தெலுங்கானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தெலுங்கானா மண்டலம் அமைவு
தெலுங்கானா மண்டலம் வெள்ளையில்.

தெலுங்கானா அல்லதுதெலங்கானா (தெலுங்கு: తెలంగాణ) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஓர் பகுதியாகும். மற்ற இரு பகுதிகள் இராயலசீமை, கடற்கரை ஆந்திரா. தெலுங்கானா என்பதன் மொழிபெயர்ப்பு தெலுங்கர்களின் நாடு என்பதாக அமையும்.இங்குதான் தெலுங்கு மொழி பிறந்ததாகக் கருதப்படுகிறது.முன்னர் ஐதராபாத் நிசாம் ஆட்சியின் கீழிருந்த ஹைதராபாத் சமஸ்தானத்தின் தெலுங்கு பேசும் பகுதிகளை உள்ளடக்கியது.

கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கில் தக்காணத்தில் அமைந்துள்ள இந்த மண்டலத்தில் ஆந்திர மாவட்டங்கள் வாரங்கல்,அதிலாபாத்,கம்மம்,மகபூப்நகர்,நல்கொண்டா,ரங்காரெட்டி,கரீம்நகர்,நிசாமாபாத்,மேதக் ஆகியனவும் மாநிலத் தலைநகர் ஐதராபாத்தும் அடங்கும்.கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகள் இம்மண்டலத்தில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கின்றன.

பொருளடக்கம்

வரலாறு [தொகு]

தெலுங்கானா மண்டலம் மகாபாரதத்தில் தெலிங்கா நாடு எனக் குறிப்பிடப்படுகிறது.[1] இங்கு தெலவானா என்ற இனம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பாண்டவர்கள் பக்கம் சண்டை புரிந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.இதற்கு உறுதுணையாக வாரங்கலில் இருக்கும் பாண்டவுல குகாலு காட்டப்படுகிறது.

இங்கு சதவாகனர்கள் மற்றும் காகதியர்களின் பேரரசுகள் ஆண்டு வந்துள்ளனர்.கரீம்நகர் மாவட்டத்திலுள்ள கோடிலிங்கலா முதல் தலைநகரமாக விளங்கியது. சதவாகனர்கள் பின்னர் தரணிக்கோட்டைக்கு தலைநகரை மாற்றினர். கோடிலிங்கலாவில் அகழாய்வுகளின்போது சதவாகனர் காலத்து நாணயங்கள் கிடைத்துள்ளன.14ஆம் நூற்றாண்டில் இப்பகுதி முதலில் தில்லி சுல்தான்கள் ஆட்சியிலும் பின்னர் பாமனி,குதுப் சாஹி மற்றும் முகலாயப் பேரரசு ஆட்சிகளின் கீழ் இருந்தது. 18ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் மொகலாயப்பேரரசின் அழிவின்போது அசஃப்ஜாஹி அரசவம்சம் தனியான ஐதராபாத் நாட்டை நிறுவியது. பின்னர் பிரித்தானிய அரசுடன் உடன்படிக்கை செய்துகொண்டு இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் கூடுதல் மக்கள்தொகை கொண்ட சமஸ்தானமாக விளங்கியது.தெலுங்கானா எப்போதும் பிரித்தானிய அரசின் நேரடி ஆட்சியில் இருந்ததில்லை.

விடுதலைக்குப் பிறகான வரலாறு [தொகு]

1947ஆம் ஆண்டு இந்தியா பிரித்தானிய அரசிடமிருந்து விடுதலை பெற்றது.ஆனால் ஐதராபாத்தின் நிசாம் தமது தன்னாட்சியை தொடர விரும்பினார். புதிதாக அமைந்த இந்திய அரசு செப்டம்பர் 17,1948 அன்று இந்திய இராணுவத்தின் போலோ நடவடிக்கை மூலம் ஐதராபாத் நாட்டை அகப்படுத்திக்கொண்டது.

கம்யூனிஸ்ட்கள் தலைமையில் தெலுங்கானப் புரட்சி என அறியப்படும் விவசாயிகள் போராட்டம் 1946ஆம் ஆண்டு துவங்கி 1951வரை தொடர்ந்தது.

மொழிவாரி மாநிலம் மற்றும் தெலுங்கானா ஆந்திரா இணைப்பு [தொகு]

இந்தியா விடுதலை பெற்றபோது தெலுங்கு பேசும் 22 மாவட்டங்களில் பரவியிருந்தனர். இவற்றில் 9 நிசாம் ஆட்சியின் கீழிருந்த ஐதராபாத் சமஸ்தானத்திலும், 12 மதராஸ் மாகாணத்திலும் ஒன்று பிரெஞ்ச் காலனி ஏனாமிலும் இருந்தன. பொட்டி ஸ்ரீராமுலு என்ற தலைவரின் போராட்டத்தின் விளைவாக மதராஸ் மாகாணத்திலிருந்த 12 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு கர்நூல்|கர்நூலைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் 1953ஆம் ஆண்டு உருவானது.

திசம்பர் 1953இல் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு மொழிவாரி மாநிலங்கள் ஆணயத்தை ஏற்படுத்தினார். உள்துறை அமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் மேற்பார்வையில் நீதியரசர் ஃபசல் அலி தலைமையில் இயங்கிய இவ்வாணையம் தெலுங்கானா பகுதி மற்றும் புதிதாக உருவான ஆந்திரா பகுதி இரண்டிலும் பேசும் மொழி தெலுங்காக இருந்தபோதும் தெலுங்கானா மக்களின் விருப்பத்திற்கிணங்க இணைப்பதை தவிர்க்க வேண்டும் என தனது அறிக்கையில் 382ஆம் பத்தியில் குறிப்பிட்டிருந்தது.அவ்வறிக்கையின் 386ஆம் பத்தியில் தெலுங்கானா மக்களின் கவலைகளைக் கருத்தில்கொண்டு ஐதராபாத் மற்றும் ஆந்திராவை இரு மாநிலங்களாக வைத்துக்கொண்டு 1961 பொதுத்தேர்தலின் பின்னர் அமையும் ஐதராபாத் மாநில மக்களவையில் 2/3 பங்கினர் இணைய விரும்பினால் இவற்றை இணைக்கலாம் என தெரிவித்திருந்தது.

ஆனால் இந்தப் பரிந்துரையை ஏற்கமறுத்து இந்திய அரசு இரு பகுதிகளையும் இணைத்த ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தை நவம்பர்1, 1956இல் நிறுவியது.இருப்பினும் தெலுங்கானா மக்களின் கவலைகளை நீக்க இரு பகுதி மக்களுக்கும் சமமான அதிகார பகிர்வு,நிதி பகிர்வுகளை உறுதி செய்யும் பெருந்தகையாளர் உடன்பாடு (Gentlemen's agreement of Andhra Pradesh (1956)ஒன்றை அளித்தது.

தனித் தெலுங்கானா போராட்டம் [தொகு]

1969 இயக்கம் [தொகு]

1956ஆம் ஆண்டின் பெருந்தகையாளர் உடன்பாட்டின்படி தெலுங்கானாவிற்கு உரிய பகிர்வுகள் மற்றும் உறுதிகள் செயல்படுத்துவதில் குறைபட்டிருந்த மக்கள் 1969ஆம் ஆண்டு இறுதியில் இந்த உடன்பாடு முடிவுக்கு வரவிருப்பதை எதிர்த்து இந்த உடன்பாட்டை நீடிக்க வேண்டும் என குரல் எழுப்பினர். சனவரி 1969இல் ஓஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அது மெதுவே பரவி தெலுங்கானா மக்கள் இயக்கமாக உருப்பெற்றது. அரசு ஊழியர்கள் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் போராட்டத்திற்கு துணை நின்றனர்.இந்த இயக்கம் வன்முறையில் முடிந்து 360 மாணவர்களுக்கும் மேலானவர்கள் உயிரிழந்தனர்.[2]

ஆட்சிபுரிந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து வேறுபாடு கொண்டு வெளியேறிய காங்கிரஸ் தலைவர்கள் எம்.சென்னாரெட்டி தலைமையில் தெலுங்கானா பிரஜா சமிதி என்ற கட்சியை ஆரம்பித்தனர். அடுத்து வந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற போதும் செப்டம்பர் 1971இல் தமது கொள்கைகளைக் கைவிட்டு இவர்கள் காங்கிரசில் மீண்டும் இணைந்தது இந்த இயக்கத்திற்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியது.[3]

1990-2004களில் இயக்கம் [தொகு]

இருபது ஆண்டுகள் நீறுபூத்த நெருப்பாக இருந்த இயக்கத்திற்கு 1990களில் பாரதிய சனதா கட்சி தான் வெற்றி பெற்றால் தனித் தெலுங்கானா பெற்றுத் தருவதாக வாக்குறுதி கொடுத்து புத்துயிர் ஊட்டியது.ஆனால் தங்கள் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் எதிர்ப்பினால் அதனை நிறைவேற்றமுடியவில்லை.காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தனி தெலுங்கானா மாநிலத்தை ஆதரித்து தெலுங்கானா காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் அமைப்பை நிறுவினர்.[4][5][6][7][8] அதே நேரம் தனி மாநிலம் காணுவதையே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்ட தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி(TRS,தெராச )என்ற புதிய கட்சியை கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் துவக்கினார்.[9][10][11] [12][13][14]

2004 பின்னர் [தொகு]
TRS கொடி

2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரசும் தெராச கட்சியும் கூட்டணி அமைத்து தனி தெலுங்கானா காணும் வகைகளை ஆராய்வதாக உறுதி கூறி ஆட்சியைக் கைப்பற்றின.[15] மைய அரசின் பொது குறைந்த திட்டத்திலும் தெலுங்கானா மாநிலம் அமைப்பது இடம் பெற்றிருந்தது.அவ்வுறுதியின் அடிப்படையில் தெராசவும் கூட்டணி அரசில் பங்கேற்றது.[16] இரண்டாண்டுகள் எதுவும் நிகழாத நிலையில் செப்டம்பர் 2006இல் தெராச கூட்டணியிலிருந்து விலகியது.[17][18][19] காங்கிரசு அரசிற்கு தெலுங்கானா மாநிலம் அமைக்க அழுத்தம் கூடியது.[20][21][22]மார்ச் 2008இல் அனைத்து தெராச சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பதவி விலகி இடைத்தேர்தல்களுக்கு வழிவகுத்தனர்.[23][24] ஆனால் இந்த இடைத்தேர்தல்களில் தெராச தனது 16 சட்டமன்ற தொகுதிகளில் ஏழையும் 4 நாடாளுமன்ற தொகுதிகளில் இரண்டையும் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.[25]

இதனிடையே தெலுங்குதேச கட்சியின் தேவேந்தர் கௌட் என்ற கட்சியின் சட்டமன்ற துணைத்தலைவர் கட்சியிலிருந்து பிரிந்து நவ தெலுங்கானா பிரஜா கட்சியை துவக்கினார்.[26] [27] இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2008இல் தனது 26 ஆண்டு அரசியல் வாழ்வின் வரலாற்றில் ஓர் திருப்புமுனையாக தெலுங்குதேசம் கட்சியும் தெலுங்கானா மாநிலம் அமைவதை ஆதரித்தது.[28]

நவ தெலுங்கானா பிரஜா கட்சி நவம்பர் 2,2008இல் தெலுங்கானாவை தனி மாநிலமாக அறிவித்து அடங்கியுள்ள 10 மாவட்டங்களைக் குறிக்கும் விதமாக பத்து வெண்புறாக்களை பறக்க விட்டார்.[29]


2009 [தொகு]

2009 பொதுத் தேர்தல்களின் போது தெராச மற்ற எதிர்கட்சிகளுடன் மகாகூட்டணி அமைத்து காங்கிரசை தோற்கடிக்க உறுதி பூண்டனர்.[30][31][32]

புதிதாக திரைப்பட நடிகர் சிரஞ்சீவி துவங்கிய பிரஜா ராஜ்யம் கட்சியும் தெலுங்கானா அமைய வாக்குறுதி கொடுத்தனர்.நவ தெலுங்கானா கட்சி சிரஞ்சீவியுடன் இணைந்தனர். [33][34]

இருப்பினும் தேர்தல் முடிவுகள் காங்கிரசிற்கு ஆதரவாகவே இருந்தன;மாநிலத்தில் ஆட்சியையும் தக்க வைத்துக்கொண்டது.முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி தனித் தெலுங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.[35][36][37]


திசம்பர் 2009: தெராச தலைவர் கே. சந்திரசேகர் ராவ் (KCR)தமது கோரிக்கைக்காக சாகும்வரை உண்ணாநோன்பு துவக்கினார்.அவரது கைது மற்றும் உடல்நிலை மோசமடைவதை அடுத்து கடையடைப்புகளும் வன்முறையும் மீண்டும் எழுந்துள்ளது.[38] [39] [40] [41] [42]

திசம்பர் 2009, 10-ஆம் நாளன்று, இந்திய மைய அரசு, தெலுங்கானா மாநிலம் அமைவதற்கான ஏற்பாடுகளை செய்யும் என்று அறிவித்தது. இதற்கான அறிவிப்பை மைய உள் துறை அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் அதே நாளில் வெளியிட்டார்.[43]

காணத்தகுந்த இடங்கள் [தொகு]

கோல்கொண்டா கோட்டை
ஓஸ்மான் சாகர், காந்திப்பெட் ஏரி
  1. ஐதராபாத்
    1. சார்மினார் - நான்கு மாடங்களுடன் ஐதராபாத்தின் முதன்மை அடையாளம்;வளையல் சந்தை.
    2. ஃபலக்னுமா அரண்மனை -
    3. கோல்கொண்டா கோட்டை - வரலாற்றுச் சின்னம்
    4. சாலர் ஜங் அருங்காட்சியகம் - உலகின் மிகப்பெரிய, தனியொரு மனிதனால் உலகமுழுவதிலிருந்தும் சேகரிக்கப்பட்ட பொருட்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம். வேறெங்கும் காணக்கிடைக்காத அற்புதமான கலைப்பொருட்களை கொண்டது.
    5. மக்கா மஸ்ஜித் - கற்களால் கட்டப்பட்ட மசூதி-இந்தியாவின் மிகப் பெரிய மசூதிகளிலொன்று. பரம்பரியமிக்க கட்டிடமாக அங்கீகரிக்கப்பட்டது. இஸ்லாம் மதத்தினரின் மிகப் புனிதமான மெக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணால் தயாரிக்கப்பட்ட செங்கற்களை மசூதியின் நடுப்பகுதியின் அலங்கார வளைவுகளில் அமைத்து கட்டப்பட்டதால் மெக்கா மசூதி என்று பெயர் பெற்றது.
    6. பிர்லா கோளகம்
    7. ஹுஸேன் சாகர் - இரட்டை நகரங்களான ஐதராபாத்தையும் செகந்திராபாத்தையும் பிரிக்கும் செயற்கை ஏரி. தண்ணீர் விளையாட்டுகள், படகுப் போட்டிகள் நடத்தப்படும் ஏரி.
    8. துர்கம் செருவு- அழகான ஏரி.
    9. சில்கூர் பாலாஜி கோவில், விசா பாலாஜி எனவும் அறியப்படும். அமெரிக்கா போக விசா தங்கு தடையில்லாமல் கிடைக்க வழி செய்யும் கடவுள் என்று கொண்டாடப்படும் ஏழுமலையான் கோவில்.
    10. உஸ்மான் சாகர்- கன்டிப்பேட் எனவும் அறியப்படும். ஹைதராபாத் நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலொன்று.
    11. புரானி ஹவேலி - நிசாமின் அலுவல்முறை வசிப்பிடம்.
    12. சங்கி கோவில் -
    13. பிர்லா மந்திர் - பிர்லா அறக்கட்டளையால் கட்டப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் பளிங்குக்கல்லாலான திருக்கோயில்.
    14. ஸ்ரீ உஜ்ஜயினி மகாகாளி (மாங்க்காளி) கோவில் - செகந்திராபாத் தொடர்வண்டி நிலையம் அருகே உள்ள இக்கோவிலின் போனாலு விழா புகழ்பெற்றது. வருடமொருமுறை இங்கு நடைபெறும் மஹாங்காளி ஜாத்ரா என்னும் திருநாள் மிக பிரசித்தி பெற்றது.
    15. மாதாபூர் - தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையம். ஹைடெக் சிடி, ஆந்திராவின் ஸிலிகான் வேல்லி என பெயர் பெற்றது.
    16. எதுலாபாத் - செகந்தராபாத் நகரின் புறநகரான கட்கேஸ்வரம் அருகேயுள்ள பெரிய கிராமம். ஸ்ரீ ஆண்டாலம்மவாரி குடி எனப்படும் ஸ்ரீ ஆண்டாளின் திருக்கோயிலுள்ள தலம். ஆந்திராவின் ஸ்ரீ வில்லிபுத்தூர் என்று கொண்டாடப்படும் இக்கோவிலின் கருவறை முதலான அமைப்புகள்தமிழ்நாட்டு ஸ்ரீ வில்லிபுத்தூரைப் போலவே அமைந்து வழிப்பாட்டு முறைகளும் அத்தலத்தினுடையனவே.
  2. தெலங்காணாவின் பிற மாவட்டங்கள்
    1. நாகார்ஜுன சாகர் - கிருஷ்ணா ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணை - நல்கொண்டா மாவட்டம்
    2. ஸ்ரீராம்சாகர் - கோதாவரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணை - நிசாமாபாத் மாவட்டம்
    3. பீச்சுப்பள்ளி - (அனுமார் கொவில்) மெஹ்பூப்நகர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்மிக்க தொன்மையான ஹனுமான் ஆலயம்.
    4. ஆலம்பூர் - மெஹ்பூப்நகர் மாவட்டதில் துங்கபத்ரா- கிருஷ்ணா நதிகள் இணையுமிடத்தில் தக்ஷிண காசி என்று கொண்டாடப்படும், ப்ரஹ்மேஸ்வரர் மற்றும் ஜோகுலாம்பா தெய்வங்கள் கோவில் கொண்ட தலம். இங்கு பின்பற்றப்படும் ஒரு விசித்திரமான வழிப்பாட்டு முறையின் வாயிலாக பிள்ளைப் பேறு கிட்டும் என்று நம்பப்படுகிறது.
    5. வரங்கல் - இந்தப்பகுதியை ஆண்ட காக்கத்தீய சாம்ராஜ்ஜியத்தின் தலைநகர்.
    6. வரங்கல் கோட்டை, 11-12ஆம் நூற்றாண்டில் காக்கத்தீயர்கள் கட்டிய கோட்டை
    7. வரங்கல் பத்ரகாளி கோவில் மற்றும் ஆயிரங்கால் மண்டபம்
    8. வரங்கல்- ராமப்பா கோவில்
    9. வரங்கல் - பகால் ஏரி 1213 ஆண்டு காக்கத்தீய அரசன் கணபதிதேவன் செயற்கையாக உருவாக்கிய 30 சகிமீ பரப்புள்ள அழகிய ஏரி.
    10. பாஸரா - நாட்டிலுள்ள ஒரு சில சரஸ்வதி கோவில்களில் மிக முக்கியமான சரஸ்வதி கோவில் கோவில் வலைத்தளம்
    11. தேசிய பூங்காக்கள் - பகாலா,எதுரு நகரம்,பிராணஹிதா,கின்னேராசனி,கவால்,போச்சாரம்
    12. அனந்தகிரி காடு - அனந்தபத்மநாபர் கோவில் வலைத்தளம்
    13. மேதக்: அழகான தேவாலயம் மற்றும் கோட்டை
    14. பில்லல மர்ரி: மெஹ்பூப் நகர் மாவட்டதில் ஐநூறு ஆண்டுகள் பழமையானதும் சுமார் 5 ஏக்கர் அளவில் பரவியுள்ளதுமான மிகப்பெரிய ஆலமரம் உள்ள இடம். ஏறக்குறைய ஆயிரம் மக்கள் இதன் நிழலில் இளைப்பாறலாம். ஏராளமான மக்கள் சுற்றுலா வருகின்றனர்.
    15. பத்ராசலம்: கோதாவரிக்கரையில் அமைந்த புகழ்பெற்ற ராமர் கோவில். பக்த ராமதாஸ் ஆராதித்த கோவில்.
    16. யாதகிரிகுட்டா: லக்ஷ்மிநரசிம்மர் கோவில்கொண்ட சிறு குன்று. திருப்பதிக்கு ஒப்பான புகழ் மிக்க தெலங்காணா கோயில்.
    17. காளேசுவரம்: ஆந்திர-மஹாராஷ்ட்டிர எல்லையில் கோதாவரி நதிக்கரையில் அமைந்திருக்கும் மிக பிரசித்திப்பெற்ற காளேஸ்வர முக்தீஸ்வர சுவாமி எனப்படும் சிவன் கோயில். ஹைதராபாதிலிருந்து 277 கி.மீ தொலைவிலும்,கரீம் நகர் பட்டணத்திலிருந்து 125 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்கு கோதாவரி நதியோடு பிராணஹிதா என்ற நதியும், கண்ணுக்குத்தெரியாத கோவிலிருந்து வரும் மற்றுமொரு நதி அந்த்தர்வாஹினியாய் கலப்பதால் தென்நாட்டு திரிவேணி சங்கமம் என பெயர்பெற்றது. கோவிலின் மிக முக்கியமான சிறப்பம்சம் இக்கோவிலின் கருவறை பீடத்தில் சிவனுக்கு (காளேஸ்வரர்) ஒரு லிங்கமும், எமனுக்கு (முக்தீஸ்வரர்) மற்றொரு லிங்கமுமாக இரண்டு லிங்கங்கள் இருப்பதுதான்.
    18. நாகுனுர் கோட்டை:கரீம் நகர் பட்டணத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலுள்ள காக்கத்தீய வமிசத்து மன்னர்களின் அற்புதமான கோட்டை.அவர்களின் ஆளுமையின் வல்லமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.கோட்டைக்குள் அனேக பாழடைந்த கோவில்களின் சிதிலங்கள் காணப்படுகின்றன.ஒரு சிவன் கோவிலின் தூண்களும்,தாழ்வாரங்களும் மிக மிக கவர்ச்சிகரமாக உள்ளன. உட்புற பகுதிகளில் உள்ள உத்தரங்களில் இசைக்கலைஞர்கள் மிருதங்கம் மற்றும் இதர இசைக்கருவிகளில் இசைப்பதுபோலவும், ஒயிலான நிலைகளில் பெண்கள் நாட்டியமாடுவதுபோலவும் வடிவமைத்திருக்கும் சிற்பங்கள் கண்ணுக்குப் பெரு விருந்து
    19. துலிக்கட்டா: கரீம்நகரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள மிகப்புராதனமான பௌத்த சமய சான்றுகளுடைய இடம். வெளிநாட்டு யாத்திரீகர் மெகஸ்தனிஸ் தன்னுடைய இண்டிகா என்ற நூலில் இந்த இடத்தைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார். கி.மு.இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை சாதவாஹன மன்னர்களின் ஆட்சியில் மிகச் செழிப்பாகயிருந்த பகுதி. பல புத்த ஸ்தூபங்களும் மற்றும் புத்த சமய சின்னங்களும் ஏராளமாக உள்ளன. வருடமொரு முறை மூன்று நாட்கள் சனவரி மாதத்தில் இங்கு நடக்கும் சாதவாஹன விழா புகழ் மிக்கது. உலக முழுவதிலுமிருந்தும் அனேக புத்த மதத் துறவிகள் இந்த இடத்திற்கு வருகை தருகிறார்கள்.
    20. கொண்டகட்டு :கரீம்நகரிலிருந்து 35 கி.மீ தொலைவிலுள்ள அனுமார் கோவில், கொண்டலராயா மற்றும் பொஜப்போட்டானா குகைகள்.
    21. மொலாங்கூர் கிலா : கரீம்நகர் மாவட்டம்.
    22. மன்தானி : பழம் வேத பாடசாலை.கரீம் நகர் பட்டணத்திலிருந்து 70 கி,மீ தூரத்தில் கோதாவரி நதிக் கரையில் அமைந்துள்ளது.வேதங்களை கற்கும், கற்பிக்கும் மிகப் புராதனமான இடம். வேதங்களையும் சாஸ்திரங்களையும் நன்கு கற்ற ஆயிரம் பிராமணக்குடும்பங்கள் இன்றும் இங்கு வாழ்வதாகக் கூறப்படுகிறது. சமஸ்கிருத சொல்லான 'மந்த்ர கூட்டம்' பெயர்க்கான வேர்ச்சொல். உள்ளூர் வேத விற்பன்னர்கள் மிகுந்த பய பக்தியுடன் இந்த ஊரை மந்த்ரபுரி என்று குறிப்பிடுகின்றனர். திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தினர் ஒரு வேத பாட சாலையை நிறுவியுள்ளனர்
    23. வேமுலவாடா -கரீம் நகர் பட்டணத்திலிருந்து 38 கி.மீ தொலைவிலுள்ள இந்த ஊரில் சாளுக்கிய மன்னர்களால் கி.பி 750--975 ஆண்டுகளுக்கிடையே கட்டப்பட்ட ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலுள்ளது.ஆந்திர பிரதேச மாநிலத்தில் அதிக வருவாய் உள்ள கோவில் நகரங்களில் ஒன்று. இந்த கோவிலின் வளாகத்தினுள் ராமன், லட்சுமணன், லட்சுமி,கணபதி, பத்மனாபர் போன்ற தெய்வங்களுக்கும் கோவில்களுண்டு. மற்றோரு இடமான ஸ்ரீ பீமேஸ்வரரின் திருக்கோவில் மிக பிரசித்தி பெற்றது. மிக சுவாரசியமான விடயம் இந்தக்கோவிலுக்குள் கட்டப்பட்டிருக்கும் சுமார் 400 ஆண்டுகள் பழமையான ஒரு மசூதிதான். இக்கோவில் தெய்வத்தின் தீவிரமான ஒரு முசுலீம் பக்தனின் நினைவை போற்ற கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.
    24. உமா மகேசுவரம் - மெஹ்பூப் நகர் மாவட்டத்தில் மிக அடர்ந்த நல்லமலை காடுகளுக்கிடையே ஒரு உயர்ந்த மலைக்குன்றின்மேல் அமைந்துள்ள சிவபெருமானின் தலம். மல்லிகார்ஜுன சுவாமி (சிவன்) பிரமராம்பா அம்பாளின் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட திருக்கோயில் உள்ளது.குன்றின் கீழிருந்து 5கி.மீ தூரமுள்ள கோவிலுக்கு செல்வது சற்று கடினமானது.இன்றும் எண்ணற்ற சாதுக்களுக்கு உறைவிடம். கருவறைக்கு அருகிலுள்ள ஒரு மர்மமான குணாதிசயம் கொண்ட பாபநாசனம் என்ற இடத்தில் ஆண்டுமுழுவதும் எவ்வளவு இரைத்தாலும் ஒரு குறிப்பட்ட அளவு நீரே எப்போதும் இருக்கும்படியாக உள்ளது. இந்த இடத்திற்கு தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது இன்னும் அறியப்படாததாகவே இருக்கிறது.
    25. கத்வால் கோட்டை
    26. கொலனுபாக்க: நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சுமார் 2000 ஆண்டுகள் பழமையான ஒரு சமணர்களின் கோவில். குல்பாக்ஜி என்று சமணர்களால் போற்றப்படும் தலம்.இக்கோவிலில் சமணக் கடவுளர்களான ரிஷபா, நேமிநாத், மஹாவீர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளோடு மற்ற எட்டு தீர்த்தங்கரர்களின் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. இப்போதுள்ள அமைப்பிலேயே இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. கி.பி.நான்காம் நூற்றாண்டிற்கு முன்னர் இப்பகுதியில் சமண சமயம் தழைத்தோங்கிய போது இந்தக் கோயில் அதி முக்கியமான இடமாக திகழ்ந்தது. சுவேதாம்பரா எனும் சமணமதப் பிரிவினருக்கு இன்றும் மிகப்பெரிய யாத்திரை தலம்.

மேற்கோள்கள் [தொகு]

  1. http://en.wikipedia.org/wiki/Kingdoms_of_Ancient_India
  2. http://www.hinduonnet.com/fline/fl2318/stories/20060922003303400.htm
  3. "India - Regionalism - Telangana". US Library of Congress (September 1995). பார்த்த நாள் 2008-02-16.
  4. "Sonia urged to back demand for separate Telangana". The Hindu. 2000-08-12. http://www.hinduonnet.com/2000/08/12/stories/0412201q.htm. Retrieved 2008-02-16. 
  5. "MLAs not to meet PM, Advani on Telangana". The Hindu. 2000-09-21. http://www.hinduonnet.com/2000/09/21/stories/02210008.htm. Retrieved 2008-02-16. 
  6. "Telangana Cong. Forum warns of 'direct action'". The Hindu. 2001-05-15. http://www.hinduonnet.com/2001/05/15/stories/04152013.htm. Retrieved 2008-02-16. 
  7. "'Only Cong. can get separate Telangana'". The Hindu. 2001-05-20. http://www.hinduonnet.com/2001/05/20/stories/0420201h.htm. Retrieved 2008-02-16. 
  8. "'25 Cong. MLAs pledge support for Telangana'". The Hindu. 2001-06-05. http://www.hinduonnet.com/2001/06/05/stories/04052011.htm. Retrieved 2008-02-25. 
  9. Amin Jafri, Syed (2001-05-17). "Massive rally demands Telangana state". rediff.com. பார்த்த நாள் 2008-02-16.
  10. "Telangana finds a new man and moment". The Hindu. 2001-05-19. http://www.hinduonnet.com/2001/05/19/stories/0419201x.htm. Retrieved 2008-02-16. 
  11. Chandrakanth, W (2002-12-15). "Statehood for Telangana on Cong. agenda: TCLF". Sothern States (The Hindu). http://www.hinduonnet.com/2002/12/15/stories/2002121502710400.htm. Retrieved 2008-02-16. 
  12. http://www.telangana.org/Papers.asp
  13. http://message2.myvideowebstream.com/view/?id=WGU66W5VLKHQNABY65UW
  14. http://planningcommission.nic.in/reports/sereport/ser/std_pattrnAP.pdf
  15. "Controversy over SRC blows over". Andhra Pradesh (The Hindu). 2004-03-05. http://www.hindu.com/2004/03/05/stories/2004030505830600.htm. Retrieved 2008-02-16. 
  16. "Common Minimum Programme of the Congress led United Progressive Alliance". Indian National Congress (May 2004). பார்த்த நாள் 2008-02-16.
  17. "Sub-committee to look into demand for Telangana". The Hindu. 2004-11-27. http://www.hindu.com/2004/11/27/stories/2004112706820101.htm. Retrieved 2008-02-16. 
  18. Amin Jafri, Syed (2006-09-09). "'Take steps for separate Telangana'". rediff.com. பார்த்த நாள் 2008-02-16.
  19. "TRS withdraws support to UPA govt". rediff.com (2006-09-23). பார்த்த நாள் 2008-02-16.
  20. "Telangana Congress leaders to visit Delhi". The Hindu. 2008-01-07. http://www.hindu.com/2008/01/07/stories/2008010763900100.htm. Retrieved 2008-02-16. 
  21. "TRS sets deadline till March 6". Andhra Pradesh (The Hindu). 2008-01-17. http://www.hindu.com/2008/01/17/stories/2008011753280600.htm. Retrieved 2008-02-16. 
  22. "Telangana Congress leaders talk tough". The Hindu. 2008-01-19. http://www.hindu.com/2008/01/19/stories/2008011956750400.htm. Retrieved 2008-02-16. 
  23. http://www.hindu.com/2008/03/04/stories/2008030456740100.htm
  24. http://www.hindu.com/2008/03/05/stories/2008030554420600.htm
  25. http://www.hindu.com/2008/06/02/stories/2008060255211200.htm
  26. http://www.hindu.com/2008/06/24/stories/2008062456910100.htm
  27. http://www.hindu.com/2008/07/12/stories/2008071254460600.htm
  28. TDP announces support to creation of Telangana state
  29. http://www.financialexpress.com/news/Goud-declares-Telangana-separate-state/380654/
  30. TDP promise T-State
  31. CPI for T-State
  32. Vote out Congress: KCR
  33. NTP merges with PRP
  34. PRP for T-state
  35. YSR provoking rayalaseema people against Telangana after first phase of elections'09(youtube video in telugu)
  36. YSR asks voters to be wary of TRS
  37. YSR’s remarks on Telangana touch off political row
  38. Government forcibly administers saline to end KCR's fast
  39. KCR protest confuses miners
  40. Colleges in Telangana closed for 15 days
  41. Constable shoots himself, dies
  42. Telangana bandh total on first day
  43. அமைகிறது தெலுங்கானா

புற இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தெலுங்கானா&oldid=1395156" இருந்து மீள்விக்கப்பட்டது