சுல்தான்பூர் மாவட்டம்
| சுல்தான்பூர் மாவட்டம் सुल्तानपुर ज़िला سلطان پور ضلع |
|
|---|---|
|
சுல்தான்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் |
|
| மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
| நிர்வாக பிரிவுகள் | பைசாபாத் பிரிவு |
| தலைமையகம் | சுல்தான்பூர், உத்தரப்பிரதேசம் |
| பரப்பு | 4,436 கிமீ2 (1 ச மைல்) |
| மக்கட்தொகை | 3,790,922 (2011) |
| மக்கள் அடர்த்தி | 855 /km2 (2 /sq mi) |
| படிப்பறிவு | 71.14 |
| பாலின விகிதம் | 1.022 |
| வட்டங்கள் | 4 |
| மக்களவைத்தொகுதிகள் | சுல்தான்பூர், அமேதி |
| சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 5 |
| அதிகாரப்பூர்வ இணையத்தளம் | |
சுல்தான்பூர் மாவட்டம் (இந்தி: सुल्तानपुर ज़िला, உருது: سلطان پور ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் சுல்தான்பூர் நகரம் ஆகும். இது பைசாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. கங்கையின் கிளைநதியான கோமதி ஆறு இம்மாவட்டத்தின் நடுவே செல்கிறது.
பொருளாதாரம் [தொகு]
ஜகதீஸ்பூர் இம்மாவட்டத்தின் தொழில் நகரம் ஆகும். இங்கு பாரத மிகுமின் நிறுவன தொழிற்சாலையும், ஒரு உரத் தொழிற்சாலையும் மற்றும் சில தோல் தொழிற்சாலைகளும் உள்ளன. மேலும் இம்மாவட்டத்தின் முன்சிகஞ் அருகேயுள்ள கோர்வாவில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் சோதனை மையமும், கௌரிகஞ்ல் ஏசிசி நிறுவனத்தின் சிமெண்ட் தொழிற்சாலையும் அமைத்துள்ளது.
மக்கள் வகைப்பாடு [தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சுல்தான்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,790,922.[1] இது தோராயமாக லைபீரியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 69வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 855 /சதுர கிலோமீட்டர் (2 /sq mi).[1] மேலும் சுல்தான்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.92%.[1]சுல்தான்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 978 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் சுல்தான்பூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 71.14%.[1]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||