கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமப்பூர் மாவட்டம் அல்லது ராம்பூர் மாவட்டம்(இந்தி: रामपुर ज़िला, உருது: رام پور ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. ராம்பூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் மோராதாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பு 2,367 கிமீ².
மக்கள் வகைப்பாடு [தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இராமப்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,335,398.[1] இது தோராயமாக லாத்வியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 194வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 987 /சதுர கிலோமீட்டர் (2 /sq mi).[1] மேலும் இராமப்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 21.4%.[1]இராமப்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 905 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் இராமப்பூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 55.08%.[1]
மேற்கோள்கள் [தொகு]