உலக பாரம்பரியக் குழு
உலக பாரம்பரியக் குழு (World Heritage Committee) உலகின் பல பாகங்களிலும் காணப்படும் யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களங்கள் எவை எனத் தீர்மானிப்பதற்கும், அவற்றை தொடர்ந்தும் பாதுகாப்பதற்கும், உலக பாரம்பரிய சாசனத்தை செயற்படுத்துவதற்கும் பொறுப்பாக இருக்கும் ஒரு அமைப்பாகும். இந்தக் குழுவே, குறிப்பிட்ட களங்கள் தொடர்பான மரபொழுங்குகள் கடைப்பிடிக்கப்படுவதைக் கவனித்துக் கொள்வதுடன், அது தொடர்பான நடைமுறைகளை செயற்படுத்துவதாகவும் இருக்கும். அத்துடன் உலக பாரம்பரிய நிதியத்தின் பயன்பாட்டை வரையறுப்பதுடன், குறிப்பிட்ட ஒரு நாடானது தனது எல்லைக்குள் உள்ள குறிப்பிட்ட பாரம்பரியக் களத்தைப் பாதுகாக்க நிதி உதவி கோரும் பட்சத்தில், அதனை உலக பாரம்பரிய நிதியத்திலிருந்து வழங்குவதற்கும் இக்குழுவே பொறுப்பாக இருக்கும். 21 நாட்டுக் குழுக்கள்[1] கொண்ட இக்குழு நாட்டுக் குழுக்களின் பொது பேரவையால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறது.[2]
உலக பாரம்பரிய சாசனத்தின்படி குழுவின் உறுப்பினர் ஒருவர் ஆறு வருடங்களுக்கு தமது பணியில் இருக்கலாம் ஆயினும், பல நாடுகளும் தமது நாட்டின் குழு உறுப்பினரை நான்கு ஆண்டுகள் முடிந்த பின்னர் தாமாகவே விலக்கிக் கொன்டு, ஏனைய நாடுகளுக்கு உறுப்பினராகும் சந்தர்ப்பத்தை வழங்கி வருகின்றன. [2]. 2005 ஆம் ஆண்டு, 15 ஆவது பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட, இக்குழுவிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் தமது ஆறு ஆண்டு பணிக்காலத்தை நான்கு ஆண்டுகளாக குறைத்துக் கொள்ள முடிவு செய்தனர்[2].
பொருளடக்கம் |
அமர்வுகள் [தொகு]
உலகப் பாரம்பரியக் குழு, ஏற்கெனவே உள்ள பாரம்பரியக் களங்களின் மேலாண்மை குறித்தும் நாடுகளிலிருந்து பெறப்பட்ட புதியக் களங்களுக்கான பரிந்துரைகளை ஏற்பது குறித்தும் கலந்துரையாட ஆண்டுக்கொருமுறை கூடுகிறது.[2]
| அமர்வு[3] | ஆண்டு | நாள் | நடந்த நகரம் | நாட்டுக் குழு |
|---|---|---|---|---|
| 1 | 1977 | 27 சூன்–1 சூலை | பாரிசு | |
| 2 | 1978 | 5 செப்டம்பர்–8 செப்டம்பர் | வாஷிங்டன், டி.சி. | |
| 3 | 1979 | 22 அக்டோபர்–26 அக்டோபர் | கெய்ரோ & லுக்சார் | |
| 4 | 1980 | 1 செப்டம்பர்–5 செப்டம்பர் | பாரிசு | |
| 5 | 1981 | 26 அக்டோபர்–30 அக்டோபர் | சிட்னி | |
| 6 | 1982 | 13 திசம்பர்–17 திசம்பர் | பாரிசு | |
| 7 | 1983 | 5 திசம்பர்–9 திசம்பர் | பிளாரென்சு | |
| 8 | 1984 | 29 அக்டோபர்–2 நவம்பர் | புவெனஸ் ஐரிஸ் | |
| 9 | 1985 | 2 திசம்பர்–6 திசம்பர் | பாரிசு | |
| 10 | 1986 | 24 நவம்பர்–28 நவம்பர் | பாரிசு | |
| 11 | 1987 | 7 திசம்பர்–11 திசம்பர் | பாரிசு | |
| 12 | 1988 | 5 திசம்பர்–9 திசம்பர் | பிரசிலியா | |
| 13 | 1989 | 11 திசம்பர்–15 திசம்பர் | பாரிசு | |
| 14 | 1990 | 7 திசம்பர்–12 திசம்பர் | பான்ஃப் | |
| 15 | 1991 | 9 திசம்பர்–13 திசம்பர் | கார்த்தேஜ் | |
| 16 | 1992 | 7 திசம்பர்–14 திசம்பர் | சான்டா ஃபே | |
| 17 | 1993 | 6 திசம்பர்–11 திசம்பர் | கார்டஜெனா | |
| 18 | 1994 | 12 திசம்பர்–17 திசம்பர் | பூகெத் | |
| 19 | 1995 | 4 திசம்பர்–9 திசம்பர் | பெர்லின் | |
| 20 | 1996 | 2 திசம்பர்–7 திசம்பர் | மெரிடா | |
| 21 | 1997 | 1 திசம்பர்–6 திசம்பர் | நேப்பிள்சு | |
| 22 | 1998 | 30 நவம்பர்–5 திசம்பர் | குயோட்டோ | |
| 23 | 1999 | 29 நவம்பர்–4 திசம்பர் | மார்ரெகெச் | |
| 24 | 2000 | 27 நவம்பர்–2 திசம்பர் | கெய்ர்ன்ஸ் | |
| 25 | 2001 | 11 திசம்பர்–16 திசம்பர் | ஹெல்சிங்கி | |
| 26 | 2002 | 24 சூன்–29 சூன் | புடாபெஸ்ட் | |
| 27 | 2003 | 30 சூன்–5 சூலை | பாரிசு | |
| 28 | 2004 | 28 சூன்–7 சூலை | சுசூ | |
| 29 | 2005 | 10 சூலை–17 சூலை | டர்பன் | |
| 30 | 2006 | 8 சூலை–16 சூலை | வில்னியசு | |
| 31 | 2007 | 23 சூன்–1 சூலை | கிறைஸ்ட்சர்ச் | |
| 32 | 2008 | 2 சூலை-10 சூலை | குயுபெக் நகரம் | |
| 33 | 2009 | 22 சூன்-30 சூன் | செவைல் | |
| 34 | 2010 | 25 சூலை-3 ஆகத்து | பிரசிலியா | |
| 35 | 2011 | 19 சூன்-29 சூன் | பாரிசு | |
| 36 | 2012 | 25 சூன்-5 சூலை | சென் பீட்டர்ஸ்பேர்க் | |
| 37 | 2013 | 17 சூன்-27 சூன் | புனோம் பென் |
உறுப்பினர்கள் [தொகு]
| உறுப்பினர்[4] | சார்பாளர் | குறிப்புகள் |
|---|---|---|
| உதவித்-தலைவர் | ||
| உதவித்-தலைவர் | ||
| பியாட்ரிட்சு எர்னான்டெசு நர்வேசு | ஒருங்கிணைப்பாளர்/உதவி-தலைவர் | |
| மித்ரோபனோவா எலெனோரா | அவைத்தலைவர் | |
| உதவித்-தலைவர் | ||
| உதவித்-தலைவர் | ||
| மொத்தம் | 21 |
மேற்கோள்கள் [தொகு]
- ↑ யுனெசுக்கோ உலக பாரம்பரிய வலைத்தளத்தின்படி இந்நாடுகள் உலக பாரம்பரிய சாசனத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டவை. சனவரி 2012படி, மொத்தம் 188 நாட்டுக்குழுக்கள் உள்ளன.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "The World Heritage Committee". UNESCO World Heritage Site. பார்த்த நாள் 2006-10-14.
- ↑ "Sessions". UNESCO World Heritage Site.
- ↑ http://whc.unesco.org/en/sessions/36COM/
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் World Heritage Sites தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- UNESCO World Heritage portal — Official website (ஆங்கிலம்) and (பிரெஞ்சு)
- The World Heritage List — Official searchable list of all Inscribed Properties