உலகப் பாரம்பரியக் களம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
World Heritage logo.png

உலக பாரம்பரியக் களம் (World Heritage Site) என்பது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால் நிர்வகிக்கப்படும் அனைத்துலக உலக பாரம்பரியங்கள் திட்டத்தின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு களம் ஆகும். இது, காடு, மலை, ஏரி, பாலைவனம், நினைவுச் சின்னம், கட்டிடம், நகரம் போன்ற எதுவாகவும் இருக்கலாம். யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு, நாடுகளின் பொதுக் குழுவினால் தெரிவு செய்யப்படும் 21 பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும்.

மனித இனத்தின் பொதுப் பாரம்பரியத்துக்கு இன்றியமையாத இயற்கை மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட களங்களைப் பட்டியலிட்டு, அவற்றைப் பாதுகாப்பதே இத் திட்டத்தின் நோக்கமாகும். சில களங்களின் மேம்பாட்டுக்காக உலக பாரம்பரிய நிதியத்தில் இருந்து நிதி உதவி வழங்கப்படுவதும் உண்டு. 16 நவம்பர் 1972 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத் திட்டத்தை இதுவரை 184 நாடுகள் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டுள்ளன.

2007 ஆம் ஆண்டு நிலைவரப்படி இது வரை 851 களங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 142 நாடுகளில் அமைந்துள்ள இக்களங்களில், 660 பண்பாட்டுக் களங்களும், 166 இயற்கைசார் களங்களும், 25 கலப்பு இயல்புக் களங்களும் அடங்குகின்றன.

புவியியற் பகுதிகள் அடிப்படையில் பாரம்பரியக் களங்களின் பரம்பலைக் கீழுள்ள அட்டவணையிற் காணலாம்.

வலயம் இயற்கை பண்பாடு கலப்பு மொத்தம்  %
ஆபிரிக்கா 33 38 3 74 9%
அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேல் 3 58 1 62 7%
ஆசியா-பசிபிக் 45 126 11 182[1] 21%
ஐரோப்பாவும் வட அமெரிக்காவும். 51 358 7 416 49%
லத்தீன் அமெரிக்காவும் கரிபியனும் 34 80 3 117 14%


[தொகு] உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்

[தொகு] தமிழகத்திலுள்ளவை

  1. மாமல்லபுர மரபுக்கோயில்கள் - பல்லவர்களால் கட்டப்பட்டது.
  2. அழியாத சோழர் பெருங்கோயில்கள் - சோழர்களால் கட்டப்பட்டது.

[தொகு] மேற்கோள்கள்

  1. ரஷ்யா மற்றும் மங்கோலியாவில் உள்ள Uvs Nuur Basin இங்கே ஆசியா-பசிபிக் வலயத்துள் அடக்கப்பட்டுள்ளது.


சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்