பாகேலி மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பாகேலி | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா, நேபாளம் | |
| பகுதி: | மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், நேபாளம் | |
| பேசுபவர்கள்: | 396,000 க்கு மேல் (1997) | |
| மொழிக் குடும்பம்: | இந்தோ-ஐரோப்பிய இந்திய-ஐரோப்பியம் இந்திய-ஈரானியம் இந்திய-ஆரியம் பாகேலி |
|
| எழுத்து முறை: | தேவநாகரி | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | bfy | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
பாகேலி என்பது மத்திய இந்தியாவின் பாகேல்காந்த் பகுதிகளில் பேசப்பட்டுவரும் ஒரு மொழியாகும். இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கைகளில் இது ஹிந்தி மொழியின் ஒரு கிளைமொழியாகவே கணக்கெடுக்கப்பட்டுள்ளது (1991).
பாகேலி பேசுபவர்கள், பெரும்பாலும் மத்தியப் பிரதேசத்தின் ரேவா, சந்தா, சிதி, ஷாஹ்தோல், உமாரியா, அனூப்பூர் ஆகிய மாவட்டங்களிலும், உத்தரப் பிரதேசத்தின், அலகாபாத், மிர்சாப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் உள்ளனர்.