புந்தேலி மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| புந்தேலி | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | தென்னாசியா | |
| பேசுபவர்கள்: | 44,000(1997) | |
| மொழிக் குடும்பம்: | இந்தோ-ஐரோப்பிய இந்திய-ஐரோப்பியம் இந்திய-ஈரானியம் இந்திய-ஆரியம் மேற்கு ஹிந்தி புந்தேலி |
|
| எழுத்து முறை: | தேவநாகரி | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | bns | |
| ISO/FDIS 639-3: | bns | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
புந்தேலி மொழி (बुन्देली) ஒரு மேற்கு ஹிந்தி மொழியாகும். இது பொதுவாக, இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள புந்தெல்காந்த் பகுதியிலும், உத்தரப் பிரதேசப் பகுதிகளிலும் பேசப்பட்டு வரும், இந்தியின் ஒரு கிளை மொழியாகவே கருதப்படுகிறது. மேற்படி மாநிலங்களிலுள்ள ஜான்சி, லலித்பூர், ஹாமிர்பூர், பாண்டா, ஜாலோன், பன்னா, சத்தர்பூர், சாகர், தாமோ, குனா, விதிஷா, தாதியா ஆகிய பகுதிகளில் இம்மொழி புழங்கி வருகின்றது. இம் மொழி 19 ஆம் நூற்றாண்டு வரை வட இந்தியாவின் இலக்கிய மொழியாக விளங்கிய பிராஜ் பாஷாவுடன் நெருங்கிய தொடர்புடையது.