இந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்தி மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தி
हिन्दी, हिंदी
 நாடுகள்: இந்தியா மற்றும் பாகிஸ்தான். (இந்துஸ்தான்).
 பேசுபவர்கள்: முதல் மொழி பேசுவோர்: ~ 490 மில்லியன் (2008)[1]
இரண்டாம் நிலை பேசுவோர்: 120–225 மில்லியன் (1999)[2] 
நிலை: 3-4 [Native]
மொழிக் குடும்பம்:
 இந்திய-ஈரானியம்
  இந்திய-ஆரியம்[3]
   இந்தி 
எழுத்து முறை: தேவநாகரி, Kaithi, Latin, and

several regional scripts. 

அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: இந்தியாவின் கொடி இந்தியா
பிஜியின் கொடி பிஜி
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: Central Hindi Directorate (India),[4]
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: hi
ஐ.எசு.ஓ 639-2: hin
ISO/FDIS 639-3: hin 

இந்தி அல்லது ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழிகளுள் ஒன்று [5]. இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 343 (1) இன் கீழ் இந்தி நடுவண் அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகும்.[6]. பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ காரணமாக இருக்கிறது.

பரவல்[தொகு]

இந்தி இந்தியாவின் வட பகுதி முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. இந்தியாவில் தில்லி, ராஜஸ்தான், அரியானா , உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் , மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பேசப்படுகிறது.பிற இந்திய மாநிலங்களில், தமிழ்நாடு நீங்கலாக, இரண்டாவது/மூன்றாவது மொழியாக மும்மொழி திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படுகிறது.

பேச்சு இந்தி[தொகு]

எண்கள்[தொகு]

 1. - ஏக் (एक) = ஒன்று
 2. - 'தோ (दो) = இரண்டு
 3. - தீன் (तीन) = மூன்று
 4. - சார் (चार) = நான்கு
 5. - பாஞ்ச் (पांच) = ஐந்து
 6. - சே (छः) = ஆறு
 7. - சாத் (सात) = ஏழு
 8. - ஆட் (आठ) = எட்டு
 9. - நௌ (नौ) = ஒன்பது
 10. - தஸ் (दस) = பத்து

100 - சௌ (सौ) = நூறு

1000 - அசார் (हजार) = ஆயிரம்

பொதுவானவை[தொகு]

 • கித்னா = எத்தனை ?
 • ஊப்பர் = மேலே - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது ஊப்பர் சீட் - மேற்படுக்கை).
 • நீச்சே = கீழ் - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது நீச்சே சீட் - கீழ்ப்படுக்கை).
 • ஜாயேகா? = போகுதா? போகுமா?- எ.கா பூபசண்டா 'சாயேகா? - பூபசண்டாரா போகுதா?)
 • ச்சாயேகா ? = வேண்டுமா ? எ.கா ச்சா சாயேகா ? - தேநீர் வேண்டுமா ?
 • கிஸ் தரஃப் - எந்தப் பக்கம்? எ.கா கிஸ் தரஃப் ஜாயேகா - எந்தப் பக்கம் போகும் ?
 • 'கத்தம் ஃஓகயா = முடிவடைந்து விட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

 1. 258 மில்லியன் "non-Urdu Khari Boli" and 400 million Hindi languages per 2001 Indian census data, plus 11 million Urdu in 1993 Pakistan, adjusted to population growth till 2008
 2. non-native speakers of Standard Hindi, and Standard Hindi plus Urdu, according to SIL Ethnologue.
 3. Dhanesh Jain; George Cardona (2003). இந்திய-ஆரியம். Routledge. p. 251. ISBN 9780700711307. 
 4. Central Hindi Directorate regulates the use of Devanagari script and Hindi spelling in இந்தியா. Source: Central Hindi Directorate: Introduction
 5. தேசிய தகவல் மையம்
 6. நடுவன்அரசின் அலுவலக மொழி

வெளியிணைப்புகள்[தொகு]

இந்தி பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

Wiktionary-logo-en.png விக்சனரி விக்சனரி
Wikibooks-logo.svg நூல்கள் விக்கிநூல்
Wikiquote-logo.svg மேற்கோள் விக்கிமேற்கோள்
Wikisource-logo.svg மூலங்கள் விக்கிமூலம்
Commons-logo.svg விக்கிபொது
Wikinews-logo.png செய்திகள் விக்கிசெய்தி


Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இந்திப் பதிப்பு
Wikibooks-logo-en.svg
இந்தி
தொடர்பான நூல் விக்கி நூல்கள் தளத்தில் உள்ளது.


பொது[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இந்தி&oldid=1640334" இருந்து மீள்விக்கப்பட்டது