இந்தியாவின் மக்கள்தொகை பரம்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்தியா உலகின் நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தையே கொண்டிருந்தாலும் உலகின் 17.5 சதவீத மக்கள் தொகையைக்கொண்டுள்ளது. இந்தியாவை விட அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா மட்டுமேயாகும். ஏறக்குறைய 40 % இந்தியர்கள் 15 வயதிற்கு குறைந்தவர்களாவர். 70 %க்கும் அதிகமான மக்கள் இந்தியாவின் 5,50,000 க்கும் அதிகமான கிராமங்களில் வாழ்கின்றனர். மீதமுள்ள மக்கள் 200-க்கும் மேற்பட்ட பெரு மற்றும் சிறு நகரங்களில் வாழ்கின்றனர்.

இந்திய அரசானது மொத்தம் 22 மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரித்துள்ளது. 80%-க்கும் அதிகமான மக்கள் இந்துக்கள் ஆவர். மேலும் இந்தியாவில் 13.4 விழுக்காடு இசுலாமியர்கள் வசிக்கின்றனர். இந்தியா உலகிலுள்ள இசுலாமிய மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றாகும். கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், சமணர்கள், மற்றும் புத்த மதத்தினரும் இங்கு வாழ்கின்றனர்.

மக்கள் தொகை[தொகு]

மக்கள் தொகை என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டில் அல்லது அதன் ஒரு பகுதியில் வாழ்கின்ற அந்நாட்டுக் குடிமக்களின் எண்ணிக்கையாகும். பெரும்பாலான நாடுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில், பொதுவாகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துகின்றன.

இந்தியாவின் மக்கள்தொகை[தொகு]

இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியாக உள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த எண்ணிக்கை தெரிய வந்துள்ளது. உலக மக்கள்தொகையில் இது 17.5 சதவீதமாகும். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் குடிமக்களின் எண்ணிக்கை 18 கோடி அதிகரித்துள்ளது.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடி. இது உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதமாகும். அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாக்கித்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் மக்கள்தொகை முழுவதையும் கூட்டினால், அதை விட அதிகமாக இந்திய நாட்டின் மக்கள்தொகை உள்ளது.

 • ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 லட்சம்.
 • பெண்கள் எண்ணிக்கை 58 கோடியே 65 லட்சம்.

படிப்பறிவு[தொகு]

 • படித்தவர்கள் எண்ணிக்கை 74 விழுக்காடு.
 • படிக்காதவர்கள் 26 விழுக்காடு.
 • 2001ம் ஆண்டில் படித்தவர்களின் எண்ணிக்கை 64.83 விழுக்காடு.
 • 2011ம் ஆண்டில் 74.04 விழுக்காடு.
 • 10 ஆண்டில் படித்தவர்கள் எண்ணிக்கை 9.21 விழுக்காடு அதிகரித்துஉள்ளது

பெண்கள்[தொகு]

 • 2001ம் ஆண்டில் பெண்களில் 53.67 விழுக்காடு.
 • 2011ம் ஆண்டு 65.46 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

ஆண்கள்[தொகு]

 • 2001ம் ஆண்டு ஆண்களின் எண்ணிக்கை 75.26 விழுக்காடு.
 • 2011ம் ஆண்டு, 82.14 விழுக்காடு.

10 ஆண்டில் ஆண்களை விட பெண்களின் படிப்பறிவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

அதிகம் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள்[தொகு]

 • கேரளாவில் 93.91 விழுக்காடு குடிமக்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.

குறைவாக எழுத, படிக்க தெரிந்தவர்கள்[தொகு]

 • பீகார். இங்கு 63.82 விழுக்காடு குடிமக்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர்

மக்கள் தொகை அடர்த்தி[தொகு]

 • மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. இங்கு, 19 கோடியே 90 லட்சம் மக்கள் உள்ளனர்.
 • மிகக்குறைவான மக்கள்தொகை லட்சத்தீவில் உள்ளது. இங்கு, 64 ஆயிரத்து 429 பேர் வசிக்கின்றனர்.
 • உ.பி.மகாராட்டிர மாநிலங்களின் மக்கள்தொகையை சேர்த்தால், அமெரிக்காவின் மக்கள்தொகையை விட அதிகமாகும்.
 • அதிக மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாக டில்லியின் வடகிழக்கு மாவட்டம் உள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 37 ஆயிரத்து 346 பேர் வசிக்கின்றனர்.
 • மக்கள் நெருக்கம் குறைவாக இருப்பது, அருணாச்சலப் பிரதேசம் திபாங் பள்ளத்தாக்கு பகுதியில். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒருவர் மட்டுமே வசிக்கிறார்.
 • உ.பி.,க்கு அடுத்தபடியாக மக்கள்தொகை அதிகம்கொண்ட மாநிலங்கள்: மகாராட்டிரா- 11 கோடியே 23 லட்சம் , பீகார்-10 கோடியே 38 லட்சம், மேற்கு வங்கம் - 9 கோடியே 13 லட்சம், ஆந்திரா- 8 கோடியே 46 லட்சம். உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட சீனா. இதன் எண்ணிக்கை உலக மக்கள்தொகையில் 19.4 சதவீதமாகும்.

தமிழ்நாடு மக்கள்தொகை[தொகு]

 • தமிழக மக்கள் தொகை 10 ஆண்டில் 15.60% ஆக உயர்ந்துள்ளது.
 • தமிழகத்தில் மக்கள் தொகை 7 கோடி 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 ஆகும்.
 • ஆண்கள் 3,61,58,871,
 • பெண்கள் 3,59,80,087.
 • 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற அடிப்படையில் பாலின விகிதம் உள்ளது.
 • எழுத்தறிவு பெற்றவர்கள் 73.45 சதவிகிதத்திலிருந்து 80.33 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
 • 52 சதவீதம் பேர் கிராமங்களிலும்,
 • 48 சதவீதம் பேர் சென்னை, மதுரை, கோவை போன்ற நகர் பகுதியிலும் வசிக்கின்றனர்.
 • தமிழகத்தில் ஆண்களின் எண்ணிக்கை 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871.
 • பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பேர் ஆவர். இதில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 784

மொத்தம் கல்வியறிவு பெற்றவர்கள்[தொகு]

 • 80.33. %
 • ஆண்கள் 86. 81. %
 • பெண்கள் 73. 86. %


 • விழுப்புரத்தில் கிராமப்புற மக்கள் எண்ணிக்கை 7.94 சதவீதம் உயர்ந்துள்ளது.
 • நீலகிரி மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 1041 பெண்கள் உள்ளனர். இந்த மாவட்டத்தில் தான் ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ளனர்இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]