ஔரையா மாவட்டம்
| ஔரையா மாவட்டம் औरैया जिला |
|
|---|---|
|
ஔரையாமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் |
|
| மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
| நிர்வாக பிரிவுகள் | கான்பூர் |
| தலைமையகம் | ககோர் புசுர்க் |
| பரப்பு | 2,054 கிமீ2 (793 ச மைல்) |
| மக்கட்தொகை | 1,372,287 (2011) |
| மக்களவைத்தொகுதிகள் | கன்னவுச்சு |
| அதிகாரப்பூர்வ இணையத்தளம் | |
ஔரையா மாவட்டம் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. ஔரையா நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.[1]
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
17 செப்டம்பர் 1997 அன்று ஔரையா மற்றும் பிதுனா வட்டங்கள் ஏட்டாவா மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய ஔரையா மாவட்டம் உருவாக்கப்பட்டது.
பொருளாதாரம் [தொகு]
திபயாபூர் ஆனது இம்மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க தொழில் நகரம் ஆகும். இங்கு பொதுத்துறை நிறுவனங்களான என்டிபிசியின் 663 MW மின்நிலையம்,[2] பெட்ரோலிய வேதிப்பொருள் ஆலை மற்றும் கெய்ல் நிறுவனத்தின் எரிவாயு அமுக்கி நிலையம் ஆகியவை அமைந்துள்ளன.[3]
மக்கள் வகைப்பாடு [தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ஔரையா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,372,287.[4] இது தோராயமாக சுவாசிலாந்து நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[5] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 357வது இடத்தில் உள்ளது.[4] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 681 /சதுர கிலோமீட்டர் (1 /sq mi).[4] மேலும் ஔரையா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 16.3%.[4]ஔரையா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 864 பெண்கள் உள்ளனர்.[4] மேலும் ஔரையா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 80.25%.[4]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ [1]
- ↑ NTPC
- ↑ GAIL
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01.
வெளியிணைப்புகள் [தொகு]
![]() |
கன்னவுச்சு மாவட்டம் | ![]() |
||
| ஏட்டாவா மாவட்டம் | இராமாபாய் நகர் மாவட்டம் | |||
| சலான் மாவட்டம் |
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
