மலேசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மலேசியா
Malaysia
மலேசியாவின் கொடி மலேசியாவின் Coat of Arms
குறிக்கோள்
"Bersekutu Bertambah Mutu"
"ஒற்றுமையே பலம்"1
நாட்டுப்பண்
Negaraku
Location of மலேசியாவின்
தலைநகரம் கோலாலம்பூர்3
3°08′N 101°42′E / 3.133, 101.7
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) மலாய்2
மக்கள் மலேசியன்
அரசு கூட்டாட்சி அரசியலமைப்பு முடியாட்சி
 -  யாங் டி-பேர்ட்டுவான் ஆகொங்க் மிசான் சைனல் அபிடீன்
 -  பிரதமர் நஜீப் துன் ரஜாக்
விடுதலை
 -  ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து (மலாயா மட்டும்)
ஆகஸ்ட் 31, 1957 
 -  சபா, சராவக் மற்றும் சிங்கப்பூருடன் கூட்டாட்சி4)
செப்டம்பர் 16, 1963 
பரப்பளவு
 -  மொத்தம் 3,29,847 கிமீ² (67வது)
1,27,355 சது. மை 
 -  நீர் (%) 0.3
மக்கள்தொகை
 -  திசம்பர் 2007 மதிப்பீடு 27,544,000 (43வது)
 -  2010[1] குடிமதிப்பு 27,565,821 
 -  அடர்த்தி 83.57/கிமீ² (114வது)
216.45/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2011 கணிப்பீடு
 -  மொத்தம் $442.010 பில்லியன்[2] (34)
 -  நபர்வரி $15,384[2] (61)
மொ.தே.உ(பொதுவாக) 2011 மதிப்பீடு
 -  மொத்தம்l $247.781 பில்லியன்[2] (39)
 -  நபர்வரி $8,624[2] (67)
ம.வ.சு (2010) Green Arrow Up Darker.svg 0.744[3] (உயர்) (57வது)
நாணயம் ரிங்கிட் (RM) (MYR)
நேர வலயம் MST (ஒ.ச.நே.+8)
 -  கோடை (ப.சே.நே.) not observed (ஒ.ச.நே.+8)
இணைய குறி .my
தொலைபேசி +60
1 மலேசிய சின்னம் (www.gov.my.)
2 பஹாசா மலேசியா (மலேசிய மொழி) என்பது தற்போதைய அதிகாரபூர்வ பெயர் ref ஆனாலும் பஹாசா மெலாயு (மலாய் மொழி) எனவே சட்டபூர்வமாக இன்னமும் அழைக்கப்படுகிறது
3 கூட்டாட்சி நிவாகம் புதிதாகக் கட்டப்பட்ட புத்ரஜெயாவில் அமைந்துள்ளது.
4 சிங்கப்பூர் தனிநாடாக ஆகஸ்ட் 9, 1965 ஆனது.

மலேசியா (Malaysia) தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு. இந்த நாடு தீபகற்ப மலேசியா என்றும் கிழக்கு மலேசியா என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. மலேசியாவில் 13 மாநிலங்கள் உள்ளன. அவற்றில் மூன்று கூட்டரசு மாநிலங்கள். மலேசியா [4], தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும் புரூணை ஆகிய நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.

மலேசியா பூமத்திய கோட்டுப் பகுதியில் இருப்பதால் அதன் மிதவெட்ப நிலை மிகச் சீரான இயற்கை சூழ்நிலையைக் கொண்டு உள்ளது. இப்போது மலேசியாவின் மன்னராக மாட்சிமை தங்கிய மாமன்னர் மிசான் சைனல் அபிடீன் அவர்கள் மகுடம் வகிக்கின்றார். மலேசியாவின் பிரதமராக் நஜீப் துன் ரசாக் அவர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கின்றார்.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர். அரசாங்க அலுவலகங்கள் புத்ரா ஜெயாவில் உள்ளன. 1957 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

இருபதாம் நூற்றாண்டுகளில் அதிகமான பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது. கடந்த 50 ஆண்டுகளாக இதன் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி 6.5% ஆக இருந்து வருகிறது. வெளிநாடுகள் மிகுதியாக முத்லீடுகள் செய்து வருகின்றன. மலேசியா இயற்கை வளங்கங்கள் நிறைந்த ஒரு பச்சை பூமி என்றும் சொல்வார்கள். இப்போது சுற்றுலா, அறிவியல், வர்த்தகம் போன்ற பிரிவுகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

மலேசியாவின் மக்கள்தொகை 2.5 கோடி. இவர்களில் மலாய் மக்கள் பெரும்பான்மையானவர். அடுத்து சீனர்களும் இந்தியர்களும் வசிக்கின்றனர். இஸ்லாம் மலேசியாவில் அதிக மக்களால் பின்பற்றப்படும் சமயம் ஆகும். மலேசியாவின் தேசிய மதமும் ஆகும். மலாய் மொழி தேசிய மொழியாகும்.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

[தொகு] வரலாற்றுக்கு முந்தைய காலம்

வரலாற்றுக்கு முந்தைய காலச் சான்றுகள் மலேசியாவில் அதிகமாகக் கிடைத்து இருக்கின்றன. பூர்வகுடி செமாங் இனத்தவர்களின் மூதாதையர்கள் சுமார் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆப்பிரிக்கர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

[தொகு] ஆரம்ப காலம்

முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வந்த வர்த்தகர்களும் குடியேற்றக்காரர்களும் வர்த்தகத் துறைமுகங்களையும் நகரங்களையும் உருவாக்கினர். பிற்பகுதியில் மலேசியா ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது. 11ம் நூற்றாண்டில் சோழ அரசன் இராஜேந்திர சோழன் கடாரம் எனப்படும் இடத்தை போரில் வென்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் காணப்படுகின்றன. சோழர்களின் வருகையும் போர்களும் ஸ்ரீவிஜய ஆட்சியை பலமிழக்கச்செய்தது.

[தொகு] சுல்தான்கள்

பதினைந்தாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலிருந்து பல்வேறு சுல்தான்கள் ஆட்சி புரிந்தார்கள். ஸ்ரீ விஜயப் பேரரசின் இளவரசனான பரமேஸ்வரன் மலாயத் தீபகற்பத்தின் முதல் சுதந்திர இராச்சியமாகக் கருதப்படும் மலாக்கா சுல்தானியத்தை நிறுவினான். பரமேஸ்வரன் முஸ்லிமாக மதம் மாறினான். இக்கால கட்டத்தில் இஸ்லாமிய சமயம் தீவிரமாகப் பரவியது. மேலும் இக்காலப் பகுதியில் மலாக்கா முக்கிய வாணிப மையமாகவும் விளங்கியது.

[தொகு] ஐரோப்பிய குடியேற்ற ஆட்சிகள்

மலேசியாவின் வரைபடம்

1511ல் மலாக்கா போர்த்துக்கீசர் வசமானது. பின் 1641ல் டச்சுக்காரரால் கைப்பற்றப்பட்டது. 1786ல் கெடாவின் சுல்தான் பினாங்கை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனிக்கு குத்தகைக்குக் கொடுத்தார். இதனால் பிரித்தானியப் பேரரசு மலாயாவில் காலூன்றியது. பிரித்தானியர் 1819ல் சிங்கப்பூரைக் கைப்பற்றினர். மேலும் 1824ல் ஆங்கில-டச்சு ஒப்பந்தப்படி மலாக்காவையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 1826ல் பிரித்தானியர் பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர், லபுவன் தீவுகள் ஆகியவற்றை நேரடியாகத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததன் மூலம் அவற்றைத் தமது முடிக்குரிய குடியேற்ற நாடாக்கினர்.

இரண்டாம் உலகப்போரின் போது 1943-1945 வரை ஜப்பான் ஆட்சி செலுத்தியது. இக்காலப்பகுதியில் இனப்பிரச்சினைகள் உருவாகியதோடு தேசியவாதமும் மேலோங்கியது. போருக்குப்பின் மீண்டும் பிரித்தானியா அதிகாரத்திற்கு வந்தது. மேலும் பிரித்தானியா மலாயாவின் நிர்வாகத்தை ஒருங்கிணைத்து அதனை மலாயக் கூட்டமைப்பு என்ற ஒரே முடிக்குரிய குடியேற்ற நாடாக்கியது. எனினும் மலாயர் இதனை எதிர்த்தனர். மேலும் மலாயக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஒன்றிணைந்த போராளிகள் பிரத்தானியப் படைகளுக்கெதிராக கொரில்லாப் போர் தொடுத்தனர்.

[தொகு] சமகாலம்

1957 ஆகஸ்ட் 31 அன்று விடுதலை அடைந்த மலேசியா 1963 ஆம் ஆண்டு மலேசிய கூட்டரசு எனப்படும் தற்கால மலேசிய நாடாக உருவாகியது. 1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகியது. 1969ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்திற்குப் பிறகு பூமிபுத்திரா எனப்படும் பூர்வகுடிமக்களுக்கு பொருளாதார வளர்ச்சியில் சம பங்கு வழங்கும் நோக்கோடு சர்ச்சைக்குட்பட்ட புதிய பொருளாதார கொள்கை கொண்டுவரப்பட்டது.

சமீப காலங்களில் சிறுபான்மை இந்தியர்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது . நவம்பர் 2007இலும் பெப்ரவரி 2008 இலும் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி போராட முயன்றபோது காவற்துறையினரால் கண்ணீர் புகை குண்டு வீசிக் கலைக்கப்பட்டனர்.

[தொகு] ஆட்சிப்பிரிவுகள்

மலேசியாவின் மாகாணங்கள்

மலேசியா பதின்மூன்று மாநிலங்கள் மற்றும் மூன்று கூட்டாட்சிப்பகுதிகளை உள்ளடக்கியது. இவை இரு வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பதினொரு மாநிலங்கள் மற்றும் இரண்டு கூட்டாட்சிப் பகுதிகள் மலேசியத் தீபகற்பப் பகுதியிலும், இரண்டு மாநிலங்கள் மற்றும் ஒரு கூட்டாட்சிப் பகுதி கிழக்கு மலேசியாவிலும் உள்ளன. அனைத்து மாநிலங்களும் தமக்குரிய தனியான சட்டசபைகளைக் கொண்டுள்ளன.

அனைத்து மாநிலங்களும் மேலும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்டங்கள் மேலும் ”முகிம்”களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

[தொகு] மேற்கோள்கள்

  1. "Laporan Kiraan Permulaan 2010". Jabatan Perangkaan Malaysia. பார்க்கப்பட்ட நாள் 31 January 2011.
  2. 2.0 2.1 2.2 2.3 "Malaysia". International Monetary Fund. பார்க்கப்பட்ட நாள் 30 April 2011.
  3. "Human Development Report 2010". United Nations (2010). பார்க்கப்பட்ட நாள் 5 November 2010.
  4. The World Fact Book: Malaysia

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்
மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்