ஆக்ரா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆக்ரா மாவட்டம்
आगरा ज़िला
آگرہ ضلع
Uttar Pradesh district location map Agra.svg

ஆக்ராமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம்
மாநிலம் உத்தரப்பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள் ஆக்ரா
தலைமையகம் ஆக்ரா
பரப்பு 4,027 கிமீ2 (1 ச மைல்)
மக்கட்தொகை 2,751,021 (2001)
நகர்ப்புற மக்கட்தொகை 1,111,086
படிப்பறிவு 64.97 per cent[1]
வட்டங்கள் 6
மக்களவைத்தொகுதிகள் ஆக்ரா, பாடேஹ்பூர் சிக்ரி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 9
முதன்மை நெடுஞ்சாலைகள் NH 2
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஆக்ரா மாவட்டம் (இந்தி: आगरा ज़िला, உருது: آگرہ ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள 70 மாவட்டங்களில் ஒன்று. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆக்ரா இம்மாவட்டத்தின் தலைநகரம். மேலும் இம்மாவட்டம் ஆக்ரா பிரிவின் ஒரு பகுதியாகும்.

புவியமைப்பு [தொகு]

ஆக்ரா மாவட்டத்தின் எல்லையாக வடக்கில் மதுரா மாவட்டமும், தெற்கில் ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் மாவட்டமும், கிழக்கே பிரோசாபாத் மாவட்டமும், மேற்கே ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டமும் அமைந்துள்ளன. ஆக்ரா மாவட்டத்தின் பரப்பு 4027 கிமீ².

மக்கள் வகைப்பாடு [தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ஆக்ரா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 4,380,793.[2] இது தோராயமாக மல்தோவா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 41வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,084 /சதுர கிலோமீட்டர் (2 /sq mi).[2] மேலும் ஆக்ரா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 21%.[2]ஆக்ரா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 859 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் ஆக்ரா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 69.44%.[2]


மேற்கோள்கள் [தொகு]

  1. "District-specific Literates and Literacy Rates, 2001". Registrar General, India, Ministry of Home Affairs. பார்த்த நாள் 2010-10-10.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
  3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01.
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்ரா_மாவட்டம்&oldid=1386082" இருந்து மீள்விக்கப்பட்டது