தோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தோல் படலங்கள் : epidermis, dermis, and subcutis, showing a hair follicle, sweat gland & sebaceous gland.

தோல் எனப்படுவது விலங்குகளின், குறிப்பாக முதுகெலும்பிகளில் காணப்படும் உயிர் இழையங்களாலான வெளிப்புற உறை ஆகும். வெளியுறைத் தொகுதியின் மிகப்பெரிய உறுப்பான தோல், பல்வேறு இழையப் படலங்களினால் ஆனது. இது அதன் பின்னுள்ள, தசைகள், எலும்புகள், தசைநார்கள், உள்ளுறுப்புக்கள் என்பவற்றைப் பாதுகாக்கின்றது. தோல், சூழலுடனான உடலின் இடைமுகமாக விளங்குவதால், உடலை கிருமிகளில் இருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. வெப்பக்காப்பு, வெப்பநிலை கட்டுபாடு, தொட்டுணர்வு, உயிர்ச்சத்து டி இன் தொகுப்பு, உயிர்ச்சத்து பி ஐப் பாதுகாத்தல், என்பன இதன் பிற செயற்பாடுகள் ஆகும். அதிகம் சிதைவடைந்த தோல் புதிய தோலை உருவாக்குவதன் மூலம் குணமடைய முயற்சிக்கிறது. இத் தோல் பெரும்பாலும் அதன் நிறத்தை இழந்து காணப்படும்.

மனிதக் குழுக்களிடையே தோல் நிறம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. இது வரண்டது முதல் எண்ணைப் பற்றுக் கொண்டது வரை உள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தோல்&oldid=1118832" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்