முகலாயப் பேரரசு
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முகலாயப் பேரரசு உச்ச நிலையில் இருக்கும்பொழுது, அக்காலத்தில் பாரதம் என்று அழைக்கப்பட்ட இந்தியாவின் பெரும் பகுதியையும், ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதி, பாகிஸ்தான் என்பவற்றையும் உள்ளடக்கிய பேரரசாக இருந்தது. கிபி 1526 தொடக்கம், 1712 வரையான காலப்பகுதியில் இந்த அரசு நிலைபெற்றிருந்தது. துருக்க-பாரசீக/துருக்க-மங்கோலிய திமுரிட் தலைவனான பாபர், 1526 ஆம் ஆண்டில் கடைசி டில்லி சுல்தானான, இப்ராஹிம் லோடி என்பவரை, முதலாவது பானிபட் போரில் தோற்கடித்து முகலாய அரசைத் தோற்றுவித்தார். முகல் என்பது மங்கோலியர் என்பதற்கான பாரசீக மொழிச் சொல்லாகும். முகலாயர் இஸ்லாம் சமயத்தைச் சேந்தவர்கள்.
பேரரசின் பெரும்பகுதி, இரண்டாவது முகலாய மன்னனான ஹுமாயூனின் காலத்தில், பஷ்தூன் ஷேர் ஷா சூரி என்பவரால் கைப்பற்றப்பட்டது. பேரரசன் அக்பர் காலத்திலும், குறிப்பிடத்தக்க அளவு விரிவடைந்த இப் பேரரசு, ஔரங்கசீப்பின் ஆட்சியின் இறுதிக்காலம் வரை தொடர்ந்து விரிவடைந்து சென்றது.
பொருளடக்கம் |
முகலாயப் பேரரசர்கள்[தொகு]
| முகலாயப் பேரரசர்கள் | ||||||||||||
| பேரரசன் | ஆட்சியேற்பு | ஆட்சி முடிவு | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பாபர் | 1526 | 1530 | ||||||||||
| ஹுமாயூன் | 1530 | 1540 | ||||||||||
| இடையீடு * | 1540 | 1555 | ||||||||||
| ஹுமாயூன் | 1555 | 1556 | ||||||||||
| அக்பர் | 1556 | 1605 | ||||||||||
| சகாங்கீர் | 1605 | 1627 | ||||||||||
| சா சகான் | 1627 | 1658 | ||||||||||
| ஔரங்கசீப் | 1658 | 1707 | ||||||||||
| முதலாம் பகதூர் சா | 1707 | 1712 | ||||||||||
* ஆப்கானிய ஆட்சி(சேர் சா சூரியும் வழி வந்தோரும்)
பாபர் தோற்றுவித்த முகலாயப் பேரரசு[தொகு]
முகலாயப் பேரரசை தோற்றுவித்த பாபர் முதலில் பெர்கானா என்னும் சமவெளியில் உள்ள நாட்டையே ஆண்டு வந்தார். இவரது முன்னோர்கள் ஆண்டு வந்த சமர்கந்து பகுதியை மீண்டும் பிடிக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் தன்னுடைய பெர்கானாப் பள்ளத்தாக்கையும் இழந்ததால் இந்துகுஷ் மலையை தாண்டி வந்து காபூலைப் பிடித்து ஒரு சிற்றச ஆட்சியை நிறுவினார். இவரது முன்னோர் காலத்தில் தைமூர்களின் கீழ் பஞ்சாப் பகுதியை திருப்பிக் கொடுக்கும் படி தில்லி சுல்தானான இப்ராகிம் லோடியை பாபர் வேண்டினார். அதற்கு தில்லி சுல்தான் மறுத்தார். இதனால் ஏற்பட்ட பானிப்பட் போரில் ஒரு இலட்சம் வீரர்களைக் கொண்ட தில்லி சுல்தானின் சேனையை வென்று முகலாயப் பேரரசை தோற்றுவித்தார். இராசபுத்திரர்களையும் ஆப்கானியர்களையும் வென்று வட இந்தியாவில் பேரரசர் ஆனார்.
இவர் தன் இறுதிக்காலங்களில் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். இதை பயன்படுத்திக் கொண்ட பாபரின் தங்கையின் கணவரான மாது காஜ்வா தன்னை அரசராக்கி கொள்ளலாம் என நினைத்திருந்தார். ஆனால் பாபரின் மகனான ஹூமாயூனால் இது தடைப்பட்டது. இவரின் ஆட்சிக்குப்பின் இவரது மகனான ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சியில் இந்தியாவை இழந்து மீண்டும் போரிட்டுப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்பர் ஆட்சியில் முகலாய அரசு[தொகு]
அக்பர் ஆட்சியில் மொகலாய அரசு விரிவாக்கத்தில் மால்வா (1562), குஜராத் (1572) , வங்கம் (1574) , காபூல் (1581) ,காஷ்மீர்காஷ்மீர் (1586) மற்றும் காண்டேஷ் (1601) ஆகியவைகள் மற்ற பகுதிகளில் வெற்றி கொண்டவைகளில் அடங்கும். அக்பர் தான் வெற்றி பெற்ற ஒவ்வொரு மாகாணத்திலும் அவருடைய அதிகாரத்தின் கீழ் ஒரு ஆளுனரை நியமித்தார்.
அவுரங்கசீப் ஆட்சியில் முகலாயப் பேரரசின் முடிவு[தொகு]
அவுரங்கசீப் (1618-1707)முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜின் தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார். இவர் ஆலம்கீர் (பாரசீக மொழியில் ’ஆலம்கீர்’ எனில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் என பொருள்) என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது. இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார். முகலாய மன்னர்களில் அக்பரும் அவுரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள்.
இராசபுத்திரர் சில காலங்களாக முகலாயப் பேரரசோடு நட்புறவு கொண்டே இருந்தனர். ஆனால் அவுரங்கசீப் ஆட்சியில் நிலை மாறியது. அவுரங்கசீப் மார்வா நாட்டு அரசர் இறந்தவுடன் அவரது இரண்டு மகன்களையும் இசுலாத்தை தழுவச் சொல்லி வற்புறுத்தினார். இதனால் இராசபுத்திரருக்கும் முகலாயருக்கும் பெரும்பகை ஏற்பட்டது. இரண்டு தரப்புமே மற்ற தரப்பு மதத்தின் வழிபாட்டு இடங்களை இடித்தனர். சீக்கியர் மதகுருவான குரு தேஜ் பகதூர் அவுரங்கசீபை எதிர்த்ததால் அவருக்கு அவுரங்கசீப் மரணதண்டனை கொடுத்து கொன்றார்.
சமகாலத்தில் சிவாஜியின் கீழ் மராட்டியர் தக்காணத்தில் ஒரு பலமிக்க அரசை நிறுவியிருந்தனர். இவரின் ஆட்சியில் மராட்டிய மன்னர் சிவாஜி இறந்ததால் மராட்டியர் நட்டை பிடித்ததோடு சிவாஜியின் மகனான சம்பாஜியை சிறை பிடித்தார். சம்பாஜியின் மகனான சாகுவை கவனித்து வந்த இராசாராமோடு போரிட்டு மராட்டியத்தில் சில கோட்டைகளை அவுரங்கசீப் பிடித்துக் கொண்டார். இராசாராம் தமிழக்த்தில் இருந்த செஞ்சி கோட்டைக்கு வந்துவிட்டார். இவ்வாறு சிவாஜியின் கீழ் இருந்த மராட்டியரோடு ஏறக்குறைய தென்னிந்தியாவில் 25 வருடங்களுக்கு மேலாக அவுரங்கசீப் பல போர்களை சந்திக்க வேண்டி இருந்தது. மேலும் மராட்டியில் பல கோட்டைகளை பிடிக்க எண்ணி முடியாத அவுரங்கசீப் அந்த மனவருத்தத்தாலேயே ஆமத் நகரில் இறந்தார். பேரரசர் தெற்கே வந்ததால் வட இந்தியாவில் முகலாயப் பேரரசு சிதைய ஆரம்பித்து நாளடைவில் மறைந்தது.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
- முகலாயப் பேரரசு பிபிசி யிலிருந்து)
- முகலாயப் பேரரசு
- லாகூரின் முகலாயர் கால மதிலால் சூழப்பட்ட நகரம் - நிழற்படங்கள்
- The Great Mughals
- முகலாயப் பேரரசின் பூங்காக்கள்
- Indo-Iranian Socio-Cultural Relations at Past, Present and Future, by M.Reza Pourjafar, Ali * A. Taghvaee, in - Web Journal on Cultural Patrimony (Fabio Maniscalco ed.), vol. 1, January-June 2006
- Adrian Fletcher's Paradoxplace - PHOTOS - Great Mughal Emperors of India
|
||||||||