அங்கிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அங்கிகா
சுதேசம் இந்தியா, நேபாளம்
பிராந்தியம் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம்
தாய் மொழியாகக் கொண்டவர்கள்
740,000  (1997)[1]
இந்தோ-ஐரோப்பிய
  • இந்தோ-ஈரனிய
    • இந்தோ-ஆரியன்
      • அங்கிகா
மொழிக் குறியீடுகள்
ISO 639-2 anp
ISO 639-3

அங்கிகா (Angika, अंगिका) மொழி இந்தியாவின் பீகார் , ஜார்கண்ட் , மேற்கு வங்காளம் மற்றும் நேபாளம் ஆகிய இடங்களில் பேசப்பட்டும் இந்தோ ஈரானிய மொழி ஆகும்.இம்மொழி சற்றே வங்காள மொழியை ஒத்து இருக்கும். மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ளபடி அங்க தேசம் மக்கள் பேசிய மொழி இதுவாகும்.

நிலை[தொகு]

இந்திய அரசால் 8 ஆவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 அலுவல் மொழிகளுள் ஒன்றாக இது இல்லை.அதற்கான கோரிக்கை நிலுவையில் உள்ளது.[2]

எழுத்து[தொகு]

அங்கிகா மொழி தேவநாகரி எழுத்துவடிவில் எழுதப்படும். பழங்காலத்தில் அங்கா லிபி மற்றும் காய்தி போன்றவை புழக்கத்தில் இருந்தன.[3]

வேறு பெயர்கள்[தொகு]

இம்மொழி கீழே குறிப்பிடப்பட்டுள்ள வேறு பெயர்களாலும் அழைக்கப்படும்.

  • அங்கி
  • சுர்ஜாபூரி
  • அங்கிகார்
  • செக்கா-சிக்கி
  • சாய்-ச்செள
  • பாகல்பூரி
  • செக்காரி
  • கேய்ல்-கேய்லி
  • தீதி

மொழி பேசுவோர்[தொகு]

கிழக்கு பீகார் காதிகார் , புர்னியா , கிசாங்காஜ் , மதேபுரா , சகர்சா , பாகல்பூர் , பங்கா , ஜாமுய் , முங்கர் , லகிசாராய் , பெங்குசாராய் மற்றும் சீக்புரா ஆகிய மாவட்டங்களில் புழக்கத்தில் உள்ளது. ஜார்கண்ட் சகப்காங்ஜ் , ஹோடா , டியோஹார் , பகுர் , டும்கா மற்றும் ஜம்ட்ரா ஆகிய மாவட்டங்களில் புழக்கத்தில் உள்ளது.

மேலும் , அங்கிகா மொழி பேசும் மக்கள் அதிக அளவு ஈரான் , அமெரிக்கா , இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய இடங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர்.

திரைப்படம்[தொகு]

இம்மொழியின் முதல் திரைப்படம் 27 ஏப்ரல் 2007 ஆம் ஆண்டு பீகாரின் லெஷ்மி திரையரங்கில் வெளியிடப்பட்டது. திரைப்படத்தின் பெயர் கஹாரியா வாலி போவ்ஜி [1] ஆகும்.அதன் பின் 2010-ல் அங் புத்ரா[2] எனும் திரைப்படம் வெளியானது.மேலும் கைசே சாந்தோ பிகுலா பிஸ்கரி கை எனும் திரைப்படம் வெளியாகப்போகிறது.

விக்கிப்பீடியாவில் அங்கிகா[தொகு]

விக்கிப்பீடியாவில் அங்கிகா மொழியைச் சேர்க்க வேண்டும் என ஓட்டெடுப்பு நடக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; e17 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "Languages in the Eighth Schedule". Ministry of Home Affairs (2004-12-22). பார்த்த நாள் 2011-05-05.
  3. "Angika.com".
"http://ta.wikipedia.org/w/index.php?title=அங்கிகா&oldid=1653993" இருந்து மீள்விக்கப்பட்டது