தசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எலும்புத் தசையின் விளக்கப்படம்

தசை என்பது உடலிலுள்ள சுருங்கத்தக்க இழையம் ஆகும். தசைக் கலங்கள் ஒன்றின்மேல் ஒன்று நகரக்கூடியனவும், கலத்தின் அளவை மாற்றக்கூடியனவுமான இழைகளால் ஆனவை. இவை, எலும்புத்தசை, இதயத்தசை, மழமழப்பான தசை என மூன்றுவகையாக உள்ளன. இவற்றின் பணி விசையை உருவாக்கி இயக்கத்தைக் கொடுப்பதாகும். தசைகள், உயிரினத்தின் இடப்பெயர்ச்சிக்கு அல்லது அதன் உறுப்புக்களின் அசைவுக்குப் பயன்படலாம். இதயத் தசைகளிலும், மழமழப்புத் தசைகளிலும் நகர்வு தன்னியக்கமாக நடைபெறுகிறது. இது உயிரினத்தின் உயிர் வாழ்வுக்கு இன்றியமையாததாகும். இதயத்தின் துடிப்பும், சமிபாட்டுத் தொகுதியில் இடம்பெறும் அலைவியக்கமும் இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். விருப்பத்தின் பேரில் சுருக்கி விரிக்கக்கூடிய எலும்புத் தசைகள் உடலை அசைப்பதற்கு அவசியமானவை. இவற்றைத் துல்லியமாகக் கட்டுப்படுத்த முடியும்.

Types of muscle (shown at different magnifications)

மேலும் பார்க்க :[தொகு]

தசைகளின் குறைந்த அளவு சுருக்கம்
தசைச்சோர்வு
மரண விறைப்பு
தசைப்பிடிப்பு
தசைக் களைப்பு

"http://ta.wikipedia.org/w/index.php?title=தசை&oldid=1553721" இருந்து மீள்விக்கப்பட்டது