இரைப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரைப்பை
Stomach diagram-ta.svg
உடலில் இரைப்பையின் அமைவிடம்
Illu stomach.jpg
Diagram from cancer.gov:
* 1. இரைப்பையின் உடல்
* 2. அடிக்குழி
* 3. வெளிச்சுவர்
* 4. பெரிய வளைவு
* 5. சிறிய வளைவு
* 6. இதயத் துவாரப் பகுதி
* 9. குடல் வாயிறுக்கி
* 10. குடல் வாய்ப்பகுதி
* 11. குடல் வாய்
* 12. கோண முடிச்சு
* 13. இரைப்பைக் குழாய்
* 14. மடிப்புகள்

இலத்தீன் Ventriculus
கிரேயின்

subject #247 1161

நரம்பு celiac ganglia, vagus[1]
நிணநீர் celiac preaortic lymph nodes[2]
ம.பா.தலைப்பு இரைப்பை

இரைப்பை (Stomach) என்பது முதுகெலும்பிகள், பூச்சிகள், மெல்லுடலிகள், முட்தோலிகள் உள்ளிட்ட விலங்குகளின் சமிபாட்டுத் தொகுதியில் மிக முக்கியமான சமிபாட்டை நிகழ்த்தும் ஓர் அகன்ற அறையாகும். இது களம் (Esophagus), சிறுகுடல் ஆகிய பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது. உதரவிதானத்திற்குக் (Thoracic diaphragm) கீழாக உள்ளது. இதன் வடிவமும் அளவும் உள்ளிருக்கும் உணவின் அளவினைப் பொறுத்து அமையும். உணவு உள்நுழையும் வேளையில் அதிகபட்சமாக 1.5 லிட்டர் அளவிற்குப் பெரிதாகும். இரைப்பையின் இயக்கம் குடல் அலைவுகளை ஏற்படுத்தும். ஒவ்வொரு அலைவும் இரைப்பையின் மைய உடற்பகுதியிலிருந்து தோன்றிப் பின்னோக்கிச் செல்லும். பின்னோக்கிச் செல்லும் முதல் அலைவு இரைப்பைக்கும், சிறுகுடலின் தொடக்கப் பகுதியான முன்சிறுகுடல் (Duodenum) பகுதிக்கும் இடையில் உள்ள பைலோரஸ் சுருக்குத் தசைகளைச் சுருங்கச் செய்யும். இரைப்பையின் உள்சுவற்றில் பல இரைப்பை நீர்ச் சுரப்பிகள் உண்டு. ஏறக்குறைய 40 மில்லியன் நுண்ணிய சுரப்பிகள் உள்ளன. இவற்றில் முதன்மையான உயிரணுக்கள் (chief cells) நொதிகளையும், சுவர் உயிரணுக்கள் (parietal cells) எனப்படும் ஆக்ஸின்டிக் (Oxyntic) உயிரணுக்கள் ஐதரோகுளோரிக் அமிலத்தையும் (HCl) சுரக்கின்றன. ஐதரோகுளோரிக் அமிலத்தினால் நொதியச் செயல்பாட்டிற்கு தேவையான அமிலத்தன்மை கிடைக்கிறது. இரைப்பையின் பெப்சின், ரெனின் போன்ற நொதியங்கள் சுரக்கப்படுகிறன.

கட்டமைப்பு[தொகு]

உணவுக்கால்வாயின் விரிவடைந்த பகுதி இரைப்பையாகும். இது J ஆங்கில எழுத்தைப் போன்ற வடிவமுடையது. வயிற்றறைக் குழியில் மேலுதரப்பகுதி, கொப்பூழ்ப்பகுதி, இடது உபமணிப்பகுதி என்பவற்றில் வியாபித்தபடி இரைப்பை அமைந்திருக்கும். களம் இரைப்பையில் இதயத் துவாரம் மூலம் திறக்கும். இரைப்பை முன்சிறு குடலுடன் குடல் வாய் மூலம் தொடர்பு கொள்ளும். இரைப்பை இரு வளைவுகளைக் கொண்டது. அவை சிறிய மற்றும் பெரிய வளைவுகளாகும். இரைப்பை மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை அடிக்குழி, உடல், குடல்வாய்க்குழி என்பனவாகும். இதயத் துவாரத்துக்கு மேலுள்ள பகுதி அடிக்குழியெனவும், பிரதான பகுதி உடல் எனவும், கீழ்ப்பகுதி குடல்வாய்க்குழி எனவும் அழைக்கப்படும். குடல் வாய்க்குழியின் சேய்மை முடிவில் இறுக்கி காணப்படுகின்றது. இது குடல்வாயிறுக்கி அல்லது குடல்வாய்ச்சுருக்கி எனப்படும். இது குடல்வாய்த் துவாரத்தின் பருமனைக் கட்டுப்படுத்தி இரைப்பையை விட்டு வெளியேறும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தும்.

இரைப்பைக்கான குருதி வழங்கலைக் காட்டும் வரைபடம்

குழிக்குடல் நாடியின் ஒரு பகுதி இரைப்பைக்குக் குருதியை வழங்கும். இரப்பையிலிருந்து குருதியச் சேர்க்கும் உதர நாளம் குருதியை ஈரல்வாயி நாளத்தினுள் செலுத்தும்.

தொழில்கள்[தொகு]

உணவுச் சமிபாடு[தொகு]

இரைப்பை பெப்சின் (புரதச் சமிபாடுக்கு) மற்றும் ரெனின் (பாலைச் சமிபாடடையச் செய்வதற்க்கு) ஆகிய நொதியங்களைச் சுரக்கும் ஆற்றலுடையது. இவை உணவுக் கால்வாய்த் தொகுதியில் புரதச் சமிபாட்டை ஆரம்பித்து வைக்கும். பெப்ப்சின் சிக்கலான புரத மூலக்கூறுகளை சிக்கல் குறைந்த பொலிபெப்டைட்டுகளாக மாற்றும்; ரெனின் பாலிலுள்ள கரையக்கூடிய கெய்சினோஜன் எனும் புரதத்தை கரையாத கெய்சினாக மாற்றி பாலைத் திரட்சியடையச்செய்யும். இந்நொதியங்கள் சிறப்பாக அமில ஊடகத்திலேயே தொழிற்படுவன. எனவே ஐதரோக்குளோரிக் அமிலத்தை உள்ளடக்கிய உதரச்சாற்றைச் சுரக்கும். இவ்வமிலம் உணவோடு சேர்ந்து வரும் சில பக்டீரியாக்கள் உட்பட்ட கிருமிகளை அழித்து (சில பக்டீரியாக்கள் இவ்வமிலத்திலிருந்தும் தப்பிக்கும் ஆற்றலுடையன) உடலைப் பாதுகாக்கின்றது. இரைப்பையில் இரசாயனச் சமிபாட்டுடன் பௌதிகச் சமிபாடும் நடைபெறும். பெரிய உணவுத்துணிக்கைகள் நன்றாக அமிலத்தில் கரைக்கப்பட்டு, கலக்கப்பட்டு சமிபாடடைய ஏதுவாக்கும். பெப்சின் மற்றும் ரெனினை இரப்பை நேரடியாக சுரக்காது. பெப்சினை பெப்சினோஜன் என்ற வடிவிலும், ரெனினை புரோரெனின் என்ற வடிவிலும் சுரக்கின்றது. இவை ஐதரோகுளோரிக் அமிலத்தில் பெப்சினாகவும் ரெனினாகவும் மாற்றமடைகின்றன. சிறிது நேரத்தின் பின்னர் குடல் வாயிறுக்கியூடாக உணவுக்கரைசல் முன்சிறுகுடலுக்குள் மேலதிக சமிபாடு மற்றும் அகத்துறிஞ்சலுக்காக மெல்ல மெல்லத் தள்ளப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. வார்ப்புரு:GeorgiaPhysiology
  2. வார்ப்புரு:NormanAnatomy
"http://ta.wikipedia.org/w/index.php?title=இரைப்பை&oldid=1674383" இருந்து மீள்விக்கப்பட்டது