பிரேசில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
República Federativa do Brasil
பிரேசில் கூட்டாட்சிக் குடியரசு
பிரேசில் கொடி பிரேசில் சின்னம்
குறிக்கோள்
"Ordem e Progresso"
(போர்த்துக்கேயம்)
"கட்டளையும் முன்னேற்றமும்"
நாட்டுப்பண்
Hino Nacional Brasileiro
(போர்த்துக்கேயம்)
"பிரேசிலின் தேசிய கீதம்"

முத்திரை
பிரேசிலின் தேசிய முத்திரை National Seal of Brazil (color).svg
(போர்த்துக்கேயம்)
"பிரேசிலின் தேசிய முத்திரை"
Location of பிரேசில்
தலைநகரம் பிரேசிலியா
15°45′S 47°57′W / -15.75, -47.95
பெரிய நகரம் சாவோ பாவுலோ
ஆட்சி மொழி(கள்) போர்த்துக்கீசம்
மக்கள் பிரேசிலியர்
அரசு கூட்டாட்சிக் குடியரசு
 -  குடியரசுத் தலைவர் டில்மா ரூசெஃப்
விடுதலை போர்த்துக்கல் இடம் இருந்து 
 -  கூற்றல் செப்டம்பர் 7 1822 
 -  திட்டமானது ஆகஸ்ட் 29 1825 
 -  குடியரசு நவம்பர் 15 1889 
பரப்பளவு
 -  மொத்தம் 85,14,877 கிமீ² (5வது)
32,87,597 சது. மை 
 -  நீர் (%) 0.65
மக்கள்தொகை
 -  2008 மதிப்பீடு 186,757,608 (5வது)
 -  2007 குடிமதிப்பு 183,987,291 
 -  அடர்த்தி 209/கிமீ² (202வது)
209/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2009 கணிப்பீடு
 -  மொத்தம் $1,804 டிரில்லியன் (9வது)
 -  நபர்வரி $39,873 (14)
மொ.தே.உ(பொதுவாக) 2009 மதிப்பீடு
 -  மொத்தம்l $2,313 டிரில்லியன் (4வது)
 -  நபர்வரி $42,842 (16வது)
ஜினி சுட்டெண்? (2008) 28.1 
ம.வ.சு (2009) Green Arrow Up Darker.svg 0.965 (உயர்) (7வது)
நாணயம் பிரேசிலிய ரெயால் (R$) (BRL)
நேர வலயம் BRT [1] (ஒ.ச.நே.-2 - -5)
 -  கோடை (ப.சே.நே.) BRST [2] (ஒ.ச.நே.-2 - -5)
இணைய குறி .br
தொலைபேசி +55

பிரேசில் (República Federativa do Brasil) தென் அமெரிக்காவில் மிகப் பெரியதும் மிகுந்த மக்கள் தொகை கொண்டதுமான நாடாகும். பரப்பளவின் அடிப்படையிலும், மக்கள்தொகை அடிப்படையிலும் உலகிலேயே ஐந்தாவது பெரிய நாடு இது. இதன் மக்கள்தொகை 192 மில்லியனுக்கும் மேற்பட்டது.[1][2] பிரேசிலின் கிழக்கிலும் வடகிழக்கிலும் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. 7,491 கிமீ (4,655 மைல்) நீளமான கடற்கரை பிரேசிலுக்கு உண்டு.[1] பிரேசிலின் அருகாமையில் உருகுவே, அர்ஜென்டினா, பராகுவே, பொலிவியா, பெரு, கொலம்பியா, வெனிசூலா, கயானா, சுரினாம், பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகள் உள்ளன. அதாவது, எக்குவடோர், சீலே தவிர அனைத்து தென் அமெரிக்க நாடுகளுடனும், பிரேசில் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. பல்வேறு தீவுக் கூட்டங்களும் பிரேசிலின் ஆட்சிப் பகுதிக்குள் அடங்குகின்றன. பெர்னான்டோ டி நோரன்கா, ரோக்காசு அட்டோல், செயின்ட் பீட்டரும் பால் ராக்சும், டிரின்டேடும் மார்ட்டிம் வாசும் என்பன இவற்றுட் சில.[1] பிரேசிலின் தலைநகர் பிரேசிலியா. சாவோ பாவுலோ, ரியோ தி ஜனைரோ ஆகியவை முக்கிய நகரங்கள்.

போர்த்துகீசியரின் ஆட்சியில் முன்பு இருந்ததால் போர்த்துகீச மொழி பிரேசிலில் பேசப்படும் மொழியும், அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். தென்னமெரிக்காவில் பெரும்பான்மையாகப் போத்துக்கீச மொழியைப் பேசுபவர்களைக் கொண்ட நாடு இது மட்டுமே. அத்துடன், இம்மொழியைப் பேசுகின்ற உலகின் மிகப் பெரிய நாடும் இதுவே.[1]

1500 ஆம் ஆண்டில் பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் கால் வைத்ததில் இருந்து 1815 ஆம் ஆண்டுவரை பிரேசில் போர்த்துக்கலின் குடியேற்ற நாடாக இருந்தது. 1815ல் பிரேசில் ஒரு இராச்சியமாகத் தரம் உயர்த்தப்பட்டு, போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. உண்மையில், 1808 ஆம் ஆண்டில் நெப்போலியன் போர்த்துக்கலைக் கைப்பற்றிக்கொண்டபோது, போர்த்துக்கீசக் குடியேற்றவாதப் பேரரசின் தலைநகரம் லிசுப்பனில் இருந்து ரியோ டி செனரோவுக்கு மாற்றப்பட்டபோது குடியேற்றவாதப் பிணைப்பு அறுந்துவிட்டது.[3]

1822 ஆம் ஆண்டில் பிரேசில் பேரரசின் உருவாக்கத்துடன் நாடு விடுதலை பெற்றது. இப் பேரரசு அரசியல்சட்ட முடியாட்சியுடன், நாடாளுமன்ற முறையும் சேர்ந்த ஒரு ஒற்றையாட்சி அரசின் கீழ் ஆளப்பட்டது. 1889 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து, பிரேசில் சனாதிபதி முறைக் குடியரசு ஆனது. 1988ல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின்படி பிரேசில் ஒரு கூட்டாட்சிக் குடியரசு ஆகும்.[4] கூட்டாட்சி மாவட்டங்கள் எனப்படும், 26 மாநிலங்களும், 5,564 மாநகரப் பகுதிகளும் இணைந்தே இக் கூட்டாட்சி உருவாக்கப்பட்டு உள்ளது.[4][5]

பிரேசிலின் பொருளாதாரம், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் உலகின் ஆறாவது பெரியதும், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் ஏழாவது பெரியதும் (2011 ஆம் ஆண்டு நிலை) ஆகும்.[6][7] உலகின் விரைவாக வளர்ந்துவரும் முக்கியமான பொருளாதாரங்களில் பிரேசிலும் ஒன்று. ஐக்கிய நாடுகள் அவை, ஜி20, போத்துக்கீச மொழி நாடுகள் சமூகம், இலத்தீன் ஒன்றியம், ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு, அமெரிக்க நாடுகள் அமைப்பு, தெற்கத்திய பொதுச் சந்தை, தென்னமெரிக்க நாடுகளின் ஒன்றியம் ஆகிய அமைப்புக்களின் தொடக்ககால உறுப்பினராக பிரேசில் உள்ளது. பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றான பிரேசிலில், பல்வகைக் காட்டுயிர்கள், இயற்கைச் சூழல்கள், பரந்த இயற்கை வளங்கள், பல்வேறுபட்ட காக்கப்பட்ட வாழிடங்கள் என்பன காணப்படுகின்றன.[1]

வரலாறு[தொகு]

போத்துக்கீசக் குடியேற்றம்[தொகு]

தற்போது பிரேசில் என அழைக்கப்படும் தென்னமெரிக்கப் பகுதியை 1500 ஆம் ஆண்டில் பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் தலைமையிலான போத்துக்கீசக் கப்பல்கள் அடைந்ததில் இருந்து, அப்பகுதி போத்துக்கீசர் வசமானது.[8] அப்போது, அங்கே கற்காலப் பண்பாட்டைக் கொண்ட தாயக மக்கள் பல்வேறு இனக் குழுக்களாகப் பிரிந்து காணப்பட்டனர். தூப்பி-குவாரானி குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசிய அவர்கள் எப்பொழுதும் தமக்குள் சண்டையிட்டபடி இருந்தனர்.[9]

பிரேசிலில் முதலாவது கிறித்தவ வழிபாடு, 1500.

முதலாவது குடியிருப்பு 1532 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட போதும், 1534 ஆம் ஆண்டில், மூன்றாம் டொம் யோவான் (Dom João III) அப்பகுதியை பரம்பரைத் தலைமைத்துவம் கொண்ட 12 பிரிவுகளாகப் பிரித்த பின்னரே நடைமுறையில் குடியேற்றம் தொடங்கியது.[10][11] எனினும் இந்த ஒழுங்கு பிரச்சினைக்கு உரியதாக இருந்ததால் முழுக் குடியேற்றத்தையும் நிர்வாகம் செய்வதற்காக 1549ல், அரசர் ஒரு ஆளுனரை நியமித்தார்.[11][12] சில தாயக இனக்குழுக்கள் போத்துக்கீசருடன் தன்மயமாகிவிட்டனர்.[13] வேறு சில குழுக்கள், அடிமைகள் ஆக்கப்பட்டனர் அல்லது நீண்ட போர்களில் அழிக்கப்பட்டனர். இன்னும் சில குழுக்கள் ஐரோப்பியர் மூலம் பரவியனவும், தாயக மக்கள் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிராதனவுமான நோய்களினால் மடிந்தனர்.[14][15] 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், சர்க்கரை (சீனி) பிரேசில் நாட்டின் முக்கியமான ஏற்றுமதிப் பண்டம் ஆகியது.[9][16] அனைத்துலக அளவில் சர்க்கரைக்கான தேவை கூடியதனால்,[14][17] கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகப் போத்துக்கீசர், ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளை இறக்குமதி செய்தனர்.[18][19]

பிரான்சுடனான போர்களின் மூலம் போத்துக்கீசர் மெதுவாகத் தமது ஆட்சிப் பகுதியை விரிவாக்கிக் கொண்டனர். 1567ல் தென்கிழக்குத் திசையிலான விரிவாக்கத்தின் மூலம் ரியோ டி செனரோவையும், 1615ல் வடமேற்குத் திசை விரிவாக்கத்தின் மூலம் சாவோ லூயிசையும் கைப்பற்றினர்.[20] அமேசான் மழைக்காட்டுப் பகுதிக்குப் படையெடுத்துச் சென்று பிரித்தானியருக்கும் ஒல்லாந்தருக்கும் உரிய பகுதிகளைக் கைப்பற்றி,[21] 1669 ஆம் ஆண்டிலிருந்து அப் பகுதியில் ஊர்களை உருவாக்கிக் கோட்டைகளையும் அமைத்தனர்.[22] 1680 ஆம் ஆண்டில் தெற்குக் கோடியை எட்டிய போத்துக்கீசர், கிழக்குக் கரையோரப் பகுதியில் (தற்கால உருகுவே), ரியோ டி லா பிளாட்டா ஆற்றங்கரையில் சக்ராமென்டோ என்னும் நகரை நிறுவினர்.[23]

17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சர்க்கரை ஏற்றுமது வீழ்ச்சியடையத் தொடங்கிற்று.[24] ஆனால், 1690களில் மாட்டோ குரோசோ, கோயாசு ஆகிய பகுதிகளில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதனால் உடனடியான சீர்குலைவு தடுக்கப்பட்டது.[25]

1494 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின்படி தமக்கு உரியதான பகுதிகளுக்குள் போத்துக்கீசர் விரிவாக்கம் செய்வதை எசுப்பானியர் தடுக்க முயன்றனர். 1777ல் கிழக்குக் கரையோரத்தைக் கைப்பற்றுவதிலும் வெற்றி பெற்றனர். ஆனாலும், அதே ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட சான் இல்டிபொன்சோ ஒப்பந்தப்படி போத்துக்கீசர் கைப்பற்றிக்கொண்ட பகுதிகளில் அவர்களது இறையாண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டதால் இம் முயற்சி வீணாயிற்று. இதன்மூலம், இன்றைய பிரேசிலின் எல்லைகள் பெரும்பாலும் நிலை நிறுத்தப்பட்டன.[26]

1808ல், பிரான்சின் பேரரசர் நெப்போலியன் போர்த்துக்கலையும் பெரும்பாலான மைய ஐரோப்பாவையும் கைப்பற்றியதைத் தொடர்ந்து, போத்துக்கீச அரச குடும்பமும், பெரும்பாலான உயர் குடியினரும் தப்பி வந்து ரியோ டி செனரோ நகரத்தில் குடியேறினர். இதனால், அந் நகரம் போத்துக்கீசப் பேரரசு முழுவதினதும் தலைமை இடமாக மாறியது.[27] 1815 ஆம் ஆண்டில் தனது உடல்நலம் குன்றிய தாய்க்காக ஆட்சிப் பொறுப்பாளராக இருந்த ஆறாம் டொம் யோவான் (Dom João VI) பிரேசிலை குடியேற்ற நாடு என்னும் தரத்திலிருந்து இறைமையுள்ள இராச்சியமாகத் தரம் உயர்த்தினார்.[27] 1809 ஆம் ஆண்டில் பிரெஞ்சு கயானாவைப் போத்துக்கீசர் கைப்பற்றினர். 1817ல் இது மீண்டும் பிரான்சிடம் வழங்கப்பட்டது.[28]

பிரேசிலின் விடுதலையை 1822 செப்டெம்பர் 7 ஆம் தேதி பேரரசர் பெட்ரோ அறிவிக்கிறார்.

விடுதலையும் பேரரசும்[தொகு]

போத்துக்கீசப் படையினர், நெப்போலியனுடைய ஆக்கிரமிப்பை முறியடித்த பின்னர், 1821 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி அரசர் ஆறாம் யோவான் ஐரோப்பாவுக்குத் திரும்பினார். அவரது மூத்த மகன் இளவரசர் பெட்ரோ டி அல்கந்தாரா பிரேசிலுக்கான ஆட்சிப் பொறுப்பாளராக ஆனார். 1820ன் தாராண்மைப் புரட்சியைத் தொடர்ந்து பதவிக்கு வந்த புதிய போர்த்துக்கல் அரசாங்கம் பிரேசிலை மீண்டும் குடியேற்ற நாடாக ஆக்குவதற்கு முயற்சித்தது. பிரேசில் மக்கள் இதற்கு இடம் கொடுக்கவில்லை. இளவரசர் பெட்ரோவும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தார். அவர், 1822 செப்டெம்பர் 7 ஆம் தேதி பிரேசிலைப் போர்த்துக்கலிலிருந்து விடுதலை பெற்ற ஒரு இராச்சியமாக அறிவித்தார். பெட்ரோ, 1822 அக்டோபர் 12 ஆம் தேதி பிரேசிலின் முதல் பேரரசராக அறிவிக்கப்பட்டு அவ்வாண்டு டிசம்பர் முதலாம் தேதி முடிசூட்டப்பட்டார்.

Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


விளையாட்டுக்கள்[தொகு]

இங்கு கால்பந்து ஆட்டமே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டாகும்.

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Geography of Brazil". Central Intelligence Agency (2008). பார்த்த நாள் 2008-06-03.
 2. "People of Brazil". Central Intelligence Agency (2008). பார்த்த நாள் 2008-06-03.
 3. "Introduction of Brazil". Central Intelligence Agency (2008). பார்த்த நாள் 2008-06-03.
 4. 4.0 4.1 "Brazilian Federal Constitution" (Portuguese). Presidency of the Republic (1988). பார்த்த நாள் 2008-06-03. "Brazilian Federal Constitution". v-brazil.com (2007). பார்த்த நாள் 2008-06-03. "Unofficial translate"
 5. "Territorial units of the municipality level" (Portuguese). Brazilian Institute of Geography and Statistics (2008). பார்த்த நாள் 2008-06-03.
 6. "World Development Indicators database" (PDF file), World Bank, 7 October 2009.
 7. "CIA – The World Factbook – Country Comparisons – GDP (purchasing power parity)". Cia.gov. பார்த்த நாள் 25 January 2011.
 8. Boxer, p. 98.
 9. 9.0 9.1 Boxer, p. 100.
 10. Boxer, pp. 100–101.
 11. 11.0 11.1 Skidmore, p. 27.
 12. Boxer, p. 101.
 13. Boxer, p. 108
 14. 14.0 14.1 Boxer, p. 102.
 15. Skidmore, pp. 30, 32.
 16. Skidmore, p. 36.
 17. Skidmore, pp. 32–33.
 18. Boxer, p. 110
 19. Skidmore, p. 34.
 20. Bueno, pp. 80–81.
 21. Facsimiles of multiple original documents relating about the events in Brazil in the 17th century that led to a Dutch influence and their final defeat
 22. Calmon, p. 294.
 23. Bueno, p. 86.
 24. Boxer, p. 164.
 25. Boxer, pp. 168, 170.
 26. Boxer, p. 207.
 27. 27.0 27.1 Boxer, p. 213.
 28. Bueno, p. 145.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரேசில்&oldid=1462479" இருந்து மீள்விக்கப்பட்டது