மேற்கு வங்காளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேற்கு வங்காளம்
পশ্চিমবঙ্গ
पश्चिम बङ्गाल
—  மாநிலம்  —
இந்தியாவில் மேற்கு வங்காளம் அமைந்துள்ள இடம்
அமைவிடம் 22°34′11″N 88°22′11″E / 22.5697°N 88.3697°E / 22.5697; 88.3697ஆள்கூறுகள்: 22°34′11″N 88°22′11″E / 22.5697°N 88.3697°E / 22.5697; 88.3697
நாடு  இந்தியா
மாநிலம் மேற்கு வங்காளம்
மாவட்டங்கள் 19
நிறுவப்பட்டது நவம்பர் 1, 1956
தலைநகரம் கொல்கத்தா
ஆளுநர் கேசரிநாத் திரிபாதி

[1]

முதலமைச்சர் மம்தா பானர்ஜி[2]
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை (295 *)
மக்கள் தொகை 9,13,47,736 (4th) (2011)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு
இணையதளம் [http://wbgov.com wbgov.com]


மேற்கு வங்காளம், இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்த மாநிலமாகும். கொல்கத்தா இம்மாநிலத்தின் தலைநகர். வங்காள மொழியே இங்கு பெரும்பான்மையாக பேசப்படும் மொழி.

வரலாறு[தொகு]

1947ஆம் வருடம் அன்றைய வங்காளம், இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்த பகுதி மேற்கு வங்காளம் என்றும், இஸ்லாமியரின் பகுதி கிழக்கு வங்காளம் என்றும் பிரிக்கப்பட்டது. இன்றைய வங்கதேசமே அந்த கிழக்கு வங்காளமாகும்.

புவியியல்[தொகு]

மேற்கு வங்காள மாநிலத்தின் அண்டைய பகுதிகள் பின்வருவன

மேற்கு வங்காள மாநிலம் 18 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அரசியல்[தொகு]

1977ஆம் ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் மேற்கு வங்காளம் இடது சாரி கட்சிகளால் ஆளப்பட்டுவந்தது. 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு வெற்றி பெற்றதை அடுத்து மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார்.

பெயர் மாற்றம்[தொகு]

இம்மாநிலத்தின் பெயரை பஸ்ச்சிம் பங்கா என மாற்ற அம்மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின்னர் மேற்கு வங்காளம் பஸ்ச்சிம் பங்கா என அழைக்கப்படுவது அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வரும்.[3][4]

மக்கள்[தொகு]

சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 80,176,197 100%
இந்துகள் [5] 58,104,835 72.47%
இசுலாமியர் [5] 20,240,543 25.25%
கிறித்தவர் [5] 515,150 0.64%
சீக்கியர் [5] 66,391 0.08%
பௌத்தர் [5] 243,364 0.30%
சமணர் [5] 55,223 0.07%
ஏனைய [5] 895,796 1.12%
குறிப்பிடாதோர் [5] 54,895 0.07%

புகழ் பெற்ற மனிதர்கள்[தொகு]

சுபாஷ் சந்திர போஸ், எஸ். என். போஸ்,புரட்சி கவிஞர் நஸ்ருல் இஸ்லாம் ஜகதீஷ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ணர், அமார்த்ய சென் ஆகியோர் இம்மாநிலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற மனிதர்களாவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. http://www.indianexpress.com/news/west-bengal-to-be-renamed-paschimbanga/834327/
  4. http://thatstamil.oneindia.in/news/2011/08/19/west-bengal-is-now-paschim-banga-aid0091.html
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 Census of india , 2001

வெளி இணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_வங்காளம்&oldid=1766126" இருந்து மீள்விக்கப்பட்டது