உயிரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உயிரியல் என்பது உயிர் வாழ்வன பற்றிய அறிவியலாகும். இது உயிரமைப்புகளுடைய இயல்புகள் மற்றும் நடத்தைகள், எப்படி உயிரின வகைகளும், தனிப்பட்ட உயிரினங்களும் தோற்றம் பெற்றன, அவை தங்களுக்குள் ஒன்று மற்றொன்றுடனும், சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகள் என்பன பற்றிக் கருத்தில் கொள்கிறது. உயிரியலானது சகல உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, வளர்ச்சி, தோற்றம், கூர்ப்பு, பரம்பல், மற்றும் பாகுபாட்டை ஆராய்கின்றது.

[தொகு] உயிரியல் பற்றிய நோக்கு

உயிரியல் ஒரு பரந்த அளவிலான, தனித்தனித் துறைகளாகக் கருதப்படுகின்ற, பல்வேறு கல்வித் துறைகளை உள்ளடக்கிய ஒன்றாகும். அவையனைத்தும் ஒட்டுமொத்தமாக பரந்த மட்டங்களில் உயிர்வாழ்வன பற்றி ஆய்வு செய்கின்றன:

ஆய்வுகள் நடைபெறுகின்றன.

[தொகு] நவீன உயிரியலின் அடிப்படைகள்

உயிரியலை ஒன்றுபடுத்தும் கொள்கைகள் ஐந்து உள்ளன.

  • கலக்கொள்கை. கலங்களுடன் தொடர்புடைய சகல கற்கைகளும் கலக்கொள்கையில் அடங்கும். சகல உயிரங்கிகளும் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட கலங்களைக் கொண்டிருக்கும். உயிரிகளின் கட்டமைப்பு ரீதியானதும் தொழிற்பாட்டு ரீதியானதுமான அடிப்படை அலகு கலமாகும். சகல கலங்களும் முதலுள்ள கலங்களிலிருந்தே தோன்றும்.
  • கூர்ப்பு. இயற்கைத் தேர்வினாலும் பரம்பரை அலகின் மாற்றங்களாலும், ஒரு சனத்தொகையினது பரம்பரைக் குணவியல்புகள் தலைமுறைக்கு தலைமுறை மாற்றமடையும்
  • சக்தி. சகல உயிரியினது நிலைப்பாட்டிற்கும் சக்தியானது தேவைப்படுகின்றது.
  • ஒருசீர்த்திடநிலை. சகல உயிரங்கிகளும் தமது உட்ச்சூழலை ஒரு சீராகப் பேணும் தன்மை ஒருசீர்த்திடநிலை எனப்படும்
  • பரம்பரை அலகு. ஒரு உயிரினத்தின் குணவியல்புகள் டீ.என்.ஏ இல் குறியிடப்பட்டுள்ளது.

[தொகு] உயிரியல் கற்கைத் துறைகள்

குருத்துத் திசுள் ஆராய்ச்சிகளில் மனித நகலெடுப்பதற்கும், நோயாலோ அல்லது காயப்பட்டு சிதைந்து போவதாலோ அழியும் திசுக்களைத் திரும்ப வளரச் செய்வதற்கும், குருத்துத் திசுள்களை உபயோகிப்பதை ஆராய்ந்து வருகிறார்கள்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=உயிரியல்&oldid=1102534" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்