இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்தியாவில் 28 மாநிலங்களும், 7 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும், இதில் டெல்லி தேசிய தலைநகரப் பகுதி ஒன்றும் அடங்கியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், மாவட்டங்கள் என்ற சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பொருளடக்கம்

[தொகு] மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுமை பகுதிகள்

மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளை குறிக்கும் இந்திய வரைபடம். விவரங்கள் இடதுபுறம் பட்டியலிடப்பட்டுள்ளன.
  1. ஆந்திரப் பிரதேசம்
  2. அருணாச்சல் பிரதேசம்
  3. அஸ்ஸாம்
  4. பிஹார்
  5. சத்தீஸ்கர்
  6. கோவா
  7. குஜராத்
  8. ஹரியானா
  9. இமாசலப் பிரதேசம்
  10. ஜம்மு காஷ்மீர்
  11. ஜார்க்கண்ட்
  12. கர்நாடகம்
  13. கேரளம்
  14. மத்தியப் பிரதேசம்
  15. மகாராஷ்டிரம்
  16. மணிப்பூர்
  17. மேகாலயா
  18. மிசோரம்
  19. நாகாலாந்து
  20. ஒரிஸா
  21. பஞ்சாப்
  22. ராஜஸ்தான்
  23. சிக்கிம்
  24. தமிழ் நாடு
  25. திரிபுரா
  26. உத்தரகண்ட்
  27. உத்தரப் பிரதேசம்
  28. மேற்கு வங்காளம்

யூனியன் பிரதேசங்கள் என்றழைக்கப்படும் ஒன்றிய பகுதிகள்:

  1. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
  2. சண்டிகர்
  3. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
  4. தாமன், தியு
  5. லட்சத்தீவுகள்
  6. புதுச்சேரி
  7. தில்லி


[தொகு] மாநிலங்களும் அதன் தலைநகரங்களும்

இந்தியாவின் மாநிலங்கள்
# பெயர் மக்கள் தொகை மொழி தலைநகரம் மிகப்பெரிய நகரம்
(தலைநகரமல்லாதவை)
1 ஆந்திரப் பிரதேசம் 76,210,007 தெலுங்கு ஹைதராபாத்
2 அருணாச்சலப் பிரதேசம் 1,091,120 இடாநகர்
3 அசாம் 26,655,528 அசாமிசி திஸ்பூர் கவுகாத்தி
4 பீகார் 82,998,509 பீகாரி பாட்னா
5 சத்தீஸ்கர் 20,795,956 சத்தீஸ்கரி ரெய்ப்பூர்
6 கோவா 1,400,000 கொங்கணி பனாஜி வாஸ்கோடாகமா, கோவா
7 குஜராத் 50,671,017 குஜராத்தி காந்தி நகர் அகமதாபாத்
8 அரியானா 21,082,989 அர்யானி சண்டிகர் (shared) பரிதாபாத்
9 இமாச்சலப் பிரதேசம் 6,077,900 சிம்லா
10 சம்மு காசுமீர் 10,143,700 கசுமீரியம் ஸ்ரீநகர் (கோடைகாலம்)
ஜம்மு (குளிர்காலம்)
11 ஜார்கண்ட் 26,909,428 ராஞ்சி ஜாம்செட்பூர்
12 கர்நாடகா 52,850,562 கன்னடம் பெங்களூரு
13 கேரளா 31,841,374 மலையாளம் திருவனந்தபுரம்
14 மத்தியப் பிரதேசம் 60,385,118 இந்தி போபால் இந்தூர்
15 மகாராஷ்டிரா 96,752,247 மராத்தி மும்பை
16 மணிப்பூர் 2,388,634 மணிப்பூரி இம்பால்
17 மேகாலயா 2,306,069 சில்லாங்
18 மிசோரம் 888,573 மீசோ ஐஸ்வால்
19 நாகலாந்து 1,988,636 நாகம் கோஹிமா Dimapur
20 ஒரிசா 36,706,920 ஒரியா புபனேஸ்வர்
21 பஞ்சாப் 24,289,296 பஞ்சாபி சண்டிகர் (shared) லூதியானா
22 ராஜஸ்தான் 56,473,122 ராஜஸ்தானி ஜெய்ப்பூர்
23 சிக்கிம் 540,493 கான் சீனம் காங்டாக்
24 தமிழ்நாடு 66,396,000 தமிழ் சென்னை
25 திரிபுரா 3,199,203 வங்காளம் அகர்தாலா
26 உத்தரப்பிரதேசம் 190,891,000 லக்னோ கான்பூர்
27 உத்தரகண்ட் 8,479,562 டெஹ்ராடூன்
28 மேற்கு வங்கம் 80,221,171 வங்காளம் கொல்கத்தா
ஒன்றியப் பகுதிகள்
# பெயர் மக்கள் தொகை மொழி தலைநகரம் மிகப்பெரிய நகரம்
(தலைநகரமல்லாதவை)
A அந்தமான் நிக்கோபார் தீவுகள் 356,152 போர்ட் பிளேர்
B சண்டிகர் 900,635 பஞ்சாபி சண்டிகர்
C தாத்ரா மற்றும் நகர் அவேலி 220,451 குஜராத்தி சில்வஸா
D தாமன், தியு 158,059 குஜராத்தி டாமன்
E இலட்சத்தீவு 60,595 மலையாளம் கவரட்டி Andrott
F தேசிய தலைநகர் பகுதி 13,782,976 இந்தி புது தில்லி
G புதுச்சேரி 973,829 பிரான்சியம் and தமிழ் புதுச்சேரி

[தொகு] இந்திய மாநிலங்களின் உருவாக்கம்

தற்போதைய இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பூட்டான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்த பிரித்தானிய இந்தியா இரண்டு விதமான துணை அரசியல் அலகுகளைக் கொண்டிருந்தது. மாகாணங்கள், வைஸ்ராயினால் நியமிக்கப்பட்ட, ஆளுனர் அல்லது சிறப்பு ஆணையர் தரத்திலுள்ள பிரித்தானிய அதிகாரிகளால் நேரடியாக ஆளப்பட்டன. சமஸ்தானங்கள், பிரித்தானியரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட உள்ளூர் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்பட்டு வந்தன. பிரித்தானிய இந்தியா 15 மாகாணங்களைக் கொண்டிருந்தது: அஜ்மேர்r-மேர்வாரா, அஸ்ஸாம், பலுச்சிஸ்தான், வங்காளம், பீகார், பம்பாய், மத்திய மாகாணங்களும், பெராரும், கூர்க், டெல்லி, மதராஸ், வடமேற்கு எல்லை, ஒரிசா, பஞ்சாப், சிந்து, மற்றும் ஐக்கிய மாகாணங்கள். பிரித்தானிய இந்தியாவில், பல்வேறு அளவுகளில் பல சமஸ்தானங்களும் இருந்தன. இவற்றுள், ஒரு கோடிக்கு மேல் மக்கள்தொகையைக் கொண்ட ஐதராபாத் தொடக்கம், மிகச் சிறிய சமஸ்தானங்கள் வரை அடங்கி இருந்தன. இவற்றை விட வேறு இரு ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவில் சில நிலப்பகுதிகளை ஆண்டு வந்தன. போத்துக்கீச இந்தியா, கோவா, தமனும் தியுவும், தட்ராவும் நாகர் ஹவேலியும் ஆகிய கரையோரப் நிலப்பகுதிகளையும், பிரெஞ்சு இந்தியா, சண்டர்நகர், Yanaon, பாண்டிச்சேரி, காரைக்கால், மாகே ஆகிய ஐந்து நிலப்பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தன.

1947ல் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது, மேற்படி மாகாணங்களும், சமஸ்தானங்களும், இரு நாடுகளுக்கும் இடையே பங்கிடப்பட்டன. பஞ்சாப், வங்காளம் ஆகிய இரண்டும் மட்டும், சமய அடிப்படையில் பிரித்து வழங்கப்பட்டன. ஐதராபாத்தின் இசுலாமிய ஆட்சியாளர் சுதந்திரமாக இருக்க முயன்றார் என்றாலும், இந்தியப் படை தலையிட்டு அதனை இந்தியாவுடன் இணைத்தது. ஜம்மு காஷ்மீருக்கு இரு நாடுகளுமே உரிமை கோரின. பெரும்பான்மை மக்கள் இசுலாமியர்களாக இருந்தார்கள். இந்துவாக இருந்த ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளர் நாட்டை இந்தியாவுடன் இணைத்தார்.

1950 ல், இந்திய அரசியல் சட்டம் நடப்புக்கு வந்ததுடன், பலவகையான மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

முன்னர் மாகாணங்களாயிருந்த, பிரிவு A மாநிலங்கள், ஆளுனராலும், தெரிவுசெய்யப்பட்ட சட்டசபையாலும் ஆளப்பட்டன. இந்தப் பிரிவில் அடங்கிய ஒன்பது மாநிலங்களாவன: அஸ்ஸாம், மேற்கு வங்காளம், பீகார், பம்பாய், மத்தியப் பிரதேசம் (முன்னர் மத்திய மாகாணங்களும், பெராரும்), மதராஸ், ஒரிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் (முன்னாள் ஐக்கிய மாகாணங்கள்).

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளியிணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்