ரேபரேலி மாவட்டம்
| ரேபரேலி மாவட்டம் रायबरेली ज़िला رائے بریلی ضلع |
|
|---|---|
|
ரேபரேலிமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம் |
|
| மாநிலம் | உத்தரப்பிரதேசம், இந்தியா |
| நிர்வாக பிரிவுகள் | லக்னௌ |
| தலைமையகம் | ரேபரேலி |
| பரப்பு | 4,609 கிமீ2 (1 ச மைல்) |
| மக்கட்தொகை | 3,404,004 (2011) |
| மக்களவைத்தொகுதிகள் | Raebareli |
| அதிகாரப்பூர்வ இணையத்தளம் | |
ரேபரேலி மாவட்டம் (இந்தி: रायबरेली ज़िला, உருது: رائے بریلی ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் ரேபரேலி நகரம் ஆகும். இம்மாவட்டம் லக்னௌ பிரிவின் கீழ் அமைந்துள்ளது.
பொருளடக்கம் |
பொருளாதாரம் [தொகு]
2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ரேபரேலி மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]
மக்கள் வகைப்பாடு [தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ரேபரேலி மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,404,004.[2] இது தோராயமாக பனாமா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 97வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 739 /சதுர கிலோமீட்டர் (1 /sq mi).[2] மேலும் ரேபரேலி மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 18.51%.[2]ரேபரேலி மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 941 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் ரேபரேலி மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 69.04%.[2]
மொழிகள் [தொகு]
இம்மாவட்டத்தில் அவதி மொழி பெரும்பான்மையாக பேசப்படுகிறது. இம்மொழியை 38 மில்லியன் மக்கள் அவத் பகுதியில் பேசுகின்றனர்[4]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01.
- ↑ "Awadhi: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. Retrieved on 2011-09-28.
வெளியிணைப்புகள் [தொகு]
![]() |
லக்னௌ மாவட்டம் | பாராபங்கீ மாவட்டம் | ![]() |
|
| உன்னாவ் மாவட்டம் | சுல்தான்பூர் மாவட்டம்' | |||
| ஃவத்தேப்பூர் மாவட்டம் | கௌசாம்பி மாவட்டம் | பிரத்தாப்புகர் மாவட்டம் |
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
