இந்தியாவின் ஊராட்சி மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


ஊராட்சி மன்றம் (பஞ்சாயத்து ராஜ்) தெற்காசிய அரசு அல்லது அரசியல் முறை குறிப்பாக இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகின்றது. பஞ்சாயத்து என்பதின் பஞ்ச் என்பது ஐந்தையும் யாத் என்பது மன்றம் பேரவை அ கூட்டம் இவைகளைக் குறிக்கும் கிராம வழக்கு சொல்.


கிராமங்களில் கிராம வாழ் மக்களிடையே ஏற்படும் சிக்கல்கள் மற்றும் சர்ச்சைகள் இவைகளை இவர்களின் குழுக்கள் மூலம் தீர்வு காண்பது வழிவழியாகப் பின்பற்றி வந்த செயலாகும். ஊராட்சி மன்றங்கள் சாதிய அமைப்புகளால் சில இந்தியப் பகுதிகளில் காப் என்ப்படும் குழுவைக் குறிப்பதல்ல. இது சாதிய அமைப்புகளில் இருந்து வேறுபட்டது. பஞ்சாயத்து ராஜ் என்ற சொல் மகாத்மா காந்தியால் பிரித்தானிய ஆளுகையின் போது அறிமுகப் படுத்தப்பட்டது. அவருடைய கிராமங்களை நேசிக்கும் பார்வையில், கிராம சுவராஜ் கோட்பாட்டின் படி இச்சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. (கிராம சுயாட்சி அ சுய ஆளுமை). தமிழில் இது ஊராட்சி என்ற சொல்லால் வழங்கப்படுகின்றது.

அறிமுகம்[தொகு]

கிராமங்களுக்கு அதிக முக்கயத்துவம் கொடுக்கும் விதமாக இந்திய அரசியலமைப்பில் 73 வது திருத்தமாக 1992 ல் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தச்சட்டத்தின் படி கிராம ஊராட்சிகள் அதிக ஆளுமை பெற்றவைகளாகும் வகையில் அதிகார பரவாலாக்கம், பொருளாதார வரைவு மற்றும் சமூக நீதி போன்ற கிராம ஊராட்சித் தொடர்பான 29 செயல் திட்டங்களை 11 வது அட்டவணையில் வெளிப்படுத்தியதின் விளைவாக கிராமங்கள் அதிக முக்கியத்துவம் கண்டது.

நிதி[தொகு]

  • ஊராட்சிகள் அதன் நிதி ஆதாரங்களை மூன்று வழிகளில் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளன. -
    • உள் அமைப்புகள் பெற்றுக் கொள்ளும் விதமாக மைய நிதி ஆணையம் பரிந்துரைத்ததின் படி பெற்றுக் கொள்ளலாம்.
    • மைய ஆதரவளிப்போர் குழக்கள் மூலம் நிதி ஆதாரங்கள் அமல்படுத்தப்படுகின்றது.
    • மாநில அரசின் மாநில நிதி ஆணையப் பரிந்துரையின் படி நிதி ஆதாரங்கள் வழங்குகின்றது.

வரலாறு[தொகு]

ஊராட்சி மன்றம் ஏப்ரல் 24, 1993 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் 1992, 73 வது திருத்தச் சட்டத்தின்படி இந்தியாவில் அமல் படுத்தப்பட்டது. டிசம்பர் 24, 1996 பயங்குடியினர் வாழும் பகுதிகளான எட்டு மாநிலங்களில் (ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஒரிசா மற்றும் இராஜஸ்தான் ) விரிவுப் படுத்தப்பட்டது.

பிற இந்திய மொழி பெயர்கள்[தொகு]

மத்திய இந்தியாவில் பஞ்சமண்டலிகள்
பீகாரில் கிராம ஜன பாதங்கள்
இராஜஸ்தானில் பஞ்ச குலங்கள் என்ற சொல்லால் வழங்கப்படுகின்றது.

வெளிப்புற இணைப்புக்கள்[தொகு]