19, 15 செப்டம்பர் 2014 (UTC)
இரவி அவர்களே நன்றி--ஸ்ரீகர்சன் (பேச்சு) 18:44, 15 செப்டம்பர் 2014 (UTC)

Grants:IdeaLab/Tamil Grammar checker[தொகு]

வணக்கம் . தங்கள் கவனத்திற்காக . இதை இங்கும் இட்டுள்ளேன் . --Commons sibi (பேச்சு) 16:29, 8 செப்டம்பர் 2014 (UTC)

நீச்சல் அண்ணனின் கருவியைக் கொண்டும், ஜாவாஸ்கிரிப்டு உதவியுடனும் எழுத்துப் பிழைகளையும், சொற்பிழைகளையும் திருத்தி வந்தோம். கிட்டபிலும் சில திட்டங்கள் இருக்கக் கூடும். அவற்றையும் ஒரு முறை பார்த்துவிடுங்கள்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:35, 8 செப்டம்பர் 2014 (UTC)
கண்டிப்பாக . லிப்ரே ஓபிஸ் தமிழில் Language Tool அருமையாக உள்ளது .நீச்சல் அண்ணே எங்கே இருக்கீங்க . --Commons sibi (பேச்சு) 16:48, 8 செப்டம்பர் 2014 (UTC)
இதைக் காண்க. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:06, 8 செப்டம்பர் 2014 (UTC)
இளஞ்செழியனும் கருவிகள் கொண்டு இவ்வாறான தொகுப்புகள் செய்கிறார். அனைவரின் கருவிகளையும் கூறுகளையும் உள்வாங்கி மேம்படுத்திச் செய்தால் நன்றாக இருக்கும்.--இரவி (பேச்சு) 19:02, 8 செப்டம்பர் 2014 (UTC)
நல்ல முன்னெடுப்பு. நானும் வழிமொழிந்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 05:39, 20 செப்டம்பர் 2014 (UTC)
கட்டற்ற திறவூற்றுச் சொற்பிழைத்திருத்தியும் இலக்கணப்பிழைத்திருத்தியும்: வளர்ச்சியும் சவால்களும் என்ற கட்டுரையின் எண்ணங்களையும் கொள்க--≈ உழவன் ( கூறுக ) 07:03, 28 செப்டம்பர் 2014 (UTC)

Change in renaming process[தொகு]

Part or all of this message may be in English. Please help translate if possible.

-- User:Keegan (WMF) (talk) 16:23, 9 செப்டம்பர் 2014 (UTC)

VisualEditor available on Internet Explorer 11[தொகு]

VisualEditor-logo.svg

VisualEditor will become available to users of Microsoft Internet Explorer 11 during today's regular software update. Support for some earlier versions of Internet Explorer is being worked on. If you encounter problems with VisualEditor on Internet Explorer, please contact the Editing team by leaving a message at VisualEditor/Feedback on Mediawiki.org. Happy editing, Elitre (WMF) 07:29, 11 செப்டம்பர் 2014 (UTC).

PS. Please subscribe to the global monthly newsletter to receive further news about VisualEditor.

சென்னையில் ஒரு சந்திப்பு[தொகு]

வணக்கம் . பேராசிரியர் செல்வா சென்னையில் உள்ளார் என அறிகிறேன் .சென்னையில் உள்ள தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒரு சந்திப்பு வைக்காலாமே :) நாம் சந்தித்து கிட்டத் தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது --Commons sibi (பேச்சு) 06:55, 12 செப்டம்பர் 2014 (UTC)

சந்திப்பில் உரையாடப்பட்ட விடயங்களை சுருக்கமாகப் பதிவு செய்வது பயன்தருமே!--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:58, 24 செப்டம்பர் 2014 (UTC)

ஆம். 11ம் ஆண்டு விழாவை எளிமையாக் கொண்டாடலாமே. ஒரு சிறு சந்திப்பு கூட போதும். --Tshrinivasan (பேச்சு) 07:57, 30 செப்டம்பர் 2014 (UTC)

சென்னையில் மொசில்லா நிகழ்வு[தொகு]

செப்டம்பர் 14 அன்று சென்னையில் மொசில்லா நிகழ்வு ஒன்று நடைபெறுகிறது. இதில் விக்கிமீடியா கடையும் உண்டு. ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் கலந்து கொள்ளலாம். --இரவி (பேச்சு) 07:38, 13 செப்டம்பர் 2014 (UTC)

Superprotect[தொகு]

விக்கிமீடியா நிறுவனம் எடுக்கவிருக்கும் சில முடிவுகள் (காண்க: Superprotect நமது விக்கியின் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதன்மூலம் நமது விக்கியின் நிர்வாகிகள் கூட விக்கிப்பக்கங்களின் வெளிப்பாட்டை நமக்கு வேண்டிவாறு வடிவமைத்துக் கொள்ளவோ சமூக ஒப்புதலுடனான கொள்கைகளை கடைபிடிக்கவோ இயலாது போகலாம். ஆனால் இது குறித்த உரையாடல்களில் நமது சமூகத்திலிருந்து யாரும் பங்கேற்கவில்லை. எனவே இதனை இங்கு குறிப்பிட விரும்பினேன். மெட்டா பயனர் Peteforsyth எனக்கு குறிப்பிட்டுள்ள இரு மெட்டா பக்கங்களை இங்கு குறிப்பிடுகிறேன்:

--மணியன் (பேச்சு) 04:07, 16 செப்டம்பர் 2014 (UTC)

இது குறித்து தெரியப்படுத்தியமைக்கு நன்றி. ஏற்கனவே, அவர்களின் கையெழுத்து இயக்கப் பக்கத்தில் ஒப்பம் அளித்திருந்தேன். கூடுதலாக, முக்கியமான கருத்துகள் ஏதாவது விடுபட்டு இருந்தால் சேர்ப்போம். தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தவரை, ஏற்கனவே இதே போல் தான் தட்டச்சுக் கருவி - வலை எழுத்துருக்களைத் தாமாகச் செற்படுத்தினார்கள். பிறகு, நாம் வாதிட்டு அதனை மீளப் பெற வேண்டி இருந்தது. இப்போக்கு தொடர்வது விரும்பத்தக்கதன்று. சிக்கல் என்னவென்றால், விக்கிப்பீடியாவை கூகுள், யாகூ போல் ஒரு வழக்கமான வலைத்தளச் சேவை / மென்பொருள் போல் பார்க்கிறார்கள். ஆனால், அவற்றில் இயங்கும் பயனர் சமூகங்கள் தனித்துவமானவை. தன்னாட்சியைக் கோருபவை. --இரவி (பேச்சு) 06:02, 16 செப்டம்பர் 2014 (UTC)
ஆம், நானும் இப்போது ஒப்பமிட்டுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 05:28, 20 செப்டம்பர் 2014 (UTC)
என்னைப் போன்ற பிற அணுக்கநிலைப்(sysop) பெற்றவர்களும், அங்குள்ள Post-delivery signatures என்பதில் ஒப்பம் இட வேண்டுமா? --≈ உழவன் ( கூறுக ) 10:11, 20 செப்டம்பர் 2014 (UTC)

இந்திய விக்கிமீடியா கிளையில் திட்ட இயக்குநர் பொறுப்பு ஏற்றுள்ளேன்[தொகு]

இந்திய விக்கிமீடியா கிளையில் திட்ட இயக்குநராக பொறுப்பு ஏற்றுள்ளேன். இந்தச் செய்தியை முதலில் இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் என்னுடைய பங்களிப்புகள் வழமை போலவே இந்தப் பயனர் கணக்கில் இருந்து தன்னார்வப் பங்களிப்பாகவே வரும். இந்திய விக்கிமீடியா கிளை சார்பாக ஏதேனும் முன்னெடுத்தால் அதனை வேறு பயனர் கணக்கில் இருந்து முறைப்படி செய்வேன். இயன்ற அளவு விரைவில் கூடுதல் விவரங்களை அறியத் தருகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 20:19, 21 செப்டம்பர் 2014 (UTC)

 1. வாழ்த்துகள் இரவி.--Kanags \உரையாடுக 20:49, 21 செப்டம்பர் 2014 (UTC)
 2. 👍 விருப்பம் வாழ்த்துக்கள் சகோதரரே மிக்க சந்தோசம் .-- mohamed ijazz(பேச்சு) 23:25, 21 செப்டம்பர் 2014 (UTC)
 3. "மிக்க மிகழ்ச்சி. வாழ்த்துக்கள்." இரவி!--≈ உழவன் ( கூறுக ) 01:54, 22 செப்டம்பர் 2014 (UTC)
 4. வாழ்த்துகள் இரவி. --இரா.பாலா (பேச்சு) 02:38, 22 செப்டம்பர் 2014 (UTC)
 5. இரவி, தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்!--பவுல்-Paul (பேச்சு) 03:12, 22 செப்டம்பர் 2014 (UTC)
 6. வாழ்த்துகள் இரவி. - தமிழ்த்தம்பி (பேச்சு) 04:06, 22 செப்டம்பர் 2014 (UTC)
 7. வாழ்த்துகள் இரவி!--நந்தகுமார் (பேச்சு) 07:26, 22 செப்டம்பர் 2014 (UTC)
 8. வாழ்த்துகள் இரவி! தீயா வேலை செய்யனும் சங்கரு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:32, 22 செப்டம்பர் 2014 (UTC)
 9. 👍 விருப்பம் வாழ்த்துக்கள் இரவி அவர்களே!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:11, 22 செப்டம்பர் 2014 (UTC)
 10. இந்திய மொழி விக்கிகளுக்கு நல்ல காலம்தான் ! பொறுப்புடன் பங்காற்றி தமிழ் விக்கி சமூகத்திற்கு பெருமைகள் பல சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. வாழ்த்துகள் !!!--மணியன் (பேச்சு) 13:06, 22 செப்டம்பர் 2014 (UTC)
 11. 👍 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 14:29, 22 செப்டம்பர் 2014 (UTC)
 12. 👍 விருப்பம் வாழ்த்துக்கள்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 16:15, 22 செப்டம்பர் 2014 (UTC)
 13. வாழ்த்துக்கள் இரவி அவர்களே!- Vatsan34 (பேச்சு) 16:33, 22 செப்டம்பர் 2014 (UTC)
 14. Karthikai Deepam.jpg

  விக்கி தொடர்பான அனைத்துப் பணிகளிலும் சிறப்பான பங்களிப்பினைத் தந்திட, எனது வாழ்த்துகளும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:46, 23 செப்டம்பர் 2014 (UTC)
 15. 👍 விருப்பம் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் இரவி! இலங்கையில் தமிழ் விக்கியின் தேவைகளை எவ்வாறு முன்னெடுக்கலாம் என சஞ்சீவியுடன் உரையாடியதைக் கவனித்தேன். உங்கள் சேவை எங்களுக்குத் தேவை! அனைவரும் இணைந்து விக்கிப்பீடியாவை வளர்ப்போம். --சிவகோசரன் (பேச்சு) 13:10, 23 செப்டம்பர் 2014 (UTC)
 16. 👍 விருப்பம்--புதிய பதவியில் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துக்கள். --மயூரநாதன் (பேச்சு) 18:16, 23 செப்டம்பர் 2014 (UTC)
 17. 👍 விருப்பம்--வாழ்த்துக்கள்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:55, 24 செப்டம்பர் 2014 (UTC)
 18. 👍 விருப்பம் வாழ்த்துக்கள் அண்ணா! -ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 15:06, 28 செப்டம்பர் 2014 (UTC)
 19. உங்கள் பணிசிறக்க வாழ்த்துகிறேன், இரவி. -- சுந்தர் \பேச்சு 10:42, 30 செப்டம்பர் 2014 (UTC)

முக்கிய கட்டுரைப் பட்டியல் கட்டுரை[தொகு]

இவ்வுரையாடல் பகுதி பேச்சு:மின்காந்தவியல் இற்கு நகர்த்தப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 08:14, 24 செப்டம்பர் 2014 (UTC)

பயனர் தடை[தொகு]

தமிழ் விக்கியில் முகம்மது இஜாஸ் தடை செய்யப்பட்டுளதாகக் கூறினார். அது தொடர்பான விளக்கத்தை என்னிடம் கேட்டார். அதற்கான காரணத்தைத் தெரிவிக்குமாறு நிருவாகிகளைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரா.பாலா (பேச்சு) 07:14, 24 செப்டம்பர் 2014 (UTC)

இது முகநூல் பயனர் குழுமத்தில் உள்ள தடை. எனவே, இதனை அங்கேயே என்ன ஏது என்று கேட்டு சரி செய்ய முனைவோம். முகநூலில் உள்ள ஒரு வசதி காரணமாக தெரியாமல் கை பட்டால் கூட மீளவும் சேர்க்க முடியாதவாறு தடை நேர்கிறது :( --இரவி (பேச்சு) 07:19, 24 செப்டம்பர் 2014 (UTC)
அவரால் தமிழ் விக்கியிலும் புக முடியவில்லை என்கிறார். ஆனால், தடைப் பதிகை ஒன்றும் காட்டவில்லை. முகநூலில் தடுக்கப்பட்ட பயனர்களிலும் அவர் பெயரைக் காணோம். தொழில்நுட்ப மர்மக் குழப்பமாக இருக்கலாம். இதனை நான் பொறுப்பெடுத்து கவனித்துச் சரி செய்ய முனைகிறேன்.--இரவி (பேச்சு) 07:35, 24 செப்டம்பர் 2014 (UTC)
முகநூல் தமிழ் விக்கிக் குழுமத்தில் நான்தான் அவரது தடையை விலக்கினேன். தமிழ் விக்கியிலும் தடை செய்யப்பட்டுள்ளார் எனக் கூறினார். நன்றி.--இரா.பாலா (பேச்சு) 07:37, 24 செப்டம்பர் 2014 (UTC)

ஜாதிக்கட்டுரைகள் தொல்லை[தொகு]

விக்கியில் பெரும்பாலான ஜாதிக்கட்டுரைகளில் நாங்கள் தான்டா கொம்பர் என்பது போல் எவனப்பாத்தாலும் நாங்கதான்டா மூவேந்தர், வேளிர் அரையர் வெங்காயம்னு கிறுக்கி வச்சுருக்காங்க. இதக்கேக்க யாருமே இல்லயா? பொலபொலன்னு பட்டயத்தின் வரிகள் எல்லாத்தையும் கட்டுரையில் கொடுத்துள்ளார்கள். இதத்தடுக்க என்னா செய்யலாம்? நான் பின்வரும் முறை பரிந்துரைக்கிறேன்.

 1. ஜாதிக்கட்டுரையில் எந்தெந்த அரசமரபுகளுக்கு நூல்கள் மூலம் உரிமை கோருகின்றனரோ அது அத்தனையையும் ஒரு பத்தியில் மட்டும் தாங்கள் எழுதிய நூல்கள் மூலம் தெரிவித்துவிட வேண்டும். அதுக்கு மேல சலம்பக்கூடாது.
 2. அரசமரபுகளின் கட்டுரைகளில் ஜாதி அ, ஜாதி ஆ என அகரவரிசையில் இன்னின்ன சாதி இப்படி அப்படிச் சலம்புறான்னு முடிச்சிரனும். சும்மா அதுக்கு மேல ஒன்றரை பக்கத்துக்கு எழுதி காமெடி பண்ணக்கூடாது. ஓ.கே.வா?

நானும் சிலக்கட்டுரைகளில் அழித்துவிட்டா மீண்டும் மீண்டும் சேக்குரானுங்க. பஞ்சாயத்தக் கூட்டுங்கப்பா. பஞ்சாயத்தக் கூட்டுங்க. நாட்டாமை யாரு இங்க?--நக்கீரன் (பேச்சு) 19:42, 26 செப்டம்பர் 2014 (UTC)

எசுப்பானிய விக்கிமீடியா போட்டி[தொகு]

இங்கு விக்கிமீடியா எசுப்பானா எதிர்வரும் அக்டோபர் மாதம் முழுமையும் நடத்தவிருக்கும் போட்டிக்கான அறிவிப்பைக் காணலாம். எசுப்பானியாவிலுள்ள புகழ்பெற்ற கட்டிடங்களைக் குறித்த கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதத் தூண்டுவதற்கான போட்டியாகும் இது. போட்டி விவரங்கள இங்கு காணலாம். அனைவரும் அறிய வேண்டி இங்கு தந்துள்ளேன்.--மணியன் (பேச்சு) 04:19, 29 செப்டம்பர் 2014 (UTC)

Grants:IEG/Easy type tools for wiki source[தொகு]

வணக்கம் . தங்கள் கவனத்திற்காக . தமிழ் விக்கிமூலத்துக்கு தட்டச்சுப் பங்களிப்பை இலகுவாக்கும் மென்பொருளுக்கான நல்கை விண்ணப்பம். உங்கள் ஆதரவையும் கருத்துகளையும் தெரிவியுங்கள். இதை இங்கும் இட்டுள்ளேன். --Tshrinivasan (பேச்சு) 08:13, 30 செப்டம்பர் 2014 (UTC)

வாழ்த்துக்கள்Tshrinivasan --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:30, 30 செப்டம்பர் 2014 (UTC)

பத்தாண்டுகள் நிறைவில் நாம்[தொகு]

இது நமது பதினோரம் ஆண்டின் நிறைவு. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:30, 30 செப்டம்பர் 2014 (UTC)

//பத்தாண்டுகள் நிறைவில்//

//இது நமது பதினோரம் ஆண்டின் நிறைவு. //

!!!

ஆச்சர்யக்குறி 2 - முகநூல் நமது ஆலமரத்தடியாக ஆகிப் போனதில்.

ஆச்சர்யக்குறி 3 - அதில் எனக்கும் பங்கு இருப்பதில்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:30, 30 செப்டம்பர் 2014 (UTC)

தென்காசி சுப்பிரமணியன் தாங்கள் கூறுவது சரியே :(இங்கு தான் முதலில் பிறந்த நாள் வாழ்த்துகளை கூறியிருக்க வேண்டும் :( --Commons sibi (பேச்சு) 01:29, 1 அக்டோபர் 2014 (UTC)
ஆச்சரியக்குறி 1- பதினொன்றின் நிறைவை பத்து என்று குறைத்துக் கூறியதற்கா தென்காசி?

Grants:IEG/Tamil OCR to recognize content from printed books[தொகு]

வணக்கம் நண்பர்களே, தமிழ் விக்கிமூலத்துக்கு உதவக்கூடிய எழுத்து வடிவ உணரி(OCR) தருவிப்பதற்க்கு உதவும் Tesseract பயிற்சி முகப்பை உருவாக்குவதற்கான விண்ணப்பம் . உங்கள் கருத்துக்களை பகிருங்கள். நன்றி. --Balavigneshk (பேச்சு) 17:52, 30 செப்டம்பர் 2014 (UTC)

Trainer GUI தமிழ் எழுத்துணரி உருவாக்க நேரடியாக உதவுமா என்பதில் தெளிவில்லை. en:Tesseract (software), https://code.google.com/p/tesseract-ocr/wiki/AddOns போன்ற கருவிகளுடன் முன்மொழிவு எவ்வாறு வேறுபடும். இந்த அணுகுமுறைத் தேர்வுக்கான பின்புல விபரம் தேவை. ஒரு பொது நடைமுறைக்குப் பயன்படக் கூடிய (general purpose practical Tamil OCR) கிடைக்கும் என்றால் விரிவான ஒரு முன்மொழிவை முன்வைக்க உதவ முடியும். உத்தமம், நூலக நிறுவனம், யாழ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆதரவைத் திரட்ட முடியும். எமக்கு, அவர்கள் (grant தருபவர்கள்) குறிப்பாக எவற்றை எதிர்பாக்கிறார்கள் என்று அறிய வேண்டும். அப்பொழுதுத்தான் முன்மொழிவை மிகவும் பலமானதாக முன்வைக்க முடியும். --Natkeeran (பேச்சு) 18:30, 30 செப்டம்பர் 2014 (UTC)

Tesseract OCR தமிழை ஓரளவு உணரும். ஆனால் பிழைகள் அதிகம் இருக்கும். OCRக்கு பயிற்சி அளிக்க ஒரு எளிய இணைய மென்பொருளை உருவாக்கும் திட்டம் இது. இதன் மூலம் பலரும் OCR க்கு பயிற்சி தர முடியும்.

தற்போதைய பயிற்சி வழி விவரம் - http://printalert.wordpress.com/2014/04/28/training-tesseract-ocr-for-tamil/

இதை எளிமைப் படுத்தும் திட்டம் இது. --Tshrinivasan (பேச்சு) 18:46, 30 செப்டம்பர் 2014 (UTC)

கூடிய விபரங்களுக்கு நன்றி. இந்த முன்மொழிவு தமிழ் தொடர்பான சிறப்பான என்ன development செய்யும் என்று கூற முடியுமா. இதனை ஒரு எல்லா மொழுகளுக்கும், அல்லது இந்திய மொழிகளுக்கு ஆன ஒரு கருவியாகப் (மிகக் தேவையான) பார்க்கலாம். training methods இல் தமிழுக்கான algorithms எதாவது உருவாக்கப்படுமா. --Natkeeran (பேச்சு) 19:44, 30 செப்டம்பர் 2014 (UTC)

பயனர்:Natkeeran தமிழ் இணையக்கல்விக்கழகம் விக்கிக்கு வழங்கிய கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் போன்றவை படவகை பிடிஎப்களாகத்தான் உள்ளது. அதை எழுத்துக்களாக மாற்ற இதை செயல்படுத்தி சோதிக்கலாம். இன்னும் பல படவகை கோப்புகள் தமிழ் இணையக்கல்விக்கழகம் மூலம் விக்கிக்கு வரும். அதனால் மிக முக்கியத்துவம் பெறுகிறது இது. FYI பயனர்:செல்வா, பயனர்:Ravidreams --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 23:02, 30 செப்டம்பர் 2014 (UTC)

இதன் முக்கியத்துவத்தை நன்கு அறிவே தென்காசி. எனது கேள்வி, இந்தச் செயற்திட்டத்தின் விடயப்பரப்பு (scope) தொடர்பாகவே. ஏற்கனவே சில முயற்சிகள் இவ் வகையில் உள்ளது போல் தெரிகிறது: http://vietocr.sourceforge.net/training.html, https://code.google.com/p/parichit/. ஏற்கனவே பல தமிழ் எழுத்துணரி முயற்சிகள் முழுமை பெறாமல் உள்ளன. பரிசோதனைக்குத் தேவையான உள்ளீடுகள், பரிசோதனையாளர்கள், மாணவர்(கள்) போன்ற வளங்கள் வழங்குவது பற்றி பரிசீலிக்க முடியும். அனால் தெளிவான இலக்குத், ஓரளவாவது பயன்படக் கூடிய தமிழ் எழுத்துணரி நோக்கி நகர முடியும் என்றால் நாம் இந்தச் செயற்திட்டத்தை பலமானதாக முன்வைக்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 13:38, 1 அக்டோபர் 2014 (UTC)