பெர்னான்டோ டி நோரன்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெர்னான்டோ டி நோரன்கா தீவுக்குழுமம்
Native name: ஆர்கிபிலாகோ டி பெர்னான்டோ டி நோரான்கோ
டோ மியோ மற்றும் கான்சிக்சோ கடற்கரைகள்
டோ மியோ மற்றும் கான்சிக்சோ கடற்கரைகள்
புவியியல்
Amphisbaena ridleyi distribution.png
அமைவு அத்திலாந்திக்குப் பெருங்கடல்
ஆள்கூறுகள் 3°51′13.71″S 32°25′25.63″W / 3.8538083°S 32.4237861°W / -3.8538083; -32.4237861ஆள்கூறுகள்: 3°51′13.71″S 32°25′25.63″W / 3.8538083°S 32.4237861°W / -3.8538083; -32.4237861
தீவுக்கூட்டம் ஆர்கிபிலாகோ டி பெர்னான்டோ டி நோரான்கோ
தீவுகளின் எண்ணிக்கை 21
முக்கிய தீவுகள் பெர்னான்டோ டி நோரன்கா; இலா ரட்டா; இலா டோ மியோ; இலா செலா கினெடா; இலா ரசா
உயர் புள்ளி மோர்ரோ டொ பைக்கோ
ஆட்சி
பிரேசிலின் கொடி பிரேசில்
மண்டலம் வடகிழக்கு மண்டலம்
மாநிலம் பெர்னம்புகோ
பெரிய நகரம் விலா டோசு ரெமெடியோசு
இனம்
மக்கள் தொகை 2,718[1] (2012)

பெர்னான்டோ டி நோரன்கா (Fernando de Noronha) பிரேசிலின் கடற்கரையிலிருந்து 354 km (220 mi) தொலைவில் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் 21 தீவுகளையும் தீவுத்திட்டுக்களையும் உள்ளடக்கிய ஓர் தீவுக்கூட்டம் ஆகும். பெர்னோ டி லோரோன்கா என்ற போர்த்துக்கேய வணிகருக்கு பிரேசிலிலிருந்து மரங்களை இறக்குமதி செய்து உதவியமைக்காக போர்த்துக்கேய மன்னர் இத்தீவுக் கூட்டங்களை வழங்கினார்; அதன் காரணமாகவே இத்தீவுக்கூட்டம் இப்பெயரைப் பெற்றது. முதன்மைத் தீவின் பரப்பளவு 18.4 சதுர கிலோமீற்றர்கள் (7.1 sq mi) ஆகவும் மக்கள்தொகை 2012இல் 2,718 ஆகவும் உள்ளன.[1] இப்பகுதி பிரேசிலின் இரியோ கிராண்டு டோ நார்த் மாநிலத்திற்கு அண்மையில் இருந்தபோதும் பெர்னம்புகோ மாநிலத்தின் சிறப்பு நகராட்சி (distrito estadual) ஆக உள்ளது.[2]

இதன் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைக் கருதி 2001இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் இதனை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது. இதன் நேர வலயம் ஆண்டு முழுவதும் ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-02:00 ஆகும். ரெசிஃபியிலிருந்து (545 km) வானூர்தி மூலமோ பயணக்கப்பல் மூலமோ அல்லது நதாலிலிருந்து (360 km) வானூர்தி மூலமோ பெர்னான்டோ டி நோரன்காவை அடையலாம். [3] இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து சுற்றுச்சூழல் காப்புக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

காட்சிக்கூடம்[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சுற்றுலா

ஒளிதங்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பெர்னான்டோ_டி_நோரன்கா&oldid=1678969" இருந்து மீள்விக்கப்பட்டது