இந்தியத் தலைமை நீதிபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Emblem of India.svg

இக்கட்டுரை
இந்திய அரசு மற்றும் அரசியல்
என்ற தொடரின் ஒரு பகுதி



மற்ற நாடுகள் · அரசியல் நுழைவாயில்
இந்திய அரசு நுழைவாயில்
 பார்  பேச்சு  தொகு 

இந்தியத் தலைமை நீதிபதி இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இவரே இந்தியாவின் மிக உயர்ந்த நீதிபதிப் பதவியாகும். உயர்ந்த நீதிபரிபாலணம் கொண்ட பதவியும் ஆகும்.


தலைமை நீதிபதி பணி உச்ச நீதிமன்றத்தை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டும் கொண்டதல்ல அதன் அமர்வில் பங்குப் பெற்று அதன் நீதிபரிபாலணத்தை நிலைநிருத்தும் கடப்பாடும் கொண்டவர்.

நிர்வாக முறையில் தலைமை நீதிபதியால் நிறைவேற்றப்படும் கடமைகள்.

  • வழக்கின் தன்மைக்கு ஏற்றவாறு நீதிபதிகளை நியமிக்கும் கடமைக் கொண்டவர்.
  • வருகையை கண்காணிக்க வேண்டும்.
  • நீதிமன்ற அலுவலர்களை நியமிக்கவேண்டும்.
  • பொதுவான மற்றும் இதர உச்ச நீதிமன்றம் தொய்வின்றி செயல்படுவதற்கு இன்றியாமையாத மேற்பார்வை சம்பந்தமான செயல்களிலும் அவர் ஈடுபடவேண்டும்.

வழக்குகளை தரம் பிரித்து அதன் தன்மைகளுக்கு ஏற்ப அமர்வுகளை தலைமை நீதிபதி திர்மானிக்கின்றார். இது இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி உச்சநீதிமன்றத்தின் விதி 145, 1966 ன் படி அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரமாகும். இவ்வதிகாரத்தின் படி இதர நீதிபதிகளின் அமர்வு மற்றும் பணிகளை நிர்ணயிக்க அவருக்கு உரிமையளிக்கின்றது.


பொருளடக்கம்

[தொகு] தலைமை நீதிபதி நியமனம்

இந்திய அரசியலமைப்பு விதி 124 ல் குறிப்பிட்டுள்ளபடி நீதிபதிகள் நியமனம செய்யப்படுகின்றனர் அதன்படியே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் நியமனம் செய்யப்படுகின்றார், அதைத்தவிர தனியான விதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்திற்கென தனியான விதிகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதனால் நீதிபதிகள் நியமனங்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நிதிபதி உட்பட (பல மூத்த நீதிபதிகளினிடையே) இந்திய அரசின் சார்பில் முன்மொழியப்பட்டு குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகின்றனர்.


[தொகு] நியமன சர்ச்சை

இதன் காரணமாகவே பல நேரங்களில் விதிகளுக்கு முரணாக மூத்த நீதிபதிகள் பலர் இருக்கும் தருணத்தில் அவர்களைவிட இளையவர்களான நீதிபதிகளுக்கு பணி நியமனம் செய்ய இந்திய அரசால் முன் மொழியப்பட்டு நியமனம் செய்யப்படுகின்றனர். தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட எ என் ராய் தனக்கு முன் உள்ள மூன்று நீதிபதிகளை பின் தள்ளும் விதமாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரசால் முன்மொழியப்பட்டு நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நியமனம் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. அவசர கால பிரகடனத்துக்கு ஆதரவு அளிக்கவே இந்திரா காந்தியால் இந்த முரண்பாடான நியமன்ம் மேற்கொள்ளப்பட்டதாகக் திரு இராஜ் நாராயண் (ஜனதா கட்சி) அவர்களால் விமர்சிக்கப்பட்டது.

[தொகு] இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள்




[தொகு] வெளி இணைப்புக்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்