சிறுநீரகம்
| சிறுநீரகம் | |
|---|---|
| மனிதச் சிறுநீரகத்தின் முதுகுப்புறப் பார்வை. முள்ளந்தண்டு காட்டப்படவில்லை. | |
| இலத்தீன் | ren |
| கிரேயின் | |
| தமனி | சிறுநீரகத் தமனி |
| சிரை | சிறுநீரகச் சிரை |
| நரம்பு | சிறுநீரகப் பின்னல் |
| ம.பா.தலைப்பு | சிறுநீரகம் |
| Dorlands/Elsevier | k_03/12470097 |
சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும். இது விலங்குகளின் உடலில் நிகழும் பல முக்கியமான தொழிற்பாடுகளை ஒழுங்காக்க்குவதில் பங்களிக்கின்றது. சிறுநீரகம், அது தொடர்பான நோய்கள் ஆகியவை பற்றி ஆய்வு செய்யும் மருத்துவத் துறை சிறுநீரகவியல் எனப்படும்.
மனிதர்களில், சிறுநீரகம், வயிற்றின் பின்புறத்தில் காணப்படுகின்றது. இவை முள்ளந்தண்டின் இரு பக்கங்களிலும், பக்கத்துக்கு ஒன்றாகக் காணப்படுகின்றன. வலது சிறுநீரகம், கல்லீரலுக்குச் சற்றுக் கீழேயும், இடது சிறுநீரகம் பிரிமென்றகட்டிற்குக் கீழே மண்ணீரலுக்கு அருகிலும் அமைந்துள்ளன. ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேலும் ஒரு அண்ணீரகச் சுரப்பி (அட்ரீனல் சுரப்பி) அமைந்துள்ளது. கல்லீரலின் அமைவினால் வயிற்றுக்குழி சமச்சீரற்றதாக இருப்பதால், அதனுள் உள்ள வலது சிறுநீரகம் இடது சிறுநீரகத்திலும் சற்றுத் தாழ்வாக அமைந்துள்ளது.
சிறுநீரகமானது குருதியிலிருந்து மேலதிக நீர் மற்றும் கழிவுப்பொருட்களை வடிகட்டி எடுத்து உடலிலிருந்து அகற்றவும், உடலிலுள்ள அமில - கார சமநிலையைப் பேணவும், குருதி அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. அத்துடன் உடலுக்குத் தேவையான சில இயக்குநீர்களைச் சுரப்பதிலும் பங்களிக்கின்றது[1]
பொருளடக்கம் |
சிறுநீரகத்தின் உள்ளமைப்பு [தொகு]
1. சிறுநீரக பிரமிட் • 2. சோணைகளுக்கிடையிலான தமனி • 3. சிறுநீரகத் தமனி • 4. சிறுநீரகச் சிரை 5. சிறுநீரக நுழைவுப்பகுதி • 6. சிறுநீரகக் கிண்ணம் • 7. சிறுநீர்க்குழாய் • 8. சிறு கிண்ணம் • 9. சிறுநீரக மேலுறை • 10. கீழான சிறுநீரக மேலுறை • 11. மேலான சிறுநீரக மேலுறை • 12. சோணைகளுக்கிடையிலான சிரை • 13. சிறுநீரகத்தி • 14. சிறு கிண்ணம் • 15. பெருங் கிண்ணம் • 16. சிறுநீரக முகிழ் 17. சிறுநீரக நிரல்
சிறுநீரகத்தின் தொழில்கள் [தொகு]
கழிவகற்றல் [தொகு]
சிறுநீரகத்தின் முக்கியமான தொழில் நீரில் கரையக்கூடிய கழிவுப் பொருட்களை குருதியிலிருந்து வடித்தெடுத்தலாகும்[2]. வடித்தெடுக்கப்படும் கரைசலில் இருந்து, மீண்டும் நீர், மற்றும் உடலுக்குத் தேவையான பொருட்கள் மீள உறிஞ்சப்படுவதன் மூலம், கழிவுகள் நிரம்பிய சிறுநீரை செறிவாக்கி, பின்னர் அதனை சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்குக் கடத்தி அங்கிருந்து உடலின் வெளியே அனுப்ப உதவும். இந்த வடித்தல், மீள உறிஞ்சல் தொழிலை சிறுநீரகத்திலுள்ள சிறுநீரகத்தி எனப்படும் அமைப்பு செய்கின்றது. இந்த சிறுநீரகத்திகளே சிறுநீரகத்தின் தொழிலைச் செய்யும் அடிப்படை அலகாகும்.
சிறுநீரக நோய்கள் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "சிறுநீரகத்தின் தொழில்கள்". Baxter Renal.
- ↑ "சிறுநீர் உற்பத்தி". NSBRI (NATIONAL SPACE BIOMEDICAL RESEARCH INSTITUTE).