இசுலாமியர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(முஸ்லிம் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
இசுலாமியர் என்பவர்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை முஸ்லிம் என்றும் பெண்களை முஸ்லிமா என்றும் அழைப்பதுண்டு. முஸ்லிம் என்ற சொல் அரபு மொழியில் இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன் என்று பொருள் தரும். முஸ்லிம் என்ற பெயர், பிரபலமான நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பையும் சுட்டும்[1].
[தொகு] இசுலாமியர்களின் கடமைகள்
- கலிமா -- இறைவன் ஒருவனே முஹம்மது நபி அவர்கள் அவனது கடைசி தூதர் என ஏற்றுக்கொள்ளல்
- தொழுகை -- தினமும் 5 வேளை இறைவனை வணங்குதல்
- நோன்பு -- புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருத்தல்
- ஜக்காத் -- ஏழை எளியவர்களுக்கு உதவுதல்
- ஹஜ் -- புனித காஃபா ஷரீஃப்ற்கு புனித பயணம் மேற்கொள்ளல்